இந்துக்களோட பழக்க வழக்கங்களைக் குறை சொல்பவர்கள். சிலர் வெளியாட்கள். அதிலொன்று இந்த சாமியாடுவது. சில சமயங்களில் நமக்குக் கூட சங்கடமாக இருக்கும். பஸ்களில் வெளியூர்களில் போகும்போது, ஒரு சின்ன திருவிழா நடக்கும். பெண்கள் எல்லாம் சாமியாடிக்கிட்டு இருப்பாங்க. அதுக்கப்புறம் திருப்பதி, பழனி போன்ற முக்கியமான இடங்களுக்கு செல்லும் போது, நம்முடைய உறவினர்கள் சாமியாட ஆரம்பிச்சி விடுவாங்க.
தன்னை அறியாமல், உரத்த குரலில் கோவிந்தா, முருகான்னு கூக்குரல் போடுவாங்க. சத்தம் போடுவாங்க. அறிவு, நாத்திகத்தை நோக்கி இழுக்கிறது. அன்பு, அனுபவம் ஆத்திகத்தை நோக்கி இழுக்கிறது. ஆத்திகவாதிகள் சிலசமயம் வெறுத்துப் போய் நாத்திகவாதிகளாக மாறுகின்றார்கள். பால்தாக்கரே, சிவசேனா மாதிரி. நாத்திகவாதிகள் சிலசமயம் அனுபவித்து, ஆண்மீகவாதிகளாக ஆகிறார்கள். என்னைய மாதிரி, கண்ணதாசன மாதிரி.
கலைஞர் கூட மாறிக்கிட்டு இருந்தார் என்று எனக்கு ஒரு டவுட்டு உண்டு. அவர் இராமானுஜத்தைப் பற்றி எழுதுவதைப் பார்க்கும் போதோ, சாய்பாபாவே அவரைத்தேடி வீட்டுக்குப் பார்க்க போகும் போதோ, ஒரு பிணைவு ஏற்படுகிறது என்ற எண்ணம் எனக்கு உண்டு. ஏன் சிலபேர் சாமியாட்ராங்க? நான் வந்து முழு நாத்திகனாக இருக்கும் போதுக் கூட திருப்பதிக்கு போயிருக்கிறேன். அப்ப, நான் வந்து பேருக்கு எல்லார் கூடவும் இருப்பேன். பேருக்கு, எல்லாரும் சாமி கும்பிடுகிறார்களே என்று நானும் சாமி கும்பிடுவேன். பேருக்கு உண்டியலில் போடுவேன். பல்லாயிரக்கணக்கான மக்கள் நம்பிக்கையோடு வருமிடத்தில், எனக்கு நம்பிக்கை இல்லையென்றால் கூட, அதை வெளியே காட்டுவது மனித நேயம் அல்ல.
மற்றவர்களின் பண்பாட்டையும் மதிக்க வேண்டும் என்று நினைப்பேன். அப்பேர்ப்பட்ட எனக்கு, கடவுள் வந்து ஒரு ஆத்திகத்தைக் கொடுத்துவிட்டார். நானும் மாறிவிட்டேன். மாறிய பிறகு சிலசமயம் நான் அந்த நாத்திக உலகத்தில் இருந்தபோது, இருக்கின்ற பல பழக்கங்கள், எண்ணங்கள் இருந்ததினாலே, சாமியெல்லாம் நான் ஆடமாட்டேன். ஆனால், நான் அதே வெங்கடேச பாலாஜியை நம்பிய பின்னர், அந்தாளு வந்து பாவம். அருள் கொடுத்துவிட்டு என்னை ஆட்கொண்டு விட்டார். அடுத்த முறை போகும்போது, அதே மண்டபம், அதே கோயில், அதே கியூல போறேன். அந்தக் கர்ப்பக் கிரகத்தை நெருங்கும் போது, கோவிந்தா கோவிந்தா என்று சொல்லும் போது என்னை அறியாமல் அழுதபோது எனக்கு உடம்பெல்லாம் குலுங்குது.
அட பகவானே, உன்னப் போய் நான் நம்பாமல் இருந்தேனே. உன்னை நினைத்துப் பார்க்காமல் இருந்தேனே. நீ தேடி வந்து எனக்கு அருள்பாலித்தாயே என்று நானும் கோவிந்தா, கோவிந்தா என்று கத்த, என் மனைவி கூட என்னை ஆச்சர்யமாகப் பார்க்கிறார்கள். பக்கத்துல போகும்போது, கண்ணீர் விட்டு, தொழுது, கைகூப்பி, போதும்பா. எனக்கு தரிசனம் கொடுத்துட்டாரு. எனக்கு இதுபோதும். உணர்ச்சி பெருக்கிற்கு ஆண்டவனைக் காணுதல், அனுபவம் சார்ந்த ஒன்று. அனுபவித்தால் மட்டும் தான் முடியும். அதை நான் குறை சொல்ல முடியாது. இந்த உணர்ச்சி பெருக்கீடு என்பது.
கிராமப்புறத்தில் இருக்கின்ற பெண்களாக இருக்கின்ற அவர்கள் ரொம்ப நாலேட்ஜை வளர்த்துக் கொள்ளவில்லை. படிப்பறிப்பு கம்மியாக இருக்கும் போது, உணர்ச்சிப் பெருக்கீடு அதிகமாக இருக்கின்றது. ஒரு நாலேட்ஜில் இருக்கிறோம். நன்றாகப் படித்தவர்களாக இருக்கிறோம். கொஞ்சம் அறிவியல் சம்பந்தப்பட்ட விஷயங்களாக இருக்கும் போது, கம்மியாக இருக்கும். ஆனால், உணர்ச்சிப் பெருக்கீடு வரும்.
கிராமப்புறங்களில் ஒருத்தர் தவறிட்டாரென்றால், அத்தனை பேரும் கட்டிப்பிடித்து அழுவார்கள். நகரங்களில் அதே உணர்ச்சிகள் இருந்தாலும், ஒருத்தரை ஒருத்தர் அமைதியாக வாய்க்குள்ளேயே உம்முன்னு அழுது கொண்டு இருப்பார்கள். இவங்களுக்கு பாசம் கம்மி. அவங்களுக்கு, பாசம் ஜாஸ்தி என்பது இல்லை. அறிவு என்பது நிறைய வரும்போது, உணர்ச்சிகளை கட்டுப்படுத்திக் கொள்கிறோம். அந்த உணர்ச்சிகளை கட்டுப்படுத்திக் கொள்வதினால், அதே பகவான் முன்னாடி நாம் சாமியாடாமல் உணர்ச்சிகளை கட்டுப்படுத்திக் கொள்கிறோம். அதனால அந்த சாமியாட்றவங்கள நாம தப்பா நினைக்கக் கூடாது. ஆனால், சாமியாடும் போது, காலப்போக்கில் வந்து சிலசமயம், சுயநலம் பேணும் போது, ஒரு ஆக்டிங்காக பண்ணக்கூடிய விஷயமும் உண்டு. அப்போது நாம் நிரூபிக்கவேண்டியது தான். இது ஒன்றும் மதம் சார்ந்ததல்ல, மனம் சார்ந்தது.
எந்த மதத்திலேயும் அப்படி இருக்கலாம். மற்ற மதங்களில் கூட சாமியாடுவது போன்று இருக்கலாம். அவர்கள் பிரார்த்தனை செய்யும் போது, நான் உனக்கு பாத்திரம் ஐயா என்று சொல்வார்கள். ரொம்ப பண்பட்ட இஸ்லாமியர்கள் போல் இருப்பவர்கள் கூட அந்த தோற்றத்தில் வந்து, மற்றவர்களை ஏமாற்றுவது என்பதெல்லாம் நிறைய வரும். எனவே, பகுத்தறிவோடு அணுகவேண்டும் சிலசமயம். அப்படியே நாம வந்து சரண்டராகி விடக்கூடாது.
அன்போடும், அறிவோடும், ஆன்மீகத்தோடும் அணுக வேண்டும் சில சமயம். நாம, அப்ஜெக்ட் பண்ணி அவங்கள அசிங்கப்படுத்தி விடவும் கூடாது. ஆன்மீகம் என்பது அனுபவம் சார்ந்த ஒன்று. அனுபவத்திற்குப் பின்னால் தான் நமக்கே தெரியுது. நாத்திகம் என்பது அறிவியல் சார்ந்த ஒன்று. அறி வியலுக்குப் பின்னாடி போகப்போக அது ஜாஸ்தியா வருது. வடதுருவமும், தென்துருவமும் போல இரண்டும் மாறுபட்டு இருந்தாலும், இரண்டும் இணைவதிலேயே குறிக்கோளாக இருக்கின்றன. அதனாலத்தான் உலகமே இறுக்கிப் பிடிச்சிக்கிட்டு இருக்கு. யோசித்துப் பாருங்க.
வடதுருவம் வடக்கில் இருக்கு. தென்துருவம் தெற்கில இருக்கு. ரெண்டும் ஒரே கோட்டில் போக வேண்டும் என்றால் உலகமே சிதறிவிடும். ரெண்டும் ஒட்டிக்கிட்டு இருப்பதினால் தான் நாமும் அதில் ஒட்டிக்கொண்டு இருக்கிறோம். எனவே, ஒரு நல்ல ஆன்மீகவாதி, நாத்திகத்தையும் மதிப்பான். ஏனென்றால், கடவுள் அவர்களை நல்லா ரெடியாக வைத்திருக்கிறார். அறி வியலை பயன்படுத்த வேண்டுமென்று. ஒரு அறிவியல் வாதி ஆன்மீகத்தையும் மதிப்பான். கொஞ்சம் ரெண்டுமே ஒரு அளவாக இருப்பவர்கள், ஒருத்தரை ஒருத்தர் ஏத்துக்கிட்டு இருப்பாங்க. ஒரு சமயத்தில் வந்து ரிலீஸ் பண்ணுவாங்க.
சாமியாடுதல் என்பது பரவசநிலை. அந்த பரவசநிலை, அறிவியலின் தாக்கத்திற்கு உட்பட்டு, எங்கே அறிவியலின் தாக்கம் கொஞ்சம் குறைவாக இருக்கிறதோ, கொஞ்சம் ஈசியா வந்துடும். அறிவியலின் தாக்கம் அதிகமாக இருக்கும் போது, கொஞ்சம் லேட்டா வரும். நல்லா, டீசன்டா, ஹைலி எஜிகேட்டட் பீப்பிள் வந்து ஒரு மரணத்தைப் பார்க்கும் போது, அழுகைகளை அடக்கிக் கொண்டு, அதிலே அளவா அழுகிற மாதிரியும். கிராமப்புறங்களில், வந்து சொந்தக்காரங்களாகவே இல்லாவங்களக் கூட கத்தி அலறிக்கிட்டு, ஓடிப்போய் அழுகுற மாதிரியும், நிகழக்கூடியதெல்லாம் இதுல தான்.
எனவே சாமியாடுதல் என்பதில் எனக்கு நம்பிக்கை யில்லை என்று நீங்கள் சொன்னீர்கள் என்றால், அது கரெக்டு தான். ஏன்னா, நீங்க ஆடினது கிடையாது. அந்தப் பரவச நிலையை அடைந்தது கிடையாது. இந்த சாமியாடுபவர்கள் போலித்தனமாக இருப்பது போலிருந்தாலும் அதில் கொஞ்சம் உண்மை இருக்கலாம். திரும்ப திரும்ப ஆடும்போது சிலப்பேர் ஏத்துக்கொள்ள ஆரம்பிச்சிடுவாங்க. ஆனால் நம்முடைய உற்றார், உறவினர், தெய்வத்தின் சன்னதியிலே, ஆலயத்திலே தெய்வத்தை நினைக்கும் போது, பரவச நிலையை அடைந்து அவனையே சரணாகதியென்று ஆடும்போது, அவர்கள் மனநிலையில் உச்சத்தில் இருப்பதினால், நாம ஓரளவு அவங்கள மதித்து, அவர்களை சாந்தப்படுத்தி வைத்துக்கொள்ள வேண்டும் என்பது தான் உண்மை.
இந்த சாமியாடுதல் என்பது குற்றமல்ல. கொள்கையும் அல்ல. தூக்கிப்பிடிக்கக் கூடிய உயரிய பண்பாடுமல்ல. உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் ஒரு முறை. கன்ட்ரோல் இல்லாம வந்துடுது. பெரும்பாலும் கன்ட்ரோல் பண்ணனும்னு பார்க்கிறோம். சிலசமயம் உணர்ச்சிகளை அடக்க முடிவதில்லை. அந்த உணர்வு வேறுவேறு விஷயங்களில் நமக்கும் வரலாம். உணர்ச்சி பெருக்கெடுத்து நான் இப்படி பண்ணிட்டேன். உணர்ச்சி வசப்பட்டு நான் இப்படி பண்ணிட்டேன் என்று தன்னுடைய வாழ்நாளிலே சொல்லாதவர்களே இருக்க மாட்டார்கள்.
உணர்ச்சி என்பது உடலுக்குள்ளே உறங்கிக் கொண்டிருக்கும் ஒரு உணர்வு. அதை திடீரென தட்டி எழுப்ப முடியாது. இறைவனைப் பற்றி நினைக்கும் போது, இஷ்ட தெய்வங்களைப் பற்றி நினைக்கும் போது, அது திடீரென்று பெரிய ஆர்ப்பாட்டமாக வரும். தனிமனிதப் புரட்சி. இந்த தனிமனிதனுக்கு உள்ளே இருக்கக்கூடிய எண்ணங்கள், பீறிட்டு வருகிறது. எனவே சாமியாடுதல் என்பது சாத்தான் பிடிச்சிக்கிட்டு இருக்கென்று என் கண்முன்னே திட்டுவதையெல்லாம், நான் பார்த்திருக்கிறேன்.
சாத்தானை பார்த்து ஏன் பயப்படுகிறீர்கள்? சாத்தானென்ற கான்செப்டே இதில் கிடையாது. தவறுகள் செய்யக்கூடாது என்பதற்காக, நரகம் என்ற ஒரு கான்செப்ட வெச்சிருக்கோம் நாம். ஏன்னா, குழந்தைகளுக்கு ஈசியா எடுத்துச் சொல்ல வேண்டும். தப்பு செய்தால், அந்த மாதிரி ஆகிவிடும் என்று, சாத்தான் என்கிற கான்செப்டு, சிலபேரிடம் தான் உள்ளது. தெய்வங்களெல்லாம் உயரியவை. தெய்வங்களெல்லாம் உதாரணமாக இருக்கிறார்கள். தெய்வங்களும் தவறு செய்யும். தெய்வங்களும் தண்டனை அனுபவிக்கும். அதற்கு தகுந்தாற் போல், நாமும் நம்மை கவனித்து செய்யும் தவறுகளையெல்லாம் சீர் செய்ய வேண்டும். அதற்கான தண்டனை களையெல்லாம் ஏற்றுக்கொண்டு முடிந்தவரை தவறு செய்யாமல் அமைதியாக நல்ல ஒரு வாழ்க்கையை சந்தோஷமாக வாழ்ந்து கொண்டு யாருக்கும் எந்த கெடுதலும் நினைக்காமல், நிறைவாக சமுதாயத்தோடு கலந்து இருக்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்தோடு நினைப்பது தான் இந்து மதம்.
எனவே, அடுத்தமுறை ஒருவர் சாமியாடுகிறார் என்று நீங்கள் நினைத்தீர்களானால், வெறுப்போடு பார்க்க வேண்டாம். விருப்போடு பாருங்கள். அமைதிப்படுத்துங்கள். அறிவியலின் பல்வேறு ஆக்கக் கூறுகளிலே சைக்காலஜி, (உளவியல் துறை). அதில் ஒரு பகுதியாக இருந்து கொண்டிருக்கிறது. இதை நாம் அறிவியலாகவும் பார்க்கலாம். ஆன்மீகமாகவும் பார்க்கலாம். இரண்டும் ஒரு இடத்திலே போய் சங்கமிக்கின்றன என்ற கருத்தை அறிவியலாளர்கள் உணர்ந்திருக்கிறார்கள். ஆன்மீகவாதிகளும் உணர ஆரம்பித்திருக்கிறோம்.
எனவே சாமியாடுதல் என்பது உணர்ச்சிப் பெருக்கீடு. அது எல்லாருக்குமே வரும். நாத்திகர்களுக்கும் வரும். நாத்திகர்களுக்கு உணர்ச்சிப் பெருக்கீடாக வரும் போது, அவர்கள் அதை ஒரு ப்ரோகிராமாகப் போட்டு, கடவுள் இல்லை என்று கத்திக்கிட்டு, பைத்தியம் பிடிச்சா மாதிரி ரோட்ல சொல்லுவாங்க. உணர்ச்சிப் பெருக்கிடு தான். அமைதியா இருக்கலாம்ல அவங்க. கிறிஸ்தவர்களுக்கும் வரும். திடீரென உணர்ச்சிப் பெருக்கெடுத்து ஐயா, காப்பாத்து, என்று கண்ணீர் விட்டு மல்குவார்கள். இஸ்லாமியர்களுக்கும் வரும். அவர்கள் அடிமைப்படுத்தப்பட்டு சுதந்திரம் இல்லாமல் இருக்கிறார்கள். அதனால அவங்களுக்கு கொஞ்சம் கம்மியாக இருக்கு என்பதை ஒத்துக் கொள்ளலாம்.
அதனால் உணர்ச்சிகள் அதிகமாகும் போது இந்த நிகழ்வு நடக்கிறது. சாமியாடுவது, பரவச நிலைக்கு போவது. அங்கே உணர்ச்சிகள் ஆட்கொள்ளப் படாமல் கட்டாயத்தின் பேரில் இருக்கிறார்கள். அதனால் பரவசநிலை என்ற நிகழ்வு அங்கே நிகழ்வதில்லை. நடப்பதில்லையென்பதினால், அது பகுத்தறிவென்பதோ, நடப்பதினால் கிறிஸ்துவத்திலோ, இந்து சமுதாயத்திலோ, அது பகுத்தறிவு இல்லை என்றும் எடுத்துக் கொள்ள வேண்டாம். இங்கே சுதந்திரம் அதிகமாக இருக்கிறது. உங்களின் எண்ணப் பெருக்குகளை உள்ள உணர்வுகளை வெளிக்காட்டிக் கொள்வதற்காக நடக்கிறது. நன்றி, வணக்கம்.
Original Audio posted in WhatsApp Group ‘Science is Hinduism’ on 20 June 2018.