சக்தி என்பது, சிவனும் சக்தியும் என்று சொல்லுகிறோம், சிவத்தை உடலாகவும், சக்தியை உயிராகவும், காண்கிறோம். எனவே, சக்தி இல்லையேல் சிவம் இல்லை, சிவம் இல்லையேல் சக்தி இல்லை என்கின்றோம். ஏனென்றால் உயிர் இல்லை என்றால் உடல் இல்லை. உடல் இல்லை என்றால் உயிர் இல்லை. ரெண்டும் ஒண்ணா இருந்தே ஆகணும். உயிர் தனியா ஒண்ணும் பண்ண முடியாது. உடலும் தனியா ஒண்ணும் பண்ண முடியாது. அந்த சக்தியானது உலகம் முழுவதும் பறந்து பாவித்து இருக்கிறது. நம்முடைய உடலுக்குள்ளேயும் இருக்கு. மனசு குள்ளேயும் இருக்கு, விரல் நுனியில் இருக்கு, இதயத்தில் இருக்கு, மூளையில இருக்கு, எதிர்த்தாப் போல இருக்கு, பக்கத்துல இருக்கு, சைடுல இருக்கு,

புவியீர்ப்பு சக்தியாகவும் உலகம் முழுவதும் இருக்கு, சூரிய சக்தியாகவும் உலகத்துக்கு வெளியில இருந்து உலகத்துக்கு சக்தியை கொடுத்துக்கிட்டு இருக்கு, ஒளி சக்தியாக சந்திரன்ல இருந்து வந்துகிட்டு இருக்கு, சக்திகளோடு வெளிப்பட்டு வந்து, எல்லாப் பக்கமும் இருந்து கிட்டு இருக்கு, அந்த சக்தியை, நம்ப நம்புறது தவிர வேற வழியில்லை. அதுக்கு வந்து வடிவங்கள் வேண்டும்னா மாறியிருக்கலாம், நம்ப வந்து சக்தியை பார்வதியா, அன்னை பராசக்தியா உருவகப்படுத்தி நம்பலாம், மத்தவங்க சக்தியை நம்பித்தான் ஆகணும்.

எனக்கு சக்தியில்லை நான் சாதிச்சி காமிப்பேன் என்று சொல்லுவதற்கு எல்லாம் ஒண்ணும் இல்லை. நம்ப எளிமையாக உருவகபடுத்தி வைத்துள்ளோம் மத்தவங்க அப்படி வைக்கவில்லை அவ்வளவுதான் ஓழிய, சக்தியை நம்பாத எந்த ஜீவனும் இருக்கவே முடியாது. சக்தியை நம்பித்தான் ஆகவேண்டும். சக்தி உலகம் முழுவதும் பரவி இருக்கிறது. யுகம் யுகமாக அப்படினு நம்பித்தான் இருக்க வேண்டும். வேறு வழியே இல்ல அது அறிவியல் பூர்வமானது.

கிராவிடேசன் பத்தி ஒரு இந்து சாமியார் ஒரு சொற்பொழிவை நடத்தும் போது சொன்னாரு, நியூட்டன் தப்பா சொல்லிட்டாரு, கிராவிடேசன் போர்ஸ் இல்லனு நான் சொல்லுறன், ஏன்னா பழமானத்துக்கு அப்புறம், அது தானா விழுது, காயாக இருக்கும் போது, மாங்கா விழுறது இல்லைல, ரெண்டு சமயத்திலும் கிராவிடேசன் இருக்குல்ல, அப்படினு சொற் பொழிவு. நண்பர் அனுப்பி வைத்தார்.

கிராவிடேசன் என்பது ஒரு சக்தி, பழம் என்பது ஒண்ணு இருக்கு, பழத்தை பிடித்து கொண்டு இருப்பது ஒரு சக்தி, அது வந்து பிஞ்சாக இருக்கும் போது, காயாக இருக்கும் போது அந்த சக்தி பிடித்து கிட்டு இருக்கு. பழமாக மாறும் போது, அத பிடித்துக்கிட்டு இருக்குற சக்தி கம்மியாகும் போது, பழத்தை அந்த புவிஈர்வு சக்தியானது மேலே இருந்து கீழே விழ வைக்கிறது.

இது அறிவியல் பூர்வமானதுதான், இதுக்கு வந்து கிராவிடேசன் போர்ஸ் இல்லனு சொல்லக் கூடாது. கிராவிடேசன் போர்ஸ் ஒரு சக்திதானே சக்தியின் வெளிப்பாடுதானே, அதனால வந்து அதே மாதிரி, மொட்டு வந்து வெயிட்டு ஜாஸ்தி மலர் வந்து கம்மியானது, மலரானதுக்கு அப்புறம் கீழே விழுந்து விடுகிறது. மொட்டாக இருந்த போது விழுறது இல்ல. இதனால கிராவிடேசன் தப்புனு சொல்லிட்டு இருந்தாரு, அந்த சொற்பொழிவாளர், துறவி, சன்யாசி, ஏதாவது வைச்சிக்கோங்க, அதுகூட அப்படித்தான் அது மொட்டாக இருக்கும் போதோ, காயாக இருக்கும் போதோ, அது வந்து எப்படி இருக்குனா வந்து, அதிக பிடிப்போடு இருக்கு, அதுக்கும் அந்த தாவரத்துக்கும் இருந்த பிணைப்பு சக்தி, நமக்கும் பிள்ளைகளுக்கும் இருக்கிற பிணைப்பு சக்தி மாதிரிதான்.

பாசம் என்பதும் ஒரு சக்தி, அதுக்கு அப்புறம் நல்ல பூவாகி மலராகி, மலர்ந்திருக்கும் போது அந்த பிணைப்பு சக்தி கம்மியாகி, காம்புகள் வலுவிழந்து, அதுக்கு அப்புறம், கிழே விழுந்து விடுது அவ்வளவு தான், எனவே சக்திகளோடு வெளிப்பாடுனு பாத்தீங்கன்னா, நம்ம கண்ணுக்கு தெரிஞ்சி, கண்ணுக்கு தெரியாத எல்லா இடத்திலும் இருந்துகிட்டு இருக்கு.

பாசம் கூட ஒரு சக்திதான், சோ, நல்லா பாசத்தோடு வந்து, நம்ப குழந்தைகள் வந்து வெளிநாட்டுல வெளி ஊர்ல தொலை தூரத்துல இருக்கும் போது, அவங்களுக்காக நம்ப வேண்டிக்கிற போது, அந்த பாசத்தோட சக்தி வந்து, எல்லைகளைக் கடந்து ட்ராவல் பண்ணி அவங்கள பாதுகாப்பாக வைக்கிறது. காதலும் ஒரு சக்திதான், இந்த காதல் என்பது இந்து மதத்தில் தடை செய்யப்பட்ட வார்த்தை கிடையாது.

முன்ன பின்ன தெரியாதவங்க உணர்வு பூர்வமா, என்னனு தெரியல அப்போ ஒரு உந்துதல் சக்தி வரும் டக்குனு மேக்னட் கேஸ் மாதிரி ஆகுறாங்க, கெமிக்கல் ரியாக்ஷன் மாதிரி ஆகுறாங்க, காதல் வயப்படுறாங்க, ரோம்ப டீப்பா போய்கிட்டே இருக்கு, இப்போ போறவங்களுக்கு நான் சொல்லுறன். அப்போ வந்து, அந்த பையன் எங்கேயோ இருக்குறாரு, அந்த பொண்ணு எங்கேயோ இருக்குறாங்க, நம்பள நினைச்சுகிட்டு இருப்பாரோ, அந்த பொண்ணு நினைக்கும் போது, அந்த பையனும் நினைச்சுகிட்டு இருக்கிறாரு, நினைச்சுகிட்டு தான் இருந்தேன், நேத்து நைட் ஆமாம், சொல்றாங்க ஆமாங்க.

அதுக்கு அப்புறம் ஒரு அறையில உக்காந்து கிட்டு இருக்கிற ஆணோ, பெண்ணோ யாரோ ஒருத்தர். எதிர்த்தா போல சுவற்ற பாத்துகிட்டு கண்ணு மூடியே இருக்கும். திடீர்னு ஒரு உள்ளுணர்வு சொல்லுது. நம்பள யாரோ பாக்குறாங்க, பின்னாடி இருந்து அப்படினு, திரும்பி பார்த்தா, உண்மை யிலயே ஒரு ஆளு நிக்கிறாரு, இல்லனா ஒரு மிருகம் நிக்குது, இந்த உள்ளுணர்வு கண்ணு முன்னாடி தான் இருக்கு. ஆனால் இந்த உள்ளுணர்வை பெரும்பாலும் எல்லோரும் அனுபவித்து இருப்பாங்க. இதெல்லாம் அனுபவம் மூலமாகத்தான் தெரியும், அறிவியல் மூலமாக வராது. எல்லாரும் அனுபவிச்சிருப்போம். சின்னக் குழந்தை கூட அனுபவிச்சிருப்பாங்க, ஸ்கூல் பசங்க கூட ஒரு மாதிரி இருந்து திரும்பிப் பார்த்தேனா அங்க ஒரு நாய் என்ன கடிக்க வந்துகிட்டு இருந்துச்சிமா.

அந்த உள்ளுணர்வு என்பது என்ன. அதுவும் ஒரு சக்திதான். சக்தி என்பது, பரவலாக, பிரிவாக, ரொம்ப தொன்மையாக, ரொம்ப ஆழமாக, உடலிலே உயிரிலே உள்ளத்திலே பாசத்திலே, காதலிலே எல்லாத்திலும் கலந்து இருக்கிறது. அதனால சக்தியின் மேல் பக்தி, பக்திக்கு நாம் ஆளாகிறோம். நம்பளுடைய வசதிப் படி, எந்த மதத்தை சார்ந்தவர்களாகவும் இருக்கலாம்., எந்த மதத்தையும் சாராதவராகவும் இருக்கலாம். சக்தியின் மேல் பக்தி என்பதுதான். அது கடவுள் பக்தியாக இருக்கலாம். பிரேயர்ல பக்தியாக இருக்கலாம்.

முழு நாஸ்திகராக இருந்து கடவுள் இல்லை, கடவுள் இல்லை, கடவுள் இல்லவே இல்லை என்று சொல்பவர்கள் தங்கள் கொள்கையின் மீது வைத்துள்ள பிடிப்பின் வடிவம் அந்த சக்தியின் வெளிப்பாடுதான். அவங்களுக்கு அங்க பிடிப்பு. அவங்களுக்கும் உள்ளுணர்வு இருக்கும். அவங்களுக்கும் இது எல்லாமே நடக்கும். அவங்க பாக்குற வடிவம் வேற. ஏன்னா வடிவம் பாக்குறாங்க, இல்லாத வடிவம், இல்லை, இல்லை, இல்லைவே ‘இல்லை’, அப்படி என்ற சொல்லுக்கு இன்னொரு சுருக்கம் ‘அல்ல’.

எங்க வந்து எங்க போகுது பார்த்திங்களா, ‘இல்ல’, ‘அல்ல’, இஸ்லாமிய மார்க்கத்தில் பல பேர் அறிஞர்கள் பல நூறு வருடங்களாக, இதைப் பற்றி விவாதித்துக் கொண்டு இருக்கிறார்கள் என்பது இஸ்லாமிய மார்க்கத்தில் உள்ள பெரிய அறிஞர்களுக்குத் தெரியும். லாகிலாகி இல்லல்லா என்று சொல்லும் போது, அவர்கள் ஆச்சரியப் படுகிறார்கள். இல்லை கடவுள். இல்லாதவனே கடவுள். இல்லை என்று ஆரம்பிக்கிறதே, முதல் வார்த்தையே ‘இல்லை’ என்றுதான் ஆரம்பிக்கிறதே. என்று என்னிடம் இஸ்லாமிய பேரறிஞர் சொல்லி இதை பற்றி பேசிக்கொண்டு இருக்கிறோம். என்று சொன்னார்.

நான் சொன்னேன். ‘அல்ல’ என்ற வார்த்தை தமிழில் இல்லை என்று தான் இருக்கிறது. அப்ப தத்துவங்கள் சித்தாந்தங்கள் எங்கு போய் முட்டி மோதுகிறது. என்று சொல்லும் போது, இந்துத்துவா என்று சொல்லப்படுகின்ற இந்த இந்து தத்துவத்தில் மோதி, நாஸ்திகமும், ஆஸ்திகமும் ஒன்று என்று நாங்கள் முடித்து வைத்து 4,500 வருடங்களுக்கு முன்னரே, கடவுள் இல்லை என்று மறுத்த நசிகேந்திர என்பவர்களை. ரிஷியாக முனிவராக வைத்து, பூஜை செய்யும் போது, பல நூற்றாண்டுகள் கழித்து, பேரிடி தத்துவம், நுண் துகள் அறிவியல். அதிலேயும் இதையே கொண்டு வந்து சொல்ல வருகிறார்கள். சக்திதான் மெய்.

அந்த சக்தியோட வெளிப்பாடு பல விதங்களில் இருக்கு. எண்ணங்களிலே சக்தி இருக்கிறது. அதனால்தான் பிரேயர்னால சரியாகிறது. பிரேயர்னால சரியாகுதுனு நான் சொல்லமாட்டேன். இன்னைக்கு உடம்பு சரியில்லைன்னா எனக்கு தெரிந்த எத்தனையோ கிறிஸ்துவர்கள். சர்ச் பிரேயர் பண்ணனும்னு சொல்லுறாங்க. அதை நான் மதிக்கிறேன். எனக்கு சரியாகணும்னு நம்புறேன் நானு. ஆனால் நான் இந்து. இதுல நம்பிக்கை இல்லை என்று சொல்லமாட்டேன். மனப்பூர்வமாக, நம்புகிறேன். அவங்க நல்லா பிரேயர் பண்ணாலும் எனக்கு சரியாகும். ஏன்னா எண்ணங்களில் சக்தி இருக்கிறது.

சிந்தனையில் சக்தி இருக்கிறது. அன்பிலே சக்தி இருக்கிறது. பாசத்தில் சக்தி இருக்கிறது. உயிரிலே சக்தி இருக்கிறது. உடலிலே சக்தி இருக்கிறது. தாவரங்களில் இருக்கிறது. வெறும் மண்ணு, சக்தியை உள்ள புதைச்சு வச்சிருக்கிறது. தோண்டுங்க, ஒண்ணு போடுங்க. கிழங்குகளை மூடி வையுங்க. வெந்து போய் இருக்கும். சூரிய சக்தியும், புவி ஈர்ப்பு சக்தியும் ஒண்ணு சேர்ந்து இருக்கிறது. சிலது டிபைன் பண்ண முடியும் சிலது டிபைன் பண்ண முடியலன்னு சொல்லலாம். அடுத்து வருவாங்க டிபைன் பண்ணுவாங்க. ஏற்கனவே டிபைன் பண்ணி வச்சிக்கிட்டு இருக்குறவங்கள மறந்திருப்போம். ஏற்கனவே பண்ணி வச்சிருப்பாங்க. அந்த கருத்துக்கள் காலகட்டத்தில் மறந்து போய் இருக்கும். இல்ல மறைக்கப் பட்டிருக்கலாம். அந்த சக்தியை நோக்கி பக்தி. பக்தி என்பது கொள்கைப் பிடிப்பு, அதனால் நாஸ்திகர்களுக்கு அவர்களுடைய இயக்கத்தின் மேல், அவர்களுடைய நம்பிக்கையின் மேல், கடவுள் இல்லை என்ற நம்பிக்கையின் மேல் உள்ள கொள்கைப் பிடிப்பு அதுவும் கூட ஒரு சக்திதான்.

அன்பு, அது கூட ஒரு சக்தி தான். பக்தி கொள்கிறோம்.சக்தியின் மேல் பக்தி கொள்கிறோம். அன்னையின் வடிவாகப் பார்க்கும் போது, அன்னையின் மேல், அப்பா மேல், பிள்ளைகள் மேல், எல்லாவற்றின் மீது நாம் வைக்க கூடிய அந்த பக்தி அன்பு, சக்தியோடு நமக்கு இருக்கிற நெருக்கத்தை காண்பிக்கிறது.

காரைக்கால் அம்மையார் என்ன சொல்லுறாங்கனு அப்படினு பாருங்க, அந்த அம்மாவிற்கு சிவபெருமான் மீது காதல். பக்தி, நான் பிறந்தேன், மொழி பயின்றேன். அதன் பின்னே எனக்கு காதல் உன்மேலே, அதான் வந்துச்சு அதுக்கு அப்புறம் அந்த அம்மாவிற்கு எதுவும் வரல, பிறந்தாங்க மொழி பயின்றாங்க, மொழி என்பது தேவை, அந்த சிந்தனைகளை சொல்வதற்கு, அதுக்கு அப்புறம் அவங்களுக்கு வந்தது, சிவபெருமான் மேல வந்த காதல், அதனால அவங்க என்ன சொல்லுறாங்க?

எப்போது எனது இடரை தீர்க்கப் போகிறாய்? அவங்க என்ன கடனா அடைப்பதற்கு இடரைத் தீர்க்க, என்று கேட்கிறார். அன்று ஒரு நாள் சொன்ன அந்த முக்தி, அந்த முக்தி எதுல இருந்து வருது? பக்தியின் மூலமாக வருகிறது. பக்தி எதன் மேல் இருக்கிறது? சக்தியின் மேல் இருக்கிறது. அந்த சக்தி எதிலே இருக்கிறது? சிவத்திலே இருக்கிறது. எனவே இந்த அம்மா ரூட்டுக்கு போய்ட்டாங்க. நேரா சிவபெருமான் கிட்டேயே, நான் வந்து காதல் வச்சிட்டேன், எனது இடரை தீர்த்து விடு என்று. எனவே, சக்தியின் மேல் பக்தி கொண்டு, இருப்பவர்களுக்கு, சித்தி கிடைக்கிறது. அது என்ன சித்தி? ‘நினைத்ததை நடத்தியே முடிப்பவன்’ என்று ஒரு சினிமாவுல பாடுனாங்க. அந்த சினிமாவுக்கும் எனக்கும் சம்மந்தம்   இல்ல.

‘எண்ணியது எண்ணியாங்கு எய்துவது எண்ணியவர் திண்ணியராக பெறின்’ என்று திருவள்ளுவர் எழுதினார். அதனால எண்ணியவற்றை, எப்படி எண்ணினோமோ அப்படி பெற கூடியது தான் சித்தி.

சக்தியின் மீது பக்தி வைத்து சித்தியை அடையும் போது, வெற்றி கிடைத்து விடுகிறது. அந்த வெற்றி பல விதங்களிலே ஒரு அறிவியலாளனுக்கு கண்டுபிடிப்பாக மாறுகிறது. ஒரு கதாசிரியனுக்கு புத்தகமாக மாறி விடுகிறது. ஒரு பாடல் எழுதுறவனுக்கு பாடலாக வருகிறது. ஒரு ஓவியனுக்கு ஓவியமாக வெளிப்படுகிறது. மிகச் சிறந்த ஓவியமாக. என அவன் சக்தி, பக்தி, எல்லாத்தையும் வைத்து சித்தியை கொண்டுவந்துட்டான், அவனுடைய எண்ணத்தின் கட்டுப்பாட்டுல அந்த ஓவியம் எப்படி அமையணும், எந்த கலர் போடணும், எந்த சைடு போடணும் அப்படி வந்து உக்காந்துக்கிறது.

எல்லாமே வெற்றிதான், ஓவியன் ஒரு நல்ல ஓவியத்தை வரைந்து முடிக்கும் போது, வெற்றிதான், ஒரு அரசியல்வாதி தன்னுடைய கட்சியை கட்டி காப்பாற்றி ஆட்சியை பிடிக்கும் போது வெற்றிதான். அவர்களும் வச்சிருப்பது அதே தான். சக்தி, பக்தி, சித்தி. எனவே இதை மிக அறிவியல் பூர்வமாக, சாதாரணமாக இல்லாமல், ரொம்ப எளிமையாக, அனைவருக்கும் புரியும் வகையிலே, காலங் காலமாக, இன்னைக்கு நேற்று அல்ல. எப்ப என்பதே சொல்ல முடியாது. காலங் காலமாக கொண்டு வந்து வைத்திருக்க கூடிய ஒரே மதம் இந்து மதம். எனவே, சக்தியை நம்பியே தீரவேண்டும். பக்தி கொண்டே தீர வேண்டும், சித்தி வந்தே தீரும், அதனால் வெற்றி கிடைத்தே தீரும். நன்றி வணக்கம்.

Original Audio posted in WhatsApp Group ‘Science is Hinduism’ on 04 June 2018. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes:

<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>