இந்து மதத்திலே பல சுவாரஸ்யமான நிகழ்வுகள் இருக்கின்றன. சில காலப்போக்கிலே நகைப்புக்குரிய விஷயமாகத் தோற்றமளிக்கின்றன. ஆழ்ந்து பார்த்தால் இங்கே துக்கம், துயரம், தைரியம், வீரம் புதைந்து கிடக்கிறது. எங்க குலதெய்வம்னு போனவங்க, கடைசியா என்ன பண்ணாங்கன்னா, ஒரு பெட்டியைக் காண்பித்து இந்தப் பெட்டிக்குள் தான் சாமியிருக்கு. இந்த பெட்டியை ஆத்துக்கு எடுத்துக்கிட்டு போவோம். அங்கே நல்லா கழுவுவோம், திரும்ப அந்தப் பெட்டியை தூக்கிக்கிட்டு வருவோம். அந்தப் பெட்டியைத் தான் சாமியாக கும்பிடுவோம். அந்தப் பெட்டியைத் திறக்கவே மாட்டோம். ஏன்னா, பெட்டிக்குள்ள சாமியிருக்குன்னு சொன்னப்ப, எனக்குக் கொஞ்சம் அதிசயமாகவும் சிரிப்பாகவும் தான் பட்டது.
என்னப்பா, பெட்டிக்குள்ள சாமிய வெச்சி பூட்டிட்டீங்களான்னு சொன்னேன் சிறு வயதில். ஏய், ஒழுங்கா கும்பிட்ரா, பெட்டி தாண்டா, சாமின்னு என்ன திட்னாங்க. சரின்னு கும்பிட்டு விட்டு வந்து விட்டேன். பல ஆண்டுகள் உருண்டோடின. கொஞ்சம் விவரமானது. நானும் கொஞ்சம் ஆன்மீகமானேன். அதுக்கப்புறம், குலதெய்வம் கோயில்களுக்கு போவெதெல்லாம் முக்கியமென்று எனக்குப் பட்டது. குலதெய்வத்தின் கோயில்களுக்கு திரும்பப் போனேன். இந்த தடவை கொஞ்சம் பயபக்தியாகக் கேட்டேன் நான்.
பெட்டிக்குள்ளே சாமியிருக்குன்னு சொல்றாங்களே? அது எப்படிங்க பெட்டிக்குள்ள சாமியிருக்கும்னு கேட்டேன். அப்ப அவங்க சொன்னாங்க. நம்முடைய முன்னோர்கள் 200, 300 வருஷத்துக்கு முன்னாடி, மதுரைல இருந்து ஓடி வந்தாங்க. முஸ்லீம்களால் தாக்கப்பட்டு, அப்படியே வைகைக் கரை வழியாக ஓடிவரும் போது, நம்முடைய பெண்கள் மான பங்கப் படுத்தப்பட முயற்சி செய்யப்பட்டார்கள்.
கொஞ்சம் அழகான பெண்களாக இருந்தால், வற்புறுத்தி இழுத்துக்கிட்டு போய் உறவு வைத்து, அவர்களை முஸ்லீம்களாக மாற்றி விடுவதை வழக்கமாக வைத்திருந்தார்கள். தப்பித்து வந்து, எதிரிகள் ரொம்ப நெருங்கும் போது, இதே மண்ணுல தீக்குளித்து இறந்து இருக்காங்க. தீக்குளித்து இறந்ததினால், இந்தப் பெண்ணை அடைய முடியவில்லையே என்று நினைத்து எதிரிகள் திரும்பவும் ஓடிவிட்டார்கள். அதுக்கப்புறம், உறவினர்கள் ஒளிஞ்சி இருந்து சுற்று வட்டாரத்தில் தேடி மிச்சம் மீதியிருந்த அவர்களுடைய உடைகளை எல்லாம் பெட்டிக்குள் வைத்து, இவர்கள் நம்முடைய குலதெய்வம். இவர்களின் வழியை நாம் காப்பாற்றி வருவோம். நாம எல்லாரும் ஒன்னு சேருவோம். வருஷத்துக்கு ஒருமுறையாவது கும்பிடுவோம்னு வெச்சிருக்கோம்.
இதை கேட்டபின் எனக்கு கண்ணீர் வந்து விட்டது. இவ்வளவு பெரிய வீரம் இங்கே ஒளிந்து கிடக்கிறது. இவ்வளவு பெரிய சத்தியம் இங்கே ஒளிந்து கிடக்கிறது. இவ்வளவு பெரிய துக்கமும் துயரமும் இங்கே ஒளிந்து கிடக்கிறது. அதை நாம் மறந்து விடக்கூடாதுங்கறதுனால, அந்தப் பெட்டியைப் பாதுகாத்து, அந்தம்மா உடுத்தியிருந்த துணியை சேலைக்கார சாமியாக பாவித்து, அந்த சேலையின் ஒரு சிறுபகுதியைப் பாதுகாத்து, அதை அனைவரும் ஒன்று சேர்ந்த முக்கியமான நாட்களில் கும்பிட்டு, வருஷத்துக்கு ஒருமுறை பெரிய அளவில் ஒரு விழா எடுத்து, உறவினர்கள் எல்லாம் ஒன்றுகூடி, அந்தக் காலத்தில் சபதமே எடுத்து இருக்கிறார்கள்.
இது போன்ற தெய்வங்களைப் பாதுகாத்து வணங்க வேண்டும் என்று. அப்பத்தான், எனக்கு ராணி பத்மினியோட கதைகூட ஞாபகம் வந்தது. அந்தக் கதையிலும் இதே போன்று தான். கடைசி நிமிடத்தில் தீக்குளித்து இறந்து விடுவாங்க. இது போன்ற நம்முடைய முன்னோர்கள், லட்சோப லட்சம் பேர்கள், அவர்களுடைய குடும்பம் அவர்களுடைய வாரிசுகள் போராடி, இந்த தர்ம மரபுகளை காப்பதற்காக, இந்த பூமியை இந்து பூமியாக வைத்திருப்பதற்காக, இந்த பூமியை பன்முகத் தன்மை கொண்ட வழிபாட்டுத் தலமாக வைத்திருப்பதற்காக, உயிரைக் கொடுத்திருக்கிறார்கள். அப்படி உயிரைக் கொடுத்திருக்கும் போது, அந்த மரபுகளைக் கட்டிக் காக்க வேண்டும் என்பதற்காக, பெட்டிக்குள் சாமியை வைத்திருக்கிறோம். கும்பிடுங்கள் என்று சொல்லி, சின்னப் பிள்ளைகளுக்கு புரியவில்லை என்றாலும் கொஞ்சம் வயதான பிறகு சொல்றாங்க.
இப்ப தெரியுதா, யாராவது ஒருத்தர் முஸ்லீமா மாறிப் போயிட்டாங்கன்னா, அவங்கக்கிட்ட எந்தத் தொடர்பும் இல்லாம, அவங்கள நாம ரிட்டர்ன் எடுக்கறதே கிடையாது. ஏனென்றால், அங்கே போய் சேந்துட்டாங்க. இங்கே போய் சேந்துட்டாங்க. நம்முடைய மூதாதையர்கள் உயிரை விடக் காரணமான, உயிரையே விட்ட, அந்த விஷயத்திலே பின்னிலையிலே சதியாக எது இருந்ததோ, அங்கே போய் விட்டார்கள் என நினைக்கும் போது மனம் கொதித்துப் போய்விடுகிறது. வேண்டாம், விட்ருவோம் இனிமேல் எந்த தொடர்பும் வேண்டாமென்று விட்டுட்ராங்க.
பெட்டிக்குள்ள சாமியிருக்கறதாகட்டும், சாமியாடுவதாக ஆகட்டும். பரவச நிலையை அடைவதாக இருக்கட்டும். எல்லாமே வெறும் கற்பனை இல்லை. பல நிகழ்வுகள் பின்னிலையிலே இருக்கின்றன. வேதனைகள் இருக்கின்றன. சோதனைகள் இருக்கின்றன. அத்தனையும் சந்தித்து, சாதித்து நிலைத்து நிற்பது இந்து மதம் தான். ஒருமுறையா, இரண்டு முறையா, பதினெட்டு முறைகள் படையெடுத்து வந்தான் கஜினி முகமது. சோமநாதபுரம் டெம்பிள் மேல. பதினெட்டு முறை படையெடுத்து வருகிறான் என்று பீத்திக் கொள்கிறார்கள். அத்தனை முறையும் அந்த கோயிலைக் கட்டி, மேலும் மேலும் மெருகேற்றினார்களே! அவர்களுடைய தைரியம் பெரிதா, இடித்தவர்கள், அழித்தவர்கள் தைரியம் பெரிதா? இதைப் பற்றிப் பேசினால், மதங்களைப் பற்றி பேசினோம், மதங்களுக்கிடையே கருத்து வேறுபாடுகளை உருவாக்குகிறோம் என்று சொல்லக் கூடிய மதசார்பற்றவர்கள் என்று தங்களை நினைத்துக் கொள்பவர்கள் இருப்பார்கள்.
சொந்தத் தாய், சொந்த சகோதரி, சொந்த மனைவி, சொந்த பிள்ளைகள், இவர்கள் மேல் பாசம் வைப்பது மற்றவர்களின் வெறுப்பிற்கு சமமாகாது. அதுவே நான், இப்ப என்னுடைய பிள்ளையை நல்லா கவனிக்கிறேன்னு, பக்கத்து வீட்டுக்காரன் புகார் கொடுப்பது போல் இருக்கு. என்னுடைய மதம், என்னுடைய தாய்நாடு, என்னுடைய தாய்மொழி, என்னுடைய பழக்க வழக்கங்கள் சிலவற்றை நான் கூறி, அவற்றை பாதுகாக்க வேண்டும் என்று நான் நினைப்பது, உணர்ச்சி வசமான விஷயமாக இருக்கிறது.
பெட்டிக்குள்ளே சாமி என்று ஆரம்பித்தேன். சொல்லும் போது எனக்கே கண்ணில தண்ணி வருது. ஏனென்றால் தியாகம் அங்கே ஒளிந்து கொண்டிருக்கிறது. வீரம் அங்கே ஒளிந்து கொண்டிருக்கிறது. எத்தனை வருடங்களானாலும் நாம அந்தப் பெட்டியைப் பார்ப்போம், பாதுகாப்போம். எங்களுடைய நினைவுகள் இருக்கும். நாங்கள் இந்த மதத்திலே தான் இருப்போம். நாங்கள் இதுபோன்ற பழக்கவழக்கங்களைக் கைவிடமாட்டோம். வாங்கடா, என்ன பண்ணமுடியும்னு பாருங்கடான்னுட்டு.
கர்நாடகாவிற்கு போனாலும், ஆந்திராவிற்கு போனாலும் பயபக்தி நிறைய இருக்கின்றது, இதுபோன்ற விஷயங்களில். அந்தம்மா, பி.வி.சிந்து பேட்மிண்டனில் வோர்ல்டு சேம்பியனா ஆனாங்க. அதற்கப்புறம் நேராக வந்து அவங்க ஊரு கோயில்ல பூக்குடம் சுமக்கிறாங்க. எவ்வளவு பயபக்தி பாருங்க. எனவே, அறிவியலும் ஆன்மீகமும் கலந்த அறிவியலே இந்து மதம் என்று கூறி விடைபெறுகிறேன்.
நன்றி, வணக்கம்.
Original Audio posted in WhatsApp Group ‘Science is Hinduism’ on 21 June 2018.