இந்து தர்மமும் பெண் விடுதலையும்

 

பெண் ஒரு    அடிமையல்ல, பெண் ஒரு மோகப் பொருளல்ல, பெண்களுக்கு விடுதலை                வேண்டும், சுதந்திரம் வேண்டும் என்று பெரியார் சொன்னது போல் சொல்லி, பெண் விடுதலைக்கு அவர்தான் சிற்பி போல நாத்திகர்கள் சொல்லிக்கொள்வார்கள். இந்து தர்மத்திலே பெண்விடுதலை எந்த அளவுக்கு இருக்கிறது என்று பார்த்தோமானால், காலங்காலமாக மகாபாரத காலமாக இருக்கட்டும். இராமாயணம் காலமாக இருக்கட்டும். தற்போதைய காலமாக இருக்கட்டும். முழு விடுதலை, சுதந்திரம் அவர்களுக்கு உள்ளது. பல விஷயங்களில் ஆண் பெண்ணுக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்பது போலத்தான் உள்ளது.

மகாபாரதத்தின் கதையின் தொடக்கமே பார்த்தோமானால், சாந்தனு மகாராஜா கங்கைக்கு செல்கிறார். கங்கை கரையில் ஒரு அழகான பெண்ணைப் பார்க்கிறார். அந்த பெண்ணை திருமணம் செய்ய விரும்புகிறார். அந்த பெண் நல்லா மகிழ்ச்சியாக இருக்கலாம். ஆனால், பிள்ளையை பெற்றால் நான் என்ன செய்வேன் என கேட்கக்கூடாதுன்னு சொல்லி, எல்லா குழந்தையையும் ஆற்றில் போடுகிறாள். கடைசியாகப் பிறந்த பிள்ளையையாவது எனக்குக் கொடுன்னு சொல்லும்போது, உனக்கு பிள்ளை வேணும்னா என்னை விட்டுப் போய்விடுன்னு சொல்லிட்டு, பிள்ளையை ஒப்படைத்துவிட்டு, அந்தம்மா போயிடுது. அதுதான் பீஷ்மர். பிள்ளையைப் பெற்றெடுக்கும் உரிமையை அவங்க நிலைநாட்றாங்க. பெத்த பிள்ளையை என்ன செய்ய வேண்டுமெனவும் முடிவு எடுக்குறாங்க.

பீஷ்மரின் அப்பா இன்னொரு திருமணம் செய்கிறார். வருகின்ற மனைவி திரும்பவும் ஒரு கண்டிஷன் போட்றாங்க. எனக்குப் பிறந்த பிள்ளை தான் ராஜாவாக ஆகவேண்டும். ஏற்கனவே பிறந்த பிள்ளை ஆகக்கூடாதுன்னு சொல்றாங்க. அங்கே அந்த பெண்ணின் கண்டிஷனையும் ஏற்றுக் கொள்கிறார்கள். ராஜா மட்டுமல்ல, பீஷ்மரும் ஏற்றுக் கொள்கிறார். பிறகு அம்பாவின் கதை வருகிறது. அம்பா என்னும் இளவரசி ஒருவரை காதலித்து அந்த நாட்டின் இளவரசனை திருமணம் செய்து கொள்ள நினைக்கும் போது, இவர் போய் தூக்கிக் கொண்டு வந்துவிடுகிறார். அப்போது, அந்த அம்பா எப்படி பேசுகிறார்கள் என்பதை நீங்கள் புத்தகங்களிலோ இல்லை விஜய்டிவியிலோ பாருங்கள். முழுக்க முழுக்க பெண்விடுதலைத் தத்துவங்கள். “டேய் பீஷ்மா, நீ செய்வது தவறு. என்னுடைய சுதந்திரத்தில் தலையிடுகிறாய். மணாளனைத் தேர்ந்தெடுக்கும் உரிமை எனக்கு மட்டும் தான் உள்ளது. எப்படியிருந்தாலும் நான் உன்னைக் கொல்லுவேன்” என அடுத்த பிறவியில் கொல்லுவது போல் கதையை கொண்டு செல்கிறார்கள். இதைவிடவா பெண்களுக்கு உரிமை வேண்டும்?

அதைத்தாண்டி சமீபத்தில் ஆண்டாளிடம் நேராக வந்தால், அவங்க பாடலைப் பாடி, நாராயணனைக் கும்பிட்டு வந்த பாடல்கள் எல்லாம் மிகவும் அருமையாக இருக்கும். நல்ல கவித்துவமா இருக்கும். கல்வி என்பதை எவ்வளவு சிறப்பாகக் கொடுத்திருந்தால், அவ்வளவு சிறப்பாக கவிதைகளை அவர்கள் இயற்றியிருப்பார்கள். ஆண்டாளை தெய்வமாக்கி கோயில் கட்டி வைத்து, ஆண்டாள் தாயேன்னு வணங்குகிறோம். இந்த சுதந்திரம் தென் இந்தியாவில் எப்படி கொடுக்கிறோம் என்பதை காண்பிக்கிறது. இதுபோன்று அரசிகள், இந்து சமுதாயத்தில் எத்தனை அரசிகள் உருவாகியிருக்கிறார்கள். அவர்கள் எந்த அளவிற்கு நாட்டை சுதந்திரமாக நிர்வகித்தார்கள். எவ்வளவு வீரமாக போராடினார்கள் என்பதற்கு நிறைய கதைகள் உள்ளன. கதைகள் என்று கூறக்கூடாது. எவ்வளவு சரித்திர பூர்வமானதாக இருக்கின்றது என்பது தெரிய வேண்டும். பெண்கள் எல்லாம் அரசிகள் இல்லையென சொல்லவில்லை. அதேபோல் மாற்றான் கையில் சிக்கினாலும் தன்னுடைய் உயிரைக் கொடுத்து மக்களை காப்பாற்றினார்கள் அரசிகள்.

பெண் விடுதலை என்பது முழுக்க முழுக்க இருக்கிறது. மயானக்கொள்ளையில் சக்தி பார்வதி கணவனாகிய ஈஸ்வரனை கழுத்தில் மிதிக்கிறார்கள் பாருங்கள். லேட்டஸ்ட் பெண்கள் கணவனை அட்டாக் செய்வதை விடவா! கழுத்தில் மிதித்து ஈட்டியை எடுத்து நெஞ் சில் குத்தப் போறாங்க. இது பெண் விடுதலையின் உச்சக்கட்டமாக கணவன் தவறு செய்தால் எப்படி வேண்டுமானலும் தண்டிக்கலாம்னு இருக்கிறது. மத்த மதங்களை போல் இல்லாமல், இந்து மதத்தில் பலதார மணம் தடைசெய்யப்பட்டிருக்கின்றது என்று நான் கூறமாட்டேன். பாராட்டப்படவில்லை. அதில் முக்கியமாக ஒரு காரணம் கூறினார்கள். முதல் மனைவியின் சம்மதம் வேண்டும். மத்த மதங்களில் அதெல்லாம் கிடையாது. ஒரே நேரத்தில் நாலு மனைவிகள் வெச்சிக்கலாம். திடீர்னு பிடிக்கவில்லையெனில் விவாகரத்து செய்யலாம். இங்கு முதல் மனைவி அனுமதி வேண்டும்.

இப்போது இருக்கும் சட்டமும் அப்படித்தான். அந்தம்மா ஒத்துக்கொள்ள வேண்டும். நீ இன்னொரு கல்யாணம் பண்ணிக்கோ சந்தர்ப்பம் சூழ்நிலையால் தான்னு சொல்லிட்டு. குழந்தை பாக்கியம் இன்மை என்பதற்காக இப்போது இருக்கும் சட்டத்தில் விவாகரத்து வரை வந்தாலும், இது தர்மத்தில் கிடையாது. அந்த குழந்தை பாக்கியம் இல்லையெனில் தவம் பண்ணுடா. தவம் செய்வதென்றால் சினிமாவில் காட்டுவதைப் போல் ஒற்றைக் காலில் நிற்பது அல்ல. அதற்கான மருந்து மாத்திரைகளை உண்பது. அதற்கான உணவுமுறைகளை மாற்றிக் கொள்வது. இப்படி இருவரும் தவம் செய்து குழந்தையை பெற்றெடுங்கள். அதற்காக விவாகரத்து வரையெல்லாம் போகாதீங்க. உன் மீது தவறோ? இல்லை அவள் மீது தவறோ? சந்தர்ப்ப சூழ்நிலையால் சிலசமயங்களில் அப்படித்தான் நடக்கும். குழந்தையின்மை என்பது பெண்மீது தவறில்லை. ஆண்மீதும் தவறில்லை. திருமண பந்தம் என்பது நிறைந்திருக்கிறது. தவம் செய், சாமியைக் கும்பிடு, ஊர் ஊரா போ. ஊர்ஊரா போகும் போது, ஒண்ணா சேர்ந்து இருப்பாங்க. பலதரப்பட்ட உணவுவகைகளை சாப்பிடுவாங்க. மருந்து மாத்திரைகளை சாப்பிடுவார்கள். கர்ப்பம் தரிக்க வாய்ப்பு உள்ளது. அது இயலவில்லையெனில், தத்தெடுத்துவிட்டுப்போ. இதை சாக்கா வைத்து விவாகரத்து பண்ண முடியாது. இதை இந்து தர்மத்தில் ஒரு சாக்காகக் கூற முடியாது. உனக்கு என்ன நிர்ணயத்திருக்கோ அதுதான் பகவான் அப்படி வெச்சிட்டான்.பெண் விடுதலை என்பது அந்த இடத்திலேயும் நல்லாத்தான் இருக்கு.

பெண்கல்வியெனும் போது எந்த இடத்திலெல்லாம் வாய்ப்புகள் வரும். மறுக்கப்படவில்லை. அவங்க எழுதிய காப்பியங்கள் இருக்கிறது. கவிதைகள் இருக்கிறது. புத்தகங்கள் இருக்கிறது. ராஜமாதான்னு உருவாக்கனாங்க. அரசனோட அம்மா. அவங்களோட ஆணையை அரசனே மீற முடியாது. ராஜமாதாவின் கட்டளை. அப்படியா ஏற்றுக் கொள்கிறேன். நாங்க வந்து குடும்ப விஷயத்துல குழந்தை விஷயம், பெண்கள் விஷயத்தில கட்டளையிட மாட்டாங்க. ஏன்னா, இது பண்பட்ட சமுதாயம். யார், எதுல கட்டளையிடணும்னு தெரியும். போர் செய்வதில் அமைச்சர்களை ஆலோசித்து ராஜா கட்டளையிடுவார். ஆனால் பெண்கள் பாதுகாப்பு, குழந்தை குடும்ப விஷயத்துக்கெல்லாம் ராஜாவாக இருந்தாலும் ஏற்றுக் கொள்வார். ஆதலால், பெண்விடுதலைன்னு சொல்லும் போது, பெண் கல்வின்னு சொல்லும் போது இந்திய சமுதாயமாம் இந்து சமுதாயத்துல இந்து தர்மத்துல எல்லாவிதமான சுதந்திரம் கொடுக்கப்பட்டதோடு மட்டுமல்லாமல், சமமாக நடத்தப்பட்டார்கள் என சொல்ல முடியாது. உயர்வாக நடத்தப்பட்டார்கள். அவங்க சொல்லிட்டா அதுதான் இறுதி முடிவு. ஐயா சொன்னது முடிவு கிடையாது. அதனால் அப்பப்போ நடக்கும் நிகழ்வுகளை வைத்து பார்க்க கூடாது. தர்மநெறிகளில் என்ன சொல்லியிருக்கு பழைய புத்தகங்களில் என்ன சொல்லியிருக்குன்னு பாக்கும் போது, இன்னும் நான் நிறைய சொல்லுவேன். எனக்கு கொஞ்சம் போரடித்து விடும். ஒவ்வொரு கதைகளை பற்றி சொல்லவேண்டுமென்றால் ஒரு 500 இன்சிடென்ட் சொல்ல முடியும் என்னால். இராமாயணத்திலிருந்து, மகாபாரதத்திலிருந்து, புராணத்திலிருந்து, சமீபத்திய நிகழ்வுகளிலிருந்து எல்லாத்துலேயும் பெண்ணுக்கும் விடுதலை கொடுப்பது, சுதந்திரம் கொடுப்பது, சமஉரிமை கொடுத்து உயர்வாக வைத்திருப்பது இந்து தர்மமான இந்திய தர்மம் மட்டும் தான். அதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை.

நன்றி,வணக்கம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes:

<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>