அறிவியலே இந்து மதம் என்ற வார்த்தையை பயன்படுத்தும் போது, எனக்கு சின்ன தயக்கம் வருகிறது. இந்து மதமா? ஏனென்றால் மதம் என்ற சொல், இந்து மதத்திலே, இந்து தர்மத்திலே பெரும்பாலும் பயன்படுத்தினாலும், வேறெங்கும் பயன்படுத்தப்படவில்லை.

“மதமென்ற பேய் பிடிக்காதிருக்க வேண்டும்” என்று எழுதி வைத்திருக்கிறார்கள். மதம் என்பது ஒரு பேயைப்போல, மனிதனை அடிமைப் படுத்தி விடுகிறது. அதன் பின்னாலேயே மனிதன் செல்கிறான். அந்த மதத்திலே, பல்வேறு சடங்குகள், கட்டளைகள் இருக்கின்றன. அவற்றை செய்ய நிர்பந்திக்கப்படுகிறான். அதுக்கப்புறம் அந்த மதத்தின், ஒரு அபிமானத்தில், இவனும் அந்த மதத்திற்கு மாறவேண்டும் என்று நினைக்கிறான். அதனால், குறுகிய மனப்பான்மையாகி, மதத்திற்குள்ளே குறைகளை கண்டுபிடித்து, வழிகளைக் கண்டுபிடித்து, பிரிவுகளை ஏற்படுத்தி, மனித சமுதாயம் அன்றாடம் சண்டை போட்டுக் கொண்டு இருக்கிறது.

அது கிறிஸ்டியானிட்டிக்குள்ள பிரிவுகளாக இருந்தாலும் சரி, இஸ்லாமியத்திலே இருக்கும் பிரிவுகளாக இருந்தாலும் சரி, ஆதிகாலத்திலே இருந்த சைவ, வைணவ, பௌத்தப் பிரிவுகளாக இருந்தாலும் சரி. அதனால் தான் என்னமோ, இந்து மதம் என்று நாம் சொல்கிறோமே, மதம் என்ற வார்த்தை என்பது சரியல்ல. ஆங்கிலத்திலே, ரிலிஜியன் என்ற ஒரு வார்த்தை இருக்கிறது. ரிலிஜியன் என்ற வார்த்தைக்கு பொருள்பட்டால், ரொம்ப ஸ்டிக்டா, சில ஆர்டர் ஃபாலோவ் பண்றது. இங்க வந்து ரிலிஜியஸ்னு எதுவும் கிடையாது. நீங்க கவனிச்சுப் பாருங்க. ஸ்டிக்டா இதத்தான் பண்ணணும்னு கிடையாது. இதுல சுதந்திரம் வேற கொடுத்திருக்கிறார்கள். அப்ப என்னதான் சொல்றது? ரிலிஜியன் என்கிற ஆங்கில வார்த்தையும் பொருத்தமாக இல்லை. மதம் என்ற வார்த்தையும் பொருத்தமாக இல்லை.

இது தமிழ் வார்த்தையா மத்த வார்த்தையான்னு அப்பறம் பார்க்கலாம். தர்மம், இந்து தர்மம். இந்த ‘தர்மம்’ என்கிற வார்த்தையை ஆராய்ச்சி செய்து பார்த்தோமானால், சரியான ஐரோப்பிய வார்த்தைகள், ஐரோப்பிய வார்த்தைகள் தானே இங்கிலிஷ், சான்ஸ்கிரிட் எல்லாமேன்னு தான் நான் சொல்லுவேன். அது பரவாயில்லை. சரியான வார்த்தைகள் இருக்கவில்லை. தர்மம் என்றால் என்ன? நடைமுறைகள். வாழ்வியல் நடைமுறைகள்.

செழுமையான ஒரு சமுதாயத்திலே வளமையான ஒரு வாழ்க்கைத் தத்துவார்த்த சித்தாந்தங்கள் தோன்றும் போது, மக்கள் அனைவரும், அமைதியாகவும், அன்போடும், சந்தோஷமாகவும் இருப்பதற்காக, அவர்களுடைய வாழ்வியல் அனைத்திற்கும் நெறிமுறைகளாக வைத்து ‘தர்மம்’ என்று சொன்னார்கள். தர்மம் என்பது பிச்சை போடுவதற்கு, பிச்சை வாங்குவதற்கு, சண்டை போடுவதற்கு, அரசாளுவதற்கு, குடிமக்களுக்கு, மாணவர்களுக்கு, வியாபாரிகளுக்கு, நண்பர்களுக்கு, துறவியருக்கு இல்லற தர்மம். எல்லாவற்றிற்கும் தர்ம நெறிகளை வைத்துவிட்டு, அந்த தர்ம நெறிகளை பின்பற்றுபவர்கள் இந்து தர்ம நெறிகளை பின்பற்றுகிறார்கள். இந்து தர்ம நெறிகள் என்பது, இந்திய தர்ம நெறிகளாகிறது. இந்திய தர்ம நெறிகள் என்பது, ஒரு நாட்டை, ஒரு சமுதாயத்தை, உருவாக்கி இருக்கிறது. இத்தகைய நாட்டை, இத்தகைய சமுதாயத்தை உருவாக்கி யிருக்கிறது என்று பார்த்தால், ஆச்சர்யப்படுவோம். அதுதான் உண்மை.

பிச்சைக்காரர்கள் இல்லாத, உழைப்பாளர்கள் அனைவரும் சமம் என்ற, ஜாதிப் பிரிவினை இல்லாத, தீண்டாமை இல்லாத, செல்வம் எல்லாப் பக்கமும் தானாக சேரக்கூடிய, கல்வி எல்லாப்பக்கமும் தானாகப் போய் சேரக்கூடிய, வீரம் எல்லாப்பக்கமு தானாகச் சென்று சேரக்கூடிய, பெண்களுக்கு சர்வ சுதந்திரமும் உரிமைகளும் கொடுத்த, கலைகள், எல்லா விதமான கலைகளும் மிகவும் உயர்ந்து ஓங்கி நிற்கக் கூடியதாக, எல்லா தொழில்களும், மெட்டலாக இருக்கட்டும். அது மெட்டல் ரிலேட்டட். அது கன்ஸ்டிரக்ஷனா இருக்கட்டும், கன்ஸ்டிரக்ஷன் ரிலேட்டட். நீர்பாசனமா இருக்கட்டும், இல்ல அக்ரிகல்ட்சரா இருக்கட்டும். எல்லாக் கலைகளும் துறைகளும், திறமைகளும், ஓங்கி உயர்ந்த ஒரு சமுதாயத்தை, இந்து தர்மம் உருவாக்கிக் கொடுத்தது. ஏனென்றால், அந்த இந்து தர்மமாம், இந்திய தர்மத்திலே, எல்லா நெறிகளும், எதிர்காலத்தையும், கடந்த காலத்தையும், நிகழ்காலத்தையும் கணக்கிலே வைத்துக்கொண்டு வரப்பட்டது. அதில் சிலநெறிகள் ஸ்வாரஸ்யமானவை.

பரதேசிக்கு முதல்ல சோறப்போடு. யார் பரதேசி. வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள். பரதேசி என்றால் பிற தேசம். பரதேசி என்றால் நேரடியாக பிச்சைக்காரர்கள் என்று பொருள் கிடையாது. ஒரு ஐரோப்பியாவிலோ, மற்ற நாடுகளிலோ, சராசரி ஆட்கள் இந்தியாவைப் பற்றி பேசும்போது, ஆறு நூற்றாண்டுக்கு முன்னாடி, எட்டு நூற்றாண்டுக்கு முன்னாடி, அங்கே இருக்கும் ஜனங்களே நம்ப மாட்டாங்க. இந்தியா என்றொரு ஒரு தேசம் இருக்கிறது. அங்கே போய் நாம் எப்படியாவது, கஷ்டப்பட்டு இறங்கி விட்டால் போதும். எந்த வேலையும் பார்க்க வேண்டியதில்லை.

இந்தியாவில் இருப்பவர்கள், நல்லா சாப்பாடு போட்டு, நாமெல்லாம் சாப்பிட்ட பிறகு தான், அவர்கள் சாப்பிடுவார்கள். நமக்கு எந்த வேலையும் கொடுக்க மாட்டாங்க. அவங்களே எல்லா வேலையும் பார்த்துக் கொள்வார்கள். கோவில்னு ஒண்ணு இருக்கும். மழை பெய்து, வெயிலடிக்குதுன்னு கஷ்டக்காலம்னா, அங்கே போய் இருந்துக்கலாம். அப்ப, அவங்க என்ன வேல பாப்பாங்க? அவுங்க இஷ்டப்பட்ட வேலையத்தான் பாப்பாங்க. அப்ப என்னென்ன நடக்கும்? சண்டையென்று ஒண்ணுமே நடக்காது.

சரி, ஒரு ஊருல இருந்து இன்னொரு ஊருக்கு எப்படிப் போவாங்க? நீ தாராளமா போகலாம். போற வழியில் எல்லாம் தர்மச் சத்திரங்கள் இருக்கும். நீ ஃப்ரியா தங்கிக் கொள்ளலாம். அங்கேயும் உனக்கு ஃப்ரியா சாப்பாடு போடுவாங்க. அங்கேயும் உன்னோட பொருள்களை எல்லாம் பத்திரமா வாங்கி வெச்சிக்கிட்டு திரும்பக் கொடுப்பாங்க. அப்ப இந்தியாவுக்கு போயிட்டா, எந்த வேலையும், இல்லாம ஜாலியா சந்தோஷமா இருக்கலாமா? இருக்கலாம். வா போகலாம். அப்படி கிளம்பி வந்தவர்கள் தான், ஐரோப்பியர்கள்.

அப்படி வரும்போது, நடுவில் இந்த பாலைவனம், அரபு நாட்டு சமுதாயம் இருக்கிறது. கடல் கொள்ளை சூழ்ந்த சமுதாயம், அதைத் தாண்டி வரும்போது, கொஞ்சம் சிரமப்படும் போது தான், இந்தியாவிற்கு இன்னொரு ரூட்டு கண்டுபிடிக்கணும். இந்த அரபுக்காரனின் தொந்தரவு இருக்கக் கூடாதுன்னு. அப்படியே போனா, கிழக்கே போகலாமா? மேற்கே போகலாமான்னு, அப்படியோ போயிட்டு தான், உலகம் உருண்டை தானே, அமெரிக்காவைக் கண்டுபிடித்து, அந்த அமெரிக்காவையும் என்ன செய்தார்கள்? ஆஹா, இதுதான் இந்தியான்னு நினைச்சிக்கிட்டு, அங்கே செட்டிலாக ஆரம்பிச்சிட்டாங்க.

அதிலே ஆச்சர்யம் காத்துக் கொண்டிருந்தது. அங்கே யிருந்த, பூர்வீகக் குடிமக்களான செவ்விந்தியர்கள்னு, இவர்களால் அழைக்கப்பட்டவர்கள். இவங்கள அட்டாக் பண்ண ஆரம்பிச்சாங்க. ஆச்சர்யப்பட்டாங்க. இந்தியன்ஸ் அட்டாக் பண்ண மாட்டாங்களே? நம்மள கூப்பிட்டு தங்க இடம் கொடுத்து, சாப்பாடு கொடுத்து, விருந்து உபசரித்து ஜாலியா வெச்சிருப்பாங்களே! அதுக்கப்புறம் சண்டபோட்ட பிறகுதான் கண்டுபிடித்தார்கள், இது இந்தியா இல்லன்னு! இந்தியா என்கிற பூர்வீக பூமி, இந்து சமய தர்மத்திலே தலைசிறந்து நின்ற போது, எந்த குறையும் இல்லை. யாருக்கும் இல்லை. மனிதர்களுக்கு இல்லை. மன்னனுக்கு இல்லை. மாணாக்கர்களுக்கு இல்லை. ஆடு, மாடு விலங்கினங்களுக்கு இல்லை. யானைகளுக்கு இல்லை.

இப்போது, இவர்களுக்கு சொல்லப்படக்கூடிய எல்லாத் தத்துவங்களும், இத புரொடெக்ட் பண்ணும், அத புரொடெக்ட் பண்ணும், அப்புடீன்னு நாங்களே புரொடெக்ட் பண்ணி வெச்சிட்டோம். மிக மிக உயரிய, இந்து தர்ம நெறிகள், அதை மதம் என்று சொல்ல முடியாது. அதை எங்கே எல்லாம் பின்பற்றுகிறார்களோ, அங்கே வளர்ச்சி, சந்தோஷம், அமைதி தானாகவே இருக்கிறது. இந்து என்ற வார்த்தை தேவையில்லை என்று கூட வைத்துக் கொள்ளலாம். இந்த நெறிகளைப் பின்பற்றினால், எந்த ஒரு நாளும் நல்லாத்தான் இருக்கும்.

எனவே, நாம பின்னாடிப் போய்ப் பாக்கணும். தர்ம நெறிகளைப் பார்க்க வேண்டும். முதலில் நாம் புரிந்து கொள்ள வேண்டும், தர்மம் என்றால், பிச்சை போடுவது இல்லை. இந்த நடராஜர் பத்தில் எது எது தர்மம் என்பதைப் பற்றி, தர்மம் என்பது என்ன? பாவங்கள் இல்லாதது தர்மம் என்று வைத்துக் கொள்ளலாம். பாவங்கள் என்பது என்ன? முன்பொரு முறை கூட நான் கூறியிருந்தேன். பாவங்கள் என்று எதைச் சொல்கிறார்கள் என்றால், சின்னச்சின்ன விஷயங்களை பாவமென்று சொல்கிறார்கள்.

சின்னச்சின்ன விஷயங்கள். அதாவது, “காயாத மரத்தின் மீது பூ பறித்தேனோ?”. ஒரு மரத்தில் பூவாக இருக்கும் போது, பறித்தால் அது பாவம். “கன்னியர்கள் பழிகொண்டேனோ?” கன்னிப் பெண்களின் மனங்கோண நடந்தால், அது பாவம். இவ்வளவு பாவங்களை வைத்துக் கொண்டு, இந்தப் பாவத்தை நீ செய்யாதே எனச் சொல்லும் போது, ஒவ்வொரு சாதாரண விஷயத்துக்கும், தர்மநெறிகள் மிகத் தெளிவாக சொல்லப்பட்டிருப்பதனால் தான், இது உயரிய நெறியாக அடங்கிய ஒரு உன்னதமான சமுதாயமாக இருந்தது,

Original Audio posted in Whatsapp Group ‘Science is Hinduism’ on 13 June 2018. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes:

<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>