இந்து மதமும் வழிபாட்டு சுதந்திரமும்
மதங்களிலேயே மிகப்பெரிய சுதந்திரம் அளிக்கக்கூடிய மதம் இந்துமதம் மட்டும் தான். முஸ்லீமா இருந்தா 5 வேளை தொழுதே ஆகணும். கிறிஸ்டியனா இருந்தா சன்டேயாவது சர்ச்சுக்கு போயே ஆகணும். இப்படி கட்டுப்பாடுகள் இருக்கும். இந்து மதத்தில் நிறைய வசதிகள் இருக்கிறது. எப்பப்ப என்ன வழிபடலாம். என்ன சாப்பிடலாம். என்ன சாப்பிடக் கூடாது. கட்டுப்பாடுகள் மிகவும் குறைவாக உள்ளது.
நாத்திகனா இருக்கேன். கோயிலுக்கு போய் கும்பிடல. ஆனாலும் கடவுள் நல்லவர் தானே. அவரைக் கண்டு கொள்ள கூடாது. கண்டுகொள்ளாமல் இவருக்கு அன்பு காட்ட வேண்டும். வழிகாட்ட வேண்டும். இது கடவுளின் கடமை. நான் கும்பிட மாட்டேன் என்று கூறிவிடுவது போல் இருக்கு. இது என்னடான்னு இருந்தா, சொல்றாங்க. இந்த நடராஜ பத்துன்னு ஒரு பாட்டு இருக்கு. அந்த பாட்டுல சொன்னாங்க. ஆமா,
நான் சாமி கும்பட்றதில்ல தான். கோயிலுக்கு போகலதான். எல்லாம் இருந்து என்ன? வழிநடத்துவது உங்களுடைய வேலைதான்னு கடவுள திட்றாரு. எப்படி திட்றாருன்னா, வயதுக்கு வந்த ஒரு மகன், தன்னுடைய வயதான தந்தையை பார்த்து, நான் இப்படியெல்லாம் தப்பு பண்ணியிருக்கேன். ஆனாலும் நீ சரி பண்ணி இருக்கனும்ல. அப்படியென்று திட்றாறு.
அதுமட்டுமல்லாமல், அதே பாட்டில் கடமைகள் என்ன என்பதை எடுத்து சொல்றாங்க. அதாவது, எந்த விஷயங்கள் பாவம், எந்த விஷயம் புண்ணியம் என்பதை சொல்றாங்க. இதுபோல், ஒரு உரிமையோட கடவுளுன்ற விஷயத்தை, தில்லை வாழ் நடராஜரை நிறுத்துறாரு. அதுபோல், மற்றவைகளிலும் இருக்கு. விஷ்ணுவப் பத்தி, மற்ற தெய்வங்களைப் பற்றி இருக்கு. அப்படியிருந்தும், நான் திட்டினாலும், திட்டாவிட்டாலும், கும்பிட்டாலும், கும்பிடாவிட்டாலும், எனக்கு ஆதரவளித்து, வழிகாட்டுவது உன்னோட கடமைதானேன்னு சொல்றாங்க. ஆதலால், வழிபாட்டு முறைகளில் முழுக்க முழுக்க சுதந்திரம் கொடுத்து, மனதை தூய்மையாக வைத்திருந்தால் போதும். மீதியெல்லாம் ஒன்றும் பெரிய விஷயமே இல்லை என்பதை குறிப்பாக வைத்து, கடவுளை திட்டிக் கொண்டே கும்பிடலாம். அதில் எந்த தவறும் இல்லையென்ற பாய்ண்ட சொல்றாங்க.
நொந்துவந்தே னென்று ஆயிரம் சொல்லியும்
நின்செவியில் மந்தமுண்டோ!
நுட்பநெறியறியாத பிள்ளையைப் பெற்றபின்
நோக்காத தந்தையுண்டோ!
சந்ததமும் தஞ்சமென்றடியைப் பிடித்தபின்
தளராத நெஞ்சமுண்டோ!
தந்திமுகன் அறுமுகன் இருபிள்ளையில்லையோ
தந்தை நீ மலடுதானோ!
இந்த நடராஜ பத்து என்ற பாடலை முழுவதும் நான் பாடிக் காண்பித்தால் அது அவ்வளவு பொருத்தமாக இருக்காது. அது அதிகமான ஆன்மீக சிந்தனை உள்ளவர்கள், அவங்க தான் ரிலிஜியன் என்ற குருப்ல வராங்க. அவர்களுக்கு கடவுளை திட்டுவது பிடிக்காது. நான் ஆரம்பத்திலேயே கூறியிருக்கிறேன். நவீன இளைய சமுதாயம். பிறகு, மற்ற மதங்களை சேர்ந்தவர்கள், அறிவியல் பூர்வமாதான் எல்லாம் இருக்கு. அறிவியலில் தான் இந்து மதம் இருக்கு, என்று உணர வேண்டும். ஏனெனில் நான் சாமியார் இல்லை. பல வருடம் நான் நாத்திகனாக இருந்தேன். இப்பவும் நான், தினமும் சாமி கும்பிடுகிறேன் என சொல்ல முடியாது. கோயிலுக்கு போறேன்னு சொல்ல முடியாது.
பிறந்த நாள் வந்தால் கோயிலுக்கு போய் வந் ங்களான்னு கேப்பாங்க. அதான், வீட்ல சாமி வெச்சி கும்பிடுகிறோம் இல்லையான்னு சொல்லிடுவேன். ஆனால் இந்து மதத்திலேயும், இந்து மத கோட்பாடுகளிலேயும் ரொம்ப ஆழ்ந்த நம்பிக்கை இருக்கிறது.
நான், நாத்திகனா இருந்தப்போவும் இருந்துச்சு. அதுதான், ரொம்ப ஒரு விஷேசமான விஷயம். இப்பவும் இருக்கு. அதுபோல், நான் எப்படியிருந்தேனோ என்னைப் போன்ற ஆட்கள், அப்பறம் இப்ப புதுசா மாடர்னா டெக்னிக்ஸோட டீசன்டா டிரஸ் பண்ணிக்கிட்டு கோயிலுக்கே போகாம இருக்கக் கூடிய இளைஞர்கள், பெண்களுக்காக, இந்த குருப்ப வெச்சிருக்கறதுனால, நான், ரொம்ப பாடல்களையோ, சமஸ்கிருதத்தையோ, ஒரு தெய்வத்தப் பத்தியோ, படங்களையோ, அந்த விஷேசம், இந்த விஷேசம்னு சொல்றதில்லை.
இந்த நடராஜர் பத்திலிருந்து ஒண்ணே ஒண்ணு மட்டும் நான் சொல்றேன். எவ்வளவு தத்துவங்கள் இருக்குன்னு பாருங்க. இதுல பாருங்க. இந்துக்களாகிய நாம் எதை பாவமென்கிறோம். ஒரு பழமாக வேண்டிய மரத்திலே காயாக மாறுவதற்கு முன், ஒரு பிஞ்சாவோ, பூவாவோ இருந்தால், அதைப் பறிப்பதே பாவம். அதேபோல், கன்னிப்பெண்களின் மனது நோகும்படி நடப்பது பாவம். கடன வாங்கிட்டு திரும்பக் கொடுக்காமல் கடன் கொடுத்தவர்களின் வயிறை எரிய வைப்பது பாவம். நம்முடைய உறவினர்களிடையே கருத்து வேறுபாடுகளை உருவாக்கி, ஒற்றுமையாக இருக்க விடாமல் இருப்பது பாவம். நாம வாங்கிய பொருள வாங்கிட்டு, வாங்கலன்னு சொல்றது பாவம். கொலை, கொள்ளைகளை பண்ணி, தவசிகளை ஏசுவது, தவமோடு இருப்பவர்களை ஏசுவது பாவம். நான் தான் பெருசுன்னு நினைக்கறது பாவம்.
பொய் சொல்லி பொருள்களை பறிப்பது பாவம். வானவரை பழிப்பது பாவம். வானவர் என்பவர்கள் தெய்வங்கள் மட்டுமல்ல. நம்மை விட்டு பிரிந்து போன, நம்முடைய முன்னாள் உறவினர்களையெல்லாம், நாம வானவருன்னு தான் சொல்றோம். யாருக்குமே, எந்த கடனையும் கொடுக்காமல் இருப்பது பாவம். இதையெல்லாம் கூறிவிட்டு, இவ்வளவு நான் செய்தாலும், என்னை நீ பொருத்தருள். எனக்கு ஆசி கொடுன்னு சொல்றாங்க. எவ்வளவு தத்துவங்கள் சொல்றாங்க.
வழிகண்டு உன்னடியைத் துதியாத போதிலும்
வாஞ்சையில்லாத போதிலும்
வாலாயமாய்க் கோயில் சுற்றாத போதிலும்
வஞ்சமே செய்தபோதிலும்
மொழியென்ன மொகனையில்லாமலே பாடினும்
மூர்க்கனே முகடாகினும்
மோசமே செய்யினும் தேசமே தவறினும்
முழு காமியே ஆயினும்
பழி எனக்கல்லவே தாய் தந்தைக்கல்லவோ?
அறிவியலே இந்துமதம், நன்றி, வணக்கம்