காலைல எந்திரிச்சு பார்க்கும் போது, சீலிங் பேன் சுத்திக்கிட்டு இருக்கு. ஏன் சுத்திக்கிட்டு இருக்கு? கரண்டு. கரண்டுனால, சீலிங் பேன் எப்படி சுத்துது?
லைட்டுனா வெளிச்சம் கொடுக்குது. பேன் சுத்துது, பிரிட்ஜ் ஓடுது, எப்படி? ஒவ்வொன்றும், மாக்னடீக் பீல்டுல கன்வெர்டாயி ஒரு சுழற்சியக் கொடுக்கற விதமா எலக்ரிசிட்டிய டிபைன் பண்ணி வைக்கிறாங்க. உடனே, அந்த மோட்டார் சுத்தி, சீலிங் பேன் சுத்தி காத்து வருது. இதேபோல் தான் சுழற்சி எங்கெல்லாம் இருக்கிறதோ, அங்கே சக்தியின் வெளிப்பாடு இருக்கிறது. எனவே பூமி சுழல்கிறது என்பது ஒரு சக்தியின் வெளிப்பாடு. அதனால் தான் புவியீர்ப்பு விசை இருக்கிறது. அந்த புவியீர்ப்பு விசையால ஹைட்ரோலைட்டை பண்ணி எலக்ட்ரிசிட்டியை தயார் பண்றோம். எனவே, சக்தியின் வெளிப்பாடு, உலகம் முழுவதும் இருக்கிறது.
அதை நாம் கன்வெர்ட் பண்ணிக்கிறோம். எலக்ட்ரிசிட்டியை எனர்ஜியா கன்வெர்ட் பண்ணியதுக்கப்புறம், வேரியஸ் அப்ளையன்சுக்கு யூஸ் பண்றோம். எனவே சக்தி, சிவன் இவர்களைப் பற்றி ஏற்கனவே சொல்லியிருந்தேன். இதைப்பற்றிய ஒரு தெளிவான அறிவும், உண்மையும் இந்து மதத்திலே காலங்காலமாக இருந்து வந்தது. எனவே கடவுள்களை சக்தியின் வடிவமாகவும், பஞ்சபூதங்களின் வடிவமாகவும் படைத்து வைத்தோம். இவ்வாறு கடவுளைப் பற்றி நாம் பாடிய பாடல்,
“மன்னாதி பூதமொடு விண்ணாதி அண்டம் நீ
வரைநான்கின் அடிமுடியும் நீ
மதியும் நீ புவியும் நீ புனலும் நீ அனலும் நீ
மண்டலம் இரண்டேலும் நீ,
பெண்ணும் நீ, ஆணும் நீ, ”
எல்லாமே கடவுள் தான், எல்லாமே சக்தி தான். எல்லாமே சிவம் தான், அப்புடின்னு சொல்லி வெச்சோம். இந்த சுழற்சி இல்லாத இடத்தில் கிளர்ச்சி நடக்கிறது. கிளர்ச்சிக்கும் சுழற்சிக்கும் என்ன வித்தியாசம்? சுழற்சி தானா நடக்கிறது. கிளர்ச்சி நாம பண்ணி விட்றோம். சமையல் பண்ணும் போது, அடியில நல்லா வெந்து இருக்கு. மேல நல்லா வேகலன்னா, அதக்கிண்டி கிண்டி விட்றோம். கிளர்ச்சி பண்ணி விட்றோம். சுழற்சி இல்லை. கிளர்ச்சி இல்லை. அப்போது என்ன நடக்கிறது. புரட்சி வெடிக்கிறது. புரட்சி என்பது என்ன?
சுழற்சியையும், கிளர்ச்சியையும் உடனே வயலென்டா பண்ணியே தீரணும் என்பது. புரட்சி என்பது ஆங்கிலத்தில் ரெவல்யூஷன். ரெவல்யூஷன்னா என்ன? கவனித்துப் பாருங்கள் அர்த்தத்தை. திரும்பவும் சுத்துவது தான். ரெவல்யூஷன் என்பது கடைசியாக சுழற்சி தான்.
சுழற்சிய வந்து நாம இன்கிரிஸ் பண்றோம். எங்கே சுழற்சி என்பது இயற்கையாகவே இருக்கிறதோ, அங்கே கிளர்ச்சியும் தேவையில்லை, புரட்சியும் தேவையில்லை. எனவே, இந்து தர்மத்திலே, இந்து நெறிகளிலே, இந்து வாழ்வியல் முறைகளிலே, சுழற்சி என்பது இயற்கையாக புரிந்துக் கொள்ளப்பட்டிருக்கிறது. ஒருத்தன் கிட்ட செல்வம் இருக்கு. சும்மாவே, வெச்சிக்கிட்டு இருக்கான். எல்லாரும் போய் திட்ராங்க. உன்னுடைய பணத்தினால் ஒரு பிரயோஜனமும் இல்லை. கொடுக்க வேண்டும். சுழற்சி வரும். அதே போல் ஒருவனிடம் கல்வி இருக்கிறது. யாருக்கும் அவன் சொல்லிக் கொடுப்பதில்லை. அவனும் ஒரே சமம் தான். உருப்பட மாட்டான். அந்த கல்வி ஞானத்தினை அவன் எல்லோருக்கும், பரப்பியே தீரணும். வீரம் இருக்கிறது. அதையும் பரப்ப வேண்டும். வீரத்தைக் கொண்டு மற்றவர்களைத் தாக்க வேண்டும். வீரத்தை உருவாக்க வேண்டும். சண்டைப் பயிற்சி, யுத்தப் பயிற்சியை கொடுக்க வேண்டும்.
எனவே சுழற்சி என்பது எங்கே, இயல்பாகவே இருக்கிறதோ, அங்கே கிளர்ச்சியும் இல்லை. புரட்சியும் இல்லை. எனவே இந்து தர்மம் எங்கே மேலோங்கி இருக்கிறதோ, அந்தக் காலக்கட்டத்திலோ, அந்த நாடுகளிலோ, அந்த சமுதாயத்திலோ, கிளர்ச்சியும் கிடையாது, புரட்சியும் கிடையாது. கிளர்ச்சியும் கிடையாது, புரட்சியும் கிடையாதென்பதற்குக் காரணம், தேவையில்லாமல், அமைதியான சமுதாயமாக, அற்புதமான சமுதாயமாக, சமாதானமான சமுதாயமாக, சந்தோஷமான சமுதாயமாக இருப்பதற்கான வழிவகைகளை, மிகவும் எளிய முறைகளிலே, ஏழைகள், பணக்காரர்கள், குழந்தைகள், படித்தவர்கள், படிக்காதவர்கள் என்ற பாகுபாடு இல்லாமல், சாதாரணமாக சொல்லிட்டு போயிட்டோம்.
சுழற்சி தான் முக்கியம். அது தெய்வத்தின் வழிபாடு. எல்லாமே சுத்தித்தான் தீரணும். செல்வம் எல்லாரிடமும் சுழல வேண்டும். வீரம் சுழல வேண்டும் எல்லாரிடமும். கல்வியும் ஞானமும் சுழல வேண்டும். எல்லாரிடமும். சுழற்சி இயல்பாக இருக்கும் போது, அங்கே கிளர்ச்சியும் இல்லை. புரட்சியும் இல்லை. கிளர்ச்சியும், புரட்சியும் இல்லாத ஒரு சமுதாயத்திலே, அமைதிதான், சந்தோஷம் தான். எனவே வாழ்வியல் நெறிமுறைகளை மிகமிக உயரிய கருத்துக்களை, மிகமிக எளிமையாக சொல்லி வைப்பது, இந்துமதம் என்பதனைக் கூறி விடைபெறுகின்றேன். நன்றி, வணக்கம்.
Original Audio posted in Whatsapp Group ‘Science is Hinduism’ on 10 June 2018.