மற்ற எந்த மொழிகள், மார்க்கங்கள், நாடுகள் என்று எங்கேயுமே இல்லாத மிகப்பெரிய காவியமாக மகாபாரதம் உள்ளது. இந்த மகாபாரதம் இந்து தர்ம, அகன்ற பாரத இந்திய நாடு. ஆப்கானிஸ்தானில் இருந்து பர்மா வரைக்கும். உள்ளடக்கிய பகுதிகளில் மட்டும் அல்ல. எல்லா பக்கங்களிலும் பரவலான நிகழ்ச்சிகளை கொண்டது.
இதற்குள்ளேயே இராமாயணம் அடங்கிவிடும். மகாபாரதத்தின் முழுமையான கதையை பார்த்தீர்களானால், இராமயணம் அதனுள்ளே இருக்கும். பாண்டவர்கள் கேட்கும் போது, இந்த மகாபாரதத்தில் உன்னுடைய மனைவியைப் போல் யாரேனும் கஷ்டப்பட்டார்களா என்று கேட்கும் போது, ஆமாம் இருக்கிறார்கள். இராமனுடைய கதையை அப்படியே உள்ளே கொண்டு வந்து விடுகிறார்கள். இதற்குள்ளேயே நளபுராணம் வந்துவிடும், கந்தபுராணம் வந்துவிடும், விநாயக புராணம் வந்துவிடும், அரிச்சந்திர புராணம் வந்துவிடும். சத்தியவான், சாவித்ரி கதையெல்லாம் வந்துவிடும். இதுவந்து ரொம்ப பெரிய புத்தகமாக இருக்கும். அந்தந்த மொழிகளிலே சுருக்கப்பட்டு கொடுப்பார்கள்.
சுருக்கப்பட்டு கொடுக்கும்போது, கதைகள், கிளைக்கதைகள் எல்லாம் வெட்டப்பட்டிருக்கும். மகாபாரதம் இதற்குள்ளேயே இருக்கும் என்பது உங்கள் எல்லாருக்கும் தெரியும். ஒவ்வொரு நிகழ்ச்சிகளின் அடிப்படையில் இது இருக்கும். இந்த மகாபாரதத்தை ஓரளவுக்கு, ரொம்ப கவனிச்சி படிக்க முடியாது இந்த காலத்துல. பார்த்தீர்களானால் வாழ்வியல் தத்துவங்கள் மிகச் சிறந்த உதாரணங்களோடு, மிகத் தெளிவாக சொல்லப்பட்டிருக்கும். ரொம்ப விரிவாக.
நீங்க வாழ்க்கையில எந்த ஒரு சிட்சுவேஷன எடுத்தீங்கனாலும், அந்த சிட்சுவேஷன எடுத்து, அத எப்படி சால்வ் பண்ணனும்னு தெரிந்து கொள்ளலாம். சத்தியாவான் சாவித்ரி. அதாவது சாவித்ரி என்பவங்க சத்தியவான் என்கிற ஒரு அல்ப ஆயிசு காரன கல்யாணம் பண்ணிக்குவாங்க. எமதர்மன் வந்து டிக்லேர் பண்ணிட்டு உயிரை எடுப்பதற்காக முடிவு பண்றாரு. அந்தம்மா விட மாட்ராங்க. கடைசி வரைக்கும் கூடவே போய் ஆர்கியூவ் பண்றாங்க. இவங்க ஆர்கியூவ் பண்ணப்பண்ண ஒவ்வொரு வரமா கொடுத்துக்கிட்டு இருக்கார். ஒவ்வொரு வரத்திலும் ஒரு கண்டிஷன் போடுவார். எல்லா வரமும் கொடுக்கிறேன். ஆனால், உன் கணவனுடைய உயிரை நான் எடுத்தே தீருவேன். அதைத் தவிர வேறெதாவது கேளு. அதுல சாமார்த்தியமா ஒவ்வொரு வரத்தையும் கேட்டுவிட்டு எமதர்மர் வாயாலேயே, கணவனுடைய உயிரைக் காப்பாற்றி விடுகிறார்கள். வரம் கேக்கறாங்க. எனக்கு இந்த வரம், அந்த வரம்னு. கடைசியா நூறு பிள்ளை வரம் வேண்டுமென்று கேட்கறாங்க. அந்த பிள்ளை என் புருஷன் மூலமாகத் தான் வரவேண்டும். அவரும் அவசரப்பட்டு சரி என்று சொல்லிவிட்டார். அதற்குப் பிறகு வேறுவழியில்லை. புருஷனுடைய உயிரை எடுக்க முடியாது.
அரிச்சந்திர புராணத்தில் போய் பார்க்கும் போது, அரிச்சந்திரன் தன்னுடைய பிள்ளையை காப்பாற்றுவதற்காக எப்படியெல்லாம் பொய் சொல்லி தகிடதத்தோம் பண்ணலாம்னு இருக்கும். நாம எல்லாரும் நினைச்சிக்கிட்டு இருக்கோம். அரிச்சந்திரனாலே உண்மையைத் தவிர வேறு எதுவும் பேச முடியாதுனிட்டு. அவன் சொல்ற பொய்ய எல்லாம் கேட்டீங்கன்னா, அண்டப்புளுகு, ஆகாசப்புளுகா இருக்கும். ஆஹா இப்படியெல்லாம் ஒருத்தன் பொய் சொல்ல முடியுமா? அப்புடீன்னு நம்மளே வந்து புல்லரித்துப் போய் விடுவோம். எல்லாம். தன்னுடைய பிள்ளையை காப்பாற்றுவதற்காக.
இங்க புருஷனக் காப்பாற்றுவதற்காக. ஏற்கனவே, நளன் தமயந்தியைப் பற்றி நான், சொல்லியிருக்கிறேன். பிரியாணியப் பத்தியெல்லாம் இந்து மதத்தில் இருக்கின்றதுன்னீட்டு. கடமைகளைப் பற்றி, மனித வாழ்க்கையைப் பற்றி. கிருஷ்ணன் அர்ஜூனனிடம் மகாபாரதத்தைப் பற்றி, பகவத் கீதையைப் பற்றி. அனைத்தையும் உள்ளடக்கி இருக்கக்கூடிய ஒரு இதிகாசக் காப்பியமாக மகாபாரதமாக இருக்கிறது. இந்த மகாபாரதத்திலே முதலில் இருந்து இறுதி வரைக்கும் உள்ள இதிகாசக் காப்பியங்களைப் பார்த்தீர்களானால், பெண்ணுரிமை. எடுத்த உடனே பெண்ணுரிமையைப் பற்றி இருக்கும். நடுவிலேயும் இருக்கும். கடைசியிலேயும் இருக்கும்.
அங்கே காண்பிக்கக்கூடிய பெண்கள் அத்தனை பேருமே தன்னுடைய உரிமைக்காக, அத்தனையையும் எதிர்த்து நின்னு ஜெயித்தார்கள் என்று. முதன்முறையில் பீஷ்மரை எதிர்த்து நின்ற பெண்ணாக இருந்தாலும் சரி. அம்பை, பொண்ண தூக்கிக்கிட்டு வரான் பீஷ்மன். எனக்கு இஷ்டப்பட்டவனுக்கு கல்யாணம் பண்ணி வைக்காமல், நீ எப்புடி உங்கப்பனுக்கு அப்பனுக்கு பிறந்த இன்னொருவனுக்கு கல்யாணம் பண்ணி வைக்கலாம்? ‘டேய் பீஷமா ! நீயே என்னை திருமணம் செய்ய வேண்டும், இல்லையேல் உன்னை கொன்று விடுவேன். இந்த பிறவியிலோ அல்லது அடுத்த பிறவியிலோ!’ என்று சவால் விட்டு, உயிர் தியாகம் செய்து மறு பிறவியில் சபதம் நிறைவேற்றும் (கொல்லும் சபதம்) அம்பை, சிகண்டி கதை மஹாபாரத கால பெண்களின் வீர தீர சாகசத்தை காட்டுகிறது.
தமயந்தி பெண்ணுரிமை. நளனிடம் கேட்பாள். நடுராத்திரி யிலே என்னை எப்படி விட்டுட்டு போவாயென்று. அப்ப இன்னொரு புருஷனை தேர்ந்தெடுக்கின்ற உரிமையை நீ தானே எனக்கு கொடுக்கிறாய்? இங்கே பெண்ணுரிமையை நிலைநாட்றாங்க.
சாவித்ரி. எமதர்மரிடம் போய் கேட்பாங்க, எப்படி நீ என் புருஷனோட உயிரை எடுத்துக் கொண்டு போகலாம்? எங்கே போனாலும் பெண்ணுக்கு முதலுரிமை, பெண்ணுக்கு முக்கியத்துவம். பெண்கள் தன்னுடைய வாழ்க்கையை தானே தேர்ந்தெடுக்கக்கூடிய உரிமை, பெண்களுக்கு சிறப்பான இடம். பெண்கள் சபையில் சொல்வதை மற்றவர்கள் கேட்டு நடப்பது. பெண்ணுரிமை எல்லா இடத்திலும் இருக்கும். நீங்க பார்த்தீர்களானால். பெண்ணுரிமை இல்லை என்று இந்த சமுதாயத்தில் சொல்பவர்களுக்கு இது ஒரு சவுக்கடி.
சமுதாயத்தைப் பற்றியும், இந்து சமுதாயத்தின் கட்டமைப்பு முறையைப் பற்றியும் கண்டுகொள்ளாமல், மற்ற சமயத்தில் இருந்த கருத்துக்களை, பிற்போக்கு தனத்தின் அடிப்படையில் அதனை நடத்துகிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும்.
போர் புரிதல் என்பது சத்ரியர்கள் ஒரு ஜாதிக்காரர்களுக்கு என்று தவறாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அதை வைத்துத் தான் ஜாதிகள் இருக்கு. ஜாதிகளில் ஏற்றத்தாழ்வு இருக்கு. ஜாதிக் கலவரங்கள் எல்லாம் இருக்கு. தமிழ்நாட்டில் கூட தான் உயர்குடியில் பிறந்தவர்கள், மற்றவர்கள் எல்லாம் தாழ்ந்த குடியில் பிறந்தவர்கள் என்று நினைத்துக் கொள்கிறார்கள். அப்படியல்ல, போரும் விவசாயமும் எல்லா மக்களும் செய்த தொழில். விவசாயம் பிரதான தொழில். போர்புரிதல் தேவையை அடிப்படையாக வைத்தது. சண்டைன்னு வரும் போது அதற்கான ஏற்பாடுகளை செய்துவிட்டு வருவார்கள். அதுக்கப்புறம் விவசாயத்துக்கு போயிடுவாங்க.
அதுக்குள்ள இருப்பது தான் இரும்புக் கலைகள், நாட்டிய கலைகள், கோயில் கலைகள், சிற்ப கலைகள், மண்பாண்ட கலைகள் எல்லாம். அதனால் மக்கள் அனைவரும் சமம். தொழிலாளர்கள் அனைவரும் சமம். போர்புரிதல் அனைவரின் கடமை என்பதனை மகாபாரதத்தில் முதலில் இருந்து கடைசி வரைக்கும் பாத்துக்கிட்டு வந்து கண்டிப்பாக அனைவரும் தெரிந்து கொள்ளலாம். சந்தர்ப்ப சூழ்நிலைகளை மிகவும் திறமையாகக் கையாளுதல் அதை நாம் இதில் பார்க்கலாம். ஏராளமான விஷயங்களில் ரொம்ப விரிவாக கவரேஜ் செய்திருக்கும். அண்டை நாடுகளுடனான நட்புறவு. அது மகாபாரதத்தில் வரும்.
மகாபாரதத்தின் பெரும்பாலான கதைக்களம் வடஇந்தியா, வடமேற்கு இந்தியாவிலிருக்கு. ஆனால், கதையோட விஷயங்கள் இந்தியா முழுவதும் இருக்கு. அதில் தென்னகத்தில் பாண்டிய நாட்டைப் பற்றி குறிப்பிடுகின்றது. தென்னகத்தில் இருக்கக் கூடிய நாட்டில், பாண்டிய நாட்டை மட்டும் தான் குறிப்பாக குறிப்பிடுகின்றது. அதிலும் உயரிய குறிப்பு இருக்கின்றது. என்ன குறிப்பு என்றால், கௌரவர்களும் பாண்டவர்களும் சண்டை போட வேண்டும் என்று முடிவு செய்யும் போது, அவர்கள் படைகளை திரட்டுகிறார்கள். தங்கள் அணியில் சேருமாறு சொல்லுகிறார்கள். பாண்டியநாட்டுக்கு வருகிறார்கள்.
பாண்டிய மன்னன் சொல்கிறான். எவ்வளவு சிறப்பானவர் என்று பாருங்கள். நீங்கள் உறவினர்கள் ஒருவரையருவர் சண்டையிட்டுக் கொள்கிறீர்கள். அதில் நாங்கள் ஒரு அணியில் சேர்வது பாவமாகும். ஆனால், சண்டை போடுவது தர்மமாகும். அந்த தர்மத்திலே நாங்கள் பங்கெடுப்போம். எப்படி பங்கெடுப்போம் என்றால், இரண்டு படைகளுக்குமே உணவு, லாஜிஸ்டிக்க் சப்போர்ட் நாங்க கொடுக்கிறோம் என்று தன்னுடைய படையை அனுப்பி வைத்ததாகவும், அந்த படைகள் வந்து ரெண்டு பேருக்கும், சாப்பாடு கொடுக்கறது. எவ்வளவு உயரிய இடத்தை பாண்டிய மன்னனுக்கு கொடுத்து இருக்கிறார்கள். அதனை பாண்டிய மன்னன் எடுத்துக் கொண்டான். மக்கள் அதனை எப்படி எடுத்துக் கொண்டார்கள் என்பதனை கவனிக்க வேண்டும்.
மகாபாரதத்தில். நிறைய பேருக்கு இது தெரியாது. மகாபாரதம் என்பது ஜஸ்ட் நார்த் இன்டியன்சுன்னு நினைச்சிக்கிட்டு இருக்காங்க. தமிழர்களின் பங்களிப்பு என்று பார்த்தால் அது எவ்வளவு சீராக இருக்கின்றது என்பதனை நாம் உணர வேண்டும். எனவே மகாபாரதம் என்ற ஒரு கதையை எடுத்துக் கொண்டாலே, எல்லாத்தையும் தூக்கி சாப்பிட்டுடு. அதற்கு ஒப்பானது, நிகரானது உலகத்தில் எந்த மொழியிலுமே எந்த நாட்டிலுமே, எந்த ராஜ்ஜியத்திலுமே கிடையவே கிடையாது. பழமையானதும் கிடையாது. பிற்காலத்திலும் கிடையாது. நடந்ததே கிடையாது. எல்லாத்தையும் அதில் சொல்லி வெச்சிட்டாங்க. தானம் செய்வது, தர்மம் செய்வது. உயரிய நெறிகளைப் பற்றி, உயரிய நெறியிலே இருப்பவர்கள் தவறிழைப்பதைப் பற்றி, செய்த தவற்றுக்கு தண்டனை அனுபவித்தலைப் பற்றி, அந்த தண்டனைகளின் சாராம்சங்களைப் பற்றி, ரொம்ப கெட்டவங்களா இருக்கறவங்கள நல்லது செய்யறது பற்றி. நல்லது செய்றவங்களுக்கு புண்ணியம் கிடைப்பது பற்றி. முனிவர்களின் தவறுகளைப் பற்றி. அரசர்களின் தவறுகளைப் பற்றி. நீதி நேர்மைக்காக அரசர்கள் உயிரை விடுவதைப் பற்றி. அரசிளம் குமரிகளும், அரச மாதாக்களும், அரசனுடைய மனைவிகளும் தன்னுடைய வாக்கைக் கொடுக்கும் போது, அந்த வாக்கை நிறைவேற்ற முடியவில்லையென்றால், உயிரை மாய்த்துக் கொள்வது பற்றி. அரசகட்டளைகளைப் பற்றி, அமைச்சர்களைப் பற்றி, குடியானவர்களைப் பற்றி, எல்லாம் அதிலிருக்கு.
அம்பை. காசி நாட்டு இளவரசி. பின்னாளிலே பீஷ்மனை பழி தீர்த்துக் கொல்லும் நங்கை. சால்வ ராஜாவிடம் காதல் கொள்கிறாள். முரட்டுக் காதல். அவனை சந்திக்காமல் இருக்க முடியாது. ஒரு முறை காதலனை சந்திக்க செல்லும் போது கங்கை ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. ஆற்றை கடக்க இயலாது. விளை நிலங்கள் வழியாக செல்ல வேண்டும். அவள் இளவரசி ஆயிற்றே. காதலனை சந்திக்க போகும் போது கூட ஏவலர்கள் உடன் வருவார்கள். ஏவலனை கூப்பிட்டு, வாய்வழி நிலத்தை தீக்கிரையாக்கி, காதலனை சந்திக்க வழி அமைக்க சொல்கிறாள். அந்த ஏவலன், வேலையாள், மறுக்கிறான். ‘இளவரசி, விலை நிலத்தை தீயிடுவது பாவமாகும். அதனை நான் செய்ய மாட்டேன்!’. தர்ம நெறி என்று பார்க்கும் போது, ஒரு வேலையாள், தனக்கு இடப்பட்ட ஆணையை மறுக்கிறான். இதுவே மஹாபாரத்திலே நாம் எடுக்க வேண்டியது.
சத்யவதி. கங்கை கரை மீனவப்பெண். சாந்தனு ராஜா அவளிடம் காதல் வசப்படுகிறான். அவள் அரசனுக்கு சொல்கிறாள். ‘ஆசையே இதயத்தின் சக்தி. விழி சிறியது. ஆனால் பரந்து விரிந்த ஆகாயத்தை ஆனந்தமாக காணலாம். மனதில் குறைவான ஆசையை வைத்துக்கொண்டு இறைவனை குறை கூற கூடாது’. எவ்வளவு பெரிய மோட்டிவேஷன் பாருங்கள். முடி சூட்டும் போது அவளை மகாராணியாக ஆக்க, சந்தனு ராஜா அழைக்கிறான். ஆனால், சாந்தனு ராஜாவுக்கு ஏற்கனவே ஒரு மகன் இருப்பதை அறிந்த சத்யவதி, பேசும் வசனங்கள் இன்றைய பெண்ணியல் வாதிகளை வெட்க்க தலை குனிய வைக்கும்.
மகாபாரதம் தன்னுடைய வாழ்வில் உலக மக்கள் அத்தனை பேரும், படித்து அனுபவித்து தெரிந்துக் கொள்ள வேண்டிய ஒன்று. கொஞ்சம் கஷ்டம் தான். அதுல நிறைய வெர்ஷன் இருக்கு. நிறைய வேரியேஷன்ஸ் இருக்கு. அந்த மகாபாரத நெறிகளை ஒருமுறை நீங்கள் படித்து அறிந்து கொண்டால், வாழ்நாள் முழுவதும் நீங்களும், உங்களைச் சார்ந்தவர்களும், எந்த மதத்திற்கும் மாற்றத்திற்கும் செல்ல மாட்டீர்கள்.
நன்றி, வணக்கம்.
Original Audio posted in WhatsApp Group ‘Science is Hinduism’ on 24 June 2018.