வேறெந்த மதத்திலேயும் எந்த நாட்டிலேயும் இல்லாத ஒரு சிறப்பு இந்திய மதமாம் இந்து மதத்திலே கவனித்தீர்களானால், பெண்களோடு உறவுகளை மிகவும் அழகாக உருவாக்கி வைத்துள்ளோம். எந்த ஒரு நாட்டிலே, எந்த ஒரு சமுதாயத்திலே கவர்ச்சியான உடையணிந்த ஒரு பெண் நடுசாலையிலே நடந்து செல்ல முடிகிறதோ, அந்த நாடு, அந்த சமுதாயம் தான் முன்னேறிய சமுதாயமாக அங்கீகரிக்கப்படும். இது இன்று நேற்றல்ல. எப்பவுமே.

ரோமன் நாகரிகத்தில் உச்சக்கட்டத்தில் இருந்தப்போ, கிரேக்க நாகரிகம் உச்சக்கட்டத்தில் இருந்தப்போ, அங்கிருக்கக்கூடிய சிற்பங்கள் ஓவியங்கள் எல்லாம் பார்க்கும் போது, பெண்கள் எவ்வளவு கவர்ச்சியான உடையணிந்து கவலையில்லாமல், தெருக்களில் நடந்து சென்றார்கள் என்பதை நாம் பார்க்க முடியும்.

இப்போதும், முன்னேறிய நாடென்று சொல்லப்பட்டால், ஒரு முன்னேறிய நகரமென்று சொல்லப்பட்டால், அங்கு பெண்கள் நல்ல சுதந்திரமாக இருப்பார்கள். பம்பாயில் எல்லாம் கால் டவுசரப் போட்டுக்குட்டு காலேஜிக்கு கவலை இல்லாமல் போவார்கள். முன்னேறிய நகரங்கள் என்றாலே பெண்களுக்கு சுதந்திரம் அதிகமாகக் கொடுக்கப்படும்.

முன்னேற்றம் இல்லாத நாடுகளில் பெண்கள் வெளியே வருவதே கடினமாகத் தான் இருக்கும். அந்த பெண்களுக்கான உறவுமுறைகள் என்று வரும்போது, இந்திய சமுதாயமாம், இந்து சமுதாயத்திலே இரண்டாக பிரிக்கிறார்கள். அது எப்படியென்றால், இந்தப்பெண்ணைத் திருமணம் செய்ய விரும்புபவர்கள் இந்தப்பெண்ணை திருமணம் செய்து கொள்ளலாம். கிண்டல் செய்து கொள்ளலாம். திருமண நோக்கத்தோடோ இல்லை காதல் நோக்கத்தோடோ பழகலாம் என்ற ஒரு பாதியையும், இந்தப் பெண்கள் சகோதரி போன்றவர்கள், அன்னையர் போன்றவர்கள். அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும். பாதுகாக்கணும். அவர்கள் ஏதேனும் ஆபத்தில் இருந்தால், உடனடியாக உதவ வேண்டும்.

எந்தப் பெண்களையெல்லாம் பிரிக்கிறார்கள் என்றால், கண்ணில் பார்க்கின்ற எல்லாப் பெண்களையும் பிரிக்கிறார்கள். அதனால், ஆண் ஒரு பெண்ணை அணுகும் போது, பார்க்கும் போது, முதன்மையா சந்திக்கும் போது, இந்திய சமுதாயமாம் இந்து சமுதாயத்திலே என்ன இருக்கின்றதென்று பார்த்தோமானால், உறவு முறையை நிலைநாட்ட வேண்டும். முறைப்பெண்ணா, முறைப்பெண் இல்லையா, முறைப்பெண்ணாக இருந்தால், நடையா இது நடையா என்று கிண்டல் பண்ணிக் கொள்ளலாம். முறைப்பெண் இல்லை. சகோதரி முறையென்றால், என்னம்மா சாப்டியா, சௌக்கியமா இருக்கியா. உனக்கு ஏதாவது உதவி செய்ய வேண்டுமா? என பாதுகாக்கணும், உதவி செய்ய வேண்டும்.

இது தெரிந்தவர்களிடையே உறவுமுறை தெரிந்துவிடும். வீட்டில் பெரியவர்களே சொல்லுவாங்க. இது உன்னோட முறைப்பொண்ணுடா, அப்டிதாண்டா? உன்னை கிண்டல் பண்ணும். நீ வேணும்னா பதிலுக்கு கிண்டல் பண்ணிக்கோ. ஏய் அறிவிருக்காடா உனக்கு. இந்தப் பொண்ணு உனக்கு சகோதரி முறையாயிருக்குடா. அந்தப் பொண்ணுக்கு நீ உதவி மட்டும் தான் பண்ணணும். அதைப்போய் கிண்டல் பண்ணிக்கிட்டு இருக்கியேன்னு சொல்லுவாங்க.

உறவு இல்லாத இடங்களில், நேரடியான குடும்ப உறவுகள் இல்லாத இடங்களில், நிறைய விதிமுறைகளை வைத்திருக்கிறார்கள். எப்படி? ஒரு ப்ரண்டு ஒரு பொண்ணுக்கிட்ட பழகினால், அந்த நிமிடமே மற்றவருக்கு சகோதரி முறையாகி விடுகிறது. இவன் பழக டிரை பண்ணக்கூடாது. அதே போல் மனைவி. மனைவிக்கு ஒரு ப்ரண்டு இருந்தால், அந்த நிமிடத்தில், அவங்க இவங்களுக்கு சகோதரி முறையாகி விடுகிறது. அதேபோல், எஸ்டாப்லிஷ் பண்றது. அந்த ரிலேஷன்சிப்ப கடந்துபோய் எஸ்டாபிலிஷ் பண்ணி எந்த முறையில் வருகிறது எனப் பார்த்த பிறகு தான் எப்படிப் பழக வேண்டும் என ஒரு கட்டாயத்தை வைக்கிறோம்.

ஆனால், மற்ற சமுதாயங்களில், நாங்க முன்னேறிய சமுதாயம்னு சொல்லுவாங்க. ரொம்ப அறிவியல் பூர்வமான சமுதாயம்னு சொல்லுவாங்க. நம்மை கேலி செய்வார்கள். மூடநம்பிக்கை நிறைந்த சமுதாயம் என. அப்படி கிடையாது. அங்கெல்லாம், ஒரே தாய் அல்லது ஒரே தந்தைக்கு பிறந்த பெண்ணைத் தவிர, மீதி எல்லாப் பெண்ணும் கசின் தான். அவர்களை, இவர்கள் திருமணம் செய்துக் கொள்ளலாம். அதனால், பார்க்கக் கூடிய எந்தப் பெண்ணும், அவர்களை பொறுத்தவரையில் மற்ற சமுதாயத்தில், ஒரே தாய் தந்தையர் இருந்தாலொழிய, முறைப்பெண்ணாக ஆயிடுது.

சமுதாய ஒழுக்கமென்பது நமது நாட்டில் இருப்பது போல், கட்டுக்கோப்பாக இல்லாமல், அங்கே ஒழுக்கம் குறைவு என நான் சொல்லவரவில்லை. வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. அதிலும் குறிப்பா இஸ்லாம்னு சொல்லும் போது பாத்தீங்கன்னா, அங்கிருக்கும் சட்ட திட்டங்கள் ரொம்ப வித்தியாசமா இருக்கு. வயது வரம்பு கிடையாதுன்னு இருக்கு. 16 வயது பையன் 50 வயது பையனை கல்யாணம் செய்து கொள்ளலாம். இந்து மதத்தில் ஒரு மாதம் மூத்தவளாக இருந்தாலும் கூட அதை பழிப்பாவமாக பார்க்கிறார்கள். பொண்ணு மூத்த பொண்ணா இருக்கே என்ன இதுன்னு.

அதேபோல் இஸ்லாம்னு சொல்லும் போது 60, 70 வயது கிழவனாக இருந்தாலும் கூட சுமார் 10, 12 வயதான பெண், அதாவது வயதிற்கு வந்தால் போதும் என்று வைத்திருக்கிறார்கள். அவங்களுக்கு 18, 20 வயது என்ற சட்டங்கள் கிடையாது. அந்தப் பெண்ணின் சம்மதம் கூட தேவையில்லை. பெத்தவங்க எங்க பொண்ணு கல்யாணம் பண்ணிக்கோங்கன்னு சம்மதித்தால் போதும். மறுநாளே அந்தப் பொண்ணை விவாகரத்து செய்து விட்டு வேறு பெண்ணைத் திருமணம் செய்து கொள்ளலாம். அந்தப் பெண்ணும் அதே போன்றுதான். கேட்டால், அந்தப் பெண்ணிற்கும் சுதந்திரம் கொடுக்கிறார்களாம். என்ன கண்ராவி இது, சுதந்திரம்னு சொல்றாங்க. சுதந்திரம் எதுக்குன்னா, இதுக்குத்தான் போலிருக்கு.

எனக்குப் பேச சங்கடமாகவும் அருவெறுப்பாகவும் தான் இருக்கிறது. இன்னொரு மதத்தைப் பற்றி, நாம ரொம்ப பேச வேண்டி வருதுன்னு, எனக்கு பேசப் பிடிக்கல தான். ஆனால், நம்முடைய சமுதாயத்தைப் பற்றி, நம்முடைய சமுதாயம் பழக்கவழக்கத்தைப் பற்றி, நம்முடைய உன்னதமான உறவுமுறைகளைப் பற்றி முழுவதுமாக அறிந்து கொள்ளாமல், இது மூடநம்பிக்கை சமுதாயம் என்று அவர்கள் பரப்புரை செய்யும் போது, பதில் சொல்வதற்கு ஒண்ணுமில்லன்னு நினைத்துவிடக் கூடாதுன்னு நினைக்கறதுனால, நம்முடைய மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.

அங்கே எப்படி இருக்கிறது. இங்கே எப்படி இருக்கிறது. அங்கே விட உன்னதம் ஒரு படி உயர்வாகத் தான் இருக்கிறது. ஒழுக்கம் ஒரு படி உயர்வாகத்தான் இருக்கிறது. பெண்கள் பாதுகாப்பு ஒரு படி உயர்வாகத்தான் இருக்கிறது என்பதை ஒப்பிட்டுப் பார்ப்பதற்கு வேறுவழி யில்லாமல் முன்னுதாரணமாக சொல்லியிருக்கிறேன். அதைத் தவிர எந்த ஒரு மதத்தையும் அட்டாக் செய்யும் எண்ணம் கிடையாது.

பெண்களுக்கான திருமண உறவுமுறைகள் என்று வரும்போது, பெண்களுக்கான பாதுகாப்பு என்று வரும்போது, பெண்களுக்கான சுதந்திரம், கருத்து சுதந்திரம், ஆடை அலங்கார சுதந்திரம் என்று வரும்போது, அனைத்து அம்சங்களிலும் உயர்ந்து நிற்பது இந்திய மதமாம் இந்து மதமே என்று கூறுகிறேன்.

நன்றி, வணக்கம்.

Original Audio posted in WhatsApp Group ‘Science is Hinduism’ on 18 May 2018. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes:

<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>