இந்து மதமும் சந்தோஷமும்
சந்தோஷமா இருக்கணும்னா, இந்து மதத்துல இந்திய மதத்துல இருந்தா, ரொம்ப சந்தோஷமா சமாதானமா இருக்கலாம்.
“எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாது,
வேறொன்றறியேன் இறையே பராபரனே”.
அவ்வாறு சொன்னார்கள் தமிழில்.
“சர்வ ஜன சுகினோ பவன்த்”
அவ்வாறு சமஸ்கிருதத்தில் கூறினார்கள்.
‘சர்வ ஜனம், அதாவது உலகத்திலுள்ள எல்லா ஜீவராசிகளும் சுகமாக இருக்க வேண்டும்’ என்று சமஸ்கிருதத்தில் கூறினார்கள்.
இதுதான், இந்து மதத்தின், இந்திய மதத்தோட அடிப்படை கொள்கை.
மற்ற மார்க்கங்கள பத்தி சொல்லும் போது, ‘எல்லா மார்க்கங்களைக் காட்டிலும் தன்னுடைய மார்க்கம் உயர்ந்தது. அதனை பின்பற்றுங்கள்!’ என்று சொன்னாங்க.
இந்து மதத்துல என்ன சொன்னாங்கன்னா, ‘எல்லா மார்க்கங்களும் மலையிலிருந்து உருவாகி, கடல நோக்கி போற மாதிரி, எல்லாமே நல்லதை நோக்கித்தான் போகுது, காவிரி தண்ணி தான் சுத்தமானது. கங்கை தண்ணி தான் சுத்தமானது. கோதாவரி தண்ணி தான் சுத்தமானதுன்னு கிடையாது. எல்லாமே நல்லதைத்தான் சொல்லுது. எல்லாத்தையும் மதிக்கணும். எல்லாத்தையும் பின்பற்றலாமுன்னு சொன்னாங்க.
இதைவிட ஒரு சமாதானமான வார்த்தைகள் என்ன இருக்கமுடியும்னு நினச்சிப் பாக்கறீங்க? எல்லா மார்க்கங்களும் நதியை போல. எல்லா நதிகளும் உற்பத்தியாகி கடலை நோக்கி பயனிக்கின்றன. என்னோட தண்ணி இந்தாத்து தண்ணி உயர்ந்தது, அந்த ஆத்து தண்ணி உயர்ந்ததுன்னு சொல்லாம, எல்லாத்தையும் வந்து நீங்க மதிச்சு வெச்சிருங்கன்னு சொன்னாங்க.
அதனால, சமாதானம்னு சொல்லும்போது, இந்திய மதம்தான். சந்தோஷம்னு சொல்லும் போது, தனக்கு சந்தோஷம், தன்னுடைய குடும்பத்துக்கு சந்தோஷம் மட்டுமல்ல, அனைவருக்கும் சந்தோஷம் என்ற மார்க்கமான மதம் இந்து மதம் தான்.
சந்தோஷத்தை அடைய எவ்வளவு வழியை வைத்திருக்கிறார்கள் என்றால், அனைத்து வழியும் வைத்து இருக்கிறார்கள். விளையாட்டு வெச்சிருக்காங்க, பக்தி வெச்சிருக்காங்க, கடவுளோடு விளையாட வெச்சிருக்காங்க, தனக்குள் மகிழ்ச்சியாக இருக்க வெச்சிருக்காங்க, நடனமாட வெச்சிருக்காங்க. அதனால சந்தோஷத்தை அனைவரும் சேர்ந்து அடையக்கூடிய வழியில் வைத்திருக்கிறார்கள். பம்பாயில் நவராத்திரி காலத்தில் போனால், துர்க்கா பூஜை காலத்துல கொல்கத்தா போனால், ஹோலி பண்டிகைக்கு வடஇந்தியாவுக்கு போனால், பெண்கள் குழந்தைகள், வயதானவர்கள் அனைவரும் தெருக்களில் ஒடி, பாடி, ஆடி மகிழ்ச்சியாக இருப்பார்கள். எனக்குத் தெரிந்து இதுபோன்ற ஒரு சமுதாய நிகழ்வுகள் இந்தியமதமான இந்துதமதத்துல தான் இருக்கின்றது. அதனால சந்தோஷமானாலும் நாம்தாம், சமாதான மானாலும் நாம்தாம். அமைதியும் மகிழ்ச்சியும் தான் வாழ்க்கையின் அடிப்படை. அதைக் கொடுப்பது நம் உயரிய நோக்கம் கொண்ட இந்திய மதமான இந்து மதம்.
அறிவியலே இந்துமதம், நன்றி, வணக்கம்.