கடவுளுக்கும் மனிதர்களுக்கும் இடையேயான உறவு

 

இஸ்லாமியத்தில் என்ன சொல்கிறார்கள் என்றால், கடவுளைப் பற்றி பேசக்கூடாது, கிரிட்டிசைஸ் பண்ணக்கூடாது, டிஸ்கஸ் பண்ணக்கூடாது. தொழுகை மட்டும் தான் செய்ய வேண்டும். ஒரு நாளைக்கு 5 முறை தொழுகை செய்ய வேண்டும். அதுவும் சிறப்பு தொழுகை செய்ய வேண்டும். இப்படித்தான் உட்கார வேண்டும், இந்தத் திசையில் பண்ண வேண்டும். இந்த முறையில் தான் பண்ண வேண்டும். டிஸ்கஷன் இல்லை, ஜஸ்டு ப்ரே. எல்லாத்துக்கும் ஒரு பூட்டுப் போட்டுட்டாங்க அவ்வளவுதான்.

 கிறிஸ்டியானிட்டில கொஞ்சம் குழப்பம். தேவனாகிய ஏசுன்னு சொல்லிட்டு ஏசுவ கடவுளா பாக்கறவங்க இருக்காங்க. இல்ல இல்ல, தேவதூதன் ஏசு. கடவுளோட தூதன் ஏசு. கடவுளோட தூதன் தான் ஏசுன்னு சொல்றவங்க இருக்காங்க. இல்ல, இல்ல தேவமாதா மரிய அன்னை தான் மெய். அந்தம்மா கும்பிட்றவங்க இருக்காங்க. இதில் இயேசுவ தேவனா பாக்குறவங்களுக்கும், இயேசுவே தேவன்னு சொல்றவங்களுக்கும்     இடையே சண்டை                வந்து ஐரோப்பாவில், பல லட்சக்கணக்கில் இறந்து போனார்கள். இது சாதாரணமாக இருப்பவர்களுக்குத் தெரியாது.

இந்து மதத்தில் கடவுளை நாம் எப்படி பார்க்கிறோமென்றால், அம்மாவாக பார்க்கிறோம், அப்பாவாக பார்க்கிறோம், பிள்ளையா பார்க்கிறோம், சகோதரனாக பார்க்கிறோம், நண்பனாக          பார்க்கிறோம், சில                              சமயம்              எதிரியாக பார்த்து, நான் உன்ன நம்பலப்பா, நீ எனக்கு கடவுளே இல்லன்னு சொல்லிக்கிறோம். எவ்வளவு சுதந்திரமென்று பாருங்கள்.               நடராஜர்        பத்துல             அப்பாவை   பார்த்து, திட்டுறாங்க.

“இன்னமும் சொல்லவோ, உன்மனம் கல்லோ, இரும்போ பெரும்பாறையோ? இருசெவியும் மந்தமோ, கோளாது அந்தமோ, இது உனக்கு அழகுதானோ? என் அன்னை மோகமோ, இது எனக்கு சோகமோ இது உன் செய்கை தானோ? இரு பிள்ளை சாபமோ, யார்மீது கோபம் தானோ? ஆனாலும் நான் விடுவனோ, உன்னை விட்டெங்கு சென்றாலும் விழலாவேனோ உன்னை அடுத்தும் கெடுவனோ?”அப்படி என்று திட்றாங்க.

என்ன எங்கம்மா மேல பாசமா இருந்துக்கிட்டு, மோசமா இருந்துட்டு, நீ என்ன கவனிக்காமா விட்றியா, உனக்கு பெத்த ரெண்டு பிள்ளைய பாத்துட்டு என்னைய கவனிக்காம விட்றியான்னு, ஒரு அப்பாவிடம் உரிமையாக திட்றாங்க. இதைப்பாடும் போது, என்னுடைய மனைவிக்கு கோபம் வந்து விடும். ஏங்க கடவுளைப் பார்த்து திட்ற மாதிரி இருக்கேன்னு. என்னுடைய மனைவி இன்னொன்றை என் முன்னே வைத்தார்கள். இதுல பாருங்க எப்படி குழந்தையைக் கொஞ்சுவது போல் கொஞ்சுகிறார்கள்.

“திருவே, என் செல்வமே, தேனே, வானே, செழுஞ்சுடரே, செழுஞ்சுடரான ஜோதிமிக்க உருவே, என் உறவே, என் ஊனே, ஊனின் உள்ளமே, உள்ளத்தின் உள்ளே நின்ற கருவே, என் கற்பகமே, கண்ணே, கண்ணின் கருமணியே, மணியோடு பாவாய் காவாய்”எவ்வளவு அழகாக குழந்தையைக் கொஞ்சுவது போல், கொஞ்சுகிறார்கள். இதை விட்டுட்டு, திட்டுகிறவரை போய் சத்தமாக வீட்டிலே படித்துக் கொண்டு இருக்கிறீர்கள்னு என்னோட மனைவிக்கு கோபம் வருகிறது. “அம்மையே அப்பனே, ஒப்பிலா மணியே அன்பில் விளைந்த ஆரமுதே’இதில் கொஞ்சறாங்க. அதாவது குழந்தையை நாம் எப்படி தாலாட்டுவோம் கொஞ்சுவோமோ அதுபோல் உள்ளது. அப்பாக்கிட்ட எப்படி சண்டை போடுவோம், கேட்போம். நான் தப்பு பண்ணினேன் இல்லையா என்னை ஏன் கேட்கவில்லை, கண்டிக்கவில்லை. ஆதலால் இந்துமதத்தில் இருக்கும் முறைபாடுகளையெல்லாம் நினைக்க நினைக்க நமக்கு இனிமையாகவும் சுகமாகவும் இருக்கிறது. இதை நாம் பயிற்சி செய்யாமல், புதிய தத்துவங்களின் பின்னால் போய் அதுதான் உண்மையோ, அதுதான் சிறப்போ என்று சொல்லுவாங்க.

அதாவது நம்முடைய அம்மா நம்மை சிறப்பாக பாலுட்டி சீராட்டி எல்லாம் பண்ணி வெக்கிறாங்க. அதில் நம்முடைய அம்மா டிரஸ் கொஞ்சம் கலஞ்சி, தலை கொஞ்சம் கலஞ்சி தான் இருக்கு. வெளியே நின்று பார்ப்பவர்களுக்கு, பக்கத்து வீட்டு ஆன்ட்டி அழகா ஸ்மைல் பண்ணிட்டு ஹாய்ன்னு சொல்றாங்க. உடனே, நமக்கு அந்த பக்கத்து வீட்டு ஆண்ட்டிய ரொம்ப பிடிச்சிப் போயிடுது. அவங்க ரெடியாயிட்டு வெளிய வந்து நிக்கறாங்க அவ்வளவு தான். நம்மோட அம்மாவின் அருமை தெரியாமல் பக்கத்து வீட்டு ஆண்ட்டிய போல நம்ம அம்மா இருந்தா நல்லா யிருக்கும்ணு நினைக்கிறோம்.

அதுபோல், நம்முடைய தர்மநெறியின் அருமை பெருமைகள் புரியாமல், மற்ற மதங்களை குறை சொல்லவில்லை, ஆனால் அதுதான் உண்மை என நினைக்கும் போது, அதாவது நம்முடைய அம்மாவை விடுத்து அந்தம்மாவை சொந்த அம்மா என்று நினைப்பது மடமையல்லவா? அதுமாதிரி டீசன்டா வெச்சிக்கலாம். மத்தவங்கள அம்மான்னு கூட கூப்பிடலாம். ஆனாலும், நம்ம அம்மா தான் அம்மா. நம்ம அம்மா தான் நமக்காக வாழ்ந்தவங்க. நம்ம அம்மா தான் நம்மளப் பெத்தவங்க. நம்ம அம்மாகிட்ட தான் உரிமையோட எனக்கு பால் கொண்டுவா, காபி கொண்டுவான்னு, நம்ம அம்மாகிட்ட தான் பேச முடியும்.

அதுபோல், இந்துமதத்தின் நெறிகளை உணர்ந்து புதிய சமுதாயமும் மற்ற மதங்களின் தான் உயரிய கருத்துக்கள் இருக்குமென நினைக்கக்கூடிய சமுதாயமும், நல்லவிதமாக பண்பட்டு இருக்குமென நினைக்கின்றேன். நன்றி, வணக்கம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes:

<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>