ஒரு இதயம் உடைபடாமல் காப்பாற்றினேன் என்றால், ஒரு உயிரின் வலியை குறைத்தேன் என்றால், ஒரு நலிவடைந்த பறவையை கூட்டுக்கு பத்திரமாக அனுப்பினேன் என்றால், என் வாழ்வு வீணானது அல்ல.
தனக்கென்று யாருமே இல்லை என்ற உணர்வு, இதயத்தை நொறுக்குகிறது.
“கஷ்டப்பட்டு பாரம் சுமக்கிறவர்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்” என கிருத்துவ வசனம் உள்ளது. பாதுகாப்பு உணர்வு, நலிவடைந்தவர்களுக்கு தேவை.
சமீபத்தில் ஒரு பெண் வேலைக்கு சேர்ந்தார். தன்னுடைய தாய் ஒரு அனாதை என்றும். கிருத்துவ அனாதை இல்லத்தில் சிறு வயது முதல் வாழ்ந்தார் என்றும். அவர்களுடைய ஆதார் அட்டை சேர்ந்த அலைபேசி எண் கூட இப்போதும் அந்த பாதிரியார் தான் வைத்துள்ளனர் என்றும் தெரிவித்தார். தாங்கள் எல்லாம் அனாதை என்ற உணர்வு அவர்களிடம் நிரந்தரமாக குடி கொண்டு உள்ளது. ஏன்?
இந்து தர்ம நெறியிலே, அனாதைகளுக்கு இடம் இல்லை. எந்த விலங்குகளையும், பறவைகளையும் கூட நாங்கள் அனாதையாக விடுவதில்லை. மனித ஜீவன்களை ‘அனாதை ‘ என முத்திரை குத்தி, அதன் மூலம் நடத்தும் கேவலமான பிழைப்பு இங்கே இல்லை. ஒரு குழந்தைக்கோ, ஏன் பெரியவர்களுக்கோ கூட, ஆதரவு குறையும் போது, உற்றார் உறவினர் தத்து எடுத்துக் கொள்வர். அதன் பின்னர் அவர்களுக்கு அனாதை என்ற உணர்வே இருக்காது. சொத்து, சுகம், சோகம், எல்லாவற்றிலும் முழு உரிமை உண்டு. நாங்கள் தத்து எடுத்து இருக்கிறோம் என்று கூட ரகசியமாக, திருமண நேரத்தில் மட்டும் தெரிவிப்பார்கள்.
ஆனால் கிருத்துவத்திலே, சுமார் 50 ஆண்டுகளுக்கு முன் தத்து எடுத்த குழந்தை மட்டும் அல்ல, இப்போதும், அந்த குடும்பமே, கல்லூரி படிப்பு படித்த பெண் உட்பட, அனாதை என்று காண்பிக்கப் படுகிறது.
இஸ்லாமிய பாகிஸ்தானில் நிலைமை இன்னும் மோசம். இந்திய பாகிஸ்தான் பிரிவினை நடந்து 74 ஆண்டுகள் ஆகி விட்டது. பாகிஸ்தானில் இருந்து இந்தியா வந்தவர்கள் இங்கே முழு ஐக்கியமாக, உடனடியாக மாறி விட்டனர். ஆனால், இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் சென்ற இஸ்லாமியர்களோ, இன்றும் ‘அகதிகள் – முகாஜிர்’ என்று அழைக்கப் படுகின்றனர்.
உடைந்து போன இதயங்கள் ஆகட்டும், நலிந்து போன பறவைகள் ஆகட்டும், மெலிந்து போன விலங்குகள் ஆகட்டும், அவை, நலமுடன், பலமுடன், ஒற்றுமை உணர்வுடன் வாழ வழி காட்டுவது இந்து தர்மம் நெறிதான்.