பகவத்கீதை. கிருஷ்ண பரமாத்மா, அர்ஜூனனுக்கு பல உபதேசங்களை சொல்கிறார். சொல்வதன் மூலம், தெய்வம் மனிதனுக்கு சொன்னதாக அமைகிறது. அதில் மிகவும் முக்கியமானது. “நீ எதை எடுத்துக் கொண்டு வந்தாய். எதையும் எடுத்துக் கொண்டு வரவில்லை. நீ வெச்சிருக் கெற்தெல்லாம், இங்கிருந்து எடுக்கப்பட்டது!”.
“எதைக் கொண்டு போகப் போகிறாய்? எதையுமே கொண்டு போகப் போவது கிடையாது. உன்னுடைய உறவினர்களாக இருந்தாலும், அவங்களுக்குன்னு ஒரு ரோல் இருக்கிறது. அதனால், கர்ம வினைகள் என்பது அவரவர் பலனை அவரவர் அனுபவிப்பார்கள்” என்று நிறையத் தத்துவங்களையெல்லாம் சொல்கிறார்.
தத்துவங்களையெல்லாம், கேட்டு முடிந்தவுடன் அர்ஜூனன் என்ன பண்றாரு. “ரொம்ப நல்ல நல்ல தத்துவங்களா சொல்றீயேப்பா கிருஷ்ணா, எனக்கு இந்தப் போர்த் தொழிலெல்லாம் வேண்டாம். பேசாம, உன் தத்துவங்களையெல்லாம், நான் ஊரெல்லாம் போய் சொல்லி, பரப்பிக்கிட்டு இருக்கேன். மனிதசமுதாயம் நல்லா சந்தோஷமா வாழணும்”னு. அதற்கு கிருஷ்ணர் என்ன சொல்கிறாரென்றால், அப்படியெல்லாம் ஒண்ணும் கிடையாதுப்பா? நல்ல கருத்துக்களாக இருந்தாலும், ஜஸ்ட் லைக் தட் என்று எல்லா இடத்திலும், எல்லா மாதிரியாகவும் சொல்லக் கூடாது.
நல்லவர்கள் ஒன்றுகூடி நல்ல சிந்தனையோடு இருக்கக்கூடிய நயமான நேரத்திலே, நயம்பட எடுத்துரைக்க வேண்டும். நீ நல்ல கருத்துக்களென்று சொல்லி, அதில் மூடவுட்டாகி இருக்கும் போது, நடுவுல உட்கார்ந்து பேசினாயென்றால், அதைப் புரிந்து கொள்ள மாட்டார்கள். தவிர இதில் இரண்டு சென்டன்ஸ் இருந்தால், அதில் முதல் சென்டன்ஸை மட்டும் கேட்டு விட்டுப் போயிடுவாங்க.
உதாரணத்துக்கு, ஒரு கம்யூனிஸ்டு தத்துவவாதி. ஒரு சின்னப்பையன் மேடையில முழங்கிக்கிட்டு இருந்தார். “முதலாளித்துவம் இங்கே திணிக்கப்பட்டு விட்டது. ஏனென்றால், அன்றே சொல்லிவிட்டார்கள். கடமையை செய், பலனை எதிர்பாராதேயென்று. அது முதலாளித்துவம் தானே. தொழிலாளிகளை அடிமைப்படுத்துவது தானே”. அப்படின்னு அந்தாளு முழங்கிக்கிட்டு இருந்தாரு. உடனே அந்த கம்யூனிஸ்ட் கும்பல் கடகடவென கைத்தட்ட ஆரம்பித்து விட்டார்கள்.
அதனால, அவரசப்பட்டு, நல்ல கருத்துக்களை சொல்லக்கூடாது. நல்ல கருத்துக்களை நல்லவர்கள் மத்தியில் அவர்கள் நல்ல மூட்ல இருக்கும் போது, காலசமயம் பார்த்து சொல்லணும். அவங்க அத முழுமையாக உள்வாங்கிக் கொள்ள வேண்டும் என்று பகவத் கீதையில் சொல்லி வைத்திருக்கிறார்கள்.
அதனால, நாம அறிவியலே இந்து மதம், என்ற வரிசையில் ஏதோ எனக்குத் தெரிந்தது, தினமும் ஒரு கருத்து. விநாயகரை ஏன் வைத்தோம், மன்மதனை ஏன் வைத்தோம். சக்தி, சிவனுக்குள்ள வேறுபாடு. கல்வி, செல்வம், வீரம் இவர்களுக்குள்ள முக்கியத்துவம். இதுபோன்ற நிறையக் கருத்துக்களை இளையவர்களுக்கு, புதிய சமுதாயத்திற்கு, இந்து மதத்தைப் பற்றி அதிகமாகத் தெரியாதவர்களுக்குப் புரியும் வகையில், சொல்வது என்னோட சமுதாயக் கடமையாக நினைத்து நான் சொல்வதால், இதை நீங்கள் எல்லா இடத்திலும் சொல்லக்கூடாது.
ஏனெனில் வேற்றுமைப்படுத்துவதற்காக இஸ்லாமியத்தில் சில குறிப்புகளை சொல்லியிருப்பேன். கிறித்துவ மதத்திலிருந்து ஒருசில குறிப்புகளை எடுத்துச் சொல்லியிருப்பேன். மூடவுட்டா இருக்கும் போது, இதிலிருக்கும் கருத்துக்களை நீங்கள் மற்ற மதத்தினருக்கு கூறினால், வன்முறையை தூண்டிவிட வாய்ப்பிருக்கிறது. அதனால, எல்லாத்தையும் ரொம்பப் பொறுமையாக கேட்டுக்கொள்ள வேண்டியது தான்.
பொறுமையாக கேட்டுவிட்டு சரியான நேரங்களில் சொல்ல வேண்டும். சரியான ஆட்களிடம் சொல்ல வேண்டும். சரியான ஆட்கள் என்றால் யாரு? நம்முடைய கருத்தோடு ஒத்துப் போகிறவர்கள் தேவையில்லை. ஏனெனில், அவர்கள் ஏற்கனவே ஒத்துப் போய்விட்டார்கள். நம்ம கருத்தோட முழுக்க முழுக்க வேறுபட்டு நிற்கிறவர்கள் தேவையில்லை. அவங்க வேறுபட்டு நின்னுட்டாங்க.
அப்ப, நம்மகிட்ட இந்த கருத்துக்கள் இல்லை. மற்ற மதத்தில் மட்டும் தான் இருக்கிறது என்று நினைத்து, மயங்கி, தள்ளாடி, தடுமாறிப் போகக்கூடிய கும்பல் இருக்கிறார்கள். அவங்களுக்கு கொஞ்ச கொஞ்சமா எடுத்துச் சொல்லணும். ஒரே டோசா எடுத்துச் சொல்லி விடக்கூடாது. இந்தாப்பா, இங்கத்தான் எல்லாம் சுப்பீரியரா இருக்கு. அங்கே ஒண்ணும் கிடையாது. இங்கேயே எல்லாம் இருக்கின்றது என்று தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள் என்று சொன்னால் அது ஒரு சிறப்புடையதாக இருக்கும்.
அதுல இன்னும் டவுட்டெல்லாம் இருந்தால் கிளாரிபை பண்ணிக்கலாம். அதனால், இது போன்ற இடங்களில் எல்லாம் இந்த கருத்துக்களைக் கூறினால் சாலச் சிறந்தது என்று கருதுகிறேன். எனவே தான் பொறுமை என்பது மிகவும் முக்கியம். அந்தப் பொறுமை வெற்றிக்கு வழிவகுக்கும். கல்வி ஞானத்துக்கு வழிவகுக்கும். எனவே தான் சொன்னார்கள். பொறுமையுடன் நினைக்கின்ற உத்தமர்கள் உறவு வேண்டும். உள்ளன்று வைத்து, புறமொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும். மதி வேண்டும், நின் கருணை நிதி வேண்டும், நோயற்ற வாழ்வை நாம் வாழ வேண்டும் என்று சொன்னார்கள்.
என்ன வேண்டும் என்பதில் அவ்வளவு தெளிவாக இருந்தவர்கள், பொறுமை வேண்டும், பொறுமையுடன் இருப்பவர்கள் உறவு வேண்டும். உள்ளன்று வைத்து புறமொன்று பேசுவோரின் உறவு நமக்கு வரக்கூடாது. ஏனென்றால், அதிலே கருத்து வேறுபாடுகள் வரும். கருத்து வேறுபாடுகள் வந்தால், சண்டைச் சச்சரவு வரும். சண்டைச் சச்சரவு வந்தால், ஆத்திரங்கள், ஆக்ரோஷங்கள் வரும். அதுக்கப்புறம் அமைதியற்ற, சந்தோஷமற்ற வாழ்க்கை.
பொறுமை என்பது மிகவும் முக்கியமில்லையா? அந்தப் பொறுமையோட அம்சமாகத் தான் இந்து மதத்தின் தவநெறிகளையும், ஒழுக்க நெறிகளையும் வைத்திருக்கிறோம். இந்த விரதம் என்பது வைத்திருக்கிறோம். இதை முடித்துவிட்டு, அதை முடித்துவிட்டு, அதுக்கப்புறம் அதை முடித்துவிட்டு, அனைத்தையும் முடித்ததுக்கப்புறம் தான் சாப்பாடு. இவ்வளவும் பொறுமையாக பண்ணியே தீரணும். அவசர அவசரமாக பண்ண முடியாது. தவமுறைகள், வெறும் நாற்பத்திரெண்டு நாட்களாக இருக்கலாம், பதினாறு நாட்களாக இருக்கலாம். மூன்று வருடங்களாக இருக்கலாம். தவமுறைகளையும் வைத்தோம்.
ஏனெனில் பொறுமையென்பது அருமையானது. அந்தப் பொறுமைக்கு நாம் பயிற்சி செய்ய வேண்டும். மற்றதுக்கெல்லாம் பயிற்சி செய்வதை விட. ஒரு ரூம்ல போய் ஒருத்தரை பார்க்கப் போகிறோம். வெயிட் பண்றோம். அவர் இல்லை, ரெண்டு மணிநேரம் கழித்து வருவாருன்னு. ரெண்டு மணிநேரம் அமைதியாக காத்திருப்பது பொறுமை. அந்த ரெண்டு மணிநேரத்திற்குள், எதையாவது ஒன்றை சாதித்து விட வேண்டும் என்று வெளியே எல்லாம் போய் வரும்போது, நடுவுல அவர் வந்துட்டு போயிருப்பாரு.
அந்தப் பொறுமை என்பது பயிற்சியில் வருகிறது. அந்த பயிற்சி எல்லாம் விரதங்கள், அனுஷ்டானங்கள், தவங்கள், சாமி கும்பிடுவது என்று இவைகள் எல்லாவற்றிலும் வருகிறது. அந்தப் பொறுமையினால் அருமையான நிகழ்வுகள் எல்லாம் நடக்கிறது. எனவே வாழ்வியலின் ஒவ்வொரு ஆக்கக்கூறிலும், அது பொறுமையை கடைப்பிடிப்பதாக இருக்கட்டும். தெய்வங்களின் வழிபாட்டு முறைகளாக இருக்கட்டும், அறிவியலே இந்துமதம்.
நன்றி, வணக்கம்.
Original Audio posted in Whatsapp Group ‘Science is Hinduism’ on 14 June 2018.