பிடித்தது எது, பிடிக்காதது எது என்பதன் அடிப்படையில் மனித மனம் அல்லாடுகிறது. சரி எது தவறு எது என்பதன் அடிப்படையில் அல்ல.
மனம் ஒரு குரங்கு என்று சொல்வார்கள்.
தாவிக் கொண்டே இருக்கும்.
மனம் புனிதமாகி ஓரளவு அமைதி கொள்ளும் போது, ஆன்மா ஆகிறது. கிருத்துவத்தில் அதை ஆவி என்கின்றனர். ஆவியும் அலை பாயக்கூடியது. நல்ல ஆவி, கெட்ட ஆவி, நடுத்தர ஆவி, உயர்தர ஆவி எல்லாம் உண்டு. ஆவி எல்லோரிடமும் உண்டு. எல்லாமே பாவம் செய்த ஆவிகள். எனவே பாவ விமோசனம் பெற பரிசுத்த ஆவியுடன் இணைய வேண்டும்.
இஸ்லாத்தில், ஆவியாவது, பாவியாவது. நீ ஒரு தண்டனைக் கைதி. கட்டுப்பட்டு ஒழுக்கமா இரு. பின்னர் அல்லாவின் சொர்க்கம் உனக்கு கிடைக்கும்.
அறிவியலே இந்து மதம் என்ன சொல்கிறது? மனக் கட்டுப்பாடு பற்றி?
உடலில் தூய்மை. வீட்டில் தூய்மை. நுழைவாயிலில் தூய்மை.
புறதூய்மை நீரால் அமையும், அகதூய்மை வாய்மையால் காணப் படும். எனவே வாய்மையே தூய்மை.
பின்னர், தூய்மையை இருப்பதை காட்டும் அடையாளமாக மத சின்னங்கள்.
குளிக்காமல் படுக்கையிலேயே இஸ்லாமியர் தொழுகை நடத்துவர். கிருஸ்துவர் பிரேயேர் செய்வர். ஆனால் இந்துக்கள் குளிக்காமல் விபூதி, திருநாமம் கூட இடக் கூடாது. அவமதிப்புக்கு ஆளாவோம்.
எனவே உடலும் உள்ளமும் தூய்மை. பின்னர், சில வழி முறைக் கட்டுப்பாடுகள்.
பெண்கள் தனிமையும் ஓய்வும் அதிகம் பெறுவதால், அவர்கள் மனம் அதிகம் அலை பாயக் கூடும் என்பதால் அவர்களுக்கு கொஞ்சம் அதிக கட்டுப்பாடு.
அன்றாட வாழ்வியல் வழிமுறைகள்.
‘சனாதன ‘ என்ற சொல், ‘தொன்று தொட்ட’, என பொருள் படும்.
எனவே சனாதனத்தை எதிர்ப்போம் என்று சொல்வது, புரிதல் இல்லாததை காட்டுகிறது.