தொழிலாளர் தினம்
மே—- 1. இன்றைக்கு தொழிலாளர் தினம். ரஷ்யா போன்ற நாத்திக, நாடுகள் தொழிலாளர்களுக்கு உரிமைகள் மறுக்கப்பட்டபோது, பெரிய புரட்சி செய்து அவங்க வெற்றி பெற்று இந்த நாள கொண்டாட்ராங்க. இந்தியாவில, இந்துமதத்துல தொழிலாளர்கள் எப்படி நடத்தப்பட்டாங்க? அப்படிங்கர்த நாம கவனிச்சி பாத்தோம்னா அவங்களுக்கு, ஒரு வருஷத்துல நான்கு நாட்கள் ஒதுக்கப்பட்டு அவங்களுக்கு சிறப்பான முன்னுரிமை கொடுக்கப்பட்டது.
அது தான், ஆயுத பூஜை. பொங்கலோட உழைப்பாளர் தினம் அதற்கு அடுத்த நாளா வர்ரது, தீபாவளியப்ப, இந்த மாதிரி முக்கிய பண்டிகைகள் நாட்கள் எல்லாமே, முதலாளிகளுக்கானதாக இல்லாம, தொழிலாளி-களுக்காகத் தான். இது தொழிலாளர்களை முன்னிலைப்படுத்தப்பட்டு, தொழிலாளர்களையே பூஜை பண்ணவைத்தார்கள்.
அது மட்டுமல்ல, ‘லாபத்துல பங்களிப்பு’ அப்புடிங்கறது உலகத்துல எங்கேயும் இல்லாத காலக்கட்டத்துல, இந்தியாவுல இந்துமதத்துல தான் இருந்துச்சு.
தீபாவளின்னு வட இந்தியாவிலேயும், ‘பொங்கல்’ தென் இந்தியாவிலேயும். இந்த வருஷம் முழுக்க எவ்வளோ மகசூல் ஆயிருக்கு, எவ்வளோ உற்பத்தி வந்துருக்கு, அதுல இவ்ளோ லாபம் வந்துருக்கு, இந்தாங்கப்பா, இதுல ஒரு பங்க நீங்க பிடிங்கன்னு சொன்னது இந்து மதம், இந்திய மதந்தான்.
அதனாலத்தான் இந்துமதம், இந்திய மதத்துல புரட்சிகள் எப்பவுமே வெடிக்கல. சின்னச்சின்ன தவறுகள் நடந்ததே ஒழிய, அது அப்பப்ப சீர்செய்யப்பட்டது. ஏன் இங்க புரட்சியே வெடிக்கல? அங்கெல்லாம், புரட்சி பண்ணி ஆயிரக்கணக்குல, லட்சக் கணக்குல ஒருத்தன ஒருத்தன் சுட்டுகிட்டும் வெட்டிகிட்டும் செத்தாங்க. அப்புடிங்கறப்ப, நம்ம மதத்துல புரட்சி வெடிக்க முடியாத அளவுக்கு, எல்லா ஆக்கக்கூறுகளும் இருந்தது. எல்லாருக்குமே ஒரு முன்னுரிமை கொடுக்கப்பட்டு ஒருநாள் ஒதுக்கப்பட்டு, அல்லது பலநாள் ஒதுக்கப்பட்டு, அவங்களுக்கு உற்பத்தில போனஸ் கொடுத்து, அவங்கல்லாம், சமமல்ல. அதைவிட ஒரு பங்கு மேலேன்னு தனித்தனியா பண்டிகைகள் உருவாக்கப்பட்டு பண்ணனது.
அதனால மேதின வாழ்த்துக்கள்னு சொல்வதற்கு முன்னால் நாம யோசிக்கணும். தமிழ்நாட்டுல நம்ம கலாச்சாரத்துல, நம்மோட இந்திய, இந்து பண்பாட்டுல, அவங்க புரட்சி செய்யறதுக்கு வழியே இல்லாம எல்லாத்தையும் செய்து கொடுத்தோம்.
Original Audio posted in WhatsApp Group ‘Science is Hinduism’ on 01 May 2018.