” ஆசையே இதயத்தின் சக்தி. கண்கள் சிறியவை. ஆனால் அந்த சிறிய கண்களை கொண்டு, அகண்ட உலகத்தை ஆனந்தமாக காணலாம். ” – இது மீனவ பெண்ணான சத்யவதி, சாந்தனு என்ற அரசனிடம் சொன்னது. “என்னை மனைவியாக ஏற்றுக்கொள்வதாக இருந்தால், ஒன்று இந்த மீனவ குடிசைக்கு வந்து விடு. நான் உன்னை காப்பாற்றுகிறேன். அல்லது, எனக்கு பிறக்கும் பிள்ளைதான் அடுத்த ராஜா ஆகவேண்டும். அதற்கு உத்தரவாதம் கொடு”. என கறாராக பேசுகிறாள். மகாபாரதம் பிறக்க இந்த பெண்ணே காரணம்.
இந்த பெயிண்ட் உலராமல் உள்ளது, தொட வேண்டாம். என்றால். மனிதர்கள் அதை தொட்டுப் பார்த்து, பின்னரே நம்புகிறார்கள். ஆனால், யாரோ ஒரு, அல்லது ஏதோ ஒன்று உலகத்தை படைத்தது, நதிகளை படைத்தது, தாவரங்களை படைத்தது, கனிகளை படைத்தது, ஒரே ஒரு ஆணையும், ஒரே ஒரு பெண்ணையும் படைத்தது. அந்த மரத்தின் பழத்தினை சாப்பிட வேண்டாம் என்று கட்டளை இட்டது. ஆனால் மாற்று சக்தி (சாத்தான்) அந்தப் பழத்தினை சாப்பிட ஆசை காட்டியது. பழத்தை சாப்பிட்ட பாவம் காரணாமாக ஆசை பிறந்தது. உடல்கள் இணைந்தன, குழந்தை பிறந்தது. மனித குலம் உண்டானது. எனவே பாவத்தின் விளைவே மனித குலம் என்று சொல்லும் கிருத்துவம். குற்றத்தின் விளைவே மனித குலம் என்று சொல்லும் இஸ்லாம்.
” ஆசையே இதயத்தின் சக்தி. கண்கள் சிறியவை. ஆனால் அந்த சிறிய கண்களை கொண்டு, அகண்ட உலகத்தை ஆனந்தமாக காணலாம். ” – எது உயரிய கருத்து ? நீங்களே முடிவு செய்யுங்கள்.