ஆசையே இதயத்தின் சக்தி. ஆர்வமே நம்மை இயக்கும். நுண்ணிய திறமை மதிக்கத் தக்கது என்றாலும், ஆசையும் ஆர்வமும் இல்லாத இடத்தில் அது பயனற்றது.
மதம் என்ற தமிழ் வார்த்தை, உன்மத்த நிலையை குறிக்கிறது. Religion என்ற ஆங்கில வார்த்தை, கேள்வி கேட்காமல், ஒரு விஷயத்தை முழு நம்பிக்கையோடு, அடிமைத்தனமாக பின்பற்றுவதை குறிக்கிறது. மதம் கொண்ட யானை, தன உணர்வுகளை வெளிப்படுத்த இயலாமல், கட்டளைக்கு அடி பணியாமல், ஒரே சிந்தனையோடு, மூர்க்க குணத்தோடு இருக்கும். சந்தர்ப்ப சூழ்நிலை மாறி, பின்னர் அமைதி அடையும். எனவே இந்து தர்மம் என்று சொல்கிறோம். இஸ்லாமியர்களும், கிறிஸ்துவர்களும் கூட, இந்தியர்கள் பின்பற்றுவது ஒரு மதமே அல்ல, என்று சொல்வார்கள்.
மதம், ஒரு குறிக்கோளை நோக்கி, மனித இனத்தை வழி நடத்துகிறது.
கிறிஸ்துவம், பாவ மன்னிப்பை நோக்கி வழி நடத்துகிறது. ஒரு சர்ச்சில் உறுப்பினராக இரு. வருமானத்தில் 10% கொடு. வாரத்தில் ஒரு நாளை தேவனுக்கு அர்ப்பணி. மனம் உருகி மன்னிப்பு கேள். உனக்கு பாவ மன்னிப்பு கிடைக்கும். பரலோக சாம்ராஜ்யத்தில் இடம் கிடைக்கும் என்பது கிருஸ்துவ அடிப்படை. இங்கே பாவம் என்பது, தேவனுடைய ஆணையை மீறி, சாத்தானின் தூண்டுதலால், ஆதாம் ஏவாள் ஒரு மரத்தின் பழத்தை சாப்பிட்டது.
இஸ்லாம் சொர்க்கத்தை நோக்கி வழி நடத்துகிறது. அதே, தேவனுடைய ஆணையை மீறி, சாத்தானின் தூண்டுதலால், ஆதாம் ஏவாள் ஒரு மரத்தின் பழத்தை சாப்பிட்டது, குற்றம். குற்றத்துக்கு தண்டனை, மனித வாழ்வு. அதில் கட்டுப்பாடுகள். ஐந்து வேலை தொழுதே ஆக வேண்டும். ஒவ்வொரு செயலுக்கும் முன்னாலும் பின்னாலும், (எழுந்தவுடன், தூங்கும் முன், உடலுறவு ஆரம்பிக்கும் போது, அது முடிந்த உடன், உணவுக்காக ஒரு விலங்கை வெட்டும் போது, என எல்லா நிலைகளிலும்). அங்கே ‘அல்லா’ ஒரு ஜெயில் வார்டன் போல. அல்லாஹ்வுக்கு பிடித்த விஷயங்கள் என்று ஒரு லிஸ்ட் உண்டு. மற்றவர்களை இறை நம்பிக்கை உள்ளவர்களாக மாற்றுவது, பணிவுடன், நட்புடன் இருப்பது, ஏழைகளுக்கு உதவுவது, அல்லாஹ்வுக்கு பிடிக்கும். எனவேதான், இஸ்லாமிய தீவிர வாதிகளின் முகத்தை பார்க்கும் போது, அவர்கள், பணிவுடன், நட்புடன், கருணையுடன் இருப்பது போல தோன்றும். எனவே குற்றவாளிகளுக்கான தண்டனை ஏற்று, (அதுதான், ஐந்து வேலை தொழுகை, etc ), அல்லாஹ்வுக்கு பிடித்த (மதம் மாற்றுவது, etc ) செயல்களை செய்தால், சொர்க்கத்துக்கு early entry. எனவேதான் அங்கே, தற்கொலை தீவிர வாதிகள் அதிகம் உருவாகின்றனர்.
இந்து தர்மம் மட்டுமே வெற்றியை நோக்கி வழி நடத்துகிறது. உள்ளார்ந்த தேடல். வெற்றிக்கான வழி காட்டி. பகுத்துண்டு பல்லுயிர் காக்கும் மாண்பு, பிற்காலத்தில் டார்வின் சொன்ன பரிணாமம் பற்றிய அறிவு, சூரியனை சுற்றி உலகம் இயங்கும் என்ற உண்மை, தாவரங்களுக்கும் உயிர் உண்டு என்ற தத்துவம். எல்லாமே பல நூறு ஆண்டுகளாக நமக்கு தெரிந்த விஷயம். மற்றவர்களுக்கு புதிய கண்டுபிடிப்பு.