வாழ்வின் அடுத்த அத்தியாயங்களை நாமே எழுதுகிறோம்.
நம்முடைய எண்ணங்கள், செயல்களின் விழைவாக விளைவாக விலையாக அடுத்த அத்தியாயம் எழுதுவோம்.
விழைவு – விருப்பம்.
விளைவு – விளைவது, முளைப்பது.
விலை – நாமாக விலை கொடுத்து வாங்கிக் கொள்வது.
அனைவருக்கும் நல்லதை விழையும் போது, நமக்கும் சேர்த்து நல்லதே நடக்கும்.
நன்மையை விதைக்கும் போது நல்லதே விளையும்.
வம்பை விலைக்கு வாங்கி .. வம்பை விற்க முடியும். ஆனால் லாபம் கிடைக்காது.
தீதும் நன்றும் பிறர்தர வாரா.
இதன் இன்னொரு வடிவம், “கடமை செய். பலன் எதிர்பாராதே ” என்ற கீதையின் சாரம்.
இதற்கு, பலன் கிடைக்காது என்று பொருள் அல்ல. பலன் நிச்சயம் கிடைக்கும் என்பதே பொருள் ஆகும்.
சில விதைகள் செடியாகும். சில விதைகள் கொடியாகும். சில விதைகள் மரமாகும். அது போல சில நற்செயல்கள் உடனடி பலன். செடி போல. விரைந்து வளரும் கீரை போல.
சில கொடி போல. இவை காய் கனி கொடுக்கும்.
சில மரம் போல. நாம் வருங்கால சந்ததிகளை வாழ வைக்கும்.