அறிவியலே இந்துமதம்
அறிவியலே இந்து மதம். மூட நம்பிக்கைகள் இல்லாத ஒரே மதம் இந்து மதம் என்று சொன்னால் பலர் ஆச்சர்யப்படுவார்கள். ஏனென்றால், அவர்களுக்கு தெரிந்தது, இந்து மதமென்றால், மூடநம்பிக்கைகள், அந்த மூடநம்பிக்கைகளை எதிர்த்து ஒழிப்பதற்காகத் தான் இந்துமதத்திலேயே பெரியார், அம்பேத்கார் போன்ற தலைவர்கள் தோன்றியதாக நினைத்துக் கொள்வார்கள். உண்மை அப்படியல்ல. பூமியுடைய புவியீர்ப்பு விசை மாறுவதனால், கடலலைகள் உயரம் மாறும். எனவே, சில காலக்கட்டங்களிலே, கடல் தண்ணீர் வற்றிப்போய் நிலம் தெரியும். இது ஒரு சாதாரணமான அறிவியல் நிகழ்வு.
இது 2000, 3000 வருடத்திற்கு முன்பு கிறிஸ்டியானிட்டில, தேவன் வந்து கடல புகுத்தி பிளந்து வெளிய விட்டுட்டாருன்னு நம்பிகிட்டு இருக்காங்க. ஆனால், நாம் அப்படி நம்புவதில்லை. பம்பாயில் ஒரு தர்கா இருக்கு, ஹாஜ்ஜியலி தர்கா. அங்கேயும் இதே நிகழ்வு நிகழும் போது, ஒரு பெரிய அற்புதமா நினைக்கிறார்கள். சிலபல ஆண்டுகளுக்கு முன்னர் சுனாமி, உலகத்தில் யாராலும் மறக்க முடியாதது நடந்துச்சு. அப்போது வேளாங்கண்ணி, நாகப்பட்டினத்தில் எல்லாம் கடல்நீர் உள்ளே புகுந்து, வேளாங்கண்ணியில் இருந்த மக்கள் கிட்டதட்ட 3000 பேர் இறந்துவிட்டார்கள்.
ஆனால், திருச்செந்தூர் சுப்ரமணியர் கோயில். அங்கிருந்து ஒரு 200 கி.மீ தான். அதே கடற்கரையில் கடல்நீர் பின்னாடி போய்விட்டது. கொஞ்சநஞ்சம் இல்லை. ஒன்றரை கிலோ மீட்டர் பின்னாடி போய், பவ்வியமா பதுங்கி இருந்துச்சு. கடலுக்கடியில் இருக்கும் பாறைகள் எல்லாம் தெரிய வந்தது. எல்லா இடத்திலும் கடலலைகள் அடித்து முடித்த பின்னர், இங்கு மெல்ல, மெல்ல கடலலைகள் எந்த ஒரு ஆக்ரோஷமும் இல்லாமல், ஒரு அடிமை ஆண்டவனை நெருங்குவது போல சாதாரணமாக இருந்தது என்கிற செய்தி நம் முன்னாலே செய்தித்தாள்களில் புகைப்படத்தோட வந்தது. வீடியோவோட வந்தது.
இது மட்டும் நினைச்சுப் பாருங்கள். இன்னொரு மாதிரி நடந்திருந்தால். திருச்செந்தூர் கோயிலில் கடல் உள்ளே புகுந்து, வேளாங்கண்ணி கோயில்ல கடல் பின்னே போ யிருந்தால், உலகம் முழுக்க அதிசயமா பேசி, பாவப்பட்ட ஜென்மங்களே, இப்பவாவது திருந்துங்கன்னு குரல் கொடுத்து, என்னென்னவோ பண்ணியிருந்திருப்பார்கள். ஆனால், நாம் அப்படியில்லை. இதை சாதாரணமாக அறிவியல் நிகழ்வாக எடுத்துக்கிட்டோம்.
சுனாமி போன்ற ஆழிப் பேரலைகள் அடிக்கும் போது, சில இடங்களில் ரொம்ப உள்ளப் போகும், சில இடங்களில் பின் வாங்கும்னு நினைச்சி இதை ஒரு அதிசயமாக நாம் நினைக்கவில்லை. உண்மையாகவே இது முருகப்பெருமானின் அதிசயமாகக்கூட இருந்திருக்கலாம். ஆனாலும், அறிவியலை மட்டுமே நம்பக்கூடிய இந்துக்களாகிய நாம், அதனை ஒரு சாதாரண நிகழ்வாகத்தான் பெரும்பாலும் பார்க்கிறோம். மூடநம்பிக்கைகள் எங்கும் இருக்கிறது. சில நம்பிக்கைகள் இருக்கிறது. அந்த மாதிரி நம்பிக்கைகள், எல்லா மதத்திலேயும் இருக்கிறது. ஜோசியம் பார்ப்பதென்பது வேறுவேறு வடிவங்களில் எல்லா மதங்களிலும் உள்ளது. ஜோசியம் பார்ப்பது மட்டும் இந்துமதம் அல்ல. அது மனித இயல்பு. அதேபோல் சில சகுனங்கள் பார்ப்பது எல்லா மதங்களிலும் உள்ளது. அதுவும் மனித இயல்பு. அதேபோல், எதிர்காலத்தை பற்றி அறியும் ஆர்வம் எல்லா மதங்களிலும் இருக்கிறது. இது மனிதனின் இயல்பு.
இதில், இந்தியர்கள் ஒருமுறையை கடைப்பிடிக்கிறார்கள். ஐரோப்பியர்கள் ஒருமுறையை கடைப்பிடிக்கிறார்கள். பிரேசில், அர்ஜென்டினா, சைனாவில் இருப்பவர்கள் வெவ்வேறு முறைகளை கடைப்பிடிக்கிறார்கள். அதை வைத்துக்கொண்டு, ஜாதகம் பார்ப்பது தான் இந்துமதம். பூஜை, புனஸ்காரம் செய்வது தான் இந்துமதம் என்பதெல்லாம் கிடையாது. இதெல்லாம். சாதாரண நடைமுறைகள். அதெல்லாம் மாறுபடும்.
கருத்துக்களை பார்க்கும்போது முழுக்க முழுக்க அறிவியலை மட்டுமே நம்பி அறிவியலை மட்டுமே பின்பற்றும் மதமாக, இருப்பது நம்முடைய இந்து மதம் தான் என்பது எனக்குத் தெரியும். இதற்கு நிறைய உதாரணங்களை சொல்லிக்கொண்டே போவேன். அதில் ஒன்றையன்று பிரித்துப் பார்க்க வேண்டிய கட்டாயம் உள்ளது.
பிற மதங்களோடு ஒப்பிட்டுப் பார்க்கும் போது, அதுவே தாக்கிப் பேசுவது போலிருக்கும் என்று நம்ம மதத்தில் இருப்பவர்கள் என்னிடம் கருத்தை கூறுகிறார்கள். அவங்ககூட ஆர்வமா தான் கேட்கறாங்க. ஆஹா பரவாயில்லையே, இதெல்லாம் இவரு தெரிஞ்சி வெச்சிருக்கறாரே, பைபிளிலிருந்து குர்ரானிலிருந்து என்று. ஆனால் குறுக்கே கேள்விகளை கேட்பது நம்மாட்கள் தான். ஏனெனின் நாம் ஒரு மதசார்பின்மை என்று நிரூபிப்பதற்கு மிகவும் ஆர்வம். போலி மதச்சார்பின்மை.
மதசார்பின்மை என்பதெல்லாம் ஒன்றுமில்லை. மதசார்பின்மை என்று சொல்பவர்களெல்லாம் ஒரு குழுவாக பிரிந்து அவங்களே ஒரு பேர வெச்சிக்கிட்டுசொல்லிக்கிட்டு திரியிறாங்க. அதனால், அறிவியல் பூர்வமான விஷயங்கள், முழுக்க முழுக்க அறிவியல் விஷயங்கள். இதுபோன்ற அதிசயங்களை நான் பண்ணுவேன்னு தேவன் சொன்னதாக பிரச்சாரம். அதிசயமெல்லாம் ஒன்றும் கிடையாது. இது ஒரு இயல்பான நிகழ்வுன்னு சொல்லக்கூடிய விஷயங்கள் எல்லாமே இந்து மதத்தில் தான் இருக்கிறது. இந்து மதத்தில் ரிஷிகள், சன்னியாசிகள், முனிவர்களை நாம் இப்போதும் ஏற்றுக் கொள்கிறோம் என்றால் அதிசயங்களை செய்ததினால் இல்லை. நல்ல கருத்துக்களை எடுத்துச் சொல்லி, அமைதியான வாழ்க்கை வாழ்ந்து, அப்பப்ப பிரசங்கங்கள் பண்ணுவாங்க. அது எந்தவொரு ஒரு மடாதிபதியாக இருந்தாலும்.
ஆனால், மற்ற மதத்தில். அதிசயங்களை செய்தவரைத் தான் துறவியராக ஏற்றுக் கொள்கிறார்கள். அதைத்தான் கிறிஸ்துவ மதத்தில் பின்பற்றுகிறார்கள். அதனாலதான், அன்னை தெரசா தேடிக் கண்டுபிடித்து நோயாளிகளை குணப்படுத்தினாங்க. நோயாளிகளை குணப்படுத்தலாம். அன்பால், பரிவால், மாத்திரையால், சந்தர்ப்பத்தால், சூழ்நிலையால். ஆனால், அதைக்கூட நாங்கள் அதிசயமென்று ஏற்றுக் கொள்வதில்லை. அதிசயமென்று ஒன்று கிடையாது. எல்லாமே அறிவியல் என்று சொல்லக்கூடிய அறிவியலே இந்துமதம் என்பதை நாங்கள் பரிபூர்ணமாக நம்புகிறோம்.
நன்றி, வணக்கம்