மனிதர்களுக்கு ஓய்வில்லை. மற்றவர்களால் ஓரம் கட்டப் படுகிறார்கள்.
இஸ்லாமிய நாகரீகத்தில், கிருத்துவ நாகரீகத்தில், வயது முதிர்ந்த ஆணும் பெண்ணும் ஓரங்கட்டப் படுகிறார்கள். தனிமைப் படுத்தப் படுகிறார்கள்.
எங்கும் சாமி எதிலும் சாமி என்று சொல்லும் இந்து நாகரீகத்தில், வயது அனுபவம் கல்வி … அதுவும் மதிக்கப் படுகிறது. அவர்களின் காலுக்கு விழுந்து இன்னும் பல வடிவங்களில் ஆசி பெறுவது நடக்கிறது. அவர்கள் ஒதுக்கி வைக்கப்படுவது இல்லை.
நாம் பலமுறை சொன்னது போல, கிறித்துவம் இஸ்லாம் சுவைத அடிப்படை. அங்கே கடவுள் வேறு. மற்றவை வேறு. எனவே பெரியவர்களிடம் ஆசி பெறுவது என்ற நடைமுறை இல்லை.
இந்திய கிறித்துவம் பல விஷயங்களில் இந்து பண்பாட்டை ஒட்டி இருப்பதால், கிறுத்துவத்தில் கொஞ்சம் பெரியவர்களிடம், மத போதகர்களிடம் பணிவு காட்டும் பழக்கம் இருக்கலாம். அது கூட, ‘ எங்களுக்காக பிரார்த்தனை செய்யுங்கள் ‘ என இருக்கும் தவிற ‘ எங்களுக்கு ஆசி வழங்குங்கள் ‘ என இருக்காது.
எனவே வயது மூப்பு என்ற அடிப்படையில் ஒதுக்கி வைக்காமல், பெரியவர்களையும் வணங்க வேண்டும் என்று சொல்லும் அறிவியலே இந்து மதம்.