இயற்கையின் வேகத்துக்கு இயைந்து செல்லும்போது இயல்பாகவே பொறுமையின் ரகசியம் புரியும்.
பொறுமை ரகசியமானது. தனக்கென திட்டம் தீட்டி, மாபெரும் வெற்றி பெற்று தரக் கூடியது.
உனக்கும் ஒரு காலம் உண்டு பொறுத்திரு மகனே.. இன்பத்திலும் துன்பத்திலும் சிரித்திரு மகனே என்று ஒரு பாடல் உண்டு.
எனவே இந்து இதிகாச புராணங்களில் தவம் என்று ஒன்று வைத்தார்கள். ஒரே குறிக்கோளுடன், சிந்தனை மாறாமல் அனைத்து செயல்களும் அந்த சிந்தனை அடிப்படையில் செயல்படுவது தவமாகும்.
பாமரர்களுக்கு எளிதில் புரியும் படி, தவம் இருப்பவர்கள் காவி உடுத்தி, தாடி வளர்த்து, கையில் கமண்டலம் வைத்து இருப்பது போல சித்தரித்ததாளும், மிகுந்த கவனமுடன் மற்ற சிந்தனைகளை விலக்கி ஒரு குறிக்கோளை அடைய செயல் படுவது தவமாகும்.
இப்போதும் நம்மில் பலர் தவம் இருக்கிறோம். ஒரு சிறந்த மருத்துவராக, நீதிபதியாக, ஒரு பெரு நிறுவன உரிமை ஆளர் ஆக… மாநிலத்தில் முதல் மதிப்பெண் பெற… தவத்திற்கு பலன் கிடைக்காமல் போகாது. வெற்றி நிச்சயம்.
இது தான் இந்து மதம் காட்டும் நெறி. ஆனால், இஸ்லாம் கிறித்துவ நெறிகள்.. எப்படி?
கிருத்துவத்தில் துறவறம் தவம். எனவே கன்னியாஸ்திரிகள் பங்கு தந்தை உருவாகின்றனர். அவர்கள் பாவ மன்னிப்பு அளிக்கும் ஏஜென்ட் போல. இஸ்லாத்தில் தவத்துக்கு இடம் இல்லை. இல்லற வாழ்க்கை கட்டாயம். எனவே மிகப்பெரும் சாதனைகளை மத நெறிப்படி இஸ்லாமியர்களால் செய்ய முடியாது.
மிகப் பெரும் சாதனைகளை இந்துக்களால் மட்டுமே செய்ய முடியும். அப்படி செய்பவர்கள், தங்களை அறியாமல் இந்து தர்ம நெறியை பின் பற்றுகிறார்கள் என்பதே உண்மை.
மரம் போல்வர் மக்கட் பண்பு இல்லாதவர்.
என்ற ஒரு திருக்குறள் உண்டு.
மக்களுக்கு,, பண்பு இருக்க வேண்டும். நியமிக்கப் பட்ட தர்ம நெறிகளில் இருந்து வழுவாமல் ஒரு நபராக இருப்பது.
ஆபாச வார்த்தைகள் பேசி, பெண்களை நடுத்தெருவில் அசிங்கமாக பேசி, ஒசி சாப்பாடு இங்கே கிடைக்கும் என்று அலைவது.. பண்பு இல்லாத செயல்.
நிதானமான வார்த்தைகள் பேசி, அன்பின் அறனும் உடைத்தாகி, விருந்தினருக்கு சிறப்பான உணவு கொடுத்து அவர்கள் உண்டு முடிந்த பின் தான் சாப்பிடுவது பண்பாடு.
முனிவர் ஒருவர் (முனி என்றால் முன் கோபம். புசுக்குனு கோபம் வருபவன் முனிவன்) உணவருந்த வருகிறார். பாஞ்சாலியி்டம், ஆர்டர் போட்டுவிட்டு குளிக்கப் போகிறேன் என்று போய் விட்டார். பாஞ்சாலி பறவைகளுக்கு உணவு கொடுத்து, விலங்குகளுக்கு உணவு கொடுத்து, வேலையாட்கள் உணவு உண்டபின், தான் உண்ணும் பண்பாடு இல்லற நெறி.
நல்லவேளை. அப்போ கிருஷ்ணா வழக்கம் போல ஒரு டிராமா போட்டு பாஞ்சாலியை காப்பாற்றினார்.
இந்து தர்ம நெறி, மற்றவர்களுக்கு சிறப்பான உணவு கொடுத்து மீந்ததை தான் சாப்பிட வேண்டும் என்கிறது. கிருத்துவம் தான் சாப்பிடும் உணவுக்கு இணையான உணவை மற்றவர்களுக்கு கொடுக்க வேண்டும் என்கிறது. இஸ்லாம் எல்லோரும் இணைந்து ஒன்றாக சாப்பிடுங்க, என்கிறது. அவங்க சாப்பிடும் போது நீ போகல.. உனக்கு சாப்பாடு இல்லை.
எது உயரியது என்பதை உங்கள் முடிவுக்கு விட்டு விடுவோம்.
ஒரு மரத்தை நண்பனாக வைத்துக் கொள்ளலாம். தவறில்லை. என்ற செய்தி இன்று போட்டு உள்ளனர். மரம் போல மக்கட் பண்பு இல்லாதவர்??
அவர்களையும் கொஞ்சம் ஜாக்கிரதையாக நட்பாக வைத்துக் கொள்ளலாம். அப்போதுதான் அவர்களும் பண்பாடு பெற முடியும். எனவே இந்து கோயில் நெறி மற்றும் வழிபாடு முறைகளில் அனைவரும் பங்கு பெறும்படி வைத்து இருக்கிறோம்.