நீர்க்குவளை மனதில் நீர்த்திவலை எண்ணங்கள். பாதி நிறைந்தது நீரால். மீதி நிறைந்தது திவலையால்.
பொருள் ஒன்று பார்வை வேறு. அல்லது பார்வை ஒன்று பொருள் வேறு.
நிறைந்தது நீரால் என்று நினைப்பது ஒரு நெஞ்சம். குவளையெல்லாம் திவலை என கவலை கொள்வது மறு நெஞ்சம்.
கவலை கொள்ள வேண்டாம். கவலையை கொல்லுவோம்.
ஏனென்றால் கற்பனையில் விரித்த வலை கவலையாகும்.
கற்பனையில் விதைத்த விதை கவிதையாகும்.
வலை வேண்டாம். கட்டுண்டு போவோம். விதை விதைப்பு வித்தை செய்வோம். கட்டிச் சோறு உண்டு வாழ்வோம்.
அறிவியலே இந்து மதம். மனிதர்கள் வெறும் கற்பனை கவலைகளில் கட்டுண்டு போகக் கூடாது என்பதே நாம் நம் கடவுள்கள் நடத்தும் திருவிளையாடல் கதைகள் என நம்புகிறோம். அவை கற்பனை தான். ஆனால் கவலை விதைக்க அல்ல. நம்பிக்கை வளர்க்க.
எனவேதான்,..
கற்பனை என்றாலும், கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன்…. என பாடுகிறோம்.
அறிவியலே இந்து மதம்.