A post by someone in the group today.

#முதுமைஎன்பதுஒருமாயை….

உங்கள் உடலில் இருக்கும் ஒவ்வொரு உறுப்பும் நீங்கள் உயிருடன் இருக்கும் அத்தனை நாளும் பயன்படுத்தவே படைக்கப்பட்டிருக்கிறது. அதனால் வயதானால் அந்த நோய் வரும் வயதானால் இந்த நோய் வரும் என்று சொன்னால், தயவு செய்து நம்பாதீர்கள்.

உங்கள் கூடவே வாழும் மிருகங்களைப் பாருங்கள். மரணம் வரும் வரை தன் வேலைகளைத் தானே செய்து கொள்கிறது. எந்தச் சிங்கமும் தனக்கு வயதாகிவிட்டது என்று தன் குட்டியிடம் சாப்பாடு கேட்பதில்லை. எந்த மாடும் படுத்து கொண்டு தன் கன்றிடம் தண்ணீரோ உணவோ கேட்பதில்லை.  எந்தப் பூனையோ, நாயோ படுத்த படுக்கையாக இருந்து கொண்டும் மலம் கழிப்பதில்லை. மரணம் அடையும் நாள் வரை ஆரோக்கியமாக சுயமாக தன் வேலைகள் அனைத்தையும் செய்கின்றன.

மனிதர்கள் மட்டும் தான் வயதானால் நோய்வரும், இயலாமை வரும் என்று நம்பி, அடுத்தவர்களை எதிர்பார்த்து வாழ ஆரம்பிக்கிறார்கள். நன்கு ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள். முதுமை என்று எதுவும் இல்லை. நோய் என்று எதுவும் இல்லை. இயலாமை என்று எதுவுமில்லை. எல்லாம் உங்கள் மனதிலும், அதன் நம்பிக்கையிலும் தான் இருக்கிறது.

சிந்தனையை மாற்றுங்கள். ஆரோக்கியமாக வாழுங்கள். நீங்கள் எதை நம்புகிறீர்களோ அதுவாகவே ஆகிறீர்கள். நான்… நான்… நான்… நான் #சம்பாதித்தேன், நான் காப்பாற்றினேன், நான் தான் வீடு கட்டினேன், நான் தான் உதவி செய்தேன், நான் உதவி செய்யலனா? அவர் என்ன ஆகுறது! நான் பெரியவன், நான் தான் வேலை வாங்கி கொடுத்தேன், நான் நான் நான் நான் என்று மார்தட்டி கொள்ளும் மனிதர்களே!!! நான் தான் என் இதயத்தை இயக்குகிறேன் என்று உங்களால் சொல்ல முடியுமா? நான் தான் என் மூளையை இயக்குகிறேன் என்று உங்களால் சொல்ல முடியுமா? நான் தான் என் இரண்டு கிட்னியையும் இயக்குகிறேன் என்று உங்களால் சொல்ல முடியுமா? நான் தான் என் வயிற்றில் சாப்பிட்ட உணவில் இருந்து சத்துக்களை தனியாக பிரித்து இரத்தத்தில் கலக்குகிறேன் என்று உங்களால் சொல்ல முடியுமா?? நான் தான் பூக்களை மலர வைக்கிறேன் என்று உங்களால் சொல்ல முடியுமா ? இவைகள் அனைத்தையும் எவன் செய்கிறானோ, இயக்குகிறானோ அவன் ஒருவனுக்கே ”நான்” என்று சொல்வதற்கு அதிகாரமும் உரிமையும் உண்டு..

ஆகையால் நான் என்ற அகந்தையை விட்டு அனைவரிடமும் அன்பாக இருங்கள். உலகைப்பற்றிக்கவலைப்படாதே ஏனெனில் அது இறைவனுக்குரியது. உணவைப்பற்றி கவலைப்படாதே !அது இறைவனிடமிருந்தே கிடைக்கிறது. எதிர்காலம் குறித்தும் கவலைப்படாதே! அதுவும் இறைவனின் கரத்தில் தான் உள்ளது எல்லாவற்றையும் வழங்கிய இறைவனுக்கு இணை வக்காதே! அதற்கு கூலி நிரந்தர நரகப் படுகுழி எத்தனை கோடி வருடங்கள் ஆனாலும் வெளியேற முடியாது. உனக்கு மேலே உள்ளவனைப் பார்த்து ஏங்காதே #தாழ்வுமனப்பான்மை வரும். உனக்கு கீழே உள்ளவனை ஏளனமாய் பார்க்காதே தலைக்கனம் வரும்.  உன்னையாரோடும்ஒப்பிடாமல் நீ நீயாக இரு தன்னம்பிகை வரும்….. என்றும் அன்புடன். உங்களில் ஒருவர்..

Our response and reply was as under:

ஐயையே… அறுக்காதீங்க தல…. கொஞ்சம் லாஜிக் பாருங்க…

வயதான சிங்கம் வேட்டை ஆட இயலாமல் படுத்துக்கொள்ளும். பாவப்பட்ட மான்கள் தம்மில் ஒன்றை அதற்கு உணவாக அருகில் அனுப்பி வைக்கும். ஏனென்றால், பேருக்காவது ஒரு சிங்க ராஜா காட்டில் இருந்தால் தான், தங்கள் கூட்டம் நிம்மதியாக வாழ முடியும் என்று மான்களுக்கு தெரியும்.

மிருகங்களுக்கு ப்ளூ கிராஸ் என சிகிச்சை முறை மனிதன் வைத்துள்ளான். மனிதர்களுக்கு எந்த விலங்காவது மருத்துவம் பார்க்கிறதா? நாயை அடிப்பானேன், ‘…. யை’ சுமப்பானேன்? என்ற பழமொழி தெரியாதா? கொடைக்கானல் மற்றும் ஊட்டியில் இப்போது மலர்ச்செடிகள் நடும் காலம். மனிதர்கள் தான் செய்கிறார்கள். முதுமை இயல்பானது. உயிர்வாழ் ஜீவ ராசிகள் அனைத்துக்கும் பொதுவானது. மனிதன் கொஞ்சம் அதிகம் திட்டமிடுதல் செய்கிறான்.

ஆசையே இதயத்தின் சக்தி. அதில் தவறு ஏதும் இல்லை.

தனியே ஒரு … ஒரு…. .. ஒரு… எல்லாத்தையும் இயக்குகிறது என்பது இஸ்லாமிய, கிருத்துவ (துவைத) நெறிமுறை. எங்கும் இரண்டற கலந்து இருக்கும் பரம்பொருள் இறை என்ற அத்வைத தத்துவமே இந்து தர்மம். புரிவதற்கு எளிதாக இருக்கிறது என்பதற்காக இந்து தர்ம நெறியின் அடிப்படையை சிதைக்க கூடாது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes:

<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>