இந்து தர்மமும் ஆலய வழிபாட்டு முறைகள் மற்றும் ஆலயத்திற்கு உள்ளே நுழையக் கூடிய சுதந்திரமும்
இந்து தர்மத்தைப் பற்றி குறை கூறுபவர்கள் ஒரு பக்கம் தீண்டாமையைப் பற்றியும், ஜாதி வேறுபாடுகள் பற்றியும் கூறுவார்கள். தீண்டாமை என்பது ஐரோப்பிய கிறித்துவ பண்பாடு. ஜாதி வேறுபாடு என்பது பாலைவன அரபு நாட்டு பண்பாடு, என ஏற்கனவே சொல்லியிருக்கிறேன். தாழ்த்தப்பட்ட மக்களை கோயில்களுக்குள் செல்ல விடுவதில்லை. அதற்காக பெரியார் போராடினார், அவரு போராடினார், இவரு போராடினாருன்னு குறை மாதிரி சொல்லுவாங்க.
ஆலய வழிபாட்டு முறைகளில் முழு சுதந்திரம் கொடுப்பது இந்து மதம் மட்டும் தான். புதிதான கிறித்துவர்களுக்குத் தெரியாது, ஒரு சர்ச்சுல மெம்பர் ஆயிட்டா அந்த சர்ச் அதை சேர்ந்த சர்ச்சிற்கு மட்டும் தான் இவங்க போகனும். இன்னொரு சர்ச்சிற்கு போனா நீங்க ஏன் இங்க வரீங்கன்னு கேட்பாங்க. இதேபோல், கிறிஸ்துவர்கள் அல்லாதவர்களாக இருந்தால், அவங்க கன்வெர்ட் ஆவதற்காக வாங்க, வாங்கன்னு உள்ள கூப்பிடுவாங்க. அது மெம்பர்சிப் பிடிக்கற மார்க்கெட்டிங்கு. ஒன்ஸ் நீங்க கிறிஸ்டியனா மாறிட்டீங்கன்னா உங்களுக்கு வழிபாட்டு முறைகளில் சிரிப்பு வந்துவிடும். எந்த முறையைப் பின்பற்றுவீங்கன்னு பாக்கறாங்க. பிறகு, எந்த சர்ச்சுல மெம்பர்னு பாக்கறாங்க. அந்த சர்ச் இல்லாம, அதோட அப்ளிகேட் சர்ச். வெளியூர்ல இருந்து வந்து இருப்பாரு. சர்ச்ச தேடுவாரு, எங்க பக்கத்துல தான் இருக்கு போலாமே. இல்ல இல்ல நாங்க அந்த சர்ச்சுக்கு தான் போவேன்னு எவ்வளவு தூரமாக இருந்தாலும் அதை அட்டன் பண்ணுவாங்க.
இஸ்லாமியத்திலும் கூட, இந்த மசூதி சுல்லிகளுக்கானது, இந்த மசூதி சியா பிரிவுகளுக்கானதுன்னு வெச்சிருக்காங்க. பிறகு, இது இறந்தவர்களை வழிபடுவது தர்கா. அதற்கு நாங்க போக மாட்டோம். தர்க்காவில் சாமி கும்பிடுபவர்கள் முஸ்லீமே கிடையாதுன்னு பெரிய சண்டையெல்லாம் வெச்சிருக்காங்க.
ஆனால், இந்து மதத்தில் முழு சுதந்திரம் ஆலய வழிபாட்டு முறைகளில் உள்ளது. வெறும் மனதிலே நினைத்து வழிபடலாம். உங்க வீட்டின் மூலையில் ஒரு பூஜை அறை வைத்து வழிபடலாம். வெளியே நின்று சூரியனை வழிபடலாம். சூரிய நமஸ்காரம். சந்திரனை வழிபடலாம்.
வெறும் விளக்கைக் கும்பிடலாம். கண்ணை மூடி தியான முறையில் கடவுளை வழிபடலாம். தெருவில் இருக்கும் கோயிலுக்குப் போகலாம். ஊருக்கு மத்தியில் இருக்கும் கோயிலுக்குப் போகலாம். சிவன் கோயிலுக்கு ப்போகலாம். பெருமாள் கோயிலுக்குப் போகலாம். லஷ்மி, சரஸ்வதி, ஈஸ்வரி ஆகிய அனைத்து கோயிலுக்கும் போகலாம். ஒரு புதிய கோயிலை உருவாக்கலாம். நீங்க ஒரு கோயிலை உருவாக்கி அதற்கு சொந்தம் கொண்டாடலாம். அடுத்தவங்க கோயில்களிலும் நீங்க சேர்ந்து கொள்ளலாம். வழிபாட்டு முறைகளிலே முழுக்க முழுக்க சுதந்திரம் கொடுத்திருப்பது இந்து மதம் தான். மற்ற மதங்கள் அல்ல. அப்போது ஏன் ஒரு சாராரை கோயிலுக்குள் உள்ளே விடமாட்டேன் என்கிறார்கள். உண்மை அதுவல்ல.
எப்படி ஏராளமான ஆலயங்கள் இருக்கிறதோ, அதேபோல், குலதெய்வம் கோயில்னு ஒன்று இருக்கும். இப்ப எங்களுக்கெல்லாம் தேனி மாவட்டம் சீலையப்பட்டி கிட்ட இருக்கு. சமீபத்துல கூட கும்பாபிஷேகம் பண்ணாங்க. அந்த குலதெய்வக் கோயிலென்பது எங்க வீட்டு பூஜை அறை போன்றது. எங்க வீட்டு பூஜையறையில் என்னோட நண்பனோ, உறவினரோ வழிபடலாமே தவிர ரோட்ல போறவன் வழிபடக் கூடாது. இதே குடும்பம் பெரிதாக இருந்தால் வயல்வெளிகளுக்கு நடுவில் உருவாக்கிக்குவோம். அதுல சம்பந்தப்பட்டவங்க மட்டும் கும்பிடலாம். மத்தவங்க வேணும்னா கோபுரத்தை கும்பிட்டுக் கொள்ளுங்கள்.
ஆலய தரிசனம் ஆயிரம் புண்ணியம், கோபுர தரிசனம் கோடி புண்ணியம். ஏன்னா, நாம பிரைவேட் நம்முடைய பூஜையறையில் குற்றங்களை குறைகளை சொல்லிட்டு அன்யோன்யமா பேசுவோம். அதனால தான் அங்கு, கொஞ்சம் கட்டுப்பாடுகளை வைக்கிறார்கள். அதில் ஆலய வழிபாட்டு உரிமை இவர்களுக்கு இல்லையென இந்துக்கள் சொல்வதில்லை. அந்த மதத்தில் கூறுவதில்லை. மற்ற மதத்தில் இருப்பவர்கள்.
இந்து மதத்தை எதிர்ப்பவர்கள். இந்துக் கடவுளின் விதிமுறைகளை நம்பாதவர்கள். உனக்குத் தான் நம்பிக்கையில்லையே, நீ ஏம்பா இதப்பத்தி சொல்லிக்கிட்ருக்க. எந்த ஒரு வழிபாட்டு முறைக்கும் கொஞ்சம் சுத்தமா, சுகாதாரமா வரணும். நம்பி வரணும். கபாலீஸ்வரர் கோயிலுக்குள் வரும் போது கற்பகாம்பாளை தாயாக நினைத்து, கபாலீஸ்வரனை தந்தையாக நினைத்து, கடவுளாக நினைத்து வந்து, அதுக்கு தகுந்த மாதிரி நீட்டா டிரஸ் பண்ணிட்டு ஒரு விபூதிய வெச்சிக்கிட்டு, உள்ளே வந்தால், யாராவது உன்னை தடுத்து, நீ எந்த ஜாதி என்று கேட்பார்களா? கிடையாது.
நீ வந்து இந்து மதத்திற்கு எதிரான முழக்கத்தையிட்டு கோயிலுக்குள் நுழைவது தான் உன்னுடைய உரிமைனா பகுத்தறிவுன்னு எப்படி சொல்லிக்கிட்டு இருக்காங்கன்னு எனக்கு தெரியல. இதை மத்த மதங்களில் அவர்கள் செய்ய முடியுமா? அந்த மதத்திலே இருப்பவர்களாக இருந்தாலும், பண்ண முடியாது, பண்ணுவதுமில்லை. அதனால், ஆலய வழிபாடு, தெய்வ வழிபாடுன்னு வரும் போது முழுசுதந்திரம். சில கோயில்களில் பெண்களே எல்லாவற்றையும் நிர்வகிப்பார்கள். சில கோயில்களில் பிரம்மச்சாரிகள் நிர்வகிப்பார்கள். சில கோயில்களில் பிராமணர்கள் நிர்வகிப்பார்கள். சில கோயில்களில் அசைவம் சாப்பிடுபவர்கள், அசைவப் படையலிட்டு நிர்வகிப்பார்கள். எல்லா விதமான சுதந்திரங்களும் வழிபாட்டு முறைகளிலே, ஆலயங்களிலே இருப்பது, இந்து மதமாம், இந்திய மதம் மட்டுமே என்று சொல்லி, ஆலய வழிபாட்டு முறைகளிலே கோயில்களில் நுழைவதிலே, எந்த விதமான தடையும் இல்லாத சுதந்திரமான ஒரு மார்க்கம் இந்து மதமாம், இந்திய மதமென்று சொல்லுகிறேன்.
நன்றி, வணக்கம்