அம்பேத்கார்
‘மக்கள் அனைவரும் சமம், உழைக்கும் மக்கள் ஒன்று திரண்டு போராட வேண்டும். தாழ்த்தப்பட்டவர்களென்று ஒரு சமூகமே இல்லை’யென அம்பேத்கார் கூறினார். அந்த அம்பேத்கார் என்பவர் தங்களை பிராமணர்களாக அறிவித்துக் கொண்ட ஒரு பிரிவிலிருந்த ஆசிரியர். அவர் கூறியது தன்னிடம் படித்த ராம்ஜி பீமாராவ் என்ற மாணவனுக்கு. அந்த கருத்துக்களால் கவரப்பட்ட ராம்ஜி பீமாராவ், தன்னுடைய பெயரையே அம்பேத்கார் என வைத்துக் கொண்டார். எனவே, அம்பேத்கார் சொன்னார் என சொல்லும் போது, ராம்ஜி பீமாராவ் என்று பொருளெடுக்காமல், அம்பேத்காரே இவர்தான் என்று வந்து விட்டது.
காலப்போக்கிலே அந்த அம்பேத்கார், அதுதான் ராம்ஜி பீமாராவ் அவர்கள் எந்த ஒரு சமுதாயம், என்னுடைய மக்களை பிறப்பினாலே தாழ்ந்தவன் என்று அறிவிப்பதால், அந்த சமுதாயம் எனக்குத் தேவையில்லை என இந்து மதத்தை விட்டு வெளியேறி பௌத்த மதத்திலே சேர்ந்தார்.
பெரியார் அவர்கள் தென்னகத்திலே இருந்தார். அவர் சொன்னார், ‘இன்றைய பணக்காரன் நாளை ஏழையாகலாம். இன்றைய ஏழை நாளை பணக்காரனாகலாம். ஜாதி என்பது சமுதாயத்தின் ஒரு பிரிவு மக்களை தாழ்த்தப் பட்டவராக வைத்து இருக்கிறது. எனவே ‘அவரவர் போராடியே தீர வேண்டும் அவரவர் உரிமைக்காக!’ என்று சொன்னார். இத்தகைய கருத்துக்ககளை இந்த பூமியில் கூறியதனாலும், அதை மற்றவர்கள் ஆமோதித்ததாலும், ஜாதி பாகுபாடு என்பது இந்து மதத்தின் ஒரு முக்கிய அங்கமாக தவறுதலாக புரிந்து கொள்ளப்பட்டது.
வேதங்களிலோ, இதிகாசங்களிலோ, புராணங்களிலோ ஜாதி பாகுபாடு என்பது இல்லை. எல்லா கதைகளிலும் தீண்டாமை பற்றியும் இல்லை. ஏராளமான கதைகளிலே எப்படி உழைக்கும் வர்க்கமான, தற்போது தாழ்த்தப்பட்ட மக்கள் என்று சொல்கிறவர்கள், முன்னேறி வந்து அரசர்கள் ஆகியிருக்கிறார்கள். அவர்களுக்கு கட்டுப்பட்டு மற்றவர்களும் இருக்கிறார்கள் என்பது திரும்பத்திரும்ப இருக்கிறது.
அரச குலத்திலே பெண்கள் தன்னுடைய கணவனை தேர்ந்தெடுக்க சுயம்வரம் நடத்தும்போது, அவர்களின், விருப்பப்படிதான் தேர்ந்தெடுக்க வேண்டும். ஜாதியைப் பார்த்து எதுவும் செய்யக் கூடாது. அப்படியிருக்கும் போது, அந்த ஜாதி பாகுபாடு, தீண்டாமை என்ற இரு சாபக்கேடுகள் என்று கருதக்கூடிய விஷயங்கள் இந்து மதத்திலே எப்படி வந்தது, எப்போது வந்தது என்று தெரிந்தால் ஆச்சர்யப்படுவீர்கள்.
ஜாதி கட்டமைப்பு மிக மிக அதிகமாக உள்ள ஒரு சமுதாயம், அரபு நாட்டு சமுதாயம். இவர்கள் சாதாரணமாக நினைத்துக் கொண்டிருக்கும் முகமது, அகமது, சையது, கான், அப்படி எல்லாமே ஜாதிப்பெயர்கள் என்பது அங்குள்ளவர்களுக்கு தெரியும், இங்குள்ளவர்களுக்கு தெரியாது. அந்த மதத்தை ஸ்தாபனம் செய்த முகமது நபி அவர்கள் முதல் திருமணத்தை தன்னுடைய இருபத்தைந்தாவது வயதில் செய்து கொண்டார். மனைவி கதீஜா. அவருக்கு சுமார் வயது ஐம்பது, அன்னை ஸ்தானத்தில் இருப்பவர். அவருடைய கடையிலே இவர் வேலைக்கு சேர்ந்திருந்தார். அவர் மனைவியை எப்படி தேர்ந்தெடுத்தார் என்ற புத்தகக் குறிப்புகளை படிக்கும்போது, நான் வியந்து போய் விட்டேன். ஏனென்றால், என்னுடைய நண்பர் ஒருவர் அந்த புத்தகத்தை வைத்திருந்தார். அதில் தெளிவாக சொல்லப் பட்டிருக்கிறது.
உயர்ந்த குலத்தினை சேர்ந்த கதீஜா அம்மையார் நல்ல ஒழுக்கத்தோடும், உத்தமராகவும் இருப்பார் என்ற காரணத்தினால், நபிகள் நாயகம், அந்த அம்மையாரை துணைவியாராக தேர்ந்தெடுத்தார். அப்போது தான் ஆச்சர்யப்பட்டேன். ஜாதி என்பது இங்குதானே இருக்கிறது. வயதையும் தாண்டி ஜாதியை பார்த்துத்தானே அவர் திருமணம் செய்து கொண்டிருக்கிறார். ஜாதியே இல்லையென்று சொல்கிறார்களே என்று.
தீண்டாமையைப் பற்றிப் பேசும் போது எனக்கு மேலும் ஒரு வித்தியாசமான குறிப்பு தென்பட்டது. எனக்கு டைபாய்டு சில ஆண்டுகளுக்கு முன்பு வந்தது. சில குறிப்புகள் அதைப்பற்றிப் படிக்கும்போது, டைபாய்டு மேரி என்ற ஒரு பெண். அவர் ஒரு கிறிஸ்துவ பெண். அவருக்கு டைபாய்டு தொற்றிக் கொண்டபோது, அவர் எந்த வீட்டுக்கெல்லாம் சென்று பணிபுரிகிறாறோ அந்த வீட்டுக்கெல்லாம் டைபாய்டு வந்துவிடும் என்று அவரை ஒதுக்கி வைத்தார்கள். தீண்டத்தகாதவராக அவரை வைத்தார்கள். அவருடன் யாரும் தொடர்பு கொள்ளக் கூடாது, தண்ணீர் கொடுக்கக் கூடாது, வேலைக்கு வைக்கக் கூடாது என்று தனிமைப்படுத்தினார்கள். சுமார் 200, 300 ஆண்டுகளுக்கு முன்னர் பெரும் நோய்கள், தொற்று நோய்கள் பரவியபோது, உழைக்கும் சமூகத்தினரை ஒதுக்கி வைக்க ஆரம்பித்தது கிறிஸ்துவ சமுதாயம்.
அந்த பழக்கங்கள் தான் இங்கேயும் வந்தன. எனவே நான் அடித்துச் சொல்லுவேன். இன்றும் சொல்லுவேன், என்றும் சொல்லுவேன். தீண்டாமை என்பது கிறித்துவ ஐரோப்பிய மரபிலிருந்து வந்தது. ஜாதி என்பது பாலைவன அரபு மரபிலிருந்து வந்தது. இந்திய சமுதாயத்திலே அது என்றைக்குமே இருந்ததில்லை.
சமத்துவம், பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும், என்பதுவே இந்த நாட்டின் இந்திய நாட்டின் தத்துவம் என்பதனை பெருமையுடன் சொல்லிக் கொள்ளலாம்.
அறிவியலே இந்துமதம், நன்றி, வணக்கம்.