இந்த அறிவியலே இந்துமதம் என்ற தொகுப்பை தினம் ஒரு செய்தியாக தர முற்பட்ட போது, அதற்கான காரணம் என்ன என்று பார்த்தால், குறிப்பாக கிறிஸ்துவ மதத்தை சேர்ந்த சகோதரர்கள். தொலைக்காட்சிகளில் நிறைய நிகழ்ச்சிகளை உருவாக்கி, அவர்களுடைய மதத்தில் உன்னதமான கருத்துக்கள் இருப்பது போல் ஒரு தோற்றத்தை உருவாக்கி, அதில் சில கேள்விகளை எல்லாம் முன் வைத்தார்கள். இப்புடி இருக்கு பாத்தீங்களா அப்புடி இருக்கு பாத்தீகளான்னிட்டு.

அதில் சில வாசகங்களை பயன்படுத்தினார்கள். நேரடியாக இல்லாமல் மறைமுகமாக இந்து மதத்தை குறிப்பிட்டு, இந்துக்களை குறிப்பிட்டு, அவங்ககிட்ட அது கிடையாது என்று. அதுக்கு நாம பதில் சொல்வதெல்லாம் ஒண்ணும் கிடையாது. இந்துமதம் என்றால் சாமி கும்பிடுவது, அபிஷேகம் பண்ணுவது, குடமுழுக்கு பண்ணுவது தான் என்பதுன்னு காண்பிக்கிறார்களே ஒழிய, இந்த இஸ்லாமிய கிறிஸ்துவ மத சகோதரர்கள் தங்களுடைய மதத்திற்கு, மற்றவர்களை வெறுப்பதற்காகக் கூறப்படுகின்ற கூற்றொன்றும், பதில் சொல்வதாக ஒன்றும் இல்லை.

எனக்கு அவங்க கேக்கற ஒவ்வொரு கேள்விக்கும் அப்பவே பதில் தோணும். இதை எங்கே போய் சொல்வது? அப்படியே இக்னோர் பண்ணிக்கிட்டு இருந்தேன். ஒரு குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு என்னாலேயும் முடியவில்லை. நானும் என் கடைமையை செய்ய வேண்டும் என்பதற்காக, கருத்துக்களை போட ஆரம்பிக்கும் போது, டெய்லி ஒரு கருத்து. ஏதோ ஒரு பத்து நாள், இருபது நாள், முப்பது நாள் வரும்னு பாத்தேன். தோண்டத் தோண்ட புதையல் போல கருத்துக்கள் வந்து கொண்டே இருக்கின்றன தானாகவே. அதனால டெய்லி ஒன்று போட ஆரம்பித்தோம். உருவ வழிபாடு என்பது ஒரு அட்வான்சுடு சிம்பிளிஃபைடு சிஸ்டம்னு சொன்னோம்.

பெரிய பெரிய யூனிவர்சிட்டில எல்லாம் எப்படி இன்டரஸ்டிங்கா, ஹெவியான சப்ஜெக்டைக் கூட எடுப்பாங்களோ, அந்த பேஸிஸ் தான். அந்த உருவ வழிபாட்டிலுள்ள, உன்னதமான குறிக்கோள்களைப் பற்றி சொன்னோம். விநாயகரை ஏன் இப்படி வினைகளுக்கு நாயகனாக வைத்தோம். அந்த மாதிரி ஒரு உருவத்தைப் படைத்தோம் என்பதைப் பற்றி. அதற்கு பிறகு, அன்றாட வாழ்வில் இருக்கக் கூடிய உயரிய நோக்கங்களைப் பற்றி சொன்னோம். கம்யூனிசம், சோசலிசம், புரட்சி என்று இவைகளைப் பற்றி பேசினோம்.

யாரையும் நாம, நம்ம மதத்துக்கு இழுக்கறது இல்லன்னு சொன்னோம். நம்ம ஏன் மற்ற மதத்திற்கு போக வேண்டிய தேவையில்லை என்பதைப் பற்றி சொன்னோம். கோயில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம். பாலாபிஷேம், தோனாபிஷேகம், தயிர் அபிஷேகம் ஆகியவற்றையெல்லாம் செய்கிறார்கள். அனைத்து ஜீவராசிகளுமே ஒற்றுமையோடு இருப்பதற்காக செய்கிறார்கள். பணம் எல்லாருக்கும் டிஸ்டிரிபியூட் ஆகறதுக்கு. அப்பத்தான் எல்லாரும் சவுக்கியமாக இருக்க முடியும். அதற்கேற்ற நடைமுறைகள் என்ன வைத்திருக்கிறார்கள்? கல்வி, செல்வம், வீரம் இவைகள் எல்லாம் எப்படி ஒன்றுக்கொன்று சார்புடையதாக, ஒன்றுக்கொன்று சமமாக இருக்கின்றது. தனக்கும் குடும்பத்திற்கும் சமுதாயத்திற்கும் தேவையாக இருக்கிறது.

மற்ற மதங்களில் எல்லாம் இருப்பதாக காண்பிக்கப்பட்டு, இந்து மதங்களில் எல்லாம் இல்லாமல் இருக்கக்கூடிய மறுமணம், பிரியாணி எல்லாம் இங்கேயும் தான் இருக்கு. இதையெல்லாம் எடுத்துச் சொல்லியிருக்கோம் நாம். அதற்கு அதிகாரப்பூர்வமான தகவல்களை இதிகாசங்களில் இருந்து எடுத்துச் சொல்லியிருக்கிறோம். எப்படி பஞ்ச பூத தத்துவங்கள் இங்கே கொண்டுவரப்பட்டன? எப்படி பிற்காலத்தில் நோபல் பரிசு வாங்கப்பட்ட தத்துவம். தேவாரம், திருவாசகம் முதலிய நூல்களிலே, பலநூறு ஆண்டுகளுக்கு முன்பு ரொம்ப சாதாரணமாக பாட்டுல சொல்லி வெச்சிருப்பாங்க? தாவரங்களுக்கு உயிருண்டுன்னு. யாரோ, ஒரு ஆளு கண்டுபிடிச்சான். யாரோ ஒரு ஆளு இல்லை. அவனும் இந்தியன் தான், பெங்காலி. பல காலங்களுக்கு முன்பே தாவரங்களுக்கு உயிருண்டுண்டுன்னு சொல்லிட்டு போயிட்டாங்க. பரிணாமங்களைப் பற்றி சொல்லிட்டு போயிட்டாங்க நம்மாளுங்க ரொம்ப ஈஸியா.

எவல்யூஷன் ஆஃப் வேர்ல்டு. ஒரு காலத்துல டைனாசரஸ் இருந்துச்சு. ஒரு காலத்துல கடல் தான் முழுக்க முழுக்க இருந்தது. ஒரு காலத்துல பெண்கள் தான் முழுமையாக ஆட்சி செய்தார்கள். அவ்வளவும் தசாவதாரத்துல கவர் பண்ணிட்டு போயிட்டாங்க. இப்படித் தான் நாம சொல்லி வெச்சிருக்கோம்.

எனவே உயரிய வாழ்வியல் தத்துவங்கள் அனைத்தும் இங்கே ரொம்ப சாதாரணமா, அன்றாடம் சொல்லி வெச்சிருக்கோம். அதாவது ‘தங்கம்’ என்பது உயரிய பொருளாக இருக்குமானால், அதை ஒளித்து பாதுகாப்பாக பத்திரமாக பாதுகாப்போம். செல்வ சீமாட்டிகள் அதை பாதுகாப்பாக கழுத்திலும் காதிலும் அணிகலனாக போட்டுக் கொள்வார்கள். அங்கே தங்கம் என்பது கொட்டிக் கிடந்தால், அதிலே ஸ்பூன் பண்ணி, பிளேட் பண்ணி டம்ளர் பண்ணிக் கொள்ளும் அளவுக்கு, இங்கே தங்கத்துக்கு நிகரான உயரிய கருத்துக்கள் கொட்டிக் கிடப்பதினால், அதையெல்லாம் ரொம்ப சர்வ சாதரணமாக கதைகளில் எல்லாம் சொல்லி வைத்து விட்டோம். ரொம்ப, சிலாகிச்சி ஸ்டிரிக்டா சொல்லல.

சுதந்திரம் என்பது இருக்கக்கூடிய ஒரே மதம் இந்துமதம் தான். இந்து மதத்தில் இருந்து கொண்டு, நீங்கள் கடவுள் இல்லையென்று சொல்லலாம். அதை நீங்கள் பாராட்டுவீர்கள். கடவுளிடம் குற்றம் குறை காணலாம். கடவுளையும் வழிபாட்டு முறைகளையும் பார்த்து நீங்கள் குற்றம் குறை காணலாம். அதை நாங்கள் பாராட்டுவோம். இந்தக் கடவுள் தான் பிடிக்கும். அந்தக் கடவுள் பிடிக்காது என்று சொன்னால் உங்களை பாராட்டுவோம். கடவுளை நம்புகிறேன். சாமியை கும்பிடமாட்டோம் என்று சொல்லுவோம். உங்களை பாராட்டுவோம். ஏன் இப்படி சர்வ சுதந்திரம் கொடுத்து பாராட்டி வைத்திருக்கிறோம்? மற்ற எல்லா மதங்களிலும் ரெஸ்டிரிக்ஷன்ஸ் வைத்திருக்கிறார்கள். முஸ்லீமா இருக்கனும்னா? நீ ஏதாவது பண்ணனும். கிறிஸ்டியனா இருக்கனும்னா? இந்துக்கள் மட்டும் இன்னும் நீ ஏதாவது பண்ணனும்னு வைக்கறது கிடையாது.

அன்றாட வாழ்க்கையில் காலைல எந்திரிச்சவுடனே கோலம் போடணும் சுத்தம் பண்ணிட்டு, பூஜை அறையில் விளக்கேற்றணும். இது கம்பள்சரி கிடையாது. காலைல நீ கோலம் போடலன்னா இந்து இல்லன்னு யாரும் டிக்லேர் பண்ண மாட்டங்க. ஈவ்னிங் விளக்கு போடலன்னா, நீ இந்து இல்லன்னு யாரும் டிக்லேர் பண்ண மாட்டாங்க. அதே போன்று எதுவும் கம்பள்சரின்னு கிடையாது. வெள்ளிக்கிழமை நமாஸ் போகணும் முஸ்லீமா இருந்தால். ஞாயிற்றுக்கிழமை சர்ச்சுக்கு போகணும் கிறிஸ்டியனா இருந்தால்.

நம்மாட்களுக்கு எதுவும் கிடையாது. ஏன் இது போன்று சகல சுதந்திரமும் கொடுக்கப்பட்டது என்றால், நம்ம பிள்ளைங்க. நம்ம பிள்ளைங்க என்றால், நம்ம தான். மதத்தினுடைய உறுப்பினர்கள், நெறி தவறாதவர்கள், குற்றம் குறைகளை அறிந்தவர்கள். அவர்களுக்கு தண்டனை தேவையில்லை. சுதந்திரம் தான் தேவை. மற்ற இடத்தில் ஒரு தண்டனையைப் போல கற்பிக்கப்படுகிறது. இங்க ஒரு பரிசு கொடுக்கப்படுகிறது. தண்டனை கொடுக்கப்படுவதில்லை. எல்லாத்தையும், பாலோ பண்ணி நல்லவிதமாக இருந்தால் பரிசு, பாராட்டு, புகழ். இல்லைனாலும் ஒண்ணும் கண்டு கொள்ள மாட்டோம். அந்த சுதந்திரம்.

இன்னமும் சொல்லவோ, உன்மனம் கல்லோ, இரும்போ, பெரும்பாறையோ? என்று சிவபெருமானைப் பற்றி திட்டுகிறார்கள் என்று சொல்லும் போது, நாமும் இன்னமும் எடுத்துச் சொல்லலாம். பெண்கள் விலை பேசப்பட்டு நடுத்தெருவில் நிர்வாணமாக நிற்க வைக்கப்பட்டு, விலைக்கு விற்கப்பட்ட சமுதாயம் என்று சொன்னால், அரபு நாட்டு சமுதாயம். ரோம் நாட்டு சமுதாயம். இரண்டுமே கிறிஸ்துவ இஸ்லாமிய பிறப்பிடங்கள். அவ்வளவு மோசமாக சமுதாயம் போனதாலே, அவ்வளவு கடுமையான மதங்கள் அங்கே தேவைப்பட்டன.

அந்த மதங்களை நான் குறை சொல்ல வில்லை. இங்கே அதுபோன்று நடப்பதே கிடையாது. இங்கே பெண்கள் எப்போதும், சர்வ சுதந்திரத்துடன் பொறுமையுடன் நடத்தப்பட்டார்கள். அதிகாரங்கள் கொடுக்கப்பட்டன. முக்கியத்துவமும், முதன்மைத்துவமும் கொடுக்கப்பட்டது.

கேள்வி ? எப்போது பார்த்தாலும் எல்லா பெண்களும் கேள்வி கேட்பார்கள். பீஷ்மனை அம்பை பொண்ணு கேள்வி கேட்ருப்பா. ‘டேய், என்னை ஏண்டா தூக்கிட்டு வந்த?’ன்னு. துரௌபதி வந்து தர்மனை கேள்வி கேட்ருப்பா? ‘தன்னை இழந்தபின் என்னை பணயம் வைக்க உனக்கு என்ன அதிகாரம் இருக்கிறது?’ என்று. சீதை கேள்வி கேட்பா ராமனிடம், ‘வண்ணார் சொன்ன சொல் கேட்டு வாய்த்த பெண்ணினை மாய்த்திட சொன்னாயே, நீயெல்லாம் ஒரு அரசனா? கணவனா?’ என்று. தமயந்தி கேள்வி கேட்ருப்பா நளனிடம். நள்ளிரவு நேரத்தில், நட்ட நடுகாட்டினில், கட்டிய மனைவியை தவிக்க விட்டு சென்றாய். நான் ஏன் இன்னொரு திருமணம் செய்ய கூடாதென்று. எல்லாருமே கேள்வி கேட்பார்கள்.

எங்கேயுமே பெண்கள் அடிமைப் படுத்தப் பட்டதாகவோ, ஒரு விற்பனைப் பொருளாக, காட்சிப் பொருளாக பயன் படுத்தப் பட்டதாகவோ, எந்த இலக்கியங்களிலும், இதிகாசங்களிலும், கதைகளிலும் கிடையாது. சீதனம் என்று அப்பவே பெண்களுக்கான சொத்தை பிரித்துக் கொடுத்து இருப்பார்கள். பெண்களுக்கான உரிமையை சொத்தோடு நிலைநாட்டி கல்யாணம் பண்ணும் போது, ஒரு குடும்பத்துல இந்தப் பொண்ணுக்கான சொத்து பங்கீடு பிரிச்சிக்கோ. இதை வார வராம் பிரிச்சிக்கோ, மாதா மாதம் பிரிச்சிக்கோ, இல்லன்னா வருஷா வருஷம் பிரிச்சிக்கோ. சொத்துரிமையை நிலை நாட்டுவது. அதைப்போய் வரதட்சணை கொடுமைன்னு எல்லாரும் சொல்லிக்கிட்டு இருக்காங்க.

ஆனால் அங்கே கல்யாணம் என்பது பெண்களை விலை போட்டு வாங்குவது. காசு கொடுத்து நான் வாங்கிட்டு போயிட்டேன்றது. ஆனால் அதை வந்து நல்லது போல் காண்பிக்கிறார்கள். நாங்க டௌரி வாங்கறது இல்ல. டௌரி கொடுக்கிறோம். நீ டௌரி கொடுக்கறதுக்கு ரேட் பேசற. ரேட்டை பேசிக் கொச்சைப்படுத்துற. புனிதமான திருமண உறவை.

அதனாலே குறிப்பாக இந்து நண்பர்களே, இந்த உரையாடல்கள் தொகுப்பாக இயன்ற விரைவில் வெளியிடப்படும். கேள்விகளுக்கு பதில் சொல்லலாம். நவீன இளைஞர்கள். மாற்று மதத்திலே உயரிய கருத்துக்கள் இருப்பதாகவும், இந்த மதத்தில் இல்லையென்றும் நினைப்பவர்கள். மாற்று மதத்திலே இருந்து சஞ்சலப் பட்டுக் கொண்டு இருப்பவர்கள். அறிவியலாளர்கள், கடவுளை நம்பாதவர்கள், இவர்கள் இந்த கருத்துக்களை கேட்கட்டும். கேள்விக் கணைகளை தொடுக்கட்டும். பதில் சொல்வோம்.

இந்த பூமி இந்து நெறி தவறாத பூமியாக, காலங்காலமாக இருந்து இருக்கிறது. அதையே நாம் நிலைநாட்டுவோம். குறிப்பான தகவல்கள் இல்லாமல், ஏற்கனவே நான் சொல்லிய தகவல்களின் சாராம்சமாக இந்தச் செய்தியை வைக்கிறேன்.

நன்றி, வணக்கம்.

Original Audio posted in WhatsApp Group ‘Science is Hinduism’ on 26 June 2018. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes:

<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>