ஒரு மாதத்திற்கு முன்னாடி, டெய்லியும் ஒரு செய்தி போடலாம்னு ஆரம்பிச்சப்போ என்ன போடலாம் என்று எனக்கு பெரிய பிளான் இல்ல. இப்ப கூட காலையில எழுந்துக்குற சில கருத்துக்களைப் போடுறேன். அதை பற்றி முன்கூட்டியே குறிப்பு எடுத்து கொள்ளுவதோ, நாளைக்கு எதை போடலாம் என்று முதல் நாளன்று சிந்திக்குறதோ, கிடையாது. அறிவியலே இந்து மதம் என்ற இந்த சொற் தொடரை ஆரம்பிக்கும் போது, தோணனது எல்லாம் ஹிந்து மதத்தை எல்லாம் தப்பா பேசுறங்க. ஹிந்துக்கள் உட்பட. அதுல எவ்வளவோ அறிவியல் பூர்வமான கருத்துக்கள் இருக்கு. அத நவீன இளைய சமுதாயத்துக் காகவும், மற்ற மதத்திற்காகவும், எடுத்து சொல்லணும் அப்படிண்னு தான்.
அப்படி வரும்போது எனக்கு ஓரளவுக்கு மற்றமதத்தவர் பற்றிய, படிப்பறிவு, பேசி பழகிய அறிவு, இருந்ததினால், கம்பேர் பண்ண வேண்டிய கட்டாயத்துல இருக்கு. ஏன்னா கம்பேர் பண்ணும் போது தான் எல்லாமே ஈஸியா இருக்கு. ஒரு வெப்சைட்ல ஒரு ப்ரொடக்ட்ட வாங்கினா கூட கம்பேர் எனும் பியூச்சர்ஸ வச்சிருக்குறாங்க. மூணு ப்ரொடக்ட்ட கம்பேர் பண்ணி எது நல்லா இருக்குதுனு நம்ப செலக்ட் பண்ணிக்கிடலாம். கம்பேரிசனுக்காக மற்ற மதத்தில் உள்ள நிறை, குறை, வழிமுறைகள் மற்றவற்றை பற்றி பேசவேண்டி இருக்கு.
இந்து மதத்தில வந்து ஆர்வத்தினால சில பேர்கள் வந்து, பாக்குறாங்க படிக்கிறாங்க, பார்டிசிபேட் பண்ணுறாங்க. அது ரொம்ப ரொம்ப கம்மி. டோட்டலா கன்வின்ஸ் பண்ணி வறாங்க என்று சொல்ல மாட்டேன். ஆனால் இஸ்லாமிய, கிருஸ்துவ, மதத்தில இருந்து வந்து ரொம்ப பிரீக்வண்டாக மதம் மாறிப் போறாங்க, அது அவங்க இஷ்டம். இந்து மதத்துடைய பண்டமென்ட் ரைட் என்பது, எல்லா மதங்களும் சுப்பீரியர் தான் அப்படின்றது.
அந்த நிலையில இருந்து எப்போதும் வழுவமாட்டேன். அப்படி வழுவும் போது, இந்து மதத்திலிருந்து வழுவுவதாக ஆகிறது. பக்கத்து வீட்டு அம்மா அம்மாதான், அவர்களுக்கான மதிப்பைக் கொடுத்தே ஆகவேண்டும். ஆனால் நாட் அட் தி காஸ்ட் ஆப் இன்சல்டிங் ஓன் மதர், நம்ம அம்மாவை வந்து இன்சல்ட் பண்ணக்கூடாது. அதோடு நிப்பாட்டிக்கிறது.
அப்ப ஏன் எல்லாம் மதம் மாறுகிறாங்க? ரெண்டு கைன்ட் ஆப் மதம் மாற்றம் நடக்கிறது. ஒண்ணுவந்து கிரிஸ்டியானிட்டிக்கு. ஒண்ணுவந்து இஸ்லாமிற்கு. கிரிஸ்டியானிட்டிக்கு மதமாற்றம் என்பது ஒருவர் கஷ்டத்துல இருந்து. தான் ஈக்குவல் இல்ல என்று நினைக்கும் போது. அவங்களுக்கு ஆறுதலாக போய் நின்னு கல்வி கொடுத்து, அவங்களுக்கு மருத்துவம் செஞ்சி, நீயும் வருவ கர்த்தர் உன்னை ரட்சிப்பாரு கவலைப்படாத! அப்படினு சொல்லி, அவங்க மதமாற்றத்துல ஈடுபடுறாங்க. இவங்களும் மதம் மாறுறாங்க. அப்புறம் மதம் மாறாமலே பங்கு பெறக் கூடிய நிறைய நிகழ்ச்சிகளை வெச்சிருக்குறாங்க.
நான் கூட அந்த ஒய்.எம்.சி.ஏ.ல லைப் மெம்பர் தான், அசோசியேட் லைப் மெம்பரானதால அந்த கிரவுண்டுல போய் என்டராக முடிகிறது. ஒரு சிஸ்டம்ஸ்ஸை வெச்சி பண்ணிக்கிட்டு இருக்குறாங்க. கடைசி வரைக்கும் நான் கிறிஸ்துவனாக மாறாம ஒய்.எம்.சி.ஏல தொடர்ந்து இருக்க முடிகிறது. பதவிகளை வகிக்க முடிகிறது. அது ஒரு நல்ல கோட்பாடுதான்.
இஸ்லாத்தை பொறுத்த வரையில் மதமாற்றத்தை கவனிச்சோம்னா. பெரிய பெரிய லிஸ்ட். எல்லாம் இன்டர்நெட்ல போட்டா நிறைய லிஸ்ட் வருது. பெரும்பாலான பேர் திருமணத் தேவைக்காக மதம் மாறியிருக்காங்க. அந்த கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு மதம் மாறியதாக சொல்றவங்க ரொம்ப கம்மியாக இருப்பாங்க. திருமணம் அப்படினு வரும்போது, அதிலும் குறிப்பாக, முறையற்ற திருமணங்கள். அந்த முறையற்ற திருமணங்களை முறைப்படுத்தி வைத்திருக்கிறார்கள் அங்கே. அப்ப முஸ்லீமா, மாறிட்டா அந்த கல்யாணத்தை பண்ணிக்கிடலாம் என்று பெரிய, பெரிய வி.ஐ.பி.கள் எல்லாம் இருக்கிறாங்க.
அப்புறம் வேறு சில பேரு சமூக சூழ்நிலையால குறிப்பிட்ட பெயர் ஏதும் சொல்ல முடியாது என்றாலும், சொன்னால் ஒழிய எளிதாக புரியாது. திலீபன் என்ற ஒருபையன் நல்ல கீபோர்ட் எல்லாம் வாசிக்கிட்டு இருந்தாரு. இளையராஜா கிட்ட போய் சேர்ந்தாரு, இவருடைய டுயூன் நல்ல இருக்கவோ, இளையராஜா அத அப்படியே அடாப்ட் பண்ணாரு. ரொம்ப பேரு புகழும் வந்திடுச்சு, எல்லாமே இளையராஜாவுடைய மியூசிக் அப்படினு நினைச்சாங்க, ஆனாலும் கூடவே இருக்கிறவங்களுக்கு தெரிஞ்சி போயிடுச்சி, இளையராஜாவுடையது கிடையாது. இது எல்லாம் அந்த பையன் போடுறதுனு.
அந்த பையன, டைரக்ட்டா புக் பண்ண ஆரம்பிச்சாங்க, குருவுக்கும், சிசியனுக்கும் சண்டை வந்திடுச்சு, சிஷியன் என்பவன், ஒரு காலகட்டத்துல குருவை மிஞ்சத்தான் செய்வான். அவங்களுக்குக்கிடையே ஏதோ பிரச்சனைகள், கடைசியில என்னாச்சு? இந்த பையன் மதம் மாறிட்டான். நான் இந்துவாக இருக்கத்தானே ஜாதியை வெச்சி பேசிக்கிட்டு இருக்கிறீங்க என்ற கருத்துக்கள் எல்லாம் உள்ள ஓடிக்கிட்டு இருந்துச்சின்னு நினைக்கிறன்.
மதம் மாறி, தன்னை ஒரு முஸ்லீம் என்று அறி வித்துக்கொண்டு, ஒரு இசையமைப்பாளராக மாறி ஆஸ்கார் விருது கூட வாங்கிட்டு, அந்த ஆஸ்கார் பங்க்ஷன்ல கூட ‘எல்லாப் புகழும் இறைவனுக்கே’ என்று சொல்லுவதன் மூலம், தமிழை நிலைநாட்டியதாக அவர் நினைத்து கொண்டார். மற்றவர்கள் இஸ்லாத்தை நிலைநாட்டியதாக நினைத்துக் கொண்டார்கள். எனக்கு என்னவோ தமிழைத்தான் நிலைநாட்டினார் என்று தோன்றுகிறது.
ஏனென்றால் இசை என்பது இஸ்லாத்திலே தடை செய்யப்பட்டதனால், இசையைப் படைக்க கூடியவன் படைப்பாளி. படைப்பாளிகள் இந்து சமயத்திலே மட்டும் கவுரவிக்கபடுகிறார்கள். கடவுளுக்கு சமமாக கருதப்படுகிறார்கள் என்பதினால், எப்பொழுது அவர் இசையை படைக்கிறாரோ, எப்போது இன்னொரு ஓவியத்தை படைக்கிறாரோ, கிரியேடிவிடி இஸ் டிவேனிட்டி. டிவேனிட்டி இஸ் கிரியேடிவிட்டி என்பது போல, இந்து தத்துவத்தின் அடிப்படையிலே, அவர்கள் அனைவரும், இந்துவாகவே கருதப்பட வேண்டும். வேறு வழியே இல்ல, பெற வேண்டும்னா அப்படி வச்சிக்கிடலாம். வழிபாட்டு இடம் வேண்டும்னாலும் வேறாக இருக்கலாம். ஆனால் படைப்பாளிகள், உன்னதமான படைப்பாளிகள். படைப்பாளிகளுக்கு கவுரவத்தை கொடுத்து வைத்திருப்பது இந்த சமூகம் ஒன்றுதான். கிரியேடிவிட்டியை பற்றி எந்த விதமான டெபனெசனும் இல்லாமல். கிரெயேடிவிட்டியை பிரித்து போட்டு இருப்பது அந்த சமுதாயம்.
அதனால கிரியேட்டிவிட்டி அப்படினு வந்துட்டாலே, அது இந்துஇசம், கிரியேடிவிடி இஸ் டிவேனிட்டி. டிவேனிட்டி இஸ் கிரியேடிவிட்டி. மற்றவர்கள் வந்து எதுக்காக மதமாற்றம், மாறியிருக்குறாங்க அப்படினு பாத்தீங்கன்னா, பெரும்பாலும் கல்யாண தேவைகளுக்காக, முறையற்ற திருமணங் களுக்காக. ஒரு 54 வயசு ஆண், ஒரு 25 வயசு பொண்ண கல்யாணம் பண்ணிக்கிடணும்னு நினைக்கிறன். முஸ்லிமா மாறிட்டா பண்ணிக்கிடலாம் தடையில்ல. இல்லை ஒரு முறையற்ற காதல் வந்துவிட்டது. அதன் படி அந்த பெண் சகோதரி முறையாகிறாள். நான் கல்யாணம் பண்ணக் கூடாது. ஆக முஸ்லீம் ஆகிட்டா பண்ணிக்கிடலாம்.
இன்னொரு முறையற்ற காதல், வயதான பெண், இளைஞன் முஸ்லிமா மாறிட்டா பண்ணிக்கிடலாம். இன்னொரு காதல், முதல் மனைவியின் சம்மதம் கிடைக்கவில்லை, முஸ்லிமா இருந்தா பண்ணிக்கிடலாம். எல்லாமே பாத்தீங்கன்னா திருமண உறவுகளுக்கான தேவையை அடிப்படையாக கொண்டுதான் மதமாற்றம் நடைபெற்றது ஒரு 80 சதவிகிதம். சமூக பொருளாதாரத்திற்காக மதம் மாறியது ஒரு 15 சதவிகிதம். வெறும் கொள்கைகளை கேட்டு, அந்த கொள்கையினால் கவரப்பட்டு, மதம் மாறியவர்கள், ரொம்ப, கம்மி. ஒரு மதத்தோட கொள்கைகளைக் கேட்டு, ஆராய்ச்சி பண்ணும் போது, ஆட்டோ மேட்டிக்கா தன்னோட மதத்தினுடைய கொள்கைகளை தேடி பிடிச்சி படிக்கிற இயல்பு வந்திடும். அப்படி படிக்கும் போது கம்பேரிசம் வந்திடும். கம்பேரிசம் வரும் போது இங்கிருக்கிறது தான் அங்கேயும் இருக்கு. அங்கே இருக்கிறதுதான், இங்கேயும் இருக்கு. அத விட இங்கேயே பெட்டரா இருக்குனு தெரிய வந்திடும்.
அதனால என்னவாயிடுது, முதலிலே மனமாற்றம், மனசு மாறுது. இந்துத்துவ கொள்கையில் இருந்து மாறி மனசு மாறுது. என்னனு மனசு மாறுது? சகோதரியாக படவேண்டியவள், தாயாக பட வேண்டியவள், வயதில் மிக அதிக வித்தியாசம், தன்னுடைய பெண்ணாக, பேத்தியாக, பார்க்கப்பட வேண்டியவள், அவங்கள வந்து ஒரு திருமண உறவு செய்யணும், என்ற மன மாற்றம்.
மன மாற்றத்திற்கு பிறகு என்னவாயிடுது? மத மாற்றமாகிறது. மத மாற்றத்துக்கு பிறகு என்னவாகிறது? தடுமாற்றம், ஏனென்றால் இவை எல்லாம் சிற்றின்பம், கொஞ்ச நாள்ல அலுத்து போகிறது, பேரின்பம் உண்மையான சந்தோசம், பகவானை எண்ணி நற்செயல்களை எண்ணி, நாம செய்த எத்தனையேப் பேருக்கு செய்த உதவிகளை எண்ணி, கிடைக்கக் கூடிய பேரானந்தம். எவ்வளவுபெரிய ரவுடியா இருந்தாலும், காமுகனாக இருந்தாலும், அப்ப அடடா இப்படி பண்ணிட்டோமே, கடைசி யில மிஞ்சுவது, ஏமாற்றம்.
எனவே மன மாற்றம் மதமாற்றம் ஆகி, மத மாற்றம் தடுமாற்றமாகி, தடுமாற்றம் ஏமாற்றமானது. அப்புறம் அன்பார்சுனேட்டிலி இந்தக் கதவு தொறந்து வைக்கப் படவில்லை, உள்ள பெருபாலும் யாரும் வாங்க வாங்க திருந்திட்டிங்களே என்று யாரும் சொல்லுவது இல்லை. ஏன்னா அந்த செயல்கள் அப்படியே நிற்கிறது. வெறும் கொள்கைளுக்காக மாறி இருந்தாங்க அப்படினா, எங்க கொள்கைகளை ஒத்துக்கிட்டிங்க வாங்கனு சொல்லலாம். ஆனால் திருமண உறவு முறைகள்ல, மற்ற முறைகள்ல செயல்கள் அப்படியே நிற்கிறது. அதனாலதான் ஏமாற்றமாக மாறி வெளியில நிக்குறாங்க.
எனவே, அன்பு நண்பர்களே, எடுத்துச் சொல்லுங்கள். உங்களுக்கு தெரிந்தவர்கள், திருமண தேவைகளுக்காக மதம் மாறியிருந்தால், ரொம்ப யோசிக்கட்டும், நிதானமாக யோசிக்கட்டும், ரெண்டு வருஷம் யோசிக்கட்டும், மூணு வருஷம் யோசிக்கட்டும். இது மூட நம்பிக்கை நிறைந்த மதங்கள் என்று இருந்தால், படிக்கட்டும், தெரிந்து கொள்ளட்டும், அறிந்து கொள்ளட்டும். அர்த்தமுள்ள இந்து மதம் என்று அறியவேண்டும் என்றால், அந்த கண்ணதாசனோடு புத்தகங்களை வாங்கிப் படிக்கட்டும். அறிவியல் பூர்வமான இந்துமதம் என்று அறியவேண்டும் என்றால், இதை அவர்களே அறிந்து கொள்ளட்டும். நான் பேசுறதைத்தான் கேட்கணுமுண்னு இல்ல.
எனவே இந்த நாட்டினுடைய பண்பாட்டையும், புனிதத் துவத்தையும், உயரிய நெறிகளைக் கட்டிக் காப்பதற்காக, நாம் அனைவரும், இந்து தத்துவங்களை பற்றிய, நம்முடைய அறிவையும், அனுபவத்தையும், பெருக்கிக் கொள்ள வேண்டும். நன்றி, வணக்கம்.
Original Audio posted in WhatsApp Group ‘Science is Hinduism’ on 27 May 2021.