Image courtesy: https://www.impulsiveinfo.com/widowhood-and-remarriage-in-sanatan-dharma/
பெண்கள் திரும்பவும் கல்யாணம் பண்ணிக் கொள்ளலாம். ஆண்கள் திரும்ப கல்யாணம் பண்ணிக் கொள்ளலாம் என்று ஏற்கனவே வைத்திருக்கிறார்கள். பெண்கள் திருமணம் செய்து கொள்ளலாம், தாராளமாக. அப்புறம் பிரியாணி. ஒரு அருமையான ஃபுட்டு. இது இரண்டும் இஸ்லாம் சம்பந்தப்பட்டது. இது இரண்டும் இஸ்லாமியத்தில் தான் இருக்கின்றது என்று நிறையபேர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த பிரியாணிக்கு ஆசைப்பட்டு பிரியாணி செய்பவர்களைக் கல்யாணம் பண்ணிக்கொண்ட நாகரிகமான பெண்களைக் கூட எனக்குத் தெரியும். எனக்கு கொஞ்சம் சிரிப்பாகவும் மனசுக்குக் கஷ்டமாகவும் கூட இருக்கும். இந்து மதமென்றால் வெஜிடேரியன் என்று ஒரு சிலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். இதன் ஒரு பிரிவாகத் தான் அந்தணர்களை வைத்துக் கொண்டிருக்கிறோம்.
அந்தணர் என்பவர்கள் தீயதில் ஈடுபட மாட்டார்கள். வெறும் அறத்தை மட்டும் பேணுவார்கள். கோயிலைப் பேணுவார்கள். அறநெறிகளை எடுத்துச் சொல்வார்கள் என்று. அதற்கென்று ஒரு குருப் தேவைப்படுது. ஏனெனில் கிறிஸ்டியானிட்டியிலியும் இதுபோன்று வைத்திருக்கிறார்கள். இஸ்லாமியத்திலேயும், இதுபோன்ற மதபோதகர்களை வைத்திருக்கிறார்கள். அவர்கள் அந்த கட்டாயத்தில் இருக்கிறார்கள். அதனால், அவர்களுக்கு அறநெறியான வொர்க்கெல்லாம் நாம் கொடுப்பதில்லை. இது ஒன்றும் ஜாதியின் அடிப்படையில் இல்லை.
குலதெய்வத்தில் எல்லாம் கூட சொல்வார்கள். இந்த சாமி, யார் மீதாவது இறங்க வேண்டுமென்று, உன் குடும்பத்தில் ஒரு ஆம்பளையோட பேர குடுங்க. இந்த சாமிய இறக்கிட்டால், அவங்க பியூர் விஜிடேரியனா இருக்கணும். இந்த மாதிரியான கட்டுப்பாடுகள் எல்லாம் இருக்க வேண்டும். விருப்பப்பட்டவர்கள் விஜிடேரியனாக மாறும்போது, அவங்களோட தன்மையும் கொஞ்சம் கொஞ்சமாக மாறிவிடும். அது, விஜிடேரியன், நான்-விஜிடேரியன் என்பது இல்லை. ஒரு உணவு முறைகளில் கட்டுப்பாடு.
இந்து என்றாலே விஜிடேரியன் என்ற ஒரு தப்பான எண்ணம் இருக்கிறது. காரணம் பிராமணர்களை எல்லாம் பார்த்துவிட்டு அவர்களைப் போலத்தான் இந்துக்கள் என்று தவறாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். நாம, இந்துக்களென்றால், அவர்கள் அதிலொரு பகுதி. அவர்களுக்கு சில வேலைகளைக் கொடுத்திருக்கிறோம். மற்றபடி மெஜாரிட்டியாக நான்-வெஜிடேரியன் எல்லாரும் சாப்பிட்டுக் கொண்டுதான் இருக்கிறோம். முனிவர்கள், ரிஷிகள், சாமியார்கள் எல்லாம் அசைவ உணவு சாப்பிடுவதாக கதைகள், புராணங்கள் எல்லாம் இருக்கிறது. விசுவாமித்திரரைப் பற்றியெல்லாம் நான் சொல்லியிருக்கிறேன். அதனால பிரியாணி என்பது ஒரு சீப்பான எல்லாத்தையும் ஒண்ணா சேத்து நெருப்புல வேகப்போட்டு, டிஸ்ட்ரிபியுட் பண்ற சாப்பாடு அது. ஏனெனில் பாலைவனம் போன்ற இடங்களில் எல்லாம், ரொம்பப் பெரிய விருந்தெல்லாம் வைக்க முடியாது. கிடைக்கறதை எல்லாம் ஒண்ணா சேர்த்துப் போட்டு குக்பண்ணி, நெருப்புல நல்லா குக் பண்ணி, பிறகு சேர்த்து சாப்பிட்டுக் கொள்ள வேண்டியது தான்.
இது நாகரிகம் வளர்ந்து இருக்கும் போது, ஸ்டார்டர்டு, மெயின் கோர்ஸ், மிடில் கோர்ஸ், சூப்பு அது இதுன்னு நிறைய வெரைட்டீஸ வெச்சிருக்கோம். நாம் ஒவ்வொன்றையும் தனிப்பட சுவைத்து சாப்பிட்டு மகிழ்வோம். இந்தளவுக்கு அவங்களுக்குக் கொடுத்து வைக்கவில்லை. அதனால அவங்க ஒண்ணா வேகவைத்து சாப்பிட்டுக்கிட்டாங்க. அதவந்து நாம, டேஸ்டுன்னு நினைச்சிட்டு இருக்கோம். அதுல, நிறைய கொழுப்பு மசாலாவாத்தான் இருக்குது. இதுல நிறைய பிரியாணிய சாப்பிட்டால், ஹார்ட் அட்டாக் கேரண்டின்னு நிறையபேர் புரூவ் பண்ணியிருக்காங்க. அந்தளவுக்கு அதுல கொழுப்பும் தேவையில்லாததும் இருக்கு. சரி விடுவோம்.
இந்து மதத்திலே, பிரியாணியும் இருக்கு, மறுமணமும் இருக்கு. பிரியாணி என்றால் என்ன? உணவுப்பொருட்களோடு மாமிசத்தைச் சேர்த்து சமையல் பண்ணி, சேர்ப்பனவற்றைச் சேர்த்து, பக்குவப்படுத்தி செய்வது தான். நறுமணமும் இருக்கிறது. மறுமணமும் இருக்கிறது. பெண்கள் மறுமணம் செய்யக்கூடாது, வாழாவெட்டியா இருக்கணும், உடன்கட்டை ஏறணும்னு சொல்லியிருக்காங்க? அப்படியெல்லாம் ஒன்னும் கிடையாது. உடன் கட்டை ஏறுவதற்கான காரணங்கள் வேறு.
நளன், தமயந்தி வரலாறு. தமயந்தி என்பவள் பீமனோட பொண்ணு. நளனை சுயம் வரத்தில் கல்யாணம் செய்துக் கொண்டிருப்பார்கள். அந்த சுயம்வரத்தில் ஒரு சிக்கல் வந்தது. அதில் நாலுபேரும் நளனைப்போலவே, ஆடையணிந்து வந்திருந்தார்கள். அதில் தமயந்தி சரியான நளனைக் கண்டுபிடித்துவிடுகிறார். இப்போது, தேவர்கள் ஒரு சதிசெய்கிறார்கள். இந்த சதியிலே நளனை சூதுக்கு அழைத்து, எல்லாவற்றையும் பிடுங்கிக் கொண்டு ஒன்னும் இல்லாதவனாக ஆக்கிவிடுகிறார்கள். வெறும் கோவணத்தோடு, தமயந்தியை அழைத்துக் கொண்டு காட்டுப்பகுதிக்கு வருகிறான். அந்தக் காட்டுப்பகுதியில் அந்தக் கோவணத்தையும் பிடுங்கிக்கிறாங்க சதி பண்ணி. எந்த ஒரு ஆடையும் இல்லாமல், மனைவியின் ஆடையில் ஒரு சிறுபகுதியில் இவரும் மூடிக் கொள்கிறார்கள்.
பொண்டாட்டியாவது நிம்மதியாக இருக்கட்டும் என்று மனைவி தூங்கிக் கொண்டிருக்கும் போது அவளுடைய ஆடையில் சிறிதளவு கட்பண்ணி, அதை அணிந்து கொண்டு, மனைவியை விட்டுப் பிரிகிறான் நளன். அவள் எப்படியாவது அவளுடைய அப்பா வீட்டுக்கு சென்று விடுவாள். அவள் வசதியாக இருப்பாள் என்று. முழித்துப் பார்க்கும் போது, புருஷனும் இல்லை. ரொம்ப சிரமப்படுகிறார்கள் இந்தம்மா. அந்தக் கதையை நாம படிக்கும் போதே கண்ணீர் வர்ற மாதிரி இருக்கும். நளனும் ரொம்ப சிரமப்படுகிறான். அதைக் கேட்கும் போதும் கண்ணீர் வர்ற மாதிரி இருக்கும்.
ஒரு வழியா தமயந்தி, அப்பா வீட்டுக்குப் போய் சேந்துடுவா. இவனும் அங்கே போய் இங்கே போய், ஒருவீட்ல வேலையாளா இருந்து விடுகிறான். இவரு தேரோட்டுவதிலும், குதிரை விடுவதிலும் முதல் ஆளாக வருகிறார். நளன் சென்னையிலிருந்து மதுரைக்கு ரெண்டு மணி நேரத்திலேயே போகக்கூடிய ஒரு சூப்பரான டிரைவராக இருந்தார். தன்னுடைய பெண்ணின் நிலைமையைப் பார்த்து பீமன் மாப்பிள்ளையை கண்டுபிடிக்க வேண்டும் என்று, நாடெங்கும் ஆட்களை அனுப்புகிறார். மாப்பிள்ளை நளன் நோய் வாய்ப்பட்டு உருவமெல்லாம் மாறி உள்ளதால், அவரைப் கண்டுபிடிக்க இயலவில்லை. அதுக்கப்புறம், ஊரெல்லாம், நாடெல்லாம் தேடிவரும் போது, ஒருத்தர் சொல்றாரு. இந்தாளு, இங்கே தான் வேலைப் பாத்துக்குட்டு இருக்காரு. இவரு நளனா இருப்பாரோன்னு எனக்கு டவுட்டா இருக்குன்னு சொல்றார்.
அங்கே தமயந்தி ஒரு ஐடியா பண்றாங்க. நளனாக இருந்தா, இவ்வளவு குதிரையும், தேரையும் ஓட்டக் கூடிய திறமையுடையவர். இத்தனை மணிநேரத்தில், இவ்வளவு கிலோமீட்டர் ஓட்டக்கூடிய ஒரேநபர் அவர்தான். அதனால எனக்கு மறுமணம்னு டிக்ளேர் பண்ணுங்க. திரும்ப சுயம்வரம் நடத்த வேண்டும் என்று டிக்ளேர் பண்ணுங்க. அதுல குறிப்பா, நளன் இருக்கும் இடத்துக்கு அவங்களோட செய்தி எல்லாம் போறது போல் பண்ணுங்க.
பாருங்க, மறுமணம் என்பது அப்போதே இருந்துருக்கு. சுயம்வரம் என்பதை அதிகாரப்பூர்வமாகவும், அறிவியல் பூர்வமாகவும், எந்த இடத்தில் கணவனைக் கண்டே பிடிக்க முடியவில்லை என்ற நினைக்கிறார்களோ, அந்த இடத்தில் கணவைனைக் கண்டறிய அந்தப் பொண்ணுக்கு சரியான வயதாக இருந்ததால் வாழ்க்கை துணையை மாற்றியமைக்க டிக்ளேர் பண்ணலாம். “மறுமணம்”. அதனால இந்து மதத்திலே மறுமணம் இல்லையென்று யாரும் நினைத்துக் கொள்ளாதீர்கள். அந்த மறுமணத்துக்கு சுயம்வரமே இருக்கு. முதலில் சுயம்வரம் போன்றே பண்ணலாம் என்று டிக்ளேர் பண்றாங்க.
அந்தக் குறிப்பிட்ட ஆளுக்கிட்ட, நளன் கிட்டப் போய் செய்தி சேருது. அதாவது நளன் வேலைப் பார்க்கக்கூடிய அவன் முதலாளி. ஆஹா, இதுமாதிரி, நளனை, தமயந்தி பிரிந்துப் போனதால் திரும்ப சுயம்வரமே டிக்ளேர் பண்ணிட்டாங்க. நாமப்போய் கலந்துக் கொண்டு ஜெயிக்கலாம். என நினைத்த அவன் முதலாளி, ‘உடனே, டிரைவர் வண்டிய எடு!’.
டிரைவர் யாரு. நம்ம நளன் தான். இவர் தான் டிரைவிங் செய்வதில் திறமையானவர். இவர் தான் ரெண்டே மணிநேரத்தில் ஓட்டிக்கொண்டு வரும் திறமையானவர். மறுமணம் என்ற ஒரு பழக்கம் இருந்ததினால், மறுமணம் என்று டிக்ளேர் பண்ண சொல்லியிருக்காங்களே ஒழிய, இந்தப் பொண்ணு உண்மையிலேயே மறுமணம் செய்து கொள்ள டிக்ளேர் பண்ணல. புருஷனக் கண்டுபிடிக்க அவங்க ஒரு டிரிக் வெக்கறாங்க. அதோபோல், நளளின் முதலாளி ஜிவ்ஜிவ்வுன்னு வந்து சேர்ந்துட்ராங்க.
வந்து பார்க்கும் போது, மாளிகையிலே நின்று பார்க்கின்ற தமயந்திக்குத் தெரிகிறது. தன்னுடைய கணவனால், மட்டுமே இப்படி வரமுடியும். அதனால யாரு வண்டியை இயக்கியது என்று பார்த்தால், கருப்பா, குட்டையா, கையெல்லாம் சின்னதா, பார்ப்பதற்கே அகோரமானவனாய் இருந்தான் நளன்.
ரொம்ப 100 சதவீதம் உறுதியாக இதுதான் நளனென்று கண்டுபிடிக்க முடியாது. அதனால, இந்தம்மா என்ன பண்றாங்க. தன்னுடைய தோழியை, வேலைக்காரப் பெண்ணைத் திரும்ப திரும்ப அனுப்புறாங்க. தேடிப்பார்க்க சொல்லி. பிறகு அந்தம்மா ஒரு டெஸ்ட் வெக்கறாங்க பாருங்க. புருஷன் நளன் சூப்பரா பிரியாணி பண்ணுவாரு. அவரு நான்வெஜ் மாமிசத்தை ரெடிபண்ற பக்குவமே தனி. ரொம்ப ஸ்பெஷலா பண்ணுவாரு. அவரு இன்னிக்கு விருந்துக்கு சமையல் பண்றாரு. ஏன்னா, அவர வேலைக்காரனா தானே எல்லாரும் பாக்கறாங்க. அவரு சூப்பரா, சுடுதண்ணில நல்லா கழுவி வெச்சிருக்கற மாமிசத் துண்ட எடுத்துக்கிட்டு வா, நைசா திருடிக்கிட்டு வந்து குடுத்துடுது. அதை முகர்ந்து பார்த்துவிட்டு, உண்டு பார்த்துவிட்டு, ஆம் இது நளன், என்னுடைய கணவன்னு கண்டு பிடிச்சிடுச்சு, அதுக்கப்புறம் ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கலாம்னு சொல்லுது.
நளன் சொல்றாரு, நான் வந்து இருக்கேன்னு தெரியும்ல, அப்புறம் எதுக்கு நீ இரண்டாவது திருமணத்துக்கு சம்மதிச்ச. இது தப்பில்லாயான்னு கேக்கறாரு. அந்தம்மா சொல்றாங்க. எனக்கு அப்பவே தெரியும். நீங்க தான் ரெண்டே மணிநேரத்தில் வண்டிய ஓட்டிட்டு வந்துட்டீங்க. அதனால எனக்கு உங்களாலத்தான் இதை செய்ய முடியும் என்று தெரிந்து விட்டது. நாங்க ஒன்னும் கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணவில்லை. சும்மா, ஒரு தண்டோரா தான் போட்டோம். நீங்க தான்னு கண்டுபிடிச்சிட்டோம். அதனால, அது தவறல்லன்னு சொல்றாங்க. மத்தவங்களும் அது தவறல்லன்னு சொல்றாங்க. இந்து மதத்துல, எல்லாரும் சொல்றாங்க. என்னதான் இருந்தாலும் கட்டின மனைவியை நடுராத்திரில நீங்க விட்டுட்டுப் போனது சரியில்லன்னு சொல்றாங்க. அப்புறம் ஒன்னு சேர்ந்திருக்காங்க.
இந்த நளபுராணத்தில் இருந்து நமக்கு தெரிய வேண்டியது என்னவென்றால், பிரியாணி இங்கே இருந்தது தான். பிரியாணி ஒன்னும் அரபு நாட்டுப் பதார்த்தம் அல்ல. அதனால பிரியாணிக்கு ஆசப்பட்டு பெரிய பீஸா கிடைக்குதுன்னு போயிடாதீங்க. மறுமணமும் எங்கே தேவைப் பட்டதோ, அங்கே அனுமதிக்கப்பட்டது தான். மறுமணமே இங்க கிடையாதுன்றது இல்ல. ஆனாலும் ரொம்ப அபூர்வமாகத்தான் நடக்கும்.
ஏனெனில் திருமண உறவு என்பது ரொம்ப ஸ்ட்ராங்கா வெச்சிருக்கோம். அவ்வளோ ஈசியா, டைவர்ஸ் பண்ண முடியாது. டைவர்சப் பத்திப் பேசவும் முடியாது. அதை நாம நினைத்துக் கூடப் பார்க்க முடியாது. அதையெல்லாம் தாண்டி ஒரு சந்தர்ப்பம் வந்து, இன்னொரு வாழ்க்கை துணை தேவையென்றால், ஒரு புதுப்பெண்ணுக்கு இருக்கக்கூடிய அதே ப்ராசஸ், அதே சுயம்வரம் எல்லாம் வைக்கிறார்கள் என்பதைப் புரிந்துக் கொண்டு, அறிவியலே இந்து மதம். அறிவியலின் அத்தனை ஆக்கக்கூறுகளும் இங்கே இருக்கின்றன என்பதைப் புரிந்து இளைய தலைமுறைகளும், புதிய தலைமுறைகளும் மற்றவர்களும் தெரிந்து கொள்ளுங்கள் என்று சொல்கிறேன். நன்றி, வணக்கம்.
Original Audio posted in WhatsApp Group ‘Science is Hinduism’ on 18 June 2018.