என் முதல் கனவு
அன்பு நண்பர்களே, நான் உங்களுக்கு பலமுறை சொல்லியிருக்கிறேன். நினைவு தெரிந்த நாளிலிருந்து பல வருடங்களாக நான் நாத்திகனாகத் தான் இருக்கிறேன். அதன் பின்னர் தான், ஆத்திகம் என்னைத் தொற்றிக் கொண்டது. எனவே, கண்ணதாசன் அவர்கள் அர்த்தமுள்ள இந்துமதம் எழுதினார். நான் அறிவியலே இந்துமதம் என்ற உரைத் தொகுப்புகளை தயார் செய்திருக்கிறேன். நான் நாத்திகனாக இருக்கும் போது, எனக்கு ஒரு அசைக்க முடியாத நம்பிக்கை. நான் ஒரு இந்து என்று சொல்லும் போது நாத்திகனாக இருக்கிறேன் என்று சொல்வதற்கு நிறைய சுதந்திரம் இருப்பதை மனப்பூர்வமாக உணர்ந்தேன். பிறகு நான் என்ன நினைத்தேன் என்றால், நான் நாத்திகனோ, இல்லை ஆத்திகனோ நல்லவனாக இருந்தால் போதும். யாருக்கும் கெடுதல் நினைக்காமல் எல்லாருக்கும் நல்லதை நினைப்பவனாய், என் சிந்தனையில் இருந்தது.
செயல்கள் முன்ன, பின்ன ஆகலாம். கடவுள் என்பவர் நல்லவராக இருந்தால் நம்மை ஆட்கொண்டு தான் ஆக வேண்டும். அவரையே கும்பிட்டாயா, நம்பினாயான்னு பாக்கணும்னு கிடையாது என்று நான் மனதுக்குள் நினைத்துக் கொண்டிருப்பேன்.
எனக்கு முதன் முதலில் கனவில் அருள் பாலித்தவர் சுப்ரமணியர். ஆனால் அந்த கனவு என்னை ஆத்திகனாக மாற்றவில்லை. பிறகு விநாயகர் என்னை மிரட்டிட்டு போனாரு. அப்போதும் எனக்கு கடவுள் நம்பிக்கை வரவில்லை. எல்லாருக்கும் பேர்போன இந்த திருப்பதி பெருமாள் தான் என்னை ஜூலை 16, 2000 வருஷத்தில் ஒரு பெரிய சந்திர கிரகணத்தன்று ஆத்தகனாக மாற்றி விட்டார். பிறகு நான் ரொம்ப கிரிட்டிசைஸ் பண்ணிகிட்டு இருந்தேன். அப்போது பங்காரு அடிகள் அம்மா என்னை விஜயதசமியன்று அருள் பாலித்துச் சென்றார்கள். அதுகப்புறம் சாய்பாபா கனவில் வந்து ஆசீர்வாதம் செய்தார். எனக்கு இதில் என்ன ஒரு ஆச்சர்யம்னா நான் நாத்திகனா இருந்த காலக்கட்டத்தில், ரொம்ப கிரிட்டிசைஸ் பண்ணது இந்த மூன்றைத்தான். திருப்பதி பாலாஜி கிட்ட முட்டாள் தனமா காசுபணத்தையல்லாம் கொட்றாங்க. பங்காரு வந்து ஒரு ஆம்பளையா இருக்காரு! அம்மான்னு சொல்றாங்க. சாய் பாபா ஒரு பெரிய முடிய வெச்சிக்கிட்டு மேஜிக் பண்ணிக்கிட்டு இருக்காரு. ஒரு மேஜிக் காரன நம்பறாங்க. என்று நான் நினைத்ததுண்டு. கூறியதுண்டு.
எனக்கு அருள்பாலித்ததுன்னு பார்த்தால், இவங்க தான் முன்னாடி நின்னாங்க. இப்போதெல்லாம் யாராவது எதையாவது நம்பறாங்கன்னா அதை கிரிட்டிசைஸ் பண்ண பயமா இருக்கு. இதில் உண்மையிலேயே டிக்னிட்டி மற்றும் டிவைன் பவர் இருக்குமோ. எதுக்காக நாம அவசரப் படணும்னு. ஆனால் நாம் நாத்திகனா இருக்கிறோம், இல்லை ஆத்திகனா இருக்கிறோம். கடவுள் நம்பிக்கை இருக்கு. பூஜை புனஸ்காரம் பண்ணுகிறோம் என்பதில்லாமல், கடவுள் அருள்பாலிப்பார். ஆபத்துக் காலத்தில் வழிக்காட்டுவார் என்று என்னோட அனுபவமுன்னு நினைத்தேன். அது நிறைய பேரோட அனுபவமா இருந்திருக்கு. அதனால், இந்த நடராஜர் பத்தில் கூறுகிறார்கள் பாருங்கள். எப்படி அவரு சரியாக பாடியிருக்கிறார் பாருங்கள், அந்த காலத்தில், நான் உன்னை கும்பிடவில்லைப்பா, கேயிலுக்கெல்லாம் போகவில்லைப்பா, இதோட இன்னொரு பாயின்ட் சொல்றாரு பாருங்க. மொழியதனை மொகனையில்லாமலே பாடினேன். நம் தமிழ் மீது எவ்வளவு பற்று என்றால், இந்த தமிழில் இருக்கக் கூடிய பாடல்களை, வார்த்தைகளை நாம வீம்புக்குன்னே தப்பா பாடனோம்னா அது ஒரு பாவம். இங்கு எங்கு நிற்கிறார்கள் பாருங்கள். தமிழை கொண்டு வந்து இறைவனோட இழுக்குறாங்க. அதனால, நான் கோயிலுக்கு போகவில்லை, உன்னை கும்பிடவில்லை, என்னுடைய இறைமொழியாம் தமிழையும் நான் தவறாக வீம்புக்கு உச்சரித்தேன், மோசம் பண்ணினேன், ஆனாலும் என்னைப் பெற்றது நீதானே. என்னை காப்பற்ற வேண்டியது நீதானே. உன் மீது தானே பழிவிழும். என்மீதா பழிவிழும். ஆதலால், நீதான் என்னை கவனிக்க வேண்டும்.
நாத்திகமென்று ஒன்று இருந்தாலும் கூட கடவுளானவர் வந்து, அருள்பாலித்து, வழிநடத்தி, ஆதரவு கொடுத்து, ஆபத்துக் காலங்களிலே நல்ல விஷயங்களை செய்து வைக்கிறார் என்பதற்கு ஏராளமான உதாரணங்களோடு, கவிதைகளோடு, கதைகளோடு இருக்கக்கூடியது இந்து மதமாம், இந்திய மதம். அதனால் தான் பூஜை, புனஸ்காரம் செய்யாமல் இருந்தாலும், கடவுளை நம்பாமல் இருந்தாலும், கோயில்களை சுற்றாமல் இருந்தாலும், நல்லவர்களாக இருந்தாலும், நல்ல எண்ணங்களாக இருந்தாலும், கடவுள் அருள் நிச்சயம் கிடைக்கும் என்பதை ஆணித்தரமாக எழுதி வைத்தது, அனுபவங்களை பதியவைத்தது, இந்திய மதமாம் இந்து மதம். இதைவிட உயரிய கருத்துக்கள் என்னவாக இருக்க முடியும் என்று கூறுங்கள்.
நன்றி, வணக்கம்