விலங்குகள் பாதுகாப்பு பற்றி இப்ப நிறைய பேசிக்குறாங்க. எல்லா உயிரினங்களையும், பாதுகாக்கணும், உயிர்இனங்கள் அழிந்துகிட்டு இருக்கு, அது பண்ணனும், இது பண்ணனும்னு சினிமாக்கள்ல, விலங்குகள் காட்சி வந்தால் அவை எந்த வித துன்புறுத்தலுக்கு ஆளாக வில்லை என்ற புரூப் கொடுக்கணும்னு, இதுயெல்லாம் வச்சிருக்குறாங்க. இது எல்லாம் இப்பதான் வந்திருக்குது. அதை பன்னெடுங் காலமாக செயல் படுத்தி வந்தது நம்ப தான்.
அதனாலதான் விலங்குகளை மனிதர்களுக்கு இணையாக வைத்து. சில சமயங்களில் தெய்வங்களுக்கு இணையாக வைத்து சில விஷயங்களில் தெய்வங்களுக்கு வாகனமாக வச்சி எந்த ஒரு விலங்கையும் துன்புறுத்தக் கூடாது, பயன்படுத்தலாம் என்ற உயரிய நெறியினை, நாங்க வைச்சோம். அதனால தான், நம்பளோடு அண்டி பழகி பழகக்கூடிய உயிரினம், நம்ம நாய் அதை பைரவர் என்று காவல் தெய்வமாக வைத்தோம்.
பசுவை தாய்க்கு இணையாக கோமாதா எங்கள் குலமாதா என்று வைத்து, ரொம்ப உயரிய இடத்தைக் கொடுத்தோம். அதுக்கு அப்புறம் காளைமாடுகளுக்கு, என்ன பண்ணோம்? அதுவும் நம்ப கூடவே இருந்து ஒழச்சுகிட்டு இருக்கு. கண்டபடி அடித்து கொள்ளக் கூடாது என்பதற்காக, ரொம்ப முக்கியமான கடவுள் சிவபெருமான், அவருடைய வாகனம் நந்தி வாகனம் என்று வச்சி, நந்தி தேவர் என்று வைச்சோம், அதற்கு தனியான பூஜைகள் எல்லாம், செய்து கும்பிடுறோம்.
அவசரத்துக்கு சிவபெருமானைப் போய் கும்பிட முடியிலனா நந்தியைக் கும்பிட்டுட்டு வந்திடலாம். சிவபெருமான் கிட்ட டைரைக்டா சொல்ல முடியலைனா கூட நந்தி கிட்ட சொல்லிடலாம். அந்த ஆள் போய் சொல்லிடுவாரு. இது எல்லாம் ரொம்ப இன்ட்ரெஸ்டிங்க கதைகளுள வச்சி, கடவுள்களுக்கு இணையாக, இவைகளை பற்றி துதிகளை வைச்சோம்.
அதுதான் நந்தி. அதைப் பற்றி பாடுறாங்க. எப்படி பாருங்க, நந்தனார் வந்து சாமி கும்பிட வராரு அப்படின்ற உடனே, சாதி பாகுபாடு இல்லாமல். தரிசனம் கொடுக்கணும்னு ஒதுங்கி நின்னிடுச்சே, போய்ப் பார்க்கட்டும் சாமியை கும்பிடட்டும், அந்த மாதிரி ஆதியாய் இருக்கிறதுதான்னு சொல்லுறாங்க, ஒரு நந்தியைப் பற்றியும் கூட, பாடல் எப்படி பாருங்க.
மாலைகளை உனக்கு போடுறோம். குழந்தை பாக்கியம், எங்களுக்கு கொடுப்பா. வேலை வாய்ப்பு வேண்டும்னா எங்களுக்கு வேலை வாய்ப்பினை கொடுப்பா, விதியையே மாற்றி வைப்பா, எப்படி நந்தியை பற்றி பாடி நம்ப குழந்தைங்ககிட்ட ஒரு பயபக்தியை உருவாக்கும் போது, விலங்குகள் எப்படி துன்புறுத்தப் படும்? இந்திய சமுதாயத்திலே, நடக்கவே நடக்காது. எனவே, எந்த ஒரு விசயத்திலும், அது விலங்குகளை பாதுக்கப்பதாக இருக்கட்டும், விலங்கோடு நட்போடு அன்போடு இருப்பதாக இருக்கட்டும். நாம் முன்னேறி நிற்கிறோம் பல வருடங்களுக்கு முன்னதாகவே, இதை எல்லாம் உணர்ந்து செயல்படுவது நாம். அறிவியலே இந்து மதம் என்று கூறி விடைபெறுகிறேன்.
Original Audio posted in WhatsApp Group ‘Science is Hinduism’ on 30 May 2018.