எல்லாமே ஏராளமாக இருக்கிறது. எதையோ காணவில்லை.
கடலின் நடுவே பயணம் போனால்? Water, water, everywhere water, but no water to drink. சுற்றிலும் நீர். ஆனால் குடிப்பதற்கு இல்லை.
வாழ்க்கை ஒரு தேடுதல் வேட்டை. வேட்டை முடிந்ததும் விலங்குகள் அமைதி ஆகின்றன. ஆனால் மனிதன் அமைதி ஆவதில்லை.
மதங்கள் மன அமைதி மற்றும் பாதுகாப்பு உருவாக்க வேண்டும்.
‘பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன்’ என்று கிறிஸ்துவ வீட்டில் உள்ளது. ‘ யாமிருக்க பயமேன்’ என முருகன் குழந்தையாக சிரிக்கிறான்.
‘ இன்ஷா அல்லாஹ் ‘ என ‘ இறைவன் நாடினால்.. ‘ என்று இஸ்லாமிய வீட்டில் உள்ளது. ‘ அவனின்றி ஓரணுவும் அசையாது ‘ என இங்கே உள்ளது.
‘அல்லாஹு அக்பர்’ என அரபு மொழியில் முழங்குவார்கள். ‘எல்லாப் புகழும் இறைவனுக்கே’ என ஆஸ்கர் விருது பெற்ற இசை மேதை திலீபன் விருது பெற்ற மேடையில் முழங்கினார்.
இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி எங்கெங்கோ அலைகின்றாய் ஞான தங்கமே… என சொல்லி வைத்தனர்.
இதுவே நான் நம் சகோதர சகோதரிகளிடம் சொல்வது. நீங்கள் அல்லது உங்கள் மூதாதையர் எதை தேடி இஸ்லாம் கிறிஸ்துவ மார்கங்களுக்கு சென்றீர்கள்? அது இங்கேயே இருக்கிறது.
இங்கே மிகப்பெரிய பொக்கிஷங்கள். எனவே பூட்டப்பட்ட பொக்கிஷ அறையில் உள்ளன. அங்கே ஓரிரண்டு ஆபரணங்கள். எனவே மற்றவர் பார்வை படும்படி கவர்ச்சியாக அடுக்கி வைக்கப் பட்டுள்ளன.
அங்கே உங்களை வரவேற்க ஒரு படையே உள்ளது. ஏனென்றால் நீங்கள் அவர்களுக்கு முதலீடு மற்றும் வருமானம்.
இங்கே … நீங்களாகத்தான் சென்றீர்கள். நீங்களே திரும்ப வர வேண்டும்.