கதைகள். இதிகாசங்கள். கதை வந்த கதைகள். ஒரு மதம், ஒரு நாடு ஒரு மொழி, ஒரு இனம் ஒரு பகுதி மக்களைப் பற்றி அறிய வேண்டும் என்றால், அந்தப் பகுதி மக்களால் எழுதப் பட்ட பழைய கதைகள் புராணங்கள் காப்பியங்கள் காவியங்களை படித்து பார்த்து தெரிந்து கொள்ளலாம். எங்கேயுமே உள்ள வரலாறு. எல்லா பகுதி மக்களுக்கும் அவங்க பகுதி பற்றிய கதைகள், காப்பியங்கள், கவிதைகள், இதிகாசங்கள் எல்லாம் இருக்கத் தான் செய்யும்.

இத வந்து இந்த மதத்துல வந்து இன்னமாதிரியான கதைகள் இதிகாசங்கள், காப்பியங்கள் எல்லாம் இருக்கு என்று நமக்கு எல்லாம் ஓரளவுக்கு தெரியும். மற்ற மொழிகளிலும் இருக்கு, இல்ல என்று நாம் சொல்ல மாட்டோம். இங்க கொஞ்சம் அதிகமாக இருக்கு என்று தான் தோணுது. மற்ற மொழிகளில் புலமையுற்று அந்த நாட்டிலேயே பிறந்து வளர்ந்து அந்த மொழிகளிலே நிறைய இருக்கு என்று நமக்கு தெரிய வருமோ, ஆனால் சில கதைகள், இதிகாசங்கள் வந்து தன்னுடைய சொந்த நிலப்பரப்பை தாண்டி மற்ற பகுதிகளுக்கு சென்றடைகிறது.

அதுதான் நம்ம நாட்டில மகாபாரதம், ராமாயணம், பஞ்சதந்திர கதைகள். அரபு நாட்டை பொறுத்தவரை ஆயிரத்து ஒரு அரபு இரவு கதைகள், பைபிள் கதைகள், அதற்கு அப்புறம் பிராந்திய கதைகள். ஒரு நாட்டைப் பற்றி அந்த நாட்டில் நடந்த நிகழ்வுகள் பற்றி எல்லாம் இருக்கும். இந்தக் கதைகள் எழுதப்படும் பொழுது கதைகளுக்கான ஒரு காரணம் இருக்கும். அதுவும் சுவை பட இருக்கும்.

உதாரணத்திற்கு, பஞ்சதந்திரக் கதைகளில், ஒரு மன்னன் நேர்மையா ஆட்சி செய்யுறான். மக்களுக்கு நல்லது பண்ணுறான். அவனுக்கு மூணு பிள்ளைகள். மூணுபேருமே முட்டாளா இருக்காங்க. ஆட்சி அதிராகத்துக்கு வந்து அருகதை அற்றவர்களாக இருக்காங்க. அவன் ரொம்ப வருத்தப் படுறான். எல்லாம் இருந்து என்ன பிரயோஜனம். மதியிலாத பிள்ளைகளை பெற்று வெச்சிருக்கிறோமே. ஏற்கனவே நடராஜ பத்தில் கூட ஒரு வாசகம் வரும். இப்படி மதி இல்லாத பிள்ளைகளை பெத்துட்டா, உற்று நோக்காத தந்தையும் உண்டோ, ஈசா என்னப்பாத்து சரிபண்ணிவிட மாட்டாயா, என்று இருக்கும்.

அதனால் அவன் வந்து ரொம்ப வருத்தப்பட்டு. இந்த என்னோட மக்கள, பிள்ளைங்கள, எப்படியாவது சரி பண்ணி, வாழ்வதற்கு ஏற்ற தகுதிகளை உருவாக்கிட முடியுமா என்று தன்னுடைய அரச சபையில் உள்ள எல்லாரையும் கேட்கிறான். எல்லாரும் கூனிக் குறுகிப் போறாங்க, ஏன்னா அவங்க எந்த அளவிற்கு அறிவு இல்லாதவங்க அந்த பிள்ளைங்க, எந்த அளவிற்கு முட்டாத்தனமான பசங்க, இவங்களை எப்படி வந்து ஒரு ராஜாவிற்கான மதியினை உருவாக்குவது என்று எல்லாருக்கும் தயக்கமா இருக்கு. அப்போது ஒரே ஒருத்தர் முன் வரார். அவங்கள என் கூட அனுப்பிவையுங்க ஒரு ஆறு மாசத்துக்கு குருகுல வாசத்துக்கு. நான் வந்து அவங்கள புத்திசாலியா, தைரிய சாலியா, உலக நடைமுறைகளைத் தெரிஞ்ச, ஒரு ராஜாவுக்கான, பாலிடிக்ஸ் ஓட மாத்தி அனுப்புறேன் என்று. அப்போ ராஜா வந்து ரொம்ப சநதோஷப்பட்டு, அப்பா, இவரு ஒருத்தராவது சரின்னாரே என்று பிள்ளைகளை அனுப்புறாரு. பிள்ளைகள் கூடப் போறாங்களா ரொம்ப சேட்டக்கார பசங்க, அவங்கள எப்படி சரிபண்ணி நன்னெறி பண்ணி, ஒரு அரசனுக்கு ஏற்ற தகுதியை கொண்டு வர்றது? அப்ப அவரு என்னா பன்றாரு, ஏயீ பசங்களா இன்னைக்கு சூப்பரா ஒரு கத சொல்லப் போறேன், கேட்கிறீங்களா. உங்களுக்கு டெய்லியும் நான் கதைதான் சொல்லப்போறேன். வேறு எதுவுமே கிடையாது.

அப்படினு சொன்னவுடனே அவங்களுக்கு ரொம்ப ஜாலி, ஏய் ஐயா நம்ம கூட ஸ்கூல்னு இன்னவுடனே என்ன என்னமோ போட்டு படுத்தி எடுப்போம்னு நினைச்சோம். கதையாமே என்று உக்காந்துக் கிடுறாங்க. அவரு டெய்லியும் ஒரு பஞ்சதந்திரக் கதை சொல்லுறாரு, அந்தக் கதைகளை சொல்ல சொல்ல, கேட்டு கேட்டு அவங்க வந்து ஒரு ராஜாவுக்கான தகுதியை பெற்று ரொம்ப சிறப்பா ஆட்சி எடுத்துகிறாங்க. அப்படி வந்தது பஞ்சதந்திர கதையோட கதை வந்த கதை. பஞ்சதந்திர கதை சொல்லனும்னா அது பெரிய விஷயம். அதை இதுக்குள்ள நான் கொண்டு வர முடியாது.

இது நம்ப நாட்டோடு ஒரு முக்கியமான கதையோட, கதைத் தொகுப்போட வந்த கதை. இது அரேபிய நாட்டில எப்படினு பார்ப்போம்.

ஆயிரத்து ஓர் அரபிய இரவுகள். இதை சொல்றதே வந்து அடல்ட்ஸ் ஒன்லி டைப்பாதான் இருக்கும். எனக்கும் கூச்சமாகத்தான் இருக்கு. ஆனாலும் புதிதாக கவரப்பட்டு செல்பவர்கள். அங்கேயேதான் உயரிய கருத்துக்கள் இருக்கிறது. என்று நினைப்பார்கள். அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக சொல்கிறேன். யாரையும் தரம் தாழ்த்த வேண்டும் என்பதற்காக இல்லை.

அங்கேயும் ஒரு ராஜா இருக்கிறான். அவனுக்கு ஒரு பிரதர் ராஜா இருக்கிறான். அங்க வந்து கொஞ்ச தூரத்துல இவன் ஒரு நாட்டில் இருக்கிறான்னா அவன் ஒரு நாட்கள் இருக்கிறான். ரெண்டு பேரும் ரொம்ப செல்வ செழிப்போட பிரமாதமா இருக்கிறாங்க. அண்ணனான ராஜாவுக்கு தம்பி ராஜாவை பார்க்கணும்னு ஆசை, அதனால ஒரு பெரிய படையை அனுப்புறான் தம்பி நாட்டுக்கு, போய் தம்பிகிட்ட சொல்லுங்கப்பா உன்னைப் பாக்கணும் போல இருக்கு கிளம்பி வரச்சொல்லுங்கன்னு. அவங்களும் கிளம்பிப் போறாங்க. அங்க தம்பியும் அண்ணனைப் பற்றி நினைச்சுகிட்டு இருக்கிறான்.

அவரு எப்படி நாட்டை ஆளுறாருனு தெரியலையே, தொடர்பு விட்டுப்போய் பல வருஷங்கள் ஆயிடுச்சே அப்படினு. இவங்க போய் சொன்ன உடனே தம்பி ராஜாவுக்கு ரொம்பவும் சந்தோசம், ஆகா பரவா யில்லையே அண்ணன் நியாபகம் கொண்டிருக்கிறாரே. சரி உடனடியாக நான் கிளம்பி வருகிறேன். என்று கிளம்புறாரு. கிளம்பும் போது அங்க கடைசி நிமிசத்தில் வந்து. தன்னோட மனைவி ராணி கிட்ட போய் ஒரு வார்த்த சொல்லிட்டு வந்து கொஞ்ச நேரம் சந்தோசமா இருந்துட்டு வரலாம். ஏன்னா அஞ்சாறு மாசம் கழிச்சுதாம் வரப்போறோம். அப்படிண்னு அரண்மனைக்கு போறான். வித் அவுட் அனோன்ஸ் மண்ட். அனோன்ஸ் மண்ட் பண்ணிட்டு போனா ராணி ரெடியா இருப்பாங்க, அதனால அனோன்ஸ் மண்ட் பண்ணல, ஒரு சர்ப்ரைசாக இருக்கும் என்று போறான். அந்த கதைகளை படிக்கும் போது டீடைலா இருக்கும். நான் சொன்னா ஒரு அருவருப்பாக இருக்கும். அங்க தன்னோட மனைவி வந்து வேலைக்காரனோட தகாத உறவில் ஈடுபட்டு இருப்பதை பார்க்கிறான். பார்த்த உடனே ரொம்ப நொந்து போய் அந்த ஸ்பாட்ல கொன்று தூக்கி எறிஞ்சிட்டு வாரான். அதுக்கு அப்புறம் வந்து, அண்ணனை பார்க்குறதற்கு வீரர்களோடு போறான். அப்போ இவனுக்கு தன்னோட மனைவி இப்படி பண்ணிட்டாங்களே அப்படினு ஒரு நினைவு இருந்துகிட்டே இருந்துள்ளது.

அண்ணன் வீட்டுக்கு போனவுடனே தம்பியை அந்த நாட்டுல நல்லா கவனிச்சிக்கிறார், ஆனாலும் தம்பியோட மனசுக்குள்ள வருத்தம் இருக்குனு கவனிக்கிறாரு, ஒரு வேல தம்பியோட நாட்டில மலைகள் அருவிகள், இருக்கிறதனாலையோ இங்க பாலைவமாக இருக்கிறதனாலையே இவருக்கு பிடிக்கலையா, அப்படிண்னு இவரை எப்படியாவது சந்தோசப் படுத்தணும், அப்படிக்காக வேட்டைக்கு ஏற்பாடு பண்ணுறாரு.

இந்த மாதிரி நீ வேட்டைக்கு போ, காட்டு பகுதியில உன் நாட்டுல இருக்குற மாதிரி மரங்கள், செடிகள் எல்லாம் இருக்கும். கொஞ்சம் உற்சாகம் அடைவ, ஒரு மாதிரி டல்லாவே இருக்குறேயே என்று. சரி அப்படியிண்னு இவரு வேட்டைக்கு போயிட்டு வராரு. வந்த உடனே தம்பி ஓரளவுக்கு சந்தோசமாக ஆயிடுறாரு, தம்பி சந்தோசமான உடனே. அண்ணனுக்கும் சந்தோசம், பரவாயில்ல, அப்படியினு தம்பியை பார்த்து சொல்லுறாரு பரவாயில்ல தம்பி நீ சந்தோஷமாயிட்ட. முதல்ல சொல்லிட வேண்டியதானே, எனக்கு, தோட்டம், அருவி, எல்லாம் இருக்கிற இடத்துக்கு போய் பாக்கணும் அப்படி இல்லனா சந்தோசமா இருக்காதுனு சொல்லிருந்தா அனுப்பியிருப்பன்ல. அப்படியிண்னு. இல்ல அண்ணா நான் சந்தோசமாதான் இருக்கிறேன். பிரச்சனை இல்லை என்று.

ஆனால் அதற்கு அப்புறம் ஒரு பிரச்சனை வருது. அங்க இருக்கிற ஒற்றர்கள் மூலம் அண்ணனுக்கு தெரியுது. தம்பி அந்த வேட்டைக்கு போகல. சாமர்த்தியமாக ஒளிஞ்சிகிட்டாரு, வீட்டிலையே டல்லா இருந்தவன் எப்படி துக்கம் எல்லாம் போய், முகம் சாதாரணமாக ஆயிடுச்சினு தம்பியை கூப்பிட்டு ரொம்ப வற்புறுத்தி கேட்கிறாரு.

வற்புறுத்தி கேட்கும் போது, தம்பி வந்து ஒரு ரகசியத்தை சொல்லுறாரு, எனக்கு வேட்டைக்கு போக பிடிக்கல நான் வந்து, இந்த ரீசன்னாலதான் டல்லா இருக்கிறேன். என்னுடைய மனைவி வந்து இப்படி, நடந்துக்கிட்டாங்க. கிளம்பி வரும்போது, அப்படினு சொல்லும்போது அண்ணனுக்கு அப்படியா அவள அப்படியா விட்டு வைச்சிட்ட? இல்ல அவள ஆன் த ஸ்பாட்ல சீவிட்டேன் அண்ண. சரி வேட்டைக்கு போகலையே அப்ப எப்படி உன் மனசு சந்தோஷமாச்சி? இல்ல அப்படினு தயங்கி தயங்கி அண்ணாகிட்ட சொல்றான்.

இந்த மாதிரி அண்ணியாரை பற்றி ஒரு விஷயம் தெரிய வந்திடுச்சு, அதனால சரியாயிட்டேன்னு. ஆக, என் பொண்டாட்டியை பற்றி சொல்றேயானு முட்டவாரான். இல்ல இல்ல. நீங்க அடுத்த தடவ ஒண்ணு பண்ணுங்க.இதேமாதிரி வேட்டைக்கு போறமாதிரி போய், திரும்ப ரகசியமா, ஒளிஞ்சிகிட்டு இன்னா நடக்குதுன்னு பாருங்க. அதுக்கு அப்புறம் பாக்கலாம்னு சொன்ன உடனே பிளான் பண்ணுறாங்க.

பிளான் பண்ணும் போது, அண்ணனோடே மனைவி வந்து ஒழுங்கீனமாக அடிமைகளோட காம களியாட்டம் போடுறதை கண்டுபிடிக்கிறாங்க. விலாவாரியான கதைகளாக இருக்கும் நீங்க இன்டர்நெட்டில் பாத்துக்கோங்க.

அதுக்கு அப்புறம் வந்து பெண்கள் மீதே நம்பிக்கை எல்லாம் போயிட்டு எல்லாப் பெண்களையும் கொன்னுடுறதுனு முடிவு பண்ணுறான். அப்படி எந்த பெண்ணாக இருந்தாலும், வயதுக்கு வந்ததுக்கு அப்புறம் மனைவியாக ஆக்கிட்டு, அன்னைக்கு நயிட்டே என்ஜாய் பண்ணிட்டு கொன்னுவிடுறதுனு முடிவு பண்ணிட்டான். அதே போல் பல பெண்களை டெய்லியும் கல்யாணம் பண்ண             வேண்டியது. அன்னைக்கு என்ஜாய் பண்ணவேண்டியது. அன்னைக்கே தீர்த்து கட்டிட வேண்டியது. அப்போ அவன் மந்திரியோட பெண்ணோட டேர்ன் வரும் போது, அந்த பொண்ணு வந்து நான் எப்படியாவது சமாளிக்கிறேன் பா. அப்படிண்னு அந்த ராஜாவுக்கு டெய்லியும் ஒரு கத சொல்ல ஆரம்பிப்பாங்க. அந்த கதை தான், அந்த ஆயிரத்து ஓர் அராபியன் இரவு கதைகள்.

இப்ப பாருங்க ஒரு சாதாரணமான ஒரு கதை. ஒரு நாடு சம்மந்தபட்டது. ஒரு மொழி சம்மந்த பட்டது. ஒரு பண்பாடு சம்பந்த பட்டது. அந்த கதை வந்த கதை, உயரிய இந்து நாகரீகத்திலேயே, இந்து பூமியிலையே, எப்படி இருக்கிறது. ஒரு பாலைவன பூமியில் எப்படி இருக்கிறது என்று நாம யோசித்து பார்க்கவேண்டும். அப்ப கதை வந்த கதையே வந்து ஒரு சாதாரண மக்களுக்கு வந்து சொல்ல முடியாத அளவிற்கு அசிங்கமாக, கேவலமாக இருக்கிறது. அப்படினு இருக்குறப்போ, நம்மகிட்ட எவ்வளவு உயரிய கருத்துக்கள் இருக்கிறது.

எனக்கு தெரிஞ்ச ரொம்ப நல்ல தேர்டு, போர்த், ஜெனரேஷன் கிறிஸ்டின் பேமிலி இருந்தாங்க. ஜெனெரேசன் தாண்டிட்டாலே, நான் சொல்லுவேன். எல்லா மதங்களின் மீதும் மதிப்பு வந்திடும். ஏன்னா தன்னுடைய சொந்த மதத்தில் உள்ள குறைபாடுகள் தெரிய வரும். சாலமனை பற்றி பேசலாமா, அவர் வேதத்தில் உள்ளார். இல்ல சார், உங்களுக்கு ரொம்ப தெரியுது. வேண்டாம் என்று போய்டுவாங்க. அதனால அத இந்த எடத்துல சொல்ல வேண்டியது இல்ல. அது பைபிள் கதைகள்ல ஒன்று, சாலமன் இஸ் கிரேட், சாலமன் இந்த வைல்ட் ,சாலமன் இஸ் மோஸ்ட் நோபில் கிங், அவரு பிறந்த விதங்கள் வந்து, ரொம்ப வெளியில சொல்லுறதுக்கு கஷ்டப்படக்கூடிய விஷயமாக உள்ளது. இப்படி வெளிய சொல்லக் கூடிய கூச்ச படக் கூடிய, நிகழ்வுகளின் தொகுப்பாக. மற்ற பூமிகளில் கதைகள் இருக்கும் போது, நம்புளுடைய கதைகள்ளயும் சில கருத்துக்கள் இருக்குதாம்.

இல்லேனு சொல்லமாட்டேன். எப்படி வந்து 101 பிள்ளைகள் பிறந்தது காந்தாரிக்கு, எப்படி கலயாணத்துக்கு முன்னாடி, குந்திதேவிக்கு பிள்ளைகள் பிறக்கும். அப்படிலாம் இருக்கும் ஆனால் அங்கே உள்ளது எப்படி எந்த ஒரு அறிவும் இல்லாமல். இங்கே உள்ளது பற்றி அரைகுறை அறிவை வைத்துக்கொண்டு நம்ம செருப்பை எடுத்தே நம்மளே அடிக்கிற மாதிரி நம்மளுடைய மதத்தை நம்மளுடைய மார்க்கத்தை நம்மவர்களே திரும்ப திரும்ப தாக்கும் போது, மனசு கஷ்டமாகத்தான் இருக்கு. திரும்ப திரும்ப சொல்லுகிறோம். எல்லா மதங்களும் நல்லதைத்தான் சொல்லுகின்றன. நல்ல மார்க்கங்கள் தான், எல்லா மதங்களும், நதியை போல நதிநீரும் நல்லது தான். ஆனாலும் நம்மளுது கொஞ்சம் சுபீரியது தான்.

ஏன்னா அம்மாக்கள் எத்தனையோ பேர்கள் இருந்தாலும், எல்லா அம்மாக்களும் தாய்மையின் சிறப்புதான், ஆனால் நம்ம அம்மா நம்ம தாய்மை என்பது ஒரு ஸ்பெஷல் தான், எனவே கதை எந்த கதையாக இருந்தாலும், பண்பாடாக இருந்தாலும், உணவு பழக்க வழக்கங்களாக இருந்தாலும், நன்னெறிகளை சொல்லக்கூடிய, விதமாக இருந்தாலும், உயரிய மதமாம், இந்து மதம், இந்து தர்மம், ஹிந்து நெறியே சாலச் சிறந்தது என்று விடை பெறுகிறேன். நன்றி வணக்கம்.

Original Audio posted in WhatsApp Group ‘Science is Hinduism’ on 26 May 2018. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes:

<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>