சோழன் எக்ஸ்பிரஸ் காலைல ஒரு எட்டு மணிக்கிட்ட எக்மோர்ல இருந்து கிளம்பும். அதுல கும்பகோணம் போக உட்கார்ந்திருந்தேன் நான். பிளாட்பாரத்துல கொஞ்சம் டீசன்டா, ஒரு இருபத்தாறு, இருபத்தெட்டு வயசு இருக்கும் அவருக்கு. கைல காசு இல்ல போல. அங்க இருக்கற சாப்பாடு விக்கறவங்கக்கிட்ட ஏதோ ஒரு சில்லரைய குடுத்துட்டு சாப்பாடு புடிங்கி சாப்பிடப் பாத்தாரு.
அவங்க எல்லாம் அந்தாள அடிச்சி, அந்த சாப்பாட திரும்ப புடிங்கிட்டாங்க. இந்த சாப்பாட விக்கிறவங்கள கூப்பிட்டுக் கேட்டேன். ‘இங்க என்னதான் நடக்குது?’ அப்புடின்னு. சொன்னாங்க, ‘இந்த மாதிரி, காசு இல்லாம சாப்பாடு வாங்கி சாப்பிடப் பாக்கறான், அதான் புடுங்கிட்டோம்!’னு. எனக்கு மனசு கஷ்டமா இருந்துச்சு, ‘ஏழைகள், வயதானவர்கள், பெண்கள் இவர்களுக்கெல்லாம் பிச்சை போட்றாங்க. சந்தர்ப்ப சூழ்நிலையால ஒரு சராசரியான வாலிபன் கைல காசு இல்லாம இருந்தா, அவனுக்கு யாரும் உதவி பண்றதுல்ல!’ன்னு, அவங்கள கூப்பிட்டு ஒரு ஐம்பது ரூபாய குடுத்துட்டு ‘அந்தாளுக்கு சாப்பாடு குடுங்க. மீதிய வெச்சிகிட சொல்லுங்க!’ அப்படின்னேன். அவங்க போய் குடுத்தாங்க. அந்தாளு முதல்ல ஓடப்பாத்தாரு, அடிக்க வர்ராங்க அப்டின்னு, அப்பறம் என்னைய காமிச்சு ஏதோ சொன்னாங்க. போயிட்டாங்க.
எதித்தாப்ல படுத்துக்குட்டு இருந்தவரு. இத கவனிச்சிக்கிட்டு இருந்தாரு. காலங்காத்தால கிளம்புற டிரெயின், பெரும்பாலும் ரொம்ப காலியா இருக்கும். அதனால நாம தாராளமா படுத்துக்கிட்டு வர்ர மாதிரி தான் இருக்கும். விழுப்புரத்துல வந்து ஆவின் பாலகத்துல, பால் நல்லா இருக்கும்னு கேள்விப் பட்டு, அவருக்கு ஒண்ணு கொடுத்துட்டு, நான் ஒண்ணு சாப்பிட்டேன். அவரு முன் ஜாக்கிரதையா, ‘வேணாம்!’னு சொல்லிட்டாரு.
ஏன்னா உணவுப் பொருளை புதியவர் யாரேனும் கொடுத்தால், வாங்கிச் சாப்பிடக் கூடாதுல்ல? பரவாயில்ல சார், நீங்க வேண்டாம்னு சொல்லுவீங்கன்னு தெரியும், வேண்டாம்னு சொன்னா, நானே குடிச்சிக்கலாம்னு தான் வாங்கினேன்!னு சொல்லிட்டு, ரெண்டையும் நானே குடிச்சி முடிச்சேன். அப்பறம், கொஞ்சநேரம், நாங்க பேசிக்கிட்டு இருந்தோம். அவரு ஏற்கனவே, படுத்துட்டு தூங்கிட்டு இருக்கும்போது, காணாம போன என்னோட நண்பன் சுரேஷ்குமாரா இருக்குமோ? அப்படின்னு தோணுச்சு.
அதப்பத்தி அப்புடியே சொன்னேன் நான். இதே மாதிரி, ஏன் ப்ரண்டு ஒருத்தர் இருந்தாரு. வீட்ட விட்டுப் போனவரு, திரும்ப வரவே இல்ல. எட்டு வருஷம், பத்து வருஷம் ஆயிடுச்சு. முறைப்படி தேடியும் கிடைக்கல. உங்கள பாக்கும் போது எனக்கு என் நண்பர் மாதிரி தோணுச்சுன்னு, சுரேஷ்குமாரப் பத்தி பேசிக்கிட்டு இருந்தோம்.
அப்ப தான், அவரும் சொன்னாரு, எக்மோர்ல, நடந்த நிகழ்ச்சிய நானும் பாத்தேன். ‘நீங்க சாப்பாடு ஒருத்தருக்கு வாங்கிக் கொடுத்துட்டு இருந் ங்க. நீங்க ரொம்ப வித்தியாசமான ஆளா இருக்கீங்கன்னு!’ சொன்னாரு.
நான் எதுக்கு கும்பகோணத்துக்குப் போறேன்னு சொன்னேன். அங்க, சிட்டி யூனியன் பேங்க்கு லோன் விஷயமா போயிட்டு இருக்கேன்.
அவரு சொன்னாரு, எங்க மாமா தங்கத் தேரு இழுக்குறாரு கோயில்ல. அதுல கலந்து கொள்ளப் போறேன். இந்த கோயில்ல தங்கத்தேரு இழுக்கறதெல்லாம் எனக்கு அவ்வளவா பிடிக்கறதில்ல. ஏழைகளுக்கு அன்னதானம் பண்ணலாம். ஒரு பீஸ் கட்டலாம். இல்லன்னா, அபிராமி அம்மா கோயில் இருக்கு. அங்க அறுபதாவது கல்யாணம் எல்லாரும் பண்ணுவாங்க. அதுவாவது பண்ணலாம்.
இவரு பிடிவாதமா மூணு லட்சம் செலவு பண்ணி நான் தங்கத்தேரு தான் இழுப்பேன்னு சொல்றாரு. இதனால, யாருக்கு என்ன பிரயோஜனம்? இதப்பத்தி, நீங்க என்ன நினக்கிறீங்க? அப்டின்னாரு.
நான் சொன்னேன், மனிதனுடைய இயல்பு, ஒரு செய்தி ஒருத்தன் கொண்டு வரான்னா, அந்த செய்தி நல்லதா இருந்தா, செய்திய விட செய்திய கொண்டு வர்ரவன பிடிச்சுப் போயிடுது. கெட்டதா இருந்தா கொண்டு வரவன பிடிக்கறதுல்ல. அதனால மீடியாக்கள் மீது எப்பவுமே ஒரு மோகம் இருந்தது. மீடியாவோட வடிவம் மார்றதுனால சினிமாத்துறைல, கலைத்துறைல இருக்குறவங்க மேல ரொம்ப அபிமானம் வருது.
அதேமாதிரி, ஒரு தங்கரதத்த கோயில் மூன்று லட்சரூபா கட்டி இழுக்கும் போது அந்த தங்க ரதத்தப் பாக்க கூட்டம் கூடுது. மூன்று லட்ச ரூபாய வீணடிக்கிறாங்கன்னு எல்லாரும் நினைக்கிறார்கள். ஆனா, இந்தமாதிரி, நிகழ்வுகள் நடக்கும் போதுதான், பல்வேறு கலைத்துறையினருக்கு வாய்ப்பு கிடைக்குது.
அவங்க கூத்தாட்றாங்க, பாட்டு பாட்றாங்க, டேன்ஸ் ஆட்றாங்க. இன்னும் சிற்பிகளுக்கு வாய்ப்பு கிடைக்குது. சிலைகள் வடிக்கப்படுது. இன்னொரு பக்கம் ஏழை எளியவர்களுக்கு வாய்ப்பு கிடைக்குது. தேரை இழுக்கறதுக்கு மக்கள் வர்ராங்க. ஒரு பொழுதுபோக்காகவும் இருக்கு. அதனால, சமுதாயத்தின் எல்லா பகுதியினரும், பங்கு பெற்று, அந்த மூன்று லட்ச ரூபா என்ன கல்லுக்குள்ளயா போயிடுது? இல்ல, அந்த சிலைக்குள்ளேயா போகுது? அல்டிமேட்டா மனிதர்களுக்குத் தான் போய் சேருது!
வேறு யாருக்கும் போய் சேர்ரதில்ல. அந்த பூசாரிக்குக் கொஞ்சம் போகும். தர்மகர்த்தாவுக்கு கொஞ்சம் போகும். அவரு கொஞ்சம் எடுப்பாருன்னே வெச்சிக்குவோம். அந்த தேரை வடிவமைக்கிறவங்களுக்கு கொஞ்சம் போகும். சிலையை செய்றவங்களுக்கு கொஞ்சம் போகும். பாட்டு பாட்றவங்களுக்கு கொஞ்சம் போகும். டான்ஸ் ஆட்றவங்களுக்கு கொஞ்சம் போகும். அதனால வந்து இதுல, ஒண்ணும் பெரிய தவறில்லன்னு! சொன்னேன். நீங்க வித்தியாசமா சொல்லுவீங்கன்னு தெரியும். ஆனாலும், எனக்கு ரொம்ப சந்தோஷம். நான் போய் சந்தோஷமா இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறேன். தங்கத்தேரு இழுக்கறதுனால, அந்தத் தேருக்கோ, அதுல இருக்கற சிலைக்கோ பணம் போறது இல்ல. கடைசியா மனிதனுக்குத் தான் போகுதுன்னு நான் புரிஞ்சிகிட்டேன்! அப்படின்னாரு, அவரு.
அறிவியலே இந்துமதம், நன்றி, வணக்கம்.