நெருப்பு சுடும் என்பது முதல் முறை யாரேனும் சொன்ன பின்னர்தான் தெரியும். சூடு கண்ட பூனை பால் குடிக்க பயப்படும்.
நெருப்பு பலவகை. சூடான தோசைக்கல் பார்க்க அப்பாவியாக இருக்கும். எரியும் கற்பூரத்தை திடீரென கையால் அமுக்கிக் அனைத்து விடலாம்.
நெருப்பின் தாக்கம் நாம் எவ்வளவு நேரம் அதோடு தொடர்பில் இருக்கிறோம் என்பதை பொறுத்தது. விரைவாக தொட்டு எடுத்தால் விளைவு குறைவாக இருக்கும். எனவே அம்மன் கோவில் திருவிழாவில் நெருப்போடு நடைபோடும் நிகழ்வுகள் நடக்கும்.
உண்மையில் அது ஒரு தந்திரம் தான். தெய்வீக அதிசயம் இல்லை. சிலருக்கு தெரிந்து பலருக்கு தெரியாமல் இருக்கும் விசயம் தந்திரம்.
அறிவியலாம் இந்து தர்மத்தின் அன்றாட நடவடிக்கையில் ஏராளமான தந்திரங்கள் உள்ளன.
ஒரு மன்னனின் பொக்கிஷ அறையில் ஏராளமான பொறிகள் இருக்கும். அவை மாற்று நோக்குடன் வருபவர்களை பிடிக்க தண்டிக்க ஏற்பாடு.
இந்து மதத்தில் மூட நம்பிக்கைகள் என நீங்கள் எதேனும் ஒரு சடங்கை நினைத்தால், அதனை முழு மனதோடு பங்கெடுத்து பாருங்கள். மந்திரம் தந்திரம் விலகி, சுதந்திரம் கிடைக்கும்.