கல்வி, செல்வம், வீரம். வாழ்வியல் தத்துவங்களில் இந்த மூன்றும் ரொம்ப ரொம்ப முக்கியமா இருக்கிறது. மூணுல ஒண்ணும் இல்லனாலும் ஒண்ணும் சரிப்படாது. அதனால இந்த மூணுமே ஒன்றுக்கு ஒன்று இணையானது. இது பெருசு அது பெருசு, இதை விட அது பெருசு, என்று சொல்லமுடியாது.

எனவே இந்த கல்விக்கு அடையாளமாக, சரஸ்வதி தேவியை, அந்த அம்மாவுடைய வீட்டுக்காரர் பிரம்மாவை வைச்சோம். செல்வத்திற்கு அடையாளமாக லட்சுமி தேவியை, அந்தம்மா வீட்டுக்காரருக்கு நாராயணவை வைச்சோம். வீரத்திற்கு அடையாளமாக, பார்வதியை, ஈஸ்வரியை, அந்தம்மா வீட்டுக்காரரூ, சிவபெருமானை வைச்சோம்.

முப்பெரும் தேவியர் முப்பெரும் கடவுள்கள், ஏகன், அனேகன் அப்படினு சொல்லும் போது, கடவுள் ஒருவரே! பல வடிவங்களில் பார்க்கிறோம். அப்படினு சொல்லி, முப்பத்து முக்கோடி தேவாதி தேவர்கள் என்று சிறப்பான தேவர்கள் இருப்பதாக காண்பித்து கொண்டால் கூட, இந்த மூணையும் மெயினா வச்சிட்டோம்.

மூணையும் மெயினா வச்சி இண்டிபெண்டண்ட்டையும் காமிச்சிக்கிறோம். சில சாரார் வந்து சிவனைத்தான் மெயின் என்று சொல்லுறாங்க, சில சாரார் நாராயனைத்தான் மெயின் என்று சொல்லுறாங்க. சில சாரார் வந்து பிரம்மாதான், அவர் தான் ரொம்ப மெயின்னு அவர்தான் படைக்கிறார். என்று சொல்லுறாங்க. எப்படியாவது வச்சிக்கிக்கோங்க. மூணுமே மெயின்னு, மூணுமே ஈகுவல்.

இந்த சரஸ்வதி சபதம் படம் வந்திருக்குது. கல்வியா, செல்வமா, வீரமா? அன்னையா, தந்தையா, தெய்வமா? என்று பாட்டு எல்லாம் வரும். அந்த படத்தை பாத்துக்கிடலாம். ரொம்ப நல்லாத்தான் இருக்கும். பழைய பிரிண்ட், புதிய பிரிண்ட் எல்லாமே இருக்கு.

வாழ்வியல் தத்துவங்களில் கல்வியும், செல்வமும், வீரமும், மிக மிக முக்கியமானதாக இருக்கிறது. தனி நபருக்கு, குடும்பத்திற்கு, தேவைப் படுகிறது. கிராமத்திற்கு தேவைப்படுது, நகரத்திற்கு தேவைப்படுது. நாட்டுக்குத் தேவைப்படுது. அகில உலகத்திற்கும் தேவைப்படுது. இந்த மூணும் சுபிக்ஷமா நல்லா குறை வில்லாமல் இருக்க, எல்லா சமுதாயமும் வெற்றி அடைந்து சந்தோஷமாக, பெரிய சண்டை சச்சரவுகள் இல்லாமல், விட்டு கொடுத்து நல்லா ஜம்முனு இருக்கிறாங்க.

எது குறைபாடோடு இருக்கோ. அந்த சமூகத்தில் குழப்பம் நீடிக்கிறது. சண்டை வருது. தனக்குள்ளே போடுறாங்க, மற்றவர்களோடு போடுறாங்க, அமைதி இழந்து காணப்படுகிறது. எதுவும் மிகுந்தும் இருக்கக் கூடாது. கம்மியாகவும் இருக்கக் கூடாது. வீரம் அப்படினு பார்த்தீங்கன்னா, இன்னைக்கு இருக்கும் ரவுடி கூட ஒரு வீரன்தான். அவன் வந்து சத்தம் போட்டு, ‘ஆய்! நான் இதை பன்னியே தீருவேன். இதையெல்லாம் பண்ண கூடாது’னு சொல்லுறன் என்றால் அதுவும் ஒரு வீரத்தோடு வெளிப்பாடுதான்.

ரவுடிசம் எந்த இடத்தில கல்வி இல்லாமல், செல்வம் இல்லாமல் வீரம் தனித்து நிற்கிறதோ, அவன் ரவுடியாகி விடுகிறான். எனவே அவன் தனிமைபடுத்த படுகிறான். அவன் கிட்ட வீரம் மட்டும் தான் இருக்கு. கல்வி இருந்தால் அவனுடைய வீரத்தை பேலன்ஸ் பண்ணி அவனை பொலைட்டா பேச வச்சிருக்கும். செல்வம் இருந்திருந்தால் அவன் பத்துபேருக்கேட்ட போய் மிரட்டி பொருள்களை பறிக்க மாட்டான். தனிப்பட்ட வீரம் என்பது ரவுடி தனமாகி விடுகிறது. அதனால என்கவுண்டர் கூட பண்ணிடலாம் என்று சொல்லுறாங்க. வாழ தகுதி இல்லாதவர்கள். அவர்கள்கிட்ட வெறும் வீரம் மட்டும் தான் இருக்கிறது. போலீஸ் டிபார்ட்மெண்ட் லிஸ்ட் எடுத்து என்கவுண்டர் போட்டு தள்ளி விடுறது, வெறும் ரவுடி தனமாக இருந்தால்.

வெறும் கல்வி மட்டும் இருக்குறது? அவங்க கிட்ட போதுமான செல்வம் இருக்குறது இல்ல. தரித்திரம் தாண்டவம் ஆட ஆரம்பிச்சிடுறது. அவங்களால எதையும் எதிர்த்து நிக்க முடியாதுன்னா, வீரத்தோடு துணை கிடையாது. அதனால யாருக்கும் பயன்படாத கல்வியாக மாறிவிடுகிறது. அங்கேயும் வந்து மதிப்பில்லாமல் போய் விடுகிறது. நீ இவ்வளவு புத்திசாலியா இருந்தால் என்ன, உருப்படாதவன், தனக்கும் உதவாதவன், அடுத்தவனுக்கு உதவாதவன் அப்படினு ஆயிடுது,

செல்வம். எல்லாத்துக்கும், செல்வம் வேண்டும் என்பதற்காக சில பேரிடம் குவிஞ்சி கிடக்கிறது. யாருக்கும் உதவி பண்ணுறது இல்ல. அப்ப என்ன ஆயிடுறாங்க? ‘ஈயாத லோபி’ என பெயர் எடுத்து, ஈயாத லோபி ஆகி விடுகிறான். அவனுக்கும் மதிப்பில்ல. அவனது செல்வத்துக்கும் மதிப்பில்ல. அப்ப மூணுமே பேலன்ஸ் ஆக வேண்டியுள்ளது.

மூணுமே பேலன்ஸ் ஆகும் போது, ஒரு வெற்றி அடைந்த மனிதன். அவனிடம் வீரம் இருக்கிறது எந்த இடத்தில மோதவேண்டுமோ. அந்த இடத்தில மோதுவான், எல்லா இடத்திலும் போய் மோதி மூக்கை உடைத்து வரமாட்டான். அவன் கிட்ட செல்வம் இருக்கு. எல்லாருக்கும் குடுத்து உதவுவான். எனவே அந்த செல்வத்திற்கு சிறப்பு வந்து சேருகிறது. அவனிடத்திலே கல்வி ஞானமும் இருக்கிறது. எப்படி பொருளை சம்பாதிக்கணும், எப்படி பொருளை செலவழிக்கணும், யாருக்கு உதவணும், யாரை பார்த்து ஒதுங்கி போகணும். அஞ்சுதல் அஞ்சாமை, பேதமை. புத்திசாலிதனம் இல்லை. இதனால் இந்த இடத்தில பயந்து போய் ஒதுங்கிப் போகணும்னா ஒதுங்கிப் போகணும். அப்படி என்ற வாழ்வியல் தத்துவங்களை  உருவாக்கிக் கொண்டோம்.

இதை அடிப்படையாகக் கொண்டு, முப்பெரும் கடவுள்களை உருவாக்கிக் கொண்டோம். அந்த முப்பெரும் கடவுள்களுக்கு விழா எடுத்தோம். ஆண் கடவுளுக்கு விழா எடுத்தோம், பெண் கடவுளுக்கும் விழா எடுத்தோம் ஏனென்றால், ஆண், பெண் பாகுபாடு இல்லாமல் அனைவரும் சமம் என்ற கருத்தை, காலங்காலமாக சொல்லி வருவது உயரிய இந்து சமுதாயம். அதுவேதான், மோகினி அவதாரம் என்று நாராயணன் பெண்ணாக அவதாரம் எடுத்ததாக காண்பிக்கிறோம். அர்த்தநாரிஸ்வரராக, ஆண் பாதி பெண் பாதியாக ஈஸ்வரனை காண்பிக்கிறோம். ஆணும் பெண்ணும் சமம் என்பது மட்டும் அல்ல. அவர்கள் ஒன்றை ஒன்று சார்ந்தவர்கள். இது இல்லாமல் அதுவும் இல்ல. அது இல்லாமல் இதுவும் இல்ல. சக்தி இல்லையேல் சிவம் இல்லை. சிவம் இல்லையேல் சக்தி இல்லை. சக்தி இல்லையேல் சிவம் என்பது சவம் ஆகி விடுகிறது.

ஆற்றல். லட்சுமி தேவியைப் பிரிந்து வாழும் போது, நாராயணன் தரித்திர நாராயனாகி விடுகிறான். நம்பளைபோல நடத்த முடியாத ஜீவனாகி விடுகிறான். சரஸ்வதி தேவியை பிரிந்து வாழும் போது, பிரம்மா ஆனவன், பித்துக்குளியாக, பைத்தியம் பிடித்தவனாக, மாறி விடுகிறான், எனவே பெண்களையும், இணையாக, துணையாக, சரியாக, சமமாக நடத்துவது என்ற கட்டாயத்தை எங்கள் கடவுள் மூலமாக, முன்னுதாரணமாக வைத்து காண்பித்துள்ளோம். எனவே, வாழ்வியல் நெறிகளில் மிக மிக முக்கியமானதாக, இருக்கக் கூடியது, கல்வி, செல்வம், வீரம். இவற்றிக்கு கடவுளை அர்ப்பணித்து, கடவுளுக்கு துணைவியர்களையும் படைத்து, அவர்களை சுற்றி சுவாரசியமான, கதைகளைப் படைத்து, இதிகாசங்களைப் படைத்து, அதற்கு மேலாக பண்டிகைகளைப் படைத்து, இது எல்லாத்துக்கும் பதார்த்தங்களைப் படைத்து, இவங்களுக்கு இந்த இந்த புட் பிடிக்கும் அப்படிண்னு, பல தரப்பட்ட உணவு மக்கள் சாப்பிடணும் என்பதற்கான ஒரு படைத்து வைத்தோம்.

யாரும் யாருக்கும் குறைந்தவர்கள் இல்லை. மூன்றுக்குமே முக்கியத்தும் குடுத்தே ஆக வேண்டும் என்பதற்காக. சிந்தனைகளைப் படைத்து, அமைதி, வெற்றி, சந்தோசம், மூணும் இருந்தாகனும். அமைதி இருந்தாக வேண்டும். வெற்றி இருந்தாக வேண்டும். சந்தோசம் இருந்தாக வேண்டும். அந்த மூணுக்கும் வந்து இந்த மூணும் முக்கியம். கல்வி, செல்வம், வீரம். அந்த மூணையும் டிஃபைன் பண்ணனும். என்ன கல்வி, என்ன செல்வம், என்ன வீரம், அப்படிங்கிறது.

கொடுக்க இயலாதது, கொடுக்கப் படாதது. செல்வமே அல்ல. கையிலே வச்சிக்கிட்டு கொடுக்கவும் முடியல, கொடுக்கவும் செய்யலனா, செல்வம் இல்ல. கல்வியும் அப்படித்தான். வீரமும் அப்படித்தான், வீரன் என்பவன் தனியாக ஒரு இடத்திலே இருக்கிறான். அவனைச் சுற்றி ஒண்ணுமே இல்லனு வெச்சிக்குடுவோம். அவன் வீரத்தை எப்படிக் காண்பிக்க முடியும். என்ன பண்ண முடியும்? ஒரு வீரன் என்பவன் சமுதாயத்தின் அங்கமாக இருந்து, அநியாயத்தைத் தட்டி கேட்டு, நியாயத்தை நிலைநாட்டும் போது, ஏழைகளைப் பாதுகாக்கும் போது, அங்கே வீரம் வெளிப்படுகிறது. எவ்வளவு பெரிய ரவுடியாக இருக்கட்டுமே? ரவுடியை வீரன் என்று வச்சிக்குடுவோம். தனியா ஒண்டியாளா ஊருக்குள்ள இருக்குறான, அவனை வச்சிக்கிட்டு என்ன பண்ண முடியும்?அவனுடைய வீரத்தால என்ன பிரயோஜனம்? ஒன்னும் பண்ண முடியாது. வீரம் சமுதாயம் சார்ந்தது.

செல்வமும் அப்படித்தான். ஒருத்தன் தனியா இருக்கிறான். செல்வத்தை எல்லாம் வச்சிக்கிட்டு ஒரு பிரயோஜனமும் இல்ல. கல்வியும் அதே மாதிரிதான். எனவே சமுதாயத்தின் அங்கமாக இவர்கள் விளங்கி. அந்த சமுதாயத்திலே, தனி மனிதன் இல்ல, தனி மனிதன் ஒரு பேங்க் டெபாசிட். பேங்க்ல பணம் இருக்கும். அது பல்வேறு நபர்கள் பேரில் தான் இருக்கிறது. அப்படி பேங்கில் தான் பெரும் பணம் இருக்கும். ஆனால் மற்றவர்களுக்கு கடன் கொடுக்கப் படும் போது தான், வங்கி வளம் பெரும். வாடிக்கையாளர் பெருகுவர்.

அதே போல் தனி நபர்கள் கையிலே கல்வியும், செல்வமும், வீரமும் இருந்து, அவர்கள் சமுதாயத்தின் அங்கமாக மாறி, அந்த சமுதாயத்தில் கல்வியும், செல்வமும், வீரமும், மிக்கவர்கள் நிறைய பேர்களாக மாறும் போது, ஒரு அமைதியான சந்தோசமான, வெற்றியான சமுதாயம் மாறுகிறது என்பதை உணர்ந்து, இந்தியாவிற்கு ஏற்ற தத்துவம், உலகத்திற்கு ஏற்ற தத்துவம், மகிழ்ச்சிக்கான தத்துவம், அமைதிக்கான தத்துவம், வெற்றிக்கான தத்துவம், என்பதைக் குறிப்பதற்காக, கல்வி, செல்வம், வீரம், இவற்றிற்கு கடவுளர்களைப் படைத்து, உருவாக்கி வைத்த, உன்னதமான சமுதாயம், வெற்றிக்கு வழி வகுக்கக்கூடிய சமுதாயம், அமைதிக்கு வழி வகுக்கக் கூடிய சமுதாயம், சந்தோசத்திற்கு வழிவகுக்கக்கூடிய சமுதாயம், உன்னதமான இந்து நெறி, இந்து மதம், இந்திய சமுதாயம், என்று கூடி விடை பெறுகிறேன் நன்றி வணக்கம்.

Original Audio posted in WhatsApp Group ‘Science is Hinduism’ on 29 May 2018. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes:

<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>