மூன்று! மூன்று, என்ற எண்ணிற்கு ஒரு தனிச்சிறப்பு உண்டு. தமிழ் என்றால் மூன்றெழுத்து. அண்ணா, என்றால் மூன்றெழுத்து என்று அந்த காலத்துல கலைஞர் எழுதி வெச்சாரு. மிக நயமுடன் இருக்கும். இந்து மதத்திலேயும் மூன்றெழுத்துக்களுக்கு முக்கியத்துவம் உண்டு. இந்து என்றால் மூன்றெழுத்து. லட்சுமி, சரஸ்வதி, பார்வதி இவர்கள் மூன்று பேர். பிரம்மா, சிவன், விஷ்ணு மூன்று முக்கிய தெய்வங்கள். கல்வி, செல்வம், வீரம் ரொம்ப முக்கியமானது. அறம், பொருள், இன்பம் ரொம்ப முக்கியமானது. திறமை, நேர்மை, உழைப்பு ஆகிய மூன்றும் ரொம்ப முக்கியமானது. இது போல் மூன்று என்ற எண்ணுக்கு மிகவும் முக்கியத்துவம் வைத்தோம். சூலத்தில் திரிசூலம் மூன்று பகுதியாக இருக்கக்கூடியது. சக்தியோட ஆயுதம் என்றெல்லாம் வைத்தோம்.

ஆனா, ஒரு விஷேசத்துக்குப் போகும் போது, பொண்ணுப் பாக்க போகும் போது மூன்று பேராக போக வேண்டாம். ஒன்ணு, ரெண்டு பேரா போங்க. இல்லன்னா கூடுதலாக நான்கைந்து பேராகப் போங்கன்னு சொல்லுவாங்க. இதைப்பார்த்து இது மூடநம்பிக்கையா இல்லையான்னு கேட்பாங்க. இது பலபேருக்கு மூடநம்பிக்கையாகத் தான் தோன்றும். ஏனெனில், சாதரணமாக இதற்கெல்லாம், ஒரு விளக்கத்தைக் கொடுத்து விட முடியாது. இதையெல்லாம் மூடநம்பிக்கைன்னு சொல்லக்கூடிய பெரும்பாலானோர் நம்மாட்கள் தான். ஏன் நம்மாளுங்க தான் அதுல எக்ஸ்பெர்ட். நம்ம செருப்ப எடுத்து நாமலே அடித்துக் கொள்வது போலத்தான். அடுத்தவர்களும் அதைப்பார்த்து சிரிப்பார்கள். மத்தவங்க கூட நினைப்பாங்க, மூணுப்பேர இந்துக்கள் ஒதுக்குவதற்கு ஏதாவது ஒரு ரீசன் இருக்குன்னு மத்தவங்க கூட ஏத்துக்குவாங்க. ஆனா, நாமலே அதை மூடநம்பிக்கை எனும்போது, அடுத்தவங்களும் நம்மைப் பார்த்து சிரிக்க ஆரம்பிச்சி விடுவாங்க.

ஏன் மூணு பேரா போகக்கூடாது. ஒரு நல்ல விஷயங்களுக்காக போகும் போது? அதிலென்ன அறிவியல் இருக்க முடியும்னு பாத்திங்கன்னா, இருக்கு. அதையும் முன்னோர்கள் உணர்ந்து வைத்திருக்கிறார்கள். சரிசமமான ஒரு மூணுப்பேரு ஒரு வேலை விஷயமா வெளியே போகும் போது, இயல்பாகவே, ஒருத்தருக்கு லீடர்சிப் கொடுக்க வேண்டும். மீதமுள்ள இருவரும். ரெண்டுப் பேருன்னா ஒருத்தருக்கு ஒருவர் பேசிக்குவாங்க. நாலுப்பேருன்னா, அவங்களுக்குள்ள அவங்க பேசிக்குவாங்க. ஓரிடத்திற்கு செல்லும் போது, பத்து நிமிடமோ அல்லது ஒரு மணி நேர பிரயாணமோன்னு தெரியாது. மூணுப்பேரா போகும் போது, மனித உளவியல் தத்துவங்கள் என்னன்னா? ஒருவன் இயல்பாகவே, இரண்டுபேர் சொல்வதும் சரியல்ல என்று சொல்லுவாங்க. ஒரு சின்ன விஷயமாகவே இருக்கட்டுமே. நீ முன்னாடி போ. ஏன் நீ முன்னாடி போகக்கூடாதா? என்றெல்லாம் ஆரம்பிப்பாங்க.

கருத்துக்களில் சின்னச் சின்ன மோதல்கள் வரும். இந்த மூன்று என்று வரும்போது, அன்றாட வாழ்வில் நீங்களும் இதை உணர முடியும். அதற்குக் காரணம், இரண்டு பேர் பேசும் போது, ஒருவர் தனித்துவிடப்படுகிறார்கள். தனித்து விடப்படும் போது, அவர்கள் குறுக்கே வரும்போது, இவர்கள் இருவர் பேசிக் கொள்கிறார்கள். அவங்க தேவையில்லாம குறுக்கே வர நினைக்கிறாங்க. ஒரு குழு ஒற்றுமை வராமல் போய்விடுகிறது. எனக்கு தெரிந்து இந்த கேம்ஸ் எல்லாம் கூட மூன்று பேராக இருக்கக் கூடியதாக ஒன்னும் தெரியல. ஒருத்தரா இருக்கறது இருக்கும், இரண்டு பேரா இருக்கறது இருக்கும். நாலு பேர், ஐந்துபேர் இல்லன்னா ஏழெட்டுப் பேரா, பத்துப்பேரா இருக்கற கேம்ஸ் கூட இருக்கும். இல்லட்டா, ஒருத்தர கிளியரா, லீடர்னு டிபைன் பண்ணிடனும். அதனால, ஒரு எடத்துக்கு போகும் போது, கருத்து வேறுபாடோட, முகத்தையெல்லாம் சுளித்துக் கொண்டு போனால், நல்லா இருக்காது. அவங்க இரண்டு பேரும் பேசிக்கிட்டு வந்தாங்க. என்கிட்ட சரியாக பேசவில்லை. இதுபோன்ற எண்ணங்களோடு போகும்போது, எண்ணங்களில் தடங்கல் ஏற்படுகிறது. வார்த்தைகளில், தடங்கலாக வருகிறது. அதை செயல்களிலும் வடிவங்களாக மாறுகிறது என்பதனால், அதை ஆராய்ச்சி செய்து, என்ன சொல்லி வெச்சாங்கன்னா, மூணு பேரா போக வேண்டாம்.

ஒரு நல்ல விஷயத்துக்கு. ஒரு சின்ன பையனையாவது கூட்டிட்டுப் போங்க. மூணு பேரு கணவன், மனைவி அதுக்கப்புறம் பெரிய பையனை கூட்டுக்கிட்டு போறோம்னு வெச்சிக்குவோம். பேருக்கு ஒரு சின்னக் குழந்தையக் கூட்டிட்டு போனாக்கூட, அப்பாவும் பையனும் பேசிக்கிட்டு இருக்கும் போது, அம்மா, செல்லம்னு அந்தக் குழந்தைக்கிட்ட பேசிக்கிட்டு போவாங்க. அப்ப அம்மா என்ன நினைப்பாங்க. ரெண்டு பேரு மட்டும் பேசிக்கிட்டுப் போறாங்க. நம்மக்கிட்ட பேசிக்கிட்டு போகல. கான்சென்டிரேஷன் கொஞ்சம் கிடைக்கும். தனிமைப்படுத்தப்பட்டது தோன்றாது. இது உளவியல் ரீதியானது. எனவே, அறிவியலின் ஒரு பகுதி தான் உளவியல். அந்த உளவியலில் மிகமிக முக்கியமானது, வாழ்க்கைக்கு வெற்றிபெற, நிம்மதிபெற, சந்தோஷம்பெற, உளவியல் ரீதியாக பல பிரச்சனைகளை அணுகாததால் தான், பெரும்பாலான பிரச்சனைகள் மனிதர்களால் தான் நாடுகளுக்கிடையே, மனிதர்களுக்கிடையே, குடும்பங்களுக்கிடையே, குடும்பத்திற்கு உள்ளே, கணவன் மனைவிக்கிடையே, நடந்துக் கொண்டிருக்கிறது.

இதை, கவனித்து, ஆதிகாலமாகவே, சிம்பிளான ஒரு நடைமுறை. நல்ல விஷேசம் மூணுபேரா போகவேண்டாமே. பேருக்கு ஒருத்தரக் கூட்டுட்டுப் போங்களேன்னு சொல்லிட்டு முடிச்சிட்டாங்க. அப்படி முதலில் முடிக்கும் போது, இது எப்புடின்னா, ஒரு தியரி, நிறையப் பேரு சொல்றாங்க. தியரில இருக்கர்து பிராக்டிக்கலா சரிவராது. அவசரப்பட்டு சொல்லுவாங்க. ஏன்னா, எந்த ஒரு தியரியுமே, பல்வேறு ப்ராக்டிக்கல்ஸோட கல்மினேஷன். நிறைய ப்ராக்டிக்கல்ஸ் செய்முறைகளை செய்து, பார்த்து, பார்த்து தான் தியரியா வரும். தியரியை இது அப்படித்தான் இருக்கணும், அது அப்படித்தான் இருக்கனும். அந்த தியரியை படிக்கும் போது ரொம்ப சிம்பளா ஒரு ரெண்டு சென்டன்ஸ், மூனு சென்டன்ஸ். ஆராய்ச்சி பண்ணனும்னா, அதற்கு ஆயிரக்கணக்கான செய்முறைகளை செய்து தான் வந்திருக்க வேண்டும்.

ரொம்ப உயரிய நாகரிகங்கள் இருக்கும் இடத்திலே, கல்விமுறைத் தத்துவங்களிலே, மனோத்தத்துவங்களிலே, தியரிய சொல்லி வைப்பது போல், ஒரு நல்ல வேலைக்குப் போகணும். நல்ல ஒரு விஷேசத்துக்கு போகணும். அந்த மாதிரி இடத்தில் மூனுபேரா வேண்டாம்னு வெச்சாங்க. இந்த மாதிரி ஏராளமான சின்னச்சின்ன விஷயங்கள் இருக்கின்றன. அதில் ஒன்று ஏற்கனவே சொல்லியிருந்தேன்.

ராகுகாலம். ஒரு நாளைக்கு ஒன்றரை மணிநேரத்தை தள்ளி வெச்சிட வேண்டியது. அந்நேரத்தில் நல்ல காரியம் எதுவும் செய்யக்கூடாது. அந்த ஒன்றரை மணிநேரமும் ஒவ்வொரு கிழமையும் ஒவ்வொரு மாதிரி வரும். ஒரு ஆர்டர்ல கூட வராது. காலண்டரைப் பார்த்தால் தான் தெரியும். இல்லன்னா, தான் அனுபவித்துப் பார்த்தால் தான் தெரியும். வீம்பா, ஒரு நாளைக்கு ஒன்றரை மணிநேரத்தை ராகு காலம் என்ற பெயரில் தள்ளி வைக்கலாமா? ஒவ்வொரு கிழமையும் அது வேறுவேறு நேரங்களில், பகல் நேரத்தில் மட்டும் தான் வருகிறது. பகல் நேரத்தில் 7.30&9.00 ஒரு நாளு, 4.30&6.00 இன்னொரு நாளு. 10.30&12.00 ஒரு நாளைக்கு 1.30&3.00 வருது. ஒரு வேலையை தொடர்ந்து சிந்தித்துக் கொண்டே, செய்து கொண்டே இருக்கும் போது, பலமரமும் பார்த்த தச்சன், ஒரு மரமும் வெட்டான். குழப்பம் நீடித்து, ஒரு முடிவு வராமல், தெளிவு இல்லாமல், போகக்கூடிய வாய்ப்புகள் இருக்கின்றன.

எனவே, ஒரு கம்பள்சரி ரெஸ்ட். அந்த கம்பள்சரி ரெஸ்ட். யூனிபார்ம் பீரியட்ல மைண்டு இருந்துச்சுன்னா? ரொட்டீன் ஆயி போயிடுது. அதனால, எதுக்காக அந்த கம்பள்சரி ரெஸ்ட கொடுக்கிறோமோ, அந்த பர்பஸ் அங்கே நடக்காமல் போயிடுது. எனவே, ஒரு நாள்ல ஒன்றரை மணிநேரத்தை பிரித்து, அந்த நேரத்தில் ரிலாக்ஸ்டாயி, முக்கியமான முடிவுகளை எடுக்க, முக்கியமான செயல்களில் ஈடுபடாமல், சாதாரண ரொட்டீனா, பேசறது, சாப்பிட்றது, நடக்கர்து இதெல்லாம் பண்ணிக்கொள்ளலாம். இதெல்லாம் பண்ணக்கூடாதுன்னு ஒண்ணும் இல்ல. சினிமா பாக்கறது, கொஞ்சம் ஜாலியா இருக்கறதுன்னு எல்லாத்தையும்.

எப்பப் பாத்தாலும் முக்கியமான வேலைகளை தொடர்ந்து செய்து கொண்டே இருந்தால், சிலசமயம் செயல்கள் சரிவர நடக்காமல் போய்விடுகிறது. கேப்பு விடணும். கேப்பு விட்டுட்டு அதுக்கப்புறம் ப்ளான் பண்ணணும். அந்த கேப்ப வந்து ஒரு ஆர்டிஃபீஸியலா ஒரு எக்ஸ்டர்னர் ஃபோர்சோட பண்ணணும். பண்ணும் போது என்ன பண்றாங்க? ஒரு நாளைக்கு கம்பல்சரியா ஒன்றரை மணி நேரத்துக்கு கேப்பு விட்றாங்க. இது ரொட்டீன் வொர்க். இதப் பண்ணாம இருந்து தான் ஆகனும். அந்த நேரத்தையும் நீ கவனித்துக் கொள்ள வேண்டும். அதிலும் சில உளவியல் ரீதியான ஆக்கக்கூறுகள் உள்ளன என அறிந்து வைத்து, ஒரு நாளைக்கு ஒன்றரை மணிநேரம், மாசத்துக்கு ரெண்டு நாள் அஷ்டமி, நவமி என்ற இருநாட்கள். அப்பறம் வேற சில நாட்கள். இவைகளையெல்லாம் குறித்து வைத்து, இந்த நாட்களிலெல்லாம் கொஞ்சம் அவாய்டு பண்ணிக்கலாம். இந்த நாட்கள் நல்லதாக இருக்கும் எனும்போது, அந்த நாட்களில் சாஸ்த்திர, சம்பர்தாயம், சடங்குகளுக்கு இடங்கொடுக்கப்படுகிறது.

அதனால ஒரு சீரான சமுதாயமும், சீரான நிகழ்வுகளும் நடக்கின்றன. எனவே, மூடநம்பிக்கைகள் என்று முத்திரைக்குத்தப்பட்ட எந்த ஒரு நிகழ்ச்சிக்கும் பின்னால், எந்த ஒரு அறிவுரைக்கும் பின்னால், அறிவியல் இருக்கின்றது என்பதனை நாம் அனைவரும் அறிவோமாக.

நன்றி, வணக்கம்.

Original Audio posted in Whatsapp Group ‘Science is Hinduism’ on 11 June 2018. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes:

<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>