On the Tamil Month of Markazhi 1st, Salem Radha Ammaiyar registered her first song of Andal Thirupavai.
For the above renderings, we replies as under.
அருமை.
உங்கள் பாடல் எங்களுக்கு பெருமை. இந்து மதத்தில் எல்லா பாடல்களும் பசுவை பற்றியே இருந்த போது… ஆண்டாள் நாச்சியார் அவர்கள் எருமை பற்றியும் பாடினார்.
கணைதிளம் கற்றெருமை கன்றுக்கு இணங்கி, நினைத்து முலை வழியே நின்று பால் சோர…. என்று…. ஒரு எருமையானது, தன் கன்றுக் குட்டியை நினைத்து, அந்த எண்ணத்தில் தானாக பாலை வெளியிடுவது போல… கடவுள் பக்தர்களுக்கு அருள் பாலிப்பான்… என்று.
எழுத்து, வசனம், பாடல் வரிகளில் பெண்கள் உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் பாங்கு ஆண்கள் வெளிப்படுத்தும் பாங்கை விட மாறு பட்டு இருக்கும்.
எனவேதான் எழுத்து வடிவம் வைத்துப் பார்க்கும் போது ஷேக்ஷ்பியர் ஒரு பெண் என்று சொல்வார்கள். அவர் காலத்தில் பெண்களுக்கு எழுத்து உரிமை மறுக்கப்பட்டது (ஐரோப்பாவில், இந்தியாவில் அல்ல) எனவே பணக்கார வீட்டில் பிறந்த ஷேக்ஸ்பியர் ஆண் உருவம் தரித்து இலக்கியம் படைத்தார்.
ஆனால் ஒரு கோயில் பணியாளரின் பெண் ஆண்டாள் இறைவனுக்காக மாலையை தானே சூட்டி அழகு பார்த்து அனுப்பி வைத்த போது… இறைவன் அதுவே வேண்டும் என்றான். நாங்களோ அந்த ஆண்டாள் நாச்சியார் தெய்வம் என பாவித்து, கோயில் எழுப்பி கும்பிட்டு வருகிறோம்.
இங்கே இருக்கிறது பெண் விடுதலை? அறிவியலான இந்து தர்மத்திலா, அல்லது உரிமை மறுத்த கிறித்துவ மதத்திலா அல்லது பெண்களை ஏலத்தில் விற்ற அரபு மதத்திலா..
மார்கழி மாதம். திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, நாலாயிர திவ்ய பிரபந்தம், கந்த சஷ்டி கவசம், கோயில்களில் மற்றும் தமிழர் இல்லங்களில் ஒலிக்கும் காலம். ஆம். தமிழர் இல்லங்களில் மட்டும் தான். மற்ற மொழி மக்களுக்கு இதே போல் வேறு மாதம் .. அவரவர் தட்ப வெட்ப நிலை மாற்றத்தினால்.
வாய் விட்டு உரக்கப் பாட வேண்டும். தொண்டை சளி நீங்கி சுவாசக் கோளறுகள் சரி ஆகும். ராகம்?? அவரவர் விருப்பம். பல வருடம் பாடும் இசைத் துறை மேதாவிகள் போலவே பாட வேண்டும் என்று இல்லை.
திருப்பாவை கவனித்தால் ஒன்று புரியும். கண்ணனை நாராயணனை தன் பாதுகாவலனாக பாவித்த ஆண்டாள் நாச்சியார்.. அவனை தரிசிக்க கோயில் செல்ல விரும்புகிறார்.
மார்கழி பனியில், குளித்து புத்தாடை உடுத்தி, மற்ற தோழிகளையும் உசுப்பேத்தி … ஒவ்வொரு வீட்டுக்கு போய், நாயே, பேயே என்று திட்டி, ஒரு வழியாக கோயிலுக்கு போனால், அங்கே… நாராயணனும் தூங்கிக் கொண்டு இருக்கிறான். அங்கே போய், அவனையும், அந்தக் கடவுளையும் எழுப்ப வேண்டிய நிலை…
ஹா கா … கடவுளை வம்புக்கு இழுத்து கவி பாட… இந்துக்களான எங்களுக்கு மட்டுமே உரிமை உண்டு…