உறவுகள் பலப்பட, அன்பு மெய்ப்பட
மனிதர்களுக்கு இடையே, உறவினர்களுக்கு இடையே, நண்பர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்படுவது சகஜம். அதனை, தீர்ப்பதற்கு சில சமயம் வழிதெரியாமல், பெரிய சண்டையாக மாறி, ஒரு சின்ன விஷயத்திற்காக பல வருடங்கள் பேசாமல் இருப்பார்கள்.
குடும்பத்துக்குள்ளே, உறவினர்களுக்குள்ளே, கணவன் மனைவி-க்குள்ளே அப்பா, பிள்ளைக்குள்ளே. அவர்களின் பிரச்சனைகளை தீர்ப்பதற்கு இந்து சமயத்துத்துக்குள்ளே, என்ன வழிமுறைகள் இருக்கின்றது என்று சொன்னோமானால், கடவுள் என்று கூறுகின்ற அனைவருக்கும் உறவு முறையை வைத்திருக்கிறோம். சிவன், ஈஸ்வரி கணவன் மனைவி. லஷ்மி, நாராயணன் கணவன் மனைவி. சரஸ்வதி, பிரம்மா கணவன் மனைவி. முருகன், விநாயகர் பரமசிவத்தின் பிள்ளைகள். திருமால் என்பவர் சிவன் உறவினர்.
அவர்களுக்குள்ளே எப்படி சண்டையும் சச்சரவும் இருந்தன. எப்படி பிரிந்து வாழ்ந்தார்கள். எப்படி திரும்பவும் சேர்ந்து கொண்டார்கள் என்பனவற்றை மிக ஸ்வாரஸ்யமாகக் கதைகளாக அளித்திருக்கிறோம். அந்தக் கதைகளை எடுத்துச் சொல்வது இப்போதைய நோக்கமல்ல. அந்தக் கதைகளை எங்கே வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம். தெரிந்து கொள்ளலாம்.
சிலபேர் நகைச்சுவையாக சொல்லுவார்கள். கடவுள் என்று சொல்கிறார்கள். இவர்கள் அவர் பிள்ளையாம், அவர்களுக்கு இவர் தம்பியாம்! என்ன கொடுமையென்று.
நம்முடைய உறவினர்களுக்கிடையே, நம்முடைய நண்பர்களுக்-கிடையே கருத்து வேறுபாடு ஏற்படும்போது, அந்தக் கதைகளை நினைவு கூர்ந்து, அதில் எப்படி சமாதானமாயிற்று, யார் ஜெயித்தார்கள். யார் விட்டுக் கொடுத்தார்கள்? அது போல நாமும் மாறி திரும்பவும் உறவுமுறையை புதுப்பித்து, நட்போடு, நலமோடு, அன்போடு இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் அந்தக் கதைகள் உருவாக்கப்பட்டன.
எனவே உங்களுக்கிடையே, குடும்பங்களுக்கிடையே கருத்து வேறுபாடுகள் இருந்தால், இந்தக் கதைகளை தேடிப்பிடித்து எப்படி சமாதானமாகிக் கொண்டார்கள் என்பதை அறியும் போது, மிக எளிதாக இருக்கும், குடும்ப உறவுகளை புதுப்பிப்பதற்கு.
நவீன காலத்திலே பிள்ளைகள், பெற்றவர்களை விட அறிவாளிகளாகவும், அதிகம் சம்பாதிப்பவர்களாகவும் இருக்கிறார்கள். அப்போது சில பிரச்சனைகள் ஏற்படுகிறது. அதனை குமரகுரு சாமிகள் என்று சொல்லப்படும் ஈஸ்வரனாகிய சிவன், முருகனிடம் அமர்ந்து, வாய்பொத்தி பணிவாக, பிரணவ மந்திரத்தின் அர்த்தத்தை கேட்டுக் கொண்டார் என்ற ஒரு கதையை வைத்திருக்கும் போது, எந்த இடத்திலே பிள்ளைகளோட அறிவு அதிகமாக இருக்கிறதோ, அந்த இடத்திலே அவர்களுக்கு தகுந்த மரியாதை கொடுத்து பெற்றவர்களும் கேட்டுக் கொள்ள வேண்டும் என்ற ஒரு கருத்து என நாம் எடுத்துக் கொள்ள வேண்டியதாகியுள்ளது.
அதேபோல், கணவன், மனைவி சண்டை ஏற்படும் போது, மூன்று தெய்வங்களுமே லஷ்மி, சரஸ்வதி, பார்வதி கணவன் மார்களை பிரிந்து வாழ்ந்திருக்கிறார்கள். பிறந்த வீட்டுக்கு போய் வாழ்ந்திருக்கிறார்கள். திரும்பவும் ஒன்று சேர்ந்திருக்கிறார்கள். எனவே கணவன், மனைவிக்கிடையே பிரச்சனைகள் ஏற்படும்போது, இந்தக் கதைகளை படித்துத் தெரிந்து, திரும்பவும் ஒன்று சேர வேண்டியதாகியிருக்கிறது. எனவே,
குடும்ப உறவுகள் பலப்பட, அன்பு மெய்ப்பட, நிலையான சந்தோஷம், ஒன்று சேர, இந்து சமயத்திலே இந்திய சமயத்திலே மிக எளிதாக, மிக ஸ்வாரஸ்யமான கதைகளை எழுதி வைத்திருக்கிறோமே ஒழிய மூட நம்பிக்கைகளுக்காக அல்ல.
அறிவியலே இந்துமதம், நன்றி, வணக்கம்.