கோமாதா, எங்கள் குலமாதா!

கோமாதா எங்கள் குலமாதா! என்று சொல்லி பசுக்களை தெய்வமாக வணங்குகிறார்கள். இந்துக்களுக்கு எல்லாமே தான் தெய்வம். நான் ஏற்கனவே சொன்னா மாதிரி. ஓடுறது, பாடுறது, நடக்கறது, சுவரு, மரம், கல்லு, புல்லுன்னு எதைப் பார்த்தாலும் தெய்வம்னு சொல்லிடுவோம்.

பாலைவனம் ஒரு இந்து நாடாக இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும்?. ஒருத்தரு கல்ல வெச்சிருப்பாங்க. இன்னொருத்தரு படத்த வெச்சிருப்பாங்க. இன்னொருத்தரு சாமியக் கும்பிட்டு இருப்பாங்க. இன்னொருத்தரு பூஜை புனஸ்காரம் செய்திருப்பாங்க. இன்னொருத்தரு பாம்பு படத்தை வெச்சிருப்பாங்க. இன்னொருத்தரு அபிஷேகம் பண்ணி யிருப்பாங்க. அந்த அபிஷேகங்கள் அப்படியே வழிஞ்சி போவும்.

அது புல்லாவும், புழுவாவும் சில இடத்திற்கு போய் செடிகள் எல்லாம் உருவாகும். தோட்டங்கள் உருவாகும். காடுகளாக மாறும். மழை பெய்யக்கூடிய பூமியாக மாறும். அந்த பூமியே இப்போ நல்லா வளமானதாக மாறும். இதை உள்ளடக்கித் தான், புல்லாகி பூண்டாகி மரமாகி என்று சிவபுராணத்திலே திருவாசகத்திலே சொல்லியிருக்கிறார்கள் என்று நான் ஏற்கனவே சொல்லி யிருக்கிறேன்.

எனவே இந்துக்களுக்கு எல்லாமே தெய்வம் தான். படைப்புத் துறையில் ஈடுபட்ட படைப்பாளிகள் தெய்வம். பெண்கள் தெய்வம். குழந்தைகள் தெய்வம். கன்னிப் பெண்கள் தெய்வம் என்று எல்லாமே இருக்கு. ஆனால், இந்துக்கள் பசுக்களை ஒரு முக்கியமான இடத்தில் வைத்திருக்கிறார்கள். அம்மாவுக்கு சமம். அம்மாவை விட மிகவும் சமம். பசுக்களை பாதுகாக்க வேண்டும் என்றெல்லாம் இருக்கிறது. பசுக்களுக்கு மட்டும் ஏன் ஒரு முக்கியமான இடத்தை வைத்திருக்கிறார்கள்? நிறையபேரு குலதெய்வத்தை கும்பிட்றாங்க. காமதேனு என்ற படத்தை வைத்து ஒரு பெரிய தெய்வீக பசு வந்ததாகவும், வரங்களையும், உணவுகளையும், பாலையும் அள்ளி அள்ளி கொடுத்ததாகவும் எழுதி வெச்சிருக்காங்க.

நந்தி, காளை மாடுக்கும் அதையே வெச்சிருக்காங்க. அது சிவபெருமான் வாகனமாகவும் வெச்சிருக்காங்க. ஆனால், கண்டிப்பாக எல்லாருக்குமே தெரியும் உலகம் முழுவதும், இந்துக்களுக்கு பசு. அதாவது வடஇந்தியாவிலே பசு என்றால் விலங்கு என்ற ஒரு அர்த்தம் இருக்கு. சவுத் இந்தியாவிலே பசு என்றால் நம்ம பசுமாடு. பசு மாட்டை வட இந்தியாவிலே ‘காய்’ என்று குறிக்கிறார்கள். ‘பசு’ என்கிற வார்த்தை வெறும் விலங்கு என்று தான் வடஇந்தியாவிலே குறிக்கிறார்கள். எனக்குக்கூட ஆச்சர்யம் தான்.

நான் வந்து நாத்திகனாக இருந்த காலக்கட்டத்திலே, பல கனவுகள் எனக்கு வந்தன. பல கனவுகள் எனக்கு வந்த பிறகு கூட என்னை ஆத்திகனாக மாற்றவில்லை. பிறகு வந்த கனவில் தான் நான் ஆத்திகனாக மாறினேன். அப்படிப்பட்ட ஒரு கனவிலே, வீட்டில் சண்டை, சச்சரவு, பிரச்சனைகள் எல்லாம் இருந்தது. பிறகு எனக்கு பெரிய கஷ்டம் வரும்போது, எல்லாரும் என்னை விட்டு ஓடினது மட்டுமில்லாமல், ஏளனமாக வேறு பேசினார்கள். குடும்ப வாழ்க்கைக்கு குந்தகம் விளைவிக்கக் கூடிய செயல்களை செய்து கொண்டிருந்தார்கள். அப்போது எனக்கு ஒரு கனவு வந்தது.

தீமை செய்வதற்காக என்னுடைய வீட்டில் சில பேர் வருகிறார்கள். வீட்டின் வாசலில் அமைதியாக இருந்த ஒரு காமதேனு பசு, விரட்டி விரட்டி அடிச்சி காயமாகி, என்னுடைய பொண்டாட்டி பிள்ளைகளை எல்லாம் பாதுகாக்கிற மாதிரி வீட்டு வாசலில் அமைதியா படுத்துக்கிட்டு இருப்பது மாதிரி, கனவு வந்துச்சு. அதுக்கப்புறம் காமதேனுவுக்கு நான் டிவோட்டியாகி கோமாதா எங்கள் குலமாதா என்று புத்தகத் தொகுப்பில் நான் பதிவிட்டு இருக்கிறேன்.

ஆனால், இந்த அறிவியலே இந்துமதம் என்ற புத்தகத்தின் நோக்கம், இந்துக்கள் அல்லாதவர்களுக்கு, இளைஞர்களுக்கு, நவீன சமுதாயத்திற்காக எடுத்துச் சொல்வது. அவங்க கிட்ட வந்து மொட்டையா, கோமாதா எங்கள் குலமாதா, கனவில் வந்தது, கும்பிடுங்கன்னா, அவ்வளவு ஏற்புடையதாக இருக்காது. அது உங்க கனவில் வந்தால், நாங்க ஏங்க கும்பிடணும்னு சொல்லுவாங்க.

அப்ப, எதை வைத்து இந்துக்கள் பசுவை தெய்வமாக வைத்தார்கள்? அதை அறிவியல் பூர்வமாக விளக்க வேண்டும் இல்லையா? நீங்க யோசித்து பாருங்க. பால் பொருட்கள் இல்லாத மனித வாழ்க்கையை நினைத்துப் பார்க்க முடியாது. பால் பொருட்கள் பயன்படுத்தாத மானுடப் பருவம் கிடையவே கிடையாது. ஒரு குழந்தை பிறந்ததிலிருந்து வயதானது வரைக்கும், பாலோ, பாலுடைய பொருட்களும் கண்டிப்ப தேவைப்படுது. இந்த பால் கிடைக்கக் கூடிய ஒரே இடம் பசுதான். எருமை மாட்டிலும் கிடைக்கிறது தான். இருந்தாலும், நம்ம கண்ணு முன்னாடி பசுக்களின் பால் கிடைப்பதால், பசுக்களை நாம் வைத்துக் கொள்கிறோம். அதனால, எருமை மாட்டை நாம் இன்சல்ட் பண்ணவே தேவை யில்லை.

திருப்பாவையில் இதனை உணர்ந்த ஆண்டாள் கூட எருமை மாட்டைப் பற்றியும் கூட சேர்த்துத் தான் பாடியிருக்காங்க. ‘கட்டிளம் எருமை கன்றிற்கிணங்கி, நினைத்து முலை வழியே பால் சுற’ என்றெல்லாம் பாடி யிருக்கிறார்கள். எனவே அந்தப் பாலைக் கொடுக்கக்கூடிய அந்த பசுவானது மானுட வாழ்வில், ஒரு மையமாக விளங்குகிறது. எல்லா மானுடர்களுக்கும் தான். இந்துக்களுக்கு மட்டுமல்ல. முஸ்லீம், கிறிஸ்டியன், கடவுளை நம்பறவங்க, நம்பாதவங்கன்னு அத்தனை பேருக்கும். பாலை நாம் ஏதாவது ஒரு வடிவில் தினமும் கன்சியூம் பண்ணிக்கிட்டுத் தான் இருக்கோம்.

அந்தப் பாலைக் கொடுக்கக் கூடிய விலங்கினம் எப்படி இருக்குன்னா, ரொம்ப சாதுவா இருக்கு. தன்னைத் தானே பாதுகாத்துக் கொள்ள முடியாததாக இருக்கிறது. மற்ற விலங்கினங்கள் ஓரளவு முரடாக தன்னைத் தானே பாதுகாத்துக் கொள்கிறது. இந்த விலங்கினமான பசுவுக்கு யாராவது அடைக்கலம் கொடுத்து பாதுகாப்பாக வைத்திருந்தால் தான் பாதுகாப்பாக இருக்க முடிகிறது. மற்ற விலங்குகள் கொஞ்சம் மேனேஜ் பண்ணிக் கொள்ளும். அப்போது, ஒரு செயலை பார்க்கும் போது, அந்த செயல், ஒரு பால். அந்தப் பாலானது மனித வாழ்வில் எப்போதுமே தேவைப்பட்டுக் கொண்டிருக்கிறது. அந்த பாலானது இந்தப் பசுவிடமிருந்து வருகிறது. அந்தப் பசுவானது அமைதியாக, அன்பாக இருக்கிறது. தானும் ஒண்ணும் பண்ணிக்க முடியாமல். அதை புரொடெக்ட் பண்ணித்தானே ஆகணும்? அது மனித வாழ்வுக்கு. இந்துக்களின் வாழ்வுக்கு இல்லை. அது மனித வாழ்வுக்கு ஆதரவாக இருப்பதினால், கடவுள் என்று வைத்தோம்.

எல்லா விலங்குகளையும் கடவுளின் அம்சம் என்று நாம் வைத்துக் கொண்டாலும். தலையான ஒரு இடத்தைக் கொடுத்து, ரொம்ப மெயினா வெச்சி, அம்மா கோமாதா, அம்மா என்று கூப்பிடுகிறோம். அதுகூட அம்மான்னு தான் கூப்பிடுது. மற்ற விலங்குகளும் அம்மான்னு தான் கூப்பிடுது. அது பரவாயில்லை. எனவே, கோமாதா எங்கள் குலமாதா. பசுவினை கண்டிப்பாக வணங்குவோம். அதற்கான தெய்வீகத் தன்மையை போற்றுவோம்.

அதைத் தாண்டி நீங்கள் உணரும் போது, எனக்கு வந்தது போல், கோமாதா, காமதேனு கனவிலும் வந்து ஆசி கூறுவார்கள். வாழ்வு செழிப்படையும். அறிவியலாகவும் நாம் இதை நம்பலாம். ஆன்மீகத்தை அடிப்படையாக வைத்துக்கூட நாம் இதை நம்பலாம். கோமாதா எங்கள் குலமாதா!

நன்றி, வணக்கம்.

Original Audio posted in WhatsApp Group ‘Science is Hinduism’ on 22 June 2018. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes:

<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>