இந்து மதமும் சுதந்திரமும்
அன்பு நண்பர்களே, அறிவியலே இந்துமதம் என்ற தொகுப்பிலே, நான் விநாயகரைப் பற்றி ஆரம்பித்தேன். என்னிடம் வேலை பார்த்த பௌசியா என்ற அறிவார்ந்த ஒரு முஸ்லீம் பெண் விநாயகரை ஏன் முழுமுதற் கடவுளாக வைத்துள்ளீர்கள் என்ற கேள்விக்கு விளக்கம் கொடுத்து, திட்டமிட்டு செயல்படும் போது மிகப் பெரிய வெற்றி கிடைக்கும் என்பதற்கே, அந்த கடவுளின் உருவம் என்று பதிவு செய்திருந்தேன்.
மூடநம்பிக்கை அதிகம் உள்ள மதம் இந்துமதம் என்று சிலர் கூறுகிறார்கள். பதில் சொல்லத் தெரியவில்லை என்று கூறும்போது, ரொம்ப அட்வான்ஸ் லெவல்ல இருப்பவங்களுக்குத் தான் புரியும்னு சொல்லி வைங்க. ரொம்ப டீடெயிலா சொல்லி வைங்கன்னு கிடையாது, எல்லாமே அறிவார்ந்ததுன்னு. நிறைய விஷயங்களை சொல்லியிருக்கேன். கோயில் கட்டப்பட்ட விதம், கோயில்களினால் வரக்கூடிய நன்மைகள், கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்ற அறிவியல் பூர்வமான உண்மைகளையும் நான் சொல்லியிருக்கேன்.
சந்தோஷமாக இருப்பதற்கு இந்துமதம் தான் வழிசொல்கிறது. பிரச்சனைகளை தீர்ப்பதற்கு இந்துமதம் தான் வழிசொல்கிறது. ரொம்பக் குழம்பி இருக்கும் போது, சுந்தர காண்டத்தின் ஒரு பகுதியையும், இராமாயணத்தையும் ஏன் படிக்க வேண்டும் என்பதற்கெல்லாம், நான் இயல்பான முறையில் பதில் சொல்லியிருக்கேன். இதுபோன்ற நிறைய கருத்துக்களை நான் சொல்லியிருப்பது, என்னுடைய புகழுக்காகவோ, பெருமைக்காகவோ இல்லை. என்னுடைய பேர் கூட தெரிய வேண்டாம் என்பதே என்னுடைய தனிப்பட்ட எண்ணம்.
எப்பவும் இல்லாத அளவிற்கு நம்முடைய இந்துமதமும் இந்துதர்மமும் டார்கெட்டாயிருக்கு. ரொம்ப படிச்சவங்களையெல்லாம், மத்த மதத்திலே கவனித்திருக்கிறேன். அந்த மதத்தில் தான் நல்ல கருத்துக்கள் உள்ளது போல் என்னிடம் விவாதிக்கிறார்கள். சராசரியான இந்துக்கள் சில சமயம் சிரிச்சிட்டு போயிட்றாங்க. சில சமயம் உண்மையோன்னு நினைக்கிறார்கள். அதற்கு அறிவார்ந்த வாதங்களை வைக்கக்கூடிய இடங்கள் இல்லாமல் இருக்கிறது.
மைனாரிட்டின்னு அவங்கள நாம சொன்னாலும், அவங்க எல்லாம் டிவி சேனல்ல ரெண்டு சேனல்ல, மூணு சேனல்ல புரோகிராம் போட்றாங்க. அவங்க புரோகிராம் போட்றதெல்லாம் சராசரியான இந்துக்களை டார்கெட் பண்ணித்தான். முஸ்லீம்கள் முஸ்லீம்களையே டார்கெட் பண்ணினால், அந்த மசூதியின் உள்ளே போட்டுட்டு போயிட்லாம்ல. அதே மாதிரி கிறிஸ்டியன்ஸ் சர்ச் உள்ளே போட்டு போயிட்லாம்ல. பொது இடங்களில் டிவி, மீடியாக்களில் போட்றாங்க?
அதுக்கு நாம பதில் சொன்ன, நம்மவங்களே ஏன் இங்க பிற மதத்தப் பத்தி பேசறீங்க. பேசாதீங்கன்னு சொல்றாங்க. இது எவ்வளவு பெரிய சாபக்கேடு பாத்தீங்களா? எந்த மதத்திலேயும், நான் பிற மதத்தினைத் தாக்க கிடையாதுன்னு சொல்லியிருக்கேன். எல்லா மதங்களும் நதிகளைப்போல. எல்லா நதிகளின் தண்ணீரும் புனிதமானது தான். எனவே நீங்களும் புனிதமானவர்கள் நல்லவர்கள். நாங்களும் புனிதமானவர்கள் நல்லவர்கள். அதுதான் இந்து மதத்தின் தத்துவம். எல்லோரும் இன்புற்று இருக்க வேண்டும் என்பதே இந்து மதத்தின் தத்துவம் என்று நான் சொல்கிறேன்.
அதுபோன்ற தத்துவங்கள் எதுவும் நம் மதத்தில் சொல்லப்படவில்லை என்றும் பொய்மையும் மூடநம்பிக்கையும் நிறைந்திருக்கிறது என்று பொய்யுரை பரப்பப்படும் போது, அதற்கான உண்மையை எங்களுக்குள் சொல்லி பிரயோஜனம் இல்லை. எங்களிடம் இருந்து பிரிந்து போனவர்களிடமும் சொல்ல வேண்டும் என்று தான் அப்பப்ப கிறிஸ்துவத்திலிருந்தும், முஸ்லீம்களிலிருந்தும் கையாள்கிறேன். இஸ்லாமியத்திலிருந்து கையாளும் போது இஸ்லாமிய புத்தகத்திலிருந்து தான் கையாள்கிறேன் என்பதை நினைவிற் கொள்ளுங்கள். கிறிஸ்துவ மதத்தை பற்றிக் கூறும் போதும் பைபிளில் இருந்து தான் எடுக்கிறேன். சொந்த கருத்துக்களையெல்லாம் நான் கூறுவது கிடையாது.
சாலமன் பிறந்த கதை. நபிகள் நாயகத்தின் பல்வேறு திருமணங்கள் எல்லாம் அவர்களின் கண்டுபிடிப்பு. நாமொன்றும் கண்டுபிடிக்கவில்லை. அவர்களுக்கு 12 மனைவிகள் உள்ளன. முதல் மனைவிக்கு 55 வயது இருக்கும் போது இவருக்கு 25 வயதானது. கடைசி மனைவியோடு திருமணமாகும் போது இவருக்கு 60 வயது மணமகளுக்கு 10 வயது என்று அவங்கப் புத்தகங்களில் தான் இருக்கிறது. ஜாதியைப் பார்த்து தான், கல்யாணம் பண்ணிக்கினாருன்ற விஷயம் இஸ்லாமிய நண்பர்கள் எனக்கு கொடுத்த புத்தகத்திலிருந்து தான் வந்தது.
இதேபோன்று கிறிஸ்துவ மதத்திலும் குறைபாடுகள் உண்டு. மதம் மாறியபின் ஏறத்தாழ இரண்டாவது தலைமுறையில் தான் அவர்கள் உணர்கிறார்கள். முதல் தலைமுறையில் நல்லது மட்டுமே அவர்களுக்கு காண்பிக்கப்படுகிறது. இரண்டாவது தலைமுறையில் உணரும் போது, என்ன பிரச்சனை வருகிறதென்றால், இந்து மதத்திற்குத் திரும்பவும் வரமுடிவதில்லை. ஏனெனில் நாம் யாரையும் வற்புறுத்தி திரும்ப வந்துவிடுங்கள் என்று கூறுவதில்லை. போனியா போய்கிட்டே இரு. எக்ஸிட் கேட்டுதான். வருவதாக இருந்தாலும் வரலாம். நாங்க யாரும் வாங்க வாங்க என்று கூப்பிட மாட்டோம்.
இது போன்ற காலக்கட்டத்தில் அறிவியல் பூர்வமாக இந்துமதத்தின் சிறப்பம்சங்களை இந்திய மதத்தின் சிறப்பம்சங்களை சொல்ல வேண்டிய கட்டாயம் இருக்கிறது. எனவே, இதை நான் ஒரு சமுதாயக் கடமையாக செய்து கொண்டிருக்கிறேன். இதை உங்களுக்குத் தெரிந்த மற்றவர்களுக்கு அனுப்பி வையுங்கள். நான் திரும்பவும் கூறுகிறேன். என்னோட பேரோ, என்னுடைய புகழோ வருவது என்னுடைய நோக்கமல்ல. ஆனால், எனக்கு பயம் கிடையாது. இதையெல்லாம் சொல்வதினால், டார்கெட் பண்ணிடுவாங்கன்ற பயம் கிடையாது. அறிவியல் பூர்வமாக மட்டுமே நான் செய்து கொண்டிருக்கிறேன்.
இன்றைய தினத்தில் நாம் பேசிய மெயின் சப்ஜெக்ட்டில் ஒரு செய்தி இல்லாததினால், நான் ஒரு செய்தி சொல்லியாகனும். அந்த செய்தியில் நான் குற்றவியல் சட்டங்கள் என்பதை எடுத்துக் காட்டலாம். எந்த ஒரு நாட்டிலும், எந்தவொரு மதத்திலேயும், குற்றம் என்ற செயல்களை அவமதித்து, இந்தக் குற்றத்திற்கு என்ன தண்டனை என்று வைக்கிறார்கள்.
இஸ்லாமியத்திலும், கிறிஸ்துவத்திலும் மதத்தை பற்றி தரக்குறைவாக பேசினால், அது ஒரு குற்றம். அதற்கு தண்டனை இருக்கிறது. கல்லால அடித்து கொல்வதிலிருந்து, பைன் கட்டுவதிலிருந்து, ஆலய வாசல்களில் எல்லாம் செருப்புகளை துடைத்து வைப்பதிலிருந்து தண்டனைகள் உள்ளது. மதத்தை இழிவுபடுத்தினால், தண்டனை இல்லாத ஒரே மதம் இந்து மதம் தான். கடவுள் இருக்கோ இல்லையோன்னோ தெரியல, கடவுள் இல்ல, கடவுள் இருக்காங்க. மூனு பேருமே இந்துக்கள் தான். சர்வ சுதந்திரம் உள்ளது.
பிறகு குற்றங்களுக்கு தண்டனை எனத் திரும்பப் பார்க்கும் போது, திருடினானா? கைய வெட்டு. கண்ணால ஒருத்தன் தவறு செய்தானா? கண்ணைக் குருடாக்கிவிடு. எந்த அவயம் குற்றத்தை செய்ய தூண்டியதோ, அந்த அவயத்தை நீக்கிவிடு. எனக்கு அது காட்டு மிராண்டி சட்டம்னு தோணுது. தகுந்த விசாரணை இல்லாமல், சுட்டுக் கொன்னுட்டாங்கன்னு சமூக வலைதளங்களில் வீடியோக்களில் எல்லாம் வருகிறது. இது என்னவோ, ரொம்ப ஜஸ்டிஸ் மாதிரி. அதெப்படி முடியும் ப்ராக்டிகலா?
எந்தவொரு குற்றமாக இருந்தாலும், ஆராய்ந்து தகுதியான தண்டனை வழங்குவது இந்து மதம் இந்திய மதம். சில சமயம் ஆபூர்வமாக தண்டனை தவறாகி விடும். தண்டனை தவறாகும் போது, தன்னைத்தானே தண்டித்துக் கொள்ளும் ஒரே மதம் இந்துமதம் மட்டும் தான். இதை நீங்கள் சிலப்பதிகாரத்திலும், மனுநீதி சோழன் கதைகளிலும் எடுத்துக் கொள்ளலாம். எப்படி கண்ணகி வாதாடினாள்? பாண்டிய நெடுஞ்செழியன் உயிர் துறந்தான். சிலப்பதிகாரத்தை பற்றி பேசினால், பேசிக் கொண்டே போகலாம்.
மிருகங்களுக்கும் நீதி வழங்கும் சட்டம் இந்து மதமான இந்தியச் சட்டம் தான். கதைகள் எல்லாம் இருக்கிறது. ஒரு பசு வந்து புகார் கொடுத்தது. என் கன்னுக்குட்டியை இவன் கொன்று விட்டான் என்று. அப்படியா, என்ன நடந்தது. ஓ! இவன் ராஜகுமாரன். ஆனாலும் சட்டமென்பது பொது. அவனை தேரில் வைத்து ஏத்துங்கள்! எங்குள்ளது இதுபோன்ற கதைகள் எல்லாம், இதுபோன்ற தத்துவங்கள் எல்லாம்.
அதனால், குற்றம் நடக்கும் போது, குற்றத்தை குற்றமாக பார்க்காமல், குற்றத்தின் பின்னனியை பார்த்து, எதற்காக குற்றம் நடந்தது என்பதனை பார்த்து, அந்த குற்றம் நடக்கும் போது, இருந்த சூழ்நிலைகளைப் பார்த்து, மன்னிப்பு வழங்குவதோ, சிறு தண்டனை வழங்குவதோ, பெரிய தண்டனை வழங்குவதோ, முழுக்க முழுக்க ஆராய்ந்து தண்டனை வழங்குவதோ இந்து மதம் தான். ஆராயாமல் தண்டனைகளே இந்து மதத்தில் கிடையாது. ஐந்து நிமிடம் தண்டனை, அரைமணி நேரம் தண்டனையெல்லாம் ஆராயாத தண்டனை.
அதாவது குற்றவியல் சட்டங்கள், நடைமுறைகள் என எடுத்துக் கொண்டாலும், சிவில் மற்றும் உரிமையியல் என எடுத்துக் கொண்டாலும். சிவில் மற்றும் கிரிமினல் சட்டங்கள் எல்லா மதத்திலும் இருக்கு, எல்லா நாட்டிலும் இருக்கு. அதிலும் முழு சுதந்திரம், அரசனை எதிர்க்கும் சுதந்திரம், கடவுளை எதிர்க்கும் சுதந்திரம், பொருள்களை பாதுகாத்துக் கொள்ளும் சுதந்திரம், பொருள்களை தானம் கொடுக்கும் சுதந்திரம், மனைவிக்கு சுதந்திரம், மக்களுக்கு சுதந்திரம் என எல்லாவற்றையும் கொடுப்பது, இந்து தர்மமான இந்திய தர்மம் என்று சொல்லி உங்கள் அனைவருக்கும் நன்றி கூறி விடைபெறுகிறேன்.