மதாபிமானம், தேசாபிமானம், பாஷாபிமானம்.. அதாவது மதப் பற்று, நாட்டுப் பற்று, மொழிப்பற்று … இவை மனித குலத்துக்கு எதிரானவை என்று பெரியார் சொன்னார், என்று, ஒரு கூட்டத்தில் சொன்னார்கள்.
நாட்டுக்காக உயிரை விடுவோம் என்ற முழக்கம் மஹாபாரதத்திலோ, ராமயானத்திலோ, அல்லது இந்து தர்மம் நெறிகளிலோ இல்லை.
ஆனால், இந்து தர்மம் காக்க உருவாக்கப் பட்டதாக தங்களை காட்டிக்கொள்ளும் சிலர் இந்த கருத்தை உட்புகுத்தி, இந்து தர்மம் அடிப்படையை சீர்குலைக்கின்றனர்.
குடும்பப் பற்றின் காரணாமாக பல குற்றச்செயல்கள் நடக்கின்றன.
மதப் பற்று, நாட்டுப் பற்று, மொழிப்பற்று … இவை காரணமாக தீவிரவாதம், பயங்கர வாதம் உருவாகிறது.