ஷேர்  ஆட்டோவில் காலையில் சென்று கொண்டிருந்தேன். ஷேர் ஆட்டோக்காரர் மிகவும் குழம்பியிருந்தார். மார்கழி மாதம் வந்தால் போதும் சார், மனைவி மிகவும் அவஸ்தைப் படுகிறார்கள். மூச்சு விடமுடியவில்லை, ஆஸ்துமா இருக்கு. ரொம்ப நல்ல பொண்ணு. ரொம்ப பயபக்தியானது. அதை நினைத்து மனது கஷ்டமாக இருக்குன்னு சொன்னாரு. அப்போது நான் சொன்னேன்.

அது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை. காலையில் எழுந்ததும் நல்லா குளிக்கணும்னு எல்லாம் தேவையில்லை. நல்லா உடம்ப சுத்தமா வெச்சிட்டு கந்தசஷ்டி கவசம், திருவாசகம், திருப்பள்ளியெழுச்சி இதெல்லாம் ரூம்குள்ளேயே பாடச்சொல்லு. கொஞ்சம் கொஞ்சமா பயிற்சி செய்தால் போதும். என்ன சார் இப்படி சொல்றீங்க. ஆமாப்பா எனக்கு ஒரு காலத்துல அப்படி தான் இருந்துச்சு. தொடக்கத்துல, இதுல காலைல பயிற்சி செய்யும் போது, சரியா போயிடும். அதேபோல், இந்த கந்தசஷ்டி கவசத்தின் பாடலுக்கு உச்சரிப்பு சரியாக வராதவர்களுக்கு உச்சரிப்பு வர ஆரம்பித்துவிடும் என்றேன்.

பிறகு நானே மறந்துட்டேன். எதேச்சையாக ரோட்ல பார்க்கும் போது, சார், நான் அப்ப நம்பவே இல்லை. ஆனால், இப்போது நல்ல முன்னேற்றம் தெரிஞ்சிடுச்சு. இப்போ தினமும் அதிகாலை என்னோட மனைவிக்கு இந்த பிரச்சனை இல்லை. சாதாரணமாகத் தான் இருக்கறாங்கன்னு சொன்னார்.

இதேபோல் என்னோட வேலை பாக்கற பொண்ணுக்கு சிறிது உச்சரிப்பு சரியாக வராமல் இருந்தது. அதனால் கூச்சப்பட்டுக் கொண்டு யாரிடமும் சரியாகப் பேசாமல் இருந்தாங்க. அவங்ககிட்ட, அம்மா கந்தசஷ்டி கவசம் படிம்மா, அதுல கடகட கடகட கடகட கடகட, குடுகுடு குடுகுடு குடுகுடு குடுகுடுன்னு எல்லாம் வரும். அதை எல்லாம் சத்தமா, மனசுக்குள்ள எல்லாம் படிக்காதே. ஒரு ரூம்ல உட்காந்துக்குட்டு நல்ல சத்தமா, வேணும்னா ஆபிஸ்ல கூட ஒரு ரூம்ல தினமும் ஒரு மணிநேரம் படித்து முடித்துவிடு. கொஞ்சம் கொஞ்சமா சரியாயிடும்.

அதனால், இந்த மார்கழி மாதத்தில் மார்கழி பாராயணம் சைவமா இருப்பவங்க சிவபெருமான குறித்தும், வைணவமா இருப்பவங்க பெருமாள குறித்தும் பாடல்களை பாடுவாங்க. அந்த பாடல்களைப் பாடும் போது ஓரளவு சத்தமா பாடலாம், குருப்பா பாடலாம், தனியாகப் பாடலாம். இந்த மாதிரி விஷயங்களுக்கு ரொம்ப உகந்ததாகவும் இயற்கையான முறையில் மருத்துவமாகவும் இருக்கு. மார்கழி பாராயணம் பாடும் போது, புரட்டாசி விரதங்கள் இருக்கும் போது, மத்த பாடல்களை பாடும்போது, குரல் வளம் கிடைக்கிறது. சிந்தனை பெருகுகிறது. நோய் நொடிகளும் அற்றுப் போகிறது என்பதை சுருக்கமாக சொல்வார்கள்.

இதைப் பாடு இந்த நோய் தீர்ந்துவிடும். அறிவியல் பூர்வமாக பார்க்கும் போது பயிற்சி தான், சுவாசப்பயிற்சி. தொண்டைகளுக்கு பயிற்சி கொடுக்கிறோம். மூச்சுப் பயிற்சி கொடுக்கிறோம். சத்தமாகப் பேசும் போது, காத்தானது சரியான முறையில் போகுது. இதனால் இந்த நோய்கள் சரியாகிவிடும். அதனால், ஓரளவு சத்தமாகப் பாடல்களை பாடி, பயிற்சியெடுப்பது, குழுவாகவோ, தனியாகவோ இந்து வழிபாட்டு முறைகளில் இருக்கிறது என சொல்லும் போது, அந்த வழிபாட்டு முறையானது நோய் தீர்க்கும் முறையாக அமைந்திருக்கிறது என்பதை அறிய வேண்டும்.

நன்றி, வணக்கம்.

Original Audio posted in WhatsApp Group ‘Science is Hinduism’ on 21 May 2018. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes:

<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>