இதையே நீர்க்குமுளி போன்ற நிலையற்ற வாழ்க்கை என்று இந்து சமய வழிபாட்டு தத்துவங்களில் சொன்னார்கள். எனவே வாழ்வில் வீடு பேறு அடைய வேண்டும் என்று சொன்னார்கள். இங்கே வீடுபேறு என்பது முக்தியை குறிக்கும். இது இந்து சமயத்தில் பிறவா நிலை குறிக்கும். இஸ்லாமிய சமயத்தில் அல்லா நிர்மாணம் செய்த சொர்க்கத்துக்கு நுழைவு. கிருத்துவத்தில் பரலோக சாம்ராஜ்யத்தில் இறுதித் தீர்ப்பு நாள் அன்று கிடைக்கும் இடம்.
நானும் பல ஆண்டுகளாக பார்க்கிறேன். “உலகம் அழியப் போகிறது. வாங்க, வாங்க .. வேகமா போயி, பரலோக சாம்ராஜ்யத்தில் சீட் பிடிக்கலாம்” என்று சொல்லும் கும்பல் ஓய்ந்த பாடில்லை.
அன்பின் வழி உயிர்நிலை. அன்பே சிவம். அனைத்து உயிர்களிடத்தும் அன்பு செலுத்த வேண்டும். எல்லா உயிரும் இன்புற்று இருக்க நினைப்பதுவே அல்லால் வேறொன்றறியேன் இறையே பராபரமே.
இதன் வடமொழி ஆக்கம் ‘ சர்வ ஜன சுகினோ பவந்து ‘
இவையே இந்து தர்ம நெறியின் அடிப்படை.
எனவே இறைவனை எல்லாவற்றிலும் காண்கிறோம்.
எந்த வித நிபந்தனை இல்லாத அன்பு. அதுவே இந்து மதம்.