கஷ்டங்கள் தீர
கஷ்டங்கள் தீர இந்துமதம் சொல்லியிருக்கும் வழி. கஷ்டம் என்பது அனைவருக்கும் இருக்கு. பணக் கஷ்டம் இருக்கு. மனக்கஷ்டம் இருக்கு. தொழில்ல கஷ்டம் வருது. உறவுகளுக்குள் கஷ்டம் வருது. இதை எப்படி சரிசெய்வதென்பது தெரியாமல், சிலபேர் கோயில் கோயிலாக செல்கிறார்கள். சிலபேர் பிரார்த்தனைகளில் ஈடுபடுகிறார்கள்.
இந்து மதத்தில் கஷ்டங்கள் தீர என்ன வழியென்றால், இந்த கோயிலுக்கு போய் இந்த பூஜை பண்ணுங்க. அந்த கோயிலுக்கு போய் அந்த பூஜை பண்ணுங்கன்னு சொல்லப்பட்டாலும், உண்மையில் இராமாயணத்துல சுந்தர காண்டம் இருக்கு. சுந்தர காண்டம் படித்தால் எப்படி கஷ்டம் தீரும் என்று எனக்கு புரியலையேன்னு நினைத்து ஒரு தடவை சுந்தர காண்டத்தை படித்தேன்.
இராமயணத்தை பொதுவாக படித்திருக்கிறேன். சுந்தர காண்டத்தையும் படித்தேன். படிக்கும் போது தான் எனக்கு தெரிந்தது. கம்யூனிகேஷன் ஸ்கில்ஸ் செட்டப் பத்திதான் முழுக்க முழுக்க சுந்தர காண்டம் உள்ளது. அனுமன் என்கிற, சுக்ரிவனோட அமைச்சன் இராமனுக்கு தோழனாக மாறி, சீதையை பார்க்கப்போய், சீதையும் இராமனும் பெரிய பிரச்சனையில் இருக்கிறார்கள். ஒருவரை ஒருவர் பார்க்க முடியாமல்.
இராமர் முடிவு செய்து விட்டார். இந்த நேரத்துக்குள்ள சீதையை பார்க்க முடியாமல் போனால், நான் இறந்து போவேன்னு. சீதையும் அதே முடிவில் இருக்காங்க. அப்போது விரைவாக மரத்தின் மேல் ஏறி குதித்து செல்லக் கூடிய ஒருவராக அனுமன் இருக்கிறார். அந்த அனுமன் எப்படியெல்லாம் சிந்தனை செய்கிறார் என்பதை பல பக்கங்களில் மிகவும் விரிவாக எழுதியிருக்கிறார்கள்.
சுந்தர காண்டத்தை நீங்கள் படித்தீர்களானால், திட்டமிடுதல், யாரை துணையாக வைப்பது. எந்த வார்த்தையை முன்னாடி பேசணும், எந்த வார்த்தையை பின்னாடி பேசணும், பார்த்தவுடன் என்ன செய்ய வேண்டும். பார்க்க முடியாமல் போனால் என்ன செய்ய வேண்டும். அவரவர்களுக்கு எவ்வாறு கம்யூனிகேட் பண்ண வேண்டும் என்ற அனைத்தும் உள்ளது.
இந்த கம்யூனிகேஷன் என்பது திட்டமிடுதல் என்பது, ஒவ்வொரு வார்த்தையும் எப்படி யோசித்து பேச வேண்டும் என்பது, யாரை துணையாக வைத்துக் கொள்ள வேண்டுமென்பது, எந்த இடத்துல எதிர்த்து நிற்க வேண்டும் என்பது, எந்த இடத்தில் பணிந்து செல்ல வேண்டுமென்பது, எந்த இடத்தில் வெறும் வாய்ஜாலத்தில் பேசிவிட்டு ஓடிவிடணும், உண்மையான சண்டை போடக்கூடாது. எந்த இடத்தில் அடிக்க வேண்டும். எந்த இடத்தில் அடிப்பது போல் பாவலா செய்ய வேண்டுமென்பது எல்லாம் தெளிவாக சொல்லப் பட்டிருக்கிறது.
கடைசியாக அனுமன், சீதையை பார்த்து, பிறகு இராமனிடம் ‘கண்டேன் சீதையை’ என்பது, வெறும் சீதையென ஆரம்பித்தால் கன்பியூஷன் ஆகி விடும் என்று முடிக்கறாங்க. ஆதலால், கஷ்ட காலத்தில், சுந்தர காண்டத்தை படிங்கன்னு சொல்றாங்க.
இதனால், சுந்தர காண்டத்தை படிக்கும் போது நமக்கெல்லாம் ஒரு நம்பிக்கை வருகிறது. திட்டமிடுதல் வருகிறது. தெளிவு வருகிறது. யாரிடம் சண்டையிட வேண்டும். யாரை அடிக்கப் போற மாதிரி பாவலா செய்ய வேண்டும். யாரிடம் பணிந்து பேச வேண்டும். யாரிடம் நயந்து பேச வேண்டும். அப்போது, அந்த பிரச்சனையை முடிக்க என்ன செய்ய வேண்டும் என்கிற அனைத்து கருத்துக்களும் இருப்பதால், கஷ்டங்களை நாம் எப்படி மேனேஜ் செய்ய முடியும். இந்து மதத்தில் இது போன்ற உயரிய கருத்துக்களை மறை முகமாக சொல்லி யிருக்கிறார்கள். ஒவ்வொரு கருத்தையும் ஒவ்வொரு நூல்களில் சொல்லியிருக்கிறார்கள்.
அன்று நான் விநாயகரை பற்றி கூறினேன். ஒரு முஸ்லீம் பொண்ணு ஏன் விநாயகரை முழுமுதற் கடவுள்னு வணங்கறாங்கன்னு சொன்னது. அதுபோல், சுந்தர காண்டத்தை படியுங்கள். கஷ்டங்கள் தீரும் என்று கூறும் போது, அதிலிருக்கும் பொருளையும் அர்த்தங்களையும் உணர்ந்து, அனுமன் எவ்வாறு அந்த கஷ்டங்களை ஹேண்டில் பண்ணினார் என்பதை நாம் உணர்ந்தால் நம்முடைய கஷ்டங்கள் பிரச்சனைகள் எல்லாமே தீரும்.
அறிவியலே இந்துமதம், நன்றி, வணக்கம்.