இந்து மதமும், உணவுப் பழக்க வழக்கங்களும்

 

இந்துக்களென்றாலே,பெரும்பாலும் வெஜிடேரியன்னு நினைக்கிறாங்க. பெரும்பாலும் வெஜிடேரியன் கிடையாது. ஆனால், வெஜிடேரியனா இருப்பவர்கள் தான் வெளிநாடுகளுக்கெல்லாம், சென்று அங்கு உயர்ந்த பதவிகளை எல்லாம், சந்திப்பதினால் அப்படி ஒரு எண்ணம் உருவாகி இருக்கிறது. கொஞ்ச நாளுக்கு முன் என்னோட ஆபீஸ்ல பாஷான்ற பையன் உட்கார்ந்தாரு. என்னோட ஆபீஸ்ல வெஜிடேரியன் மட்டும் தான் அலோவ்டு. நான்வெஜிடேரியனா இருந்தா வெளியே எடுத்துட்டு போய் சாப்பிட்டு வாங்கன்னு சொல்லி வெச்சிருக்கேன்.

நீங்க என்ன பிராமினான்னு கேப்பாங்க. நான் ஒண்ணும் பிராமின் இல்லப்பா, நானும் நான்வெஜ் சாப்பிட்றவன் தான். ஆபிஸ்னா, ஒரு டெக்கோரம் மெயின்டெயின் பண்ணனும். நான்வெஜ்ஜில் பெரும்பாலும் மசாலாக்கள் அதிகம் உள்ளதால், வாசனை வீசும். நீ, உனக்கு முடியும்னு நான்வெஜ் எடுத்துக் கொண்டு வருவ. உன்னோட வேலை பாக்கறவங்க ஏழையா இருப்பாங்க. நீ பிரியாணி எடுத்துக் கொண்டு வருவ. பக்கத்துல இருப்பவன் தயிர் சாதம் எடுத்துக் கொண்டு வருவான். அதனால தாழ்வு மனப்பான்மை வரும். அதனால ஆபிஸ்ல வெஜிடேரியன் எடுத்துக்கோங்க. நான் முஸ்லீம் சார். நான்வெஜ் சாப்பிடுவேன்னு அந்த பையன் சொன்னான். நீ முஸ்லீம் என்பதை நான் ஒத்துக் கொள்கிறேன். நான்வெஜ் சாப்பிடணும்னு இஸ்லாமியத்துல எங்க இருக்குன்னு சொல்லு பாக்கலாம். அடிப்படைவாத முஸ்லீம்கள் எல்லாம், ரொம்ப மதிக்கக் கூடிய ஒசாமா பின்லேடன், சர்வ தேசத்துல தீவிரவாதியா சித்தரிக்கப்பட்ட நபர், வெஜிடேரியனா இருந்தாருன்னு உனக்குத் தெரியுமா. ஏன்னா அவங்கல்லாம், இஸ்லாமியத்துல ஊறிப்போய், வெஜிடேரியனா இருந்தாங்க. நான்வெஜ் சாப்பிடணும்னு சொல்றியே என்ன மாதிரி நான்வெஜ் சாப்பிடணும்?

எங்க இஷ்டத்துக்கு சாப்பிட மாட்டோம் சார். ஹலால் பண்ணதத் தான் சாப்பிடுவோம்.

ஹலால் பண்ணதுன்னா என்ன? ஒரு தகுதியுடைய நபரை வைத்து, அந்த விலங்கை உணவிற்காக கொல்லும் போது, ஒரு மந்திரம்னு நாம சொல்றோம். சரி, அவங்க வந்து ஏதோ சொல்றாங்க. என்ன சொல்றாங்கன்னு அர்த்தத்தை பாத்திங்கன்னா, முஸ்லீம்களே நிறையபேர் இதுபோன்று அர்த்தத்தை பார்ப்பதில்லை, இறைவா, என்னுடைய உணவிற்காக, எந்த ஒரு கொலை வெறியும் இல்லாமல், இந்த விலங்கை துன்புறுத்தாமல், கொன்று தின்பதைத் தவிர வேறு வழியில்லை. எனவே, என்னைப் பொருத்தருளுன்னு கூறிவிட்டு, ஆரோக்கியமா இருக்கக்கூடிய விலங்கை ரொம்ப சித்தரவதை செய்யாமல், ஒரே வெட்டா, வெட்டியதற்கு பின் அந்த மாமிசத்தை உண்ண வேண்டும். அதைத்தான், ஹலால்ன்னு சொல்றாங்க. இங்க ஃபண்டமென்டலா என்னன்னு பார்த் தீ ங்கன்னா, வேறு வழியில்லாமல், முடிஞ்ச அளவுக்கு வெஜிடேரியன் சாப்பிடணும்னு சொல்றாங்க. இந்து மதத்துல வெஜிடேரியன் தான் சாப்பிடணுன்னு கண்டிப்பு இல்லை. இந்து கடவுள்களை, நாம எல்லா மாதிரியும் வெச்சிருக்கோம். வெஜிடேரியன் சாப்பிட்ற கடவுளும் இருக்கும். நான்வெஜிடேரியன் சாப்பிட்ற கடவுளும் இருக்கும். திருப்பதி இருக்கக் கூடிய அதே பெருமாள், மதுரையில் கள்ளழகரா இருக்கும் போது, நான்&வெஜ் சாப்பிடுபவர்கள் அங்கே

சென்று ஆடெல்லாம் வெட்டி, படையல் பண்ணி சாப்பிடுவாங்க. என்ன உணவுப் பொருள் கிடைக்குதோ அதை சாப்பிடுங்க. ஆனாலும், பூஜை புனஸ்கார காலங்களில், பெரும்பாலும் வெஜிடேரியன சாப்பிட்டு, நான்வெஜிடேரியன சாப்பிட்றத இன்னொரு நாள் வெச்சிக்கோங்கன்னு சொல்றாங்க. முனிவர்கள், ரிஷிகள், சாமியார்கள், எல்லாரும் நான்வெஜ் சாப்பிடுவது போல் புகைப்படம் வந்தால், இதையெல்லாம், இணையதளத்தில் வெளியிடுகிறார்கள். முக்கியமாக இந்து சாமியார்கள் சாப்பிட்டால். அவங்கல்லாம், சுத்தமான வெஜிடேரியனா இருக்கணும்னு கிடையாது. நாம புராணம், இதிகாசங்களை எல்லாம் எடுத்துப் பார்த்தோம்னா, அவங்களும் எல்லாத்தையும் உண்டார்கள் என்று தான் வருகிறது. ஒரு தடவை என்னாச்சுன்னா, கடும் பஞ்சம், விஸ்வாமித்திரர் மகரிஷியால குடும்பத்த நடத்த முடியல. காட்டுக்கு போயிட்றாரு. எங்க போனாலும் பஞ்சம். யாருக்குமே சாப்பாடு இல்ல. விஸ்வாமித்ர மகரிஷி தேடி வரும் போது, மனைவி, பிள்ளைகள் இல்லை. இவருக்கும் மிகவும் பசி. கடைசியாக குடிசைக்கு போனால், ஒரு வேட்டைக்காரன் நிறைய மாமிசத்தை வேட்டையாடி வைத்திருந்தான். இவர் அதைத் திருடி சாப்பிட்டிருக்கிறார். அதைத் திருடி சாப்பிடும் போது, அந்த வேடன் வந்து விடுகிறான்.எல்லாருக்கும் உபதேசம் செய்யக்கூடிய நீங்கள், சுத்த சைவமாக இருக்க வேண்டிய நீங்க இந்த குடிசைல வந்து நான் வேட்டையாடி வெச்சிருக்கிற ஒரு மிருகத்தோட மாமிசத்தை, திருடி சாப்பிடுகிறீர்களே நியாயமா? விஸ்வாமித்திரர் ஒரு நிமிடம் ஆடிப் போயிட்டார். என்ன பதில் சொல்லணும்னு தெரியல. அதுக்கப்புறம் அவரு பதில் சொல்றாரு. அப்பா, இந்த உடல் வந்து என்னோடதில்லை. இது இறைவன் நமக்கு கொடுத்தது. இந்த உயிர் நம்முடையது. அந்த உயிரை இந்த உடலில் வைத்திருக்கிறோம். இது இரவல் பாத்திரம். இதை பத்திரமாக வைத்திருக்க வேண்டும். இதற்கு, சுத்தம், சுகாதாரம் எல்லாத்தையும் சேர்த்து உணவும் அவசியம். அதனால் வேற வழியே இல்லாத போது, எப்படியாவது உணவுகளை உண்டு இந்த உடலை காப்பாற்றுவது நம்முடைய கடமை. வேற வழியே இல்லாத போது, திருடி சாப்பிடுவதைத் தவிர வேறு வழி இல்லைன்னு சொல்லிட்டு, அவனுக்கு ஆசிர்வாதமெல்லாம் பண்ணிட்டு வீட்டுக்கு போனா, வீட்டம்மா எப்படி நீங்க உயிர் பிழைத்து வந்தீங்கன்னு கேட்டாங்க. ஒரு வேடன் வந்து மாமிசத்தை கொடுத்தான். ஒரு வேடனோட மாமிசத்தை ரிஷியானவர் திருடியும் சாப்பிட்டு இருக்கிறார் என்று சொல்லும் போது, அனைவரும் நினைப்பது போல், மிகவும் கடுமையான கட்டுப்பாடுகள் இருக்கணும்னு அவசியம் கிடையாது. சில ஆதாரங்களை அடிப்படையாக வைத்து, மருத்துவ குணங்களை அடிப்படையாக வைத்துத்தான் இந்து மதத்தோட உணவுப் பழக்கவழக்கங்கள் வந்தது. இந்து மதத்தின் பண்டிகைகளில் ஒவ்வொரு பண்டிகையிலும் ஒவ்வொரு விதமான பதார்த்தங்களை செய்வார்கள். கொழுக்கட்டைகளை அவிப்போம், பயிர்களை அவிப்போம், சுண்டலை அவிப்போம், பின்பு களியை கிண்டி சாப்பிடுவோம்.

அதனால், பேலன்ஸ் டயட்ன்ற முக்கியமான காரணத்தைக் கொடுத்து, உணவுப் பொருட்களில், அதிலும் முக்கியமாக கடவுளுக்கு பிரசாதமாக வைக்கின்ற பொருட்களில் மருந்துப் பொருட்கள் பச்சை கற்பூரம் இதையெல்லாம் சேர்த்து, உடல் வலிமையையும், சுகாதாரத்தையும், நோயற்ற வாழ்வையும், வாழக்கூடிய ஒரு உணவுப்பழக்க வழக்கம்னா அது இந்து மதத்திலேயும், இந்திய மதத்திலேயும் இருக்கின்றது. இதுல பேலன்ஸ் டயட்ன்றது ஆட்டோமேட்டிக்காக வந்து விடுகிறது. இந்த காலத்தில் பேலியோ டயட்டுன்னு சொல்றாங்க. ஒரு நாள் முழுக்க இந்த பழங்களை சாப்பிடுங்கன்னு. இந்த பேலியோ டயட்டுன்றது இந்த பழக்கவழக்கத்திலேயே வந்து விடுகிறது. சமச்சீரான உணவு என்பது இந்து மதமான இந்திய மதத்தில் இருக்கின்றது.

நன்றி, வணக்கம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes:

<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>