வாழ்க்கை அழகானது. நாம் பயன்படுத்தும் பொருட்களால் அல்ல. நாம் சந்திக்கும் மனிதர்களால்.
மனிதர்கள் அழகானவர்களா?
அழகில் தெய்வம் காணும் அதிசயம் இந்து மதத்தில் மட்டுமே.
‘காலுக்கு விழுந்து கும்பிட தோன்றும் அழகு ‘ என்ற வார்த்தைகளை இந்துக்கள் மட்டுமே பயன் படுத்த முடியும்.
இஸ்லாத்தில் பெண்கள் தங்கள் உடலை (அழகை அல்ல) கணவனுக்கு மட்டுமே காண்பிக்க முடியும்.
கிறிஸ்துவில், தேவனுக்காக தங்கள் அழகு சாதன பொருட்கள் புறந்தள்ள வேண்டும்.
அறிவியலாம் இந்து மதத்தில் ?
அழகு படுத்துதல் ஒரு கலை. அது ஒரு கடமை. உரிமையும் கூட.
ஒன்றை நீங்கள் கவனிக்க வேண்டும். அழகு படுத்தல் என்பது சுத்தத்தின் மேம்பாடு. அழகு படுத்தல் சுத்தம் செய்த பின் மட்டுமே செய்ய முடியும்.
சுத்தம் கொரோனா போன்ற பெரு நோய்களை தடுக்கும்.
எனவே தெய்வீக கலையம்சம் உள்ள அம்மன் சிலைகளை படைத்தோம். அவற்றை தெய்வமாக பார்க்காமல், காமக் கண் கொண்டு பார்க்கும் கயவர்கள் நுழையக்கூடாது என்பதற்காக ‘ இந்துக்கள் மட்டுமே அனுமதி ‘ என கட்டுப்பாடு வைத்தோம்.
கடவுளே இல்லை என்பார், கடவுள் ஜெருசலேமில் உள்ளார், மேற்கு திசையில் மட்டும் உள்ளார் என்று நினைப்பவர்கள் இந்து கோயில்களில் அவற்றின் பூஜை புனஸ்கார முறைகளில் தலையிட முடியாது.
சரி அழகு எப்படி உருவாகிறது?
அது தெய்வீக எண்ணங்களால் நம் மனம் ஆட்கொள்ளப் படும் போது உருவாகிறது.
எனவே பல்வேறு அழகான வடிவமாக தெய்வங்களை அமைத்து, நாம் ஆட் கொள்ளப் பட வேண்டும் என்று வேண்டுகிறோம்.
தெய்வீக எண்ணங்கள்? எல்லா உயிரும் இன்புற்று இருக்க நினைப்பதுவே அல்லால் வேறொன்றறியேன் இறையே பராபரமே..
சர்வ ஜன சுகினோ பவந்து..
அனைத்து உயிர்களும் சுகமாக இருக்கட்டும்.
நாத்திகர்கள் மனித நேயம் முக்கியம் என்று சொல்வார்கள். இறைவனை மற, மனிதனை நினை என்று சொல்வார்கள்.
பகுத்துண்டு பல்லுயிர் ஒம்புதல் நூலோர் தொகுத்தவற்கெல்லாம் தலை.
எனவே வெறும் மனிதர்கள் மட்டுமே அல்ல. எல்லா உயிர்களும், …
பாம்பு, பல்லி, மரம், மட்டை, குளம், குட்டை, சிங்கம், கரடி, நாய், நரி, யானை, எறும்பு, காக்கை, மயில், குருவி, குளவி.. எல்லா உயிர்களும் இன்புற்று சுகமாக வாழ… அறிவியலே இந்து மதம்…
We never thought that beauty is an integral part of Hinduism and its practices