ஒரு நூறு ஆண்டுகளுக்கு முன்னாடி, இரண்டாவது உலகப் போருக்கு முன்னாடியும், கம்யூனிசம், சோசியலிசம், என்பது ரொம்பப் பெரிய சொற்களாக இருந்தது. உலகம் முழுவதும் கம்யூனிசம் கொண்டு வரணும் என்று சொல்லி ரஷ்யாவை உருவாக்கி, அதுதான் சோவியத் யூனியன், ரஷியானா தனி கண்ட்ரி, அது பெருசா வளர்ந்து வந்து, உலகில் சில கேபிடலிசம், அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு எதிரியாகப் பார்த்து, கோல்ட் வார் என்று சொல்ல கூடிய உலகம் இரண்டாகப் பிரிந்து கிடந்தது.

கம்யூனிசத்தப் பற்றி, உலகம் முழுவதும் ரொம்ப புகழ்ந்து பேசிட்டு இங்கேயே வரணும், இப்போவே வரணும், என்று எல்லாப் பக்கமும் பேசிக்கிட்டு இருந்தாங்க, கியூபால வந்துச்சி, வெனிசுலாவுல வந்துச்சி, கம்யூனிஸ்ட் கட்சிகள் ஒருகாலத்தில அமெரிக்காவுல கூட பவர்புல்லா இருந்துச்சி, அந்த கம்யூனிஸ்ட் கட்சி இப்ப கூட வந்து, யு.கே.ல ஒரு பவர் புல் கட்சியாக இருந்து சில சமயம் ஆட்சியை பிடிக்கிறது.

இந்த கம்யூனிசம், சோசியலிசம் என்பது பெரும்பாலும் இந்து தர்மத்திற்கு எதிராக நடந்து கொள்வதுபோல் காட்டிக் கொள்வார்கள். உண்மை என்னவென்றால் அவர்கள் இந்து தர்மத்தையே கடைப் பிடிக்கிறார்கள். அதை கடைப்பிடிப்பதாக சொல்லி, கடை பிடிக்கல. அதனால அவர்கள் தோற்றார்கள் என்பது இன்னொரு விஷயம், கம்யூனிசம் அப்படினு பார்த்தீங்கன்னா, கம்யூன், ஒரு மனித இனத்தை கம்யூன்களா பிரித்து, ஒரு கம்யூனு வந்து, சம்பாதிக்கிறது எல்லாம் தனக்குள்ளேயே பகிர்ந்துக்கணும், என்ற அடிப்படையில் தான் கம்யூனிசம் வந்துச்சி. எனவே, அதுல தொழிலாளர்கள் இருப்பாங்க, விவசாயிகள் இருப்பாங்க, கலைஞர்கள் இருப்பாங்க. எல்லாமே கம்யூன், கம்யூனிஸ்ட் என்பது குரூப் ஆப் பீப்பிள் லிவிங் டுகெதர். மக்கள் ஒன்றிணைந்து ஒரு குழுவாகி, அந்த குழுக்குள்ளேயே, வேலை, பொறுப்பு, உணவு, வளர்ச்சி ஆகியவற்றை பகிர்ந்து கொள்வது. அதுதான் கம்யூனிசம். அதுதான் இந்து தர்மம் கூட. அவ்வளவுதான்.

 அதல வந்து உழைப்பார்கள். உழைப்பினுடைய பலனை அவங்களே பிரிந்து எடுத்து கொள்வாங்க. அதனால அவங்க என்ன சொல்ல வந்தாங்க அப்படினா. உழைப்பாளிகளுக்கு தகுதியான ஊதியம் கிடைக்கும். ஒரு தனிப்பட்ட நபருகிட்ட போய் செல்வம் சேராது. செல்வம் எல்லாப்பக்கமும் பரந்து விரிந்து கிடைக்கும். ஈக்குவலா அப்படிண்னு. உண்மையா என்ன நடந்துச்சின்னு வந்து, பிரேக் டவுன் ஆன பஸ்ஸை எல்லாரும் சேர்ந்து தள்ளுவது போலத் தான். எல்லாரும் கையை வச்சாங்கலே தவிர எல்லாரும் என்ன நினைச்சாங்கன்னா, அடுத்தவன் தள்ளட்டும்னு நினைச்சாங்க. அதனால பஸ் முன்னேற வில்லை. அதே மாதிரி எல்லாரும் உழைக்கலாம். எல்லாரும் ஒண்ணு சேர்த்துக்கலாம். என்று வரும் போது யாரும் சரியா உழைக்கல. கடைசியா என்ன ஆச்சு? கம்யூனிசம் வந்து, ஒரு 60 வருஷம் கழிச்சி சாப்பாட்டுக்கு சிங்கி அடிக்க ஆரம்பிச்சிட்டாங்க. கடைசி நிமிசத்துல, மிக்கைல் கொர்பச்சோவ், சோவியத் யூனியன்ல, மேலை நாடுகளோடு கெஞ்சினாரு, கொஞ்சம் கோதுமை கொடுங்க தீர்ந்து போச்சி, ப்ரெட் பண்ண வழி இல்ல மக்களுக்கு என்று, அப்ப கோதுமையை கொடுத்திருந்தாலே அந்த நாடு சர்வைவ் ஆகியிருக்கும் என்ற கருத்து உண்டு.

அமெரிக்காவுல அப்ப ‘கொடுக்க மாட்டோம்’, அப்படிண்னாங்க. அதுக்கு அப்புறம் சிதறி சின்னாபின்ன மாயிடுச்சி. இந்து தர்மம் இதை எப்படிப் பார்க்கிறது? இந்து தர்மமும் அதே கம்யூனிசம் தான். ஒவ்வொரு வில்லேஜும் கம்யூன், ஒவ்வொரு வில்லேஜுக்கும் அதிகாரம் கொடுக்குறாங்க. ஒவ்வொரு வில்லேஜும் போடும் தீர்மானங்கள், அரசனையே கட்டுபடுத்தும். விதமாக இருக்கிறது அந்த கிராமத்தை பொறுத்தவரை, நாட்டுக்குத் தீர்மானம் போட்டு அவங்க அனுப்ப முடியாது. ஆனால், அரசனுக்கு உள்ள அதிகாரத்தை டிவைட் பண்ணிடறாங்க. இதெல்லாம் உன்னோடதுனு அப்படிண்னு. எனவே கம்யூனிசம் அப்படினு சொல்லப்படக் கூடிய, ஒரு கம்யூன்ல இருக்குற எல்லாரும் ஒண்ணு சேர்ந்து உழைச்சு, கிடைக்க கூடிய வருவாயை பங்கு போட்டு கொள்கிறது என்பதை, இந்து தர்மத்துல இந்திய தர்மத்துல, இந்திய நடைமுறையில் கிராமநிர்வாகம் என்ற அமைப்புல இயல்பாகவே, இருந்துச்சி, இதுல வந்து புதுசா ஒரு வார்த்தையைக் கொண்டு வரவேண்டியது இல்லை.

அடுத்த வார்த்தை சோசியலிசம், சோசியலிசம் என்னும் போது இவங்க என்னத்தக் குறிக்குறாங்கன்னா, சொசைடியில எல்லாரும் ஈக்குவல். ஆணுக்கும், பெண்ணுக்கும் சமம். கம்யூனிசம் பிரிந்து, ஆனால் இணைந்து இருக்கிற கம்யூன். சோசியலிசம் என்பது ‘எல்லாம் கம்யூனும் ஈக்குவல்’ அப்படினு வச்சிக்கலாம்.

இந்த கம்யூன் நிறைய சம்பாதிச்சு, இவங்க நல்லா இருக்கிறாங்க. இன்னொரு கம்யூன் வந்து அவங்க இடம் சரியில்ல, விவசாயம் எல்லாம் பண்ண முடியல. அந்த கம்யூன் கொஞ்சம் டல்லா இருக்கிறாங்கனா, இந்த கம்யூன் அவங்களுக்கு கொடுக்கணும். ஆக ‘மொத்த நாட்டிலும் ஈக்குவாலடி நிலவணும்!’ அப்படிண்னு, சொல்வது ஒரு சோசியலிச, சித்தாந்தமாக இருக்கிறது.

ஒரு பிராட்டிகலான அர்த்தத்தை பார்த்துக்கிட்டோம்னா, காரல் மார்க்ஸ், லெனினு, எமெர்சன், இவர்களுடைய, ரைட்டிங்ஸை பற்றி மணிக்கணக்கில் பேசுவாங்க சில பேரு. என்ன புதிதா இருக்கு? இங்கேயே ஆல்ரெடி இருந்துகிட்டு தானே இருக்கு? கம்யூனிசம் என்பது அந்த அந்த வில்லேஜிகளுக்குள்ள உழைப்பை பகிர்ந்துகிடுறது. அந்த வில்லேஜி ஈக்குவலா இருக்கணும்.

சோசியலியம் என்பது. நல்ல சுபிக்ஷமான வில்லேஜஸ் கொஞ்சம் பூவரான வில்லேஜசை சப்போட் பண்ணி ஓவரால வந்திருக்கணும். இந்தியத் திரு நாட்டிலே இந்து தர்மத்திலே, இது ஏற்கனவே சொல்லபட்டதாகத் தான் இருந்தது. அதோட ஒரு பகுதியாகத்தான், ஈகையை பற்றி திரும்ப திரும்ப சொன்னாங்க. உன்கிட்ட ஒரு பொருள் இருந்தா, பொருளுக்கும் மதிப்பில்ல உனக்கும் மதிப்பில்ல. அத நீ அடுத்தவங்களுக்கு கொடுக்கலன. அடுத்தவங்களுக்கு கொடுக்கும் போது, வட்டியை வாங்காம உதவியாகக் கொடு. அப்படி வந்து உதவியை வாங்கிக் கொண்டவர்கள். நீ ரொம்ப தாராளமா இருக்கும் போது, எவன் கிட்ட உதவியை வாங்கினியோ அவன் கிட்ட கொடுக்க தேவை இல்ல, இன்னொருத்தன் கஷ்டபடுறவனுக்கு கொடு. எப்படி பட்ட தத்துவார்த்த சித்தாந்தங்கள் பாருங்க.

எங்கே வறுமை இருக்கும், எங்க உயர்வு தாழ்வு இருக்கும். செல்வம் வந்து தானா பரவலாகிக் கொண்டே இருக்கும். கொஞ்சம் நிறைய செல்வத்தை வச்சிகிட்டு கொடுத்தவர்களுக்கு புகழ் பரவும், நிறைய செல்வத்தை வச்சிக்கிட்டு சும்மா ஒக்காந்து கிட்டு இருக்குறவங்களுக்கு புகழ் வராது, அதனால தான், உடலுக்கு ஊதியமாக நாம நல்ல நல்ல உணவுகளை உண்ணலாம். அந்த உடலுக்கு உள்ளே இருக்கக் கூடிய உயிருக்கு. ஊதியமாக என்னத்த கொடுக்க முடியும். புகழைத்தான் கொடுக்க முடியும். அந்த புகழ் எதனால் வருகிறது. நற்செயல்களால், ஈகையினால் வருகிறது. அந்த நற்செயல் ஈகை என்பது. எல்லாருக்கும் பிரிச்சிக் கொடுக்குறதுதான்.

தான் மட்டும் வச்சிகிடாம, பிரித்து கொடுக்கும் தர்மம் இருந்தா, இந்த கம்யூனிசம், சோசியலிசம், ஒண்ணுமே தேவையில்லை. எல்லாமே தர்ம நெறிகளை ஒன்றாக அடுக்கி சாதாரணமாக தூக்கி போட்டுட்டோம். தங்கம் அபூர்வமாக இருக்கும் போது அத ஒரு சின்ன ஜெவெல்லா எடுத்து மாட்டிக்கிறாங்க. தங்கம் கொட்டி கிடக்கும் போது, அது எல்லாப் பாத்திரங்களிலும் இருக்கும் அப்படி என்ற மாதிரி, தர்ம நெறிகள் கம்யூனிஸ்ட் என்பது ஒரு தர்ம நெறிதான், சோசியலிசம் என்பதும் ஒரு தர்ம நெறிதான். எனவே, தர்மநெறிகள் கொட்டிக்கிடக்கும் இந்த பூமியிலே, கம்யூனிஸமும், சோசியலிசமும் போன்ற தனிப் பட்ட தத்துவங்கள் தேவைபட்டதே இல்லை.

அதனால தான் இங்கே பெரிய புரட்சியே வெடிக்கலே, பெரிய புரட்சி வெடிக்கிற அளவுக்கு ஏழை ஜனங்களோ, தொழிலாளர்களோ நசுக்கப்படவில்லை, அபூர்வமா நடக்கும். ஏன்னா, மேலை நாட்டு மோகம், அங்க நடந்து, இங்க நடந்து எல்லாத்தையும் வச்சி, கம்யூனிசம், சோசியலிசம், அப்படின்ற கருத்துக்கள், அதோட மூலக் கருத்துக்கள், அது உருவான விதம், அது எதற்க்காக செல்வத்தை பகிர்ந்து கொடுக்கிறது. என்ற கருத்துக்களை நாம, ஆராய்ந்து பார்த்தோம் என்றால், இயல்பாகவே, இந்து தர்மத்துலே இந்து நெறியிலே, அதை, பின்னி பிணைந்து, வெளியே தெரியாம நரம்புகள் போல இருக்கின்றன. எனவே கம்யூனிசம், சோசியலிசம், என்பது, இந்து தர்ம நெறிகளில் உள்ளே இருக்கக்கூடிய, ஆக்கக் கூறுகள் என்று கூறி விடை பெறுகிறேன். நன்றி வணக்கம்.

Original Audio posted in WhatsApp Group ‘Science is Hinduism’ on 01 June 2018. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes:

<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>