நெப்போலியன் என்று நாம் சாதாரண தமிழில் எழுதும் சொல், .. நா போ லி யோ .. என்று ஃப்ரெஞ்ச் உச்சரிப்பில் வரும்.

தமயந்தி என்று பெயர், வடநாட்டில் ஷ்ரவந்தி என மாறும்.

கம்பீர் என்று கம்பீரம் அதாவது வீரமும் பெருமையும் கலந்த என்று பொருள் படும் சொல், வடநாட்டில் ‘ பணிவும் அன்பும் ‘ கலந்த என்று பொருள் படும்.

சிலருக்கு நாய். சிலருக்கு அது குழந்தை. டிங்கு பிங்கு என்று ஏதாவது பெயர் இருக்கும். அவர்கள் வீட்டுக்கு போய் நாய் என்று சொல்லக் கூடாது.

இந்துக்கள் நாயை பைரவர் என்று காவல் தெய்வமாக வைத்தனர். பெண் நாய் என்றால் பைரவி.

கால பைரவர் சக்தி மிகுந்த தெய்வம் என வைத்து அதிக பயபக்தியுடன் வழிபட வேண்டும் என்று வைத்தனர்.

இதன் அறிவியல் என்ன?

காட்டில் நரியாக சரியாக இருந்த ஒரு விலங்கு. மனிதர்களுடன் பழகி நாயாக மாறியது. உழைத்து கொட்ட மனிதன் இருப்பதால், வேட்டை விட்டு சேட்டை செய்து விளையாடி மகிழ்ந்து குலாவி அதுவே குணமானது.

காவலுக்கு வெளியே வை. கட்டி அனைத்து ரேபிஸ் போன்ற பெரு நோய் வாங்காதே என்ற எச்சரிக்கை.

இந்தியர்கள் இந்துக்கள் நாய்கறி சாப்பிடாதவர்கள் அல்ல.

நாடு மிகுந்த பஞ்சத்தில் இருந்த போது விஸ்வாமித்திரர் ஒரு வேடனின் குடிசையில் இருந்த நாய்க் கறியை திருடி சாப்பிட்டார். வேடன் கையும் களவுமாகப் பிடித்து விட்டான்.

மற்றவர்களுக்கு பாடம் எடுக்கும் நீங்கள் இப்படி திருடலாமா? என வேடன் கேட்கிறான்.

ஆன்மா, உயிர் என்னுடையது. அதற்கு அழிவு இல்லை. இந்த உடல் இறைவன் கொடுத்த பாத்திரம். அதை பத்திரமாக வைத்து அன்றாட உணவளித்து பாதுகாத்து இறைவனிடம் திரும்ப ஒப்படைக்க வேண்டியது நம் கடமை. எனவே உணவுக்கு வழியில்லை என்ற நிலை வரும் போது, திருடி தின்பதில் தப்பில்லை என்று அவர் சொல்லிவிட்டு, தன் வீட்டுக்கு வருகிறார்.

அங்கே தன் மனைவி மக்கள் எப்படி உயிர் வாழ்ந்தனர் … உணவே கிடைக்காத போது.. என்று ஆச்சர்யம்.

அதே வேடன் இவர்கள் வீட்டுக்கு அருகில் கொஞ்சம் மாமிச உணவை வைத்து விட்டு செல்வதை வழக்கமாக வைத்திருந்தான். காட்டுக்கு சென்று தவமிருந்து வந்த ராஜரிஷி, விஸ்வாமித்திரர் ஒரு காலத்தில் ராஜாவாக இருந்தவர். எனவே ராஜ ரிஷி. வேட்டையாடுதல் என்ற தன் வேலையை தவறாமல் செய்த வேடனே மனித குலத்துக்கு நம்பிக்கை வடிவம் என்று உணர்ந்தார். அவனை வணங்கினார்.

நெப்போலியன் ஒரு குட்டையான சராசரி ஆள். சாதாரண ஏழை குடும்ப படை வீரன். ஆனால் விரைந்து முடிவு எடுத்து, எதிரிகள் அதை உணர்வதற்கு முன்னரே அவர்களை வென்று விடுவான். கொன்று விடுவான். எல்லா நாட்டு மக்கள் ஆட்சிக்கும் சட்ட வடிவ சாசனம் எழுதியவன் அவனே. அது Nepolianic code எனப்படும். ஏனென்றால் அதற்கு முன் மன்னர் ஆட்சி மட்டுமே உலகில் இருந்தது. மக்களாட்சி வரும் போது அதை எப்படி செயல் படுத்துவது என்று யாருக்கும் தெரியவில்லை. அதற்கான வரைமுறை வகுத்தவன் நெப்போலியன். அதன் படி, நில உடைமை, சொத்து உடமை மக்களுக்கானது. அரசோ, அரசனோ கேட்டுப் பெற வேண்டும், உரிய விலை கொடுத்து என்று ஆனது. அதன் பின்னரே மனித குலம் பெரிய முன்னேற்றம் அடைந்தது. வளைகுடா நாடுகள் எல்லாம், இஸ்லாமிய மன்னர் ஆட்சிதான். ஆனால் அங்கேயும் கூட ஒரு தனி மனிதனின் நிலத்தில் பெட்ரோலியம் கிடைத்தால் அது அவன் சொத்து. அரசு காசு கொடுத்து வாங்கும். அவன் பெரும் பணக்காரன் ஆவான்.

ஆனால் ஜனநாயகம் பேசும் இந்திய நாட்டில், ஒரு விவசாய நிலத்தின் உரிமையாளரை கேட்காமல் எரிவாயு குழாய் பதிப்பார்கள்.

சரி அதை விடுவோம். இங்கே, அறிவியலே இந்து மதம் எங்கே உள்ளது?

நெப்போலியன் வகுத்த தனி மனித உரிமை சட்டங்கள் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே இந்து மதத்தில் உள்ளன.

காசி ராஜன் சால்வனை காதலிக்கும் அம்பை, கங்கை பெருகி வர, விவசாய நிலத்தின் வழியே தேர் நடத்த சொல்கிறான். தேரோட்டி வீரன் மறுக்கிறான். விவசாய விளைநிலம் வழியே தேரோட்ட முடியாது. அதன் பின்னர், தீராக் காதல் கொண்ட அம்பை, தானே தேரோட்டி சென்று தன் காதலனுடன் சந்திக்கிறாள்.

தனி மனித உரிமை ஒரு தர்ம செயலாக இந்து மதத்தில் மட்டுமே உள்ளது.

1 thought on “தனி மனித உரிமை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes:

<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>