இப்ப உலகம் முழுக்கப் பேசக்கூடிய ஒரு பேச்சாக இருக்கிறது. பிளாஸ்டிக்க ஒழிக்கறதப் பத்தி. இந்தப் பிளாஸ்டிக்னால உலகமே அழிஞ்சி போயிடும். உயிரினங்கள் அழிஞ்சி போயிடும். தண்ணி மாசுப்பட்டுடும். எல்லாருக்கும் கேன்சர் வந்து செத்துப் போயிடுவாங்க. அதனால, பிளாஸ்டிக்க பயன்படுத்தாதீங்கன்னு, பல்லாயிரக்கணக்கான ரூபாயை செலவு பண்ணி, விளம்பரம் பண்ணி உலகம் முழுவதும் நாம் எதைப் பார்த்தாலும் பயப்படும்படி வைத்து விட்டார்கள்.

இந்தப் பிளாஸ்டிக்கைப் பற்றி இந்து மதம் என்ன சொல்ல முடியும்? இந்து மதம் என்றால், இந்து தர்மம். தர்மம் என்றால், நெறிமுறைகள். அனைத்திற்கும் நெறிமுறைகளை வைத்திருக்கக் கூடிய இந்த இந்து தர்மம், பிளாஸ்டிக்கைப் பற்றி என்ன சொல்லி இருக்க முடியுமென்று நினைக்கிறீங்க?

சொல்லியிருக்கு. எந்த ஒரு பொருளும் மறுசுழற்சி செய்வதற்கு தோதுவானதாக இருக்க வேண்டும். அத்தகைய பொருள்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். எந்த ஒரு பொருளும் இயற்கையுடன் இயல்பாகவே கலந்துவிட வேண்டும். அத்தகைய பொருள்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். ரொம்பத் தெளிவா, பூஜைகள், புனஸ்காரங்கள், அன்றாட வாழ்க்கைகள், நடைமுறைகள் ஆகிய அனைத்திலும் இது சொல்லப்பட்டிருக்கிறது.

பிளாஸ்டிக் எங்கிருந்து வருகிறது? பிளாஸ்டிக் என்பது பெட்ரோலியம். பெட்ரோலியம் என்பது, அழுகிய உடல்கள், காலங்காலமாக பூமியில் புதையுண்டு ஒன்னோட ஒன்னு சேர்ந்து கெட்டியா, ஒரு குழம்பு மாதிரி ஆயிடுது. அதை இந்தப் பசங்க தோண்டியெடுத்து, ஒவ்வொன்றையும் தாராகப் பிரித்து, பெட்ரோல பிரித்து, டீசலா பிரித்து அதுல ஒரு பிராசஸ்ல வந்து, இந்த பிளாஸ்டிக்குக்கான மூலப்பொருட்களைப் பிரித்து, அதை திரும்பவும் உருக்கி, அதுல சூடான பொருள்களை ஊற்றி சாப்பிட்டால் கேன்சர் வருமென்று பெரிய ஆராய்ச்சிகளையெல்லாம் செய்து இப்ப கண்டுபிடித்திருக்கிறார்கள்.

கடைசியா பாத்தீங்கன்னா, பிளாஸ்டிக் என்பது ஒரு காலத்திலே உயிருள்ள உடம்பாக இருந்த, ஒரு ஜீவனிலிருந்து வருகிறது. அதை எரித்திருந்திருந்தால், சாம்பலாக மாறியிருக்கும். சாம்பலாக மாறி காற்று வெளியில் போய் காணாமல் போயிருக்கும். அதை இந்துக்கள் முக்தி என்றுக்கூட சொல்கிறார்கள். அதற்காக அவ்வளவையும் போட்டு எரிக்க முடியாது. அதிகமானதை பூமியில் போட்டு புதைக்கத் தான் வேண்டும். புதைக்கும் போது, அதிலிருக்கும் சத்துக்கள் எல்லாம் பூமி முழுக்க பரவி, புதிய உயிரினங்கள், தாவரங்கள் ஆகியவை தோன்றுவதினால் தான், நீத்தாருக்கு சடங்குகள் செய்யும் போது, நவதானியங்களைத் தெளித்து விடுவது போன்ற சடங்குகளை வைத்திருக்கிறோம்.

இந்த நவதானியங்கள் எல்லாப் பக்கமும் பரவி வளர வேண்டும். அதனாலத் தான் கிராமங்களில் எல்லாம் முளைப்பாரி வெச்சிருப்பாங்க. முளைப்பாரி என்பது என்ன என்றால், விதையப் பிச்சிப் போட்டு, சாமி முன்னாடி பாட்டுப் பாடி காமிச்சி, அதுக்கப்புறம் ஆத்துல விட்ருவாங்க. அது எங்கேயோ போய் இன்னொரு பக்கம் வளரும். எனவே, தாவரங்கள் எல்லாப் பக்கமும் வளரும்.

எவ்வளவு அறிவுடைய விஷயங்கள்னு பாருங்க. நமக்கு மட்டும் தான் என்பதில்லாமல், உலகம் முழுவதும் செழிப்புற வேண்டும். எல்லா இடமும் நலமாக இருக்க வேண்டும். எல்லாப் பக்கமும் தாவரங்கள் வளர வேண்டும் என்பதினால், அன்றாட சாதாரணமான நிகழ்ச்சியாக முளைப்பாரி என்பதை வைத்து அதில் பயிற்சி செய்து வைக்கிறார்கள்.

இப்ப பிளாஸ்டிக் என்பது நான் சொன்னது போல், உடல்கள் பூமிக்கடியில் புதைந்து, ஒன்றோடு ஒன்று இணைந்து, நாசமாகி, கூழ்போலாகி அதைப்போய் தோண்டியெடுத்து, அந்த தோண்டியெடுத்ததில் இருந்து பொருள்களைப் பண்ணி, கடைசியாக எல்லாத்துலேயும் அடிப்பட்டு, மிதிப்பட்டு இறுதியாக ஒரு கப்பாக வந்து, அந்த சின்ன கப்புல நாம ஒரு தண்ணியோ இல்ல காபியோ ஊத்தறோம்.

அந்தக் கப்புல, என்ன இருக்கும்? அதற்கு மூலமாக இருப்பதெதுவோ அது இருக்கும். செத்துப்போன உடல், அழுகிப்போன உடல், அதனுடைய சாராம்சங்களில் சூடான ஒரு திரவத்தை அதில் ஊற்றியவுடன், சுவைப்பட அருந்துகிறோம். அந்த சூடான திரவம் கொஞ்சம் அப்ளை பண்ணிக்குது இந்த ப்ராபர்டியை. உள்ள போனதுமே நம்முடைய செல்கள் சண்டை போடுது. ஆஹா செத்துப்போன நம்முடைய உடல்களை தூக்கிக்கிட்டு வந்துருக்கான். சண்டைப்போடு. உள்ள விட்டுவிடாதே. இவன் நம்மளையும் சேர்த்து செத்துப் போக வெச்சிடுவான்.

ஆனால், திரும்ப திரும்ப உபயோகப் படுத்துவதினால் செல்கள் சோர்வடைகின்றன. நம்முடைய செல்கள் செத்துப்போக ஆரம்பிக்கின்றன. கேன்சர், அப்படியே அது பரவ ஆரம்பித்து விடுகிறது. இந்து பழக்க வழக்கங்களை இந்த உலகம் பின்பற்றி இருக்குமேயானால், உயரிய இந்து நெறிகளில் பிளாஸ்டிக் என்ற ஒரு பொருளே இருந்திருக்காது. எல்லாமே இயல்பான மறுசுழற்சி பொருள்களாகத் தான் இருந்திருக்கும். பெட்ரோல் இருந்திருக்குமா? இயற்கை எரிவாயு இருந்திருக்கும். ஏன்ன, அதிலிருக்கக் கூடிய ஒரு சக்தியை மட்டும் உறிஞ்சி எடுத்திருக்கும். இவ்வளவு நிறைய பெட்ரோலிப் பொருள்கள் இருந்திருக்காது. இப்போது பெட்ரோலியப் பொருள்களை கலந்து கற்பூரத்திலும், எவ்வளவு அநியாயம் பாருங்க.

கற்பூரம் என்பது சுத்தம், சுகாதாரம், நோயற்ற தன்மையை குறிக்கக்கூடியது. கற்பூரம் என்பது கற்பூர மரங்களில் இருந்து நமக்குக் கிடைக்கிறது. அது சீனாவில் எல்லாம் நிறைய இருக்கிறது. இந்தியாவிலேயும் உள்ளது. அந்த கற்பூர மரத்திலே ஒரு பெட்டி செய்து, அந்த பெட்டியில், விலை உயர்ந்த புடவைகளை, ஆடைகளை அதில் வைப்பார்கள். அந்த மாதிரி ஒரு பெட்டி எனக்குக் கூட விலைக்கு வந்தது. வாங்கனும் என்று நினைத்தேன். முடியவில்லை. கற்பூரம் என்பது சுத்தத்தையும், சுகாதாரத்தையும், கிருமிகள் அண்டாத ஒரு காரணத்தினாலேயும், நல்ல கற்பூரத்தை ஏற்றி இறைவனை வழிபட்டோம். அந்தக் கற்பூரத்திலே இந்த ப்ராடக்டைக் கலந்து, ஒரு புகை மூட்டமாகி, மாசுபட ஆரம்பித்தது. இப்போது திரும்ப சொல்லிட்டாங்க. நெய் விளக்கு ஏற்றிக் கொள்ளலாம். இது போன்ற கற்பூரத்தில் கடைகளில் பெட்ரோலியப் பொருட்கள் கலக்கப்பட்டிருப்பதனால், வேண்டாம் என்று.

ஏனென்றால் புதுமைக்குப் புதுமையாகவும், பழமைக்குப் பழமையாகவும், மாறுதல் என்பதில் மாறுதல் இல்லையென்றாலும், மாறாத் தன்மையிலும் மாறுதல் இல்லை என்ற உயரிய தத்துவங்களை உள்ளடக்கிய இந்துமதமானது, காலத்திற்குத் தகுந்தாற் போல், தன்னைத்தானே செப்பனிட்டுக் கொள்கிறது. சரிசெய்து கொள்கிறது. மக்களும் அதற்கேற்றாற் போல் பின்பற்றுகிறார்கள்.

எனவே பெட்ரோலியப் பொருட்கள் ஒழிய வேண்டும். பிளாஸ்டிக் ஒழிய வேண்டும். மறுசுழற்சி முறை இருக்க வேண்டுமென்றால், ரொம்பப் பெரிசா நீங்க ஒன்னும் பண்ண வேண்டாம். இந்துத் தத்துவங்களை ஆராய்ந்து, நம்பி இந்த நடைமுறைகளிலே, வாழ்க்கையை மாற்றிக் கொண்டால் போதும். அழகா நிம்மதியா எல்லா ஜீவராசிகளும், எல்லா தாவரங்களும், எல்லா உயிரினங்களும், எல்லாத் தரப்பு மக்களும், ஒற்றுமையாக இருக்கலாம்.

நன்றி, வணக்கம்.

Original Audio posted in WhatsApp Group ‘Science is Hinduism’ on 16 June 2018. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes:

<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>