கட்டார் ஏர்வேஸ்ல அமெரிக்காவுல இருந்து ரிட்டன் வந்துகிட்டு இருந்தேன். பிளைட் தோஹால லேண்டிங்காயி திரும்ப மாறி வரணும். என் பக்கத்து சீட்ல பாகிஸ்தானைச் சேர்ந்த ஒரு கணவன் மனைவி இருந்தாங்க. கொஞ்சம் அன்பா ரெண்டு பேரும் பேசிக்கிட்டு இருந்தோம். ‘நாமெல்லாம் பிரதர்ஸ் மாதிரி. பல்வேறு காரணங்களுக்காக அரசாங்கம் சண்ட போடுது. ஆனா நாமெல்லாம் பிரதர்ஸ். ஒரு குடும்பம் மாதிரி!’
அதுக்கப்புறம் பிளைட்டெல்லாம் ரொம்ப ஸ்மூத்தா தான் இருந்துச்சு. அப்படியே நான் தேவாரம் பாடல்களை மனசுக்குள்ளே பாடிக்கொண்டு வந்தேன். எனக்கு ஆபீஸ் நியாபகம் வந்துச்சு. ஆபிஸ்ல சாதிக் என்கிற மெக்கானிக்கின் மனைவி என்னிடம் வேலை பார்த்தார்கள். அவரு ஒரு நாள் சொன்னாரு. இந்த மாதிரி உங்க மேலே ரொம்ப திருஷ்டி இருக்கு சார். கொஞ்சம் சுத்தி போட்ரேன் அப்டின்னாரு.
‘ஏம்பா, நான் இந்து. அதனால சுத்திப்போடுவோம். நீ முஸ்லீம், உங்க கிட்டல்லொம் அது மாதிரி இல்லையே!’ என்று சொன்னேன். ‘இல்ல சார், எங்களுக்கும் எல்லாம் உண்டு. மெத்தேடு தான் மாறும். நாங்க பாத்தியா ஓதச் சொல்லுவோம். நீங்க பூசணிக்காயெல்லாம் சுத்திப்போட சொல்லுவீங்க. நான் ரெண்டு மெத்தேடும் பண்ணுவேன். பூசணிக்காய சுத்திப் போடட்டுமான்னு?’ சொன்னாரு.
‘இல்லப்பா, எனக்கு அதுலல்லாம் நம்பிக்கையில்லன்னு’ சொல்லிட்டு யோசிச்சு பாத்தேன். இந்து, நாம என்ன பண்றோம்?
பாம்ப வணங்குறோம், மரத்த வணங்குறோம், தண்ணிய வணங்குறோம், நெருப்ப வணங்குறோம், காத்த வணங்குறோம், பெண்கள வணங்குறோம், சிலைகள வணங்குறோம், புத்தகங்கள வணங்குறோம், பேப்பர வணங்குறோம், எழுதுகோல வணங்குறோம், ஏதாவது ஒரு மார்க்கிங்ஸ் இருந்தா, அத வணங்குறோம், சில சிம்பள்ஸ வணங்குறோம்.
சிலைகளில், நாங்க தண்ணிய ஊத்தறோம், பால ஊத்தறோம், தயிர ஊத்தறோம், பழங்கள குடுக்குறோம், சாப்பாட குடுக்குறோம், சந்தன பவுடர் குடுக்குறோம்,
பசுவோட சாணத்த எரிச்சு, அதுல விபூதி ரெடி பண்ணி ஏதாவது கற்கள் மேலேயோ, இல்ல கொடி மரத்து மேலேயோ பண்றோம். பெரிய பெரிய பாறாங்கற்கள் மேலே பண்றோம். இரும்பு விக்ரகங்கள் மேலே பண்றோம். என்னத்ததான் நாம கும்புட்றதுல்ல? எல்லாத்தையும் கும்புட்றோம். எதபாத்தாலும் கும்புட்றோம்.
எத நாம கும்புட்றதில்லன்னு யோசிச்சாலே ரொம்ப கஷ்டமா இருக்கு. பணக்காரனா இருந்தாலும் அத பண்றோம். ஏழைகளா இருந்தாலும் அத பண்றோம். படிக்காதவனா இருந்தாலும் அத பண்றோம். படிச்சவங்களா இருந்தாலும் அத பண்றோம்.
முகமது நபி, ஒரு மரத்துக்கு அடியில இருந்து போதனை பண்ணாராம். அவரு மறைந்ததுக்கப்புறம் அந்த மரத்த எல்லாரும் அதிசயமா பாக்கறாங்கன்னு, அடுத்து வந்த காலிப்ஹா அத வெட்டச் சொல்லிட்டாராம். ஏன்னா இந்த மரத்த கும்புட்ரது, கல்ல கும்புட்ரதெல்லாம், இப்பதான் நாம விடுபட்ருக்கோம். இது திரும்ப வந்துடக்கூடாது!
ஆனா இங்க வந்து எல்லாத்தையும் கும்புட்டுட்டு இருக்கோம். அப்டியே நான் யோசிக்கும் போது, பிளைட் லேண்டு ஆகுது. பாலைவனம், பாலைவனத்து நடுவுல திடீர்னு ஒரு சிட்டி. எல்லாப் பக்கத்துலேயும் சுத்திலும் மணற்பரப்பு. அந்த மணற்பரப்புல ஒரு இடத்துல சின்ன மரத்துக்கிட்ட பிளைட் லேண்டாகும் போது பாக்க ஆரம்பிச்சேன்.
அது சின்ன மரம்தான். பாலைவனத்துல பெரிய மரமா இருக்கும்? சின்ன மரந்தான். அப்போது, என்னுடைய எண்ணங்கள் சுழன்று ஓட ஆரம்பிச்சுது. என்ன நடந்துருக்கும் இந்தியாவா இருந்தா?
இந்து மதத்தோட பழக்கத்துல இருந்தா என்ன நடந்துருக்கும் அப்டின்னு நினச்சி பாக்க ஆரம்பிச்சேன்.
இதுவே இந்தியாவா இருந்துருந்தா அந்த மரத்துக்குக் கீழே ஒரு கல்ல வெச்சிருப்பாங்க. இன்னும் சிலபேரு அந்த கல்லு மேல சந்தனத்தப் பூசி, விபூதியப் பூசி மதத்தின் குறியீடுகளையெல்லாம் போட்டு சாமி கும்பிட ஆரம்பிச்சிருப்பாங்க.
அதுக்கப்புறம் இன்னும் சிலபேரு பாம்பு செதுக்கப்பட்ட ஒரு கல்ல வெச்சிருப்பாங்க. அதுக்கப்புறம் பெண்கள், இது பாம்பு. சாமியிருக்குன்னு முட்டையும் பாலையும் வெச்சி கும்பிட ஆரம்பிப்பாங்க. அதுக்கப்புறம் என்னாகும்? முட்டாத்தனமா?
நினைக்கும் போது திருவாசகத்தின் வரிகள் நியாபகத்திற்கு வருது.
“புல்லாகி பூடாய் புழுவாய் மரமாகி
பல்விருகமாகி பறவையாய் பாம்பாகி,
கல்லாய் மனிதராய், பேயாய் கணங்களாய்,
வல்லசுரராகி, முனிவராய், தேவராய்,
செல்லா நின்ற இத் தாவர சங்கமத்துள்
எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமானே!”
எப்படி பாடியிருக்காங்க பாருங்க. டார்வினோட தத்துவத்த இங்க சொல்லிட்டாங்க! தாவரங்களுக்கு உயிர் இருக்குன்னு சொல்லிட்டாங்க! எப்படியெல்லாம் நம்மோட பரிணாமம் நடக்குதுன்னு சொல்லிட்டாங்க!
அதனால, அந்த கல்லு மேல பால ஊத்தி, சாமி கும்பிட ஆரம்பிச்சி, அதுக்கு அபிஷேகம் பண்ணும் போது என்னாகும்? வழிஞ்சி ஓடும். ஓடும்போது மணல்ல என்னாகும்? புல், புழுக்கள் உருவாகும். ஏன்னா புழுக்கள் உருவாக ஏற்ற விஷயத்த தான் நாம எல்லாரும் ஒண்ணு சேந்து பண்ணிக்கிட்டு இருக்கோம். அது அப்டியே மண்ணுக்குள்ளே போனவுடனே புல் உருவாகும். புல்லு உருவாகி வரிசையா பெரிதாகும்.
அதுக்கப்புறம் பறவைகள் மேல பறந்து வந்து விதைகள போடும். பறவைகள் அபிஷேகம் செய்கிற பழத்தை சாப்பிட வரும். சின்னச் சின்ன செடிகள் உண்டாகும். செடிகள் வளரும் போது மரங்கள் வளரும். மரங்கள் வளரும் போது அந்த ஏரியா அப்டியே விரிவாகும். விரிவடையும் போது மழை உண்டாகும். மழை உண்டாகும் போது அந்த இடம் இன்னும் பெரிதாகும். அங்கு குளங்கள் வெட்டப்படும். ஏரிகள் உருவாகும். இந்தப் பாலைவனம் முழுவதும் இந்தப் பழக்கம் வரும்போது ஒரு பசுமையான இடம், விவசாயத்த நம்பிய ஒரு இயற்கையான பூமியா மாறும்.
இத எவ்வளவு சுலபமா நாங்க சொல்லி வெச்சிட்டோம் பாத்திங்களா? இதைத் தான் நான் சொல்கிறேன், அறிவியலே இந்துமதம். இந்துமதத்துல அறிவியல் இல்ல. அறிவியலத்தான் நாங்க இந்து மதமா பின்பற்றி வருகிறோம்.
Original Audio posted in WhatsApp Group ‘Science is Hinduism’ on 30 April 2018.